search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103897"

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வருகிற 5-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வைகோ தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko #VelMurugan
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானவர்களைக் காணச் சென்றபோது கைது செய்யப்பட்டு உணவும் தண்ணீரும் அருந்த விடாமல் 24 மணி நேரத்திற்குப் பின்னர் திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.

    மனிதாபிமானமின்றி நடத்தப்பட்டதால், அவர் உணவும் தண்ணீரும் அருந்தாமல் புழல் மத்திய சிறையில் அறப்போர் நடத்திய நிலையில், நான் அவரைச் சந்தித்து சிறுநீரகங்கள் பாதித்து உடல்நலம் பாழாகி விடும் என எடுத்துக்கூறி உணவருந்தச் செய்தேன்.

    அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில், மே 30-ந் தேதி மாலையில் தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் இந்திய குற்றவியல் சட்டத்தின் கடுமையான பிரிவுகளில் தமிழக அரசின் காவல்துறை அவர் மீது வழக்குப் போட்டுள்ளது.


    நேற்று 31-ந்தேதி மனிதாபிமானமின்றி மீண்டும் புழல் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அவரை அடைத்துவிட்டனர். தமிழக அரசின் பாசிசப் போக்கையும், காவல்துறையின் அடக்கு முறையையும் கண்டித்து ஜூன் 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில், ம.தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    கழகத் தோழர்களும், தோழமைக் கட்சியினரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் பெருந்திரளாக இந்த அறப்போரில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார். #MDMK #Vaiko #VelMurugan
    பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி தொழிலாளர் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி தொழிலாளர் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், விஸ்வகுடி நீர்த்தேக்கத்தை முறையாக பராமரிக்க வேண்டும், நீர் வழித் தடங்களில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், நீர் நிலைகளை தூர்வாரி பராமரித்து நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்த வேண்டும்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் வளம் குறைந்து போனதால் குடிநீரில் உப்புத் தன்மை அதிகரித்து சிறுநீரக கோளாறு உள்ளிட்ட உடல் நலக்குறைபாடுகளால் அவதியுறும் பொதுமக்களை காப்பாற்றும் வகையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் ஏ.கே. விஸ்வநாதன், தேசிய மனித உரிமைகள் கழக கொள்கை பரப்புச் செயலாளர் கோசிபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழக சட்டமன்றத்தில் இனி ஸ்டெர்லைட் ஆலையை ஒருபோதும் திறக்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். #ThoothukudiFiring #Seeman #SterliteProtest
    நெல்லை:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அமைதியான முறையில் கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்ற மக்கள் மீது போலீசார் வேண்டும் என்றே துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

    துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட பிறகு ஆலையை மூட உத்தரவிட்ட அரசு 100 நாள் மக்கள் போராடும் போது ஏன் ஆலையை மூட உத்தரவிடவில்லை. துப்பாக்கி சூட்டிற்கு பின்னர் மக்களிடம் கனிவுடன் பேசி அமைதியை ஏற்படுத்தும் போலீசார் மற்றும் அதிகாரிகள் அதற்கு முன்பு ஏன் அப்படி நடக்கவில்லை.

    இதில் இருந்தே கலவரத்தை திட்டமிட்டு உருவாக்கி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. பொதுமக்கள் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தால் தங்கள் மனைவி, கைக்குழந்தைகளுடன் போராட்டத்திற்கு வந்திருக்க மாட்டார்கள். அமைதியான முறையில் தான் பேரணியாக சென்றார்கள்.

    ஆனால் போலீசார் முதலிலேயே கலவரம் வரும் என திட்டமிட்டு ஏற்பாடு செய்துள்ளார்கள். கலவரத்தின் போது துப்பாக்கி சூடு நடத்த துணை தாசில்தார் உத்தரவிட்டார் என்பது நகைப்புக்குரியதாக உள்ளது. பெரிய அதிகாரிகள் என்ன ஆனார்கள். இன்னும் கலவரத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்று மர்மமாகவே உள்ளது.

    தூத்துக்குடி மக்களை சந்திக்க நான் பலமுறை அனுமதி கேட்டும் எனக்கு அனுமதி வழங்கவில்லை. இன்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட கடைசிவரை அனுமதி தராமல் இழுத்தடித்தார்கள்.

    இந்த அரசு போராடுகிற அனைவரின் குரல்வளையையும் நெரிக்கிறது. போராட்டம் நடத்தவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

    இவ்வளவு நடந்த பிறகு இப்போது ஆலையை மூடிவிட்டோம் என்று சீல் வைக்கிறார்கள். ஸ்டெர்லைட் விவகாரத்தை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து மெதுவாகதான் விசாரிப்போம் என்கிறார்கள்.

    இதிலிருந்தே ஆலை மூடப்பட்டது கண்துடைப்பு நாடகம் என தெரிகிறது. உண்மையாக மூட வேண்டும் என்றால் அரசு எடுத்த கொள்கை முடிவில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும். மதுக்கடைகளை அரசு மூடிய போது அது கொள்கை முடிவு அதில் தலையிடமாட்டோம் என அறிவித்த கோர்ட்டு இந்த வழக்கில் எப்படி தலையிடுகிறது.


    சட்டமன்றத்தில் இனி ஸ்டெர்லைட் ஆலையை ஒருபோதும் திறக்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் மக்கள் மீதுள்ள உண்மையான அக்கறை வெளிப்படும். இவர்கள் மூடுகிறோம் என்று போட்ட உத்தரவு நீட் தேர்வுக்கு போட்டது போல் ஆகிவிட கூடாது.

    நீட் தேர்வை நடத்த விடமாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியதும் இது கோர்ட்டு உத்தரவு என நீட் தேர்வை அனுமதித்து விட்டார்கள்.

    அதுபோல இந்த வழக்கிலும் ஆலையை திறக்க கோர்ட்டு உத்தரவு வந்தால் அதை அனுமதித்து விடுவார்கள். நிலம், மண், காற்றை நஞ்சாக்கும் ஸ்டெர்லைட் எதிர்த்து எந்த ஆயுதமும் இல்லாமல் போராடும் இவர்களை சமூக விரோதி என்று மத்திய மந்திரி கூறுகிறார்.

    நாட்டில் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பவர்கள் சமூக குற்றவாளிகள் இல்லையாம். எதிர்த்து போராடுபவர்கள் சமூக விரோதிகளாம். இதை சிந்தித்து பார்க்க வேண்டும். எந்த கலவரம் என்றாலும் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்துவதால் அதில் தெளிவு கிடைக்காது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை பதவியில் இருக்கும் நீதிபதி கொண்டு விசாரணை நடத்த செய்ய வேண்டும். சி.பி.ஐ., சி.பி.சி.ஐ.டி. விசாரித்தால் அது அரசின் அமைப்பாகவே இருந்து விசாரிக்கும். தனிப்பட்ட தீர்வாக அமையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் வக்கீல் சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் ராம்குமார், இசைமதிவாணன், குயில் நாச்சியார், சுதா, நாகராஜன், இசக்கிதுரை, ரமேஷ் பாபு மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர். #ThoothukudiFiring #Seeman #SterliteProtest
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    திருச்சி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பஸ் நிலையம் அண்ணாசிலை அருகில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமை தாங்கினார். 

    வடக்கு மாவட்ட செயலாளர் குமார்,தெற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தொழிற் சங்க துணை செயலாளர் முஜிபு ரஹ்மான் கண்டன உரையாற்றினார். 

    இதில் திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் அலங்கராஜ், பொருளாளர் மில்டன் குமார், துணை செயலாளர்கள் வி.கே.ஜெயராமன், திருச்சி ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் ராமு, பெருமாள், பகுதி செயலாளர்கள் நூர் முகமது, உறையூர் மோகன், பொறுப்பாளர் கருணாகரன், குமாரசரவணன், தொழிற் சங்கம் திருப்பதி, தமிழ் செல்வன், உறையூர் சாதிக், தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சன்னாசிபட்டி பாரதிதாசன், பொருளாளர் லட்டு வைத்தியநாதன், வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் முகேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து மீனவர் விடுதலை வேங்கையின் சார்பில் சுதேசி மில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து மீனவர் விடுதலை வேங்கையின் சார்பில் சுதேசி மில் அருகே போராட்டம் நடத்துவது என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்துக்கு நிறுவன அமைப்பாளர் மங்கையர் செல்வம் தலைமை தாங்கினார். கங்காதரன், திருமுகம், மோகன் முன்னிலை வகித்தனர். மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் மக்களை கொலை செய்யும் டெர்லைட் ஆவையை மூட வேண்டும், அறவழியில் போராடிய மக்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றது காட்டு மிராண்டித்தனமான செயல். 13 பேரை சுட்டு கொல்ல காரணமாக இருந்த மாவட்ட கலெக்டர், போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், தமிழக முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    முத்துப்பேட்டை வர்த்தகக் கழகம் சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு கண்டனம் தெரிவித்து அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை வர்த்தகக் கழகம் சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு கண்டனம் தெரிவித்து அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வர்த்தகக்கழக தலைவர் மெட்ரோமாலிக் தலைமை வகித்தார்.

    திருத்துறைப்பூண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ஆடலரசன் மற்றும் பல்வேறு கட்சியினர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பொதுச்செயலாளர் ராஜாராமன் வரவேற்று பேசினார். 

    இதில் திமுக ஒன்றிய செயலாளர் இரா.மனோகரன், நகர செயலாளர் எம்.எஸ்.கார்த்திக், உள்பட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தர்மபுரி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராசன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் சின்னசாமி, மாதேஸ்வரன், கந்தசாமி, காதர், மாது, விஸ்வநாதன், கமலாமூர்த்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள்.

    சுற்றுச்சூழலை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும். பொதுமக்களின் போராட்டத்தை முடக்கும் வகையில் மனிதாபிமானமற்ற முறையில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டக்குழுவினர் கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 
    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து ஈரோட்டில் இன்று 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஈரோடு:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று காலை புரட்சிக்கர இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயப் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி, மாநகர செயலாளர் அம்ஜத் கான், செய்தி தொடர்பாளர் பைசல் அகமது, இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜாபர் சாதிக், சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் துப்பாக்கி சூட்டை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இதேபோல் சூரம்பட்டி நால் ரோட்டில் அருந்ததியர் விடுதலை இயக்கம் சார்பில் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    தமிழ்நாடு ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    நாகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், அவுரித்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமுதவிஜயரெங்கன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர்கள் குமார், ரகுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் சிவக்குமார் கலந்துகொண்டு பேசினார்.

    வருவாய்த்துறையை அதன் பணித்தன்மையினை கருத்தில் கொண்டு சிறப்புத்துறையாக அறிவித்து தலைமை செயலக அலுவலர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். பணி நிமித்தமாக சென்னை செல்லும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தங்க வசதியாக விடுதி வளாகம் ஏற்படுத்தி தரவேண்டும். குறுவட்ட வருவாய் ஆய்வாளர் முதல் மாவட்ட வருவாய் அலுவலர் வரை செல்போனுக்கு இன்டர்நெட் வசதியுடன் மாதாந்திரக் கட்டண தொகையை உயர்த்தி வழங்கவேண்டும். குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கு மாதாந்திர நிரந்தரப் பயணப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்.

    கள ஆய்வுப்பணிக்கு சமூக பாதுகாப்பு திட்டப் பிரிவிற்கு என பிரத்யேகமாக முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடம் தோற்றுவிப்பது. பதிவறை எழுத்தர்களுக்கு ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட தர ஊதியத்தை வழங்குவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில துணை தலைவர் பிரபாகரன், மாவட்ட பொருளாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலின் போது திரிணமுல் காங்கிரஸ் கட்சி நடந்து கொண்ட விதத்தை கண்டித்து கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவில்பட்டி:

    மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலின் போது திரிணமுல் காங்கிரஸ் கட்சி நடந்து கொண்ட விதத்தை கண்டித்து கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலின் போது திரிணமுல் காங்கிரஸ் கட்சி நடந்து கொண்ட விதத்தை கண்டித்து கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

    இதில் நகர குழு உறுப்பினர் தங்கவேல், முருகன், சக்திவேல் முருகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர செயலாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.#tamilnews
    தலித் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ்.சி., எஸ்.டி. வன் கொடுமை தடுப்பு சட்டத்தை மத்திய மாநில அரசுகள் பாதுகாத்திட வலியுறுத்தி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    சென்னை:

    தலித் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ்.சி., எஸ்.டி. வன் கொடுமை தடுப்பு சட்டத்தை மத்திய மாநில அரசுகள் பாதுகாத்திட வலியுறுத்தி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நிறுவனர் தலைவர் செ.அன்பின் பொய்யா மொழி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை வழக்கறிஞர் மயிலம் வீராசாமி தொடங்கிவைத்தார். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முனுசாமி, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் எத்திராஜ், தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர் இரா.பாண்டியன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அஸ்வின், கே.கலை மணி அன்பின் பொய்யா மொழி ஆகியோர் முடித்து வைத்தனர்.

    மாநில செயலாளர் குமார், இணை செயலாளர் பார்க் கருணாகரன், மாநில அமைப்பு செயலாளர் அமரம்பேடு அரிரமேஷ், மாநில மாணவரணி செயலாளர் ராஜ்கமல், மருத்துவரணி செயலாளர் டாக்டர் கணேஷ், தலைமை நிலைய செயலாளர் பச்சமுத்து, மாநில மகளிரணி செயலாளர் காஞ்சி மஞ்சுளா, மாணவரணி தலைவர் சரத்குமார், மகளிரணி தலைவி அபிராமி, அமைப்பு செயலாளர் எழில் அரசி, காஞ்சி மாவட்ட செயலாளர் அருண், அமைப்பாளர் வேலன், இணை செயலாளர் ராஜி, இளைஞரணி செயலாளர் பாஸ்கர், அச்சரப்பாக்கம் ராமு, விழுப்புரம் வட்ட செயலாளர் பத்தன், மாவட்ட தலைவர் ரகு, இணை செயலாளர் வீரதேவன், ரவிச்சந்திரன், பார்த்திபன், தொண்டரணி தலைவர் ராஜதுரை, அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.#tamilnews
    கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்த முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 700 பேரை போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்துக்கு சென்று அங்கு தூய்மை திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.

    கவர்னரின் ஆய்வு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று மதியம் 1 மணிக்கு கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அவர்கள் கருப்பு சட்டையும் அணிந்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவர்னருக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இதில் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் அங்கயற்கண்ணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராதாமணி, உதயசூரியன், டாக்டர் மாசிலாமணி, சீத்தாபதி சொக்கலிங்கம், வசந்தம் கார்த்திகேயன் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    மேலும் காங்கிரஸ் அமைப்பு செயலாளர் ஸ்ரீவை ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சரவணன், விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சரவணன், இரணியன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்த முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 700 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேன்களில் ஏற்றி அங்குள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். #Tamilnews
    ×