search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103897"

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் திருக்கோவிலூர் மற்றும் அரகண்டநல்லூரில் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    திருக்கோவிலூர்:

    அரகண்டநல்லூர் பள்ளிவாசல் அருகில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவரும், கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான ஏ.ஆர்.வாசிம்ராஜா தலைமை தாங்கினார்.

    ஒன்றிய தி.மு.க செயலாளர் ஆ.சா.ஏ.பிரபு, நகர தி.மு.க செயலாளர் ஆர்.சுந்தரமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகி தொழில் அதிபர் எம்.எஸ்.கே.அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் சாதுல்லாகான் அனைவரையும் வரவேற்றார். ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.வி.முருகன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பால.பத்மநாபன், தாயுமானவர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

    ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுசெயலாளர் தஸ்தகீர், மனித நேய மக்கள் கட்சியின் நகர செயலாளர் ரியாசுதீன், ம.தி.மு.க ஒன்றிய செயலாளர் சேகர், நகர நிர்வாகி அயோத்தி, திருக்கோவிலூர் வட்டார தலைவர் தனசேகர், மணம்பூண்டி வட்டார தலைவர் பாவாடை, வட்டார துணைத்தலைவர்கள் வெள்ளியங்கிரி, ரவி, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் சுபாஷ், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரவி, ஒன்றிய தி.மு.க அவைத்தலைவர் முருகதாஸ், ஒன்றிய துணை செயலாளர் ஜெய்சங்கர், சரவணகாசன், குணசேகர், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தி.மு.க மாவட்ட பிரதிநிதி ராஜ்மோகன் நன்றி கூறினார்.

    தொடர்ந்து திருக்கோவிலூர் 5 முனை சந்திப்பில் உள்ள காந்தி சிலை முன்பும் மாநில துணைத்தலைவர் வாசிம்ராஜா தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதிலும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    குளித்தலை:

    எல்.ஐ.சி. பாலிசி பிரிமியத்திற்கான ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும். பாலிசி தாரர்களுக்கான போனஸ்சை உயர்த்த வேண்டும். எல்.ஐ.சி. முதலீட்டை நலிவடைந்த வங்கிகளில் முதலீடு செய்வதை தவிர்க்கவேண்டும். காலாவதியான பாலிசிகளை புதுப்பித்தலுக்கான காலவரை யறையை 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டாக மாற்ற வேண்டும். ஐ.ஆர்.டி.ஏ. அனுமதித்துள்ள அளவிற்கு முகவர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க எல்.ஐ.சி. நிர்வாகம் நட வடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ந் தேதி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

    மேலும் அன்றிலிருந்து ஒருவாரம் கருப்பு பட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் போராட்டத்தின் இறுதிநாளான நேற்று மீண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குளித்தலை எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். இதில் எல்.ஐ.சி. முகவர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    ரபேல் போர் விமான ஊழலை கண்டித்து கோவையில் 14-ந் தேதி காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.#Congress
    கோவை:

    கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கீதா ஹால் ரோட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமை தாங்கினார்.

    மாநில துணைத் தலைவர்கள் எம்.என்.கந்தசாமி, என்ஜினீயர் ராதாகிருஷ்ணன், மாநில பொது செயலாளர் வீனஸ்மணி முன்னாள் மாவட்ட தலைவர் மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது, இந்திய ராணுவத்துக்காக ரபேல் ரக போர் விமானம் வாங்க ஏற்படுத்திய ஒப்பந்தத்தில் பிரதமர் மோடிதலைமையிலான மத்திய அரசு மிகப் பெரிய ஊழலை செய்துள்ளது. எனவே மோடி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் வருகிற 14-ந் தேதி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெருமளவில் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் சின்னையன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சவுந்தர்ராஜ், சிவாஜி கந்தசாமி, ரத்தின சாமி, என்.சின்னராஜ்,வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், வக்கீல் பிரிவு வரதராஜ், பிரபாகரன், ஜெகநாதன், நாகராஜன், மகிளா காங்கிரஸ் சுடர்விழி, சேவாதள தலைவர் ஆகாஷ், சிவக்குமார், ராஜேந்திரன், பேரூர் மயில், தங்கதுரை, கணேசன், பொன்னுசாமி, ரங்கசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். #Congress
    ஒட்டன்சத்திரத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஒட்டன்சத்திரம்:

    வருவாய்த்துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை மேம்படுத்த ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வருவாயத்துறையினர் வலியுறுத்தி வந்தனர்.

    ஆனால் இதுதொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டக்கிளை தலைவர் செல்வேந்திரன் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் சசி முன்னிலையில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தமிழ்நாடு வருவாயத்துறை அலுவலர் சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர் பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் பத்மாவதி, தேர்தல் துணை வட்டாட்சியர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு காலிபணியிடங்களை உடனே நிரப்பவேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். #tamilnews
    சோபியா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ததை கண்டித்து அனைத்து கட்சியின் சார்பில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தூத்துக்குடி:

    சோபியா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ததை கண்டித்து அனைத்து கட்சியின் சார்பில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அர்ஜூனன், ம.தி.மு.க. நக்கீரன், இந்திய கம்யூனிஸ்டு மாடசாமி, காங்கிரஸ் ஐ.என்.டி.யூ.சி. ராஜ், திராவிடர் கழகம் பெரியார் அடியான், விடுதலை சிறுத்தை அகமது இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் மற்றும் மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அன்பழகன், அந்தோணி ஸ்டாலின், ரமேஷ்கஸ்தூரி தங்கம், உமாதேவி, துணை அமைப்பாளர்கள் பாலகுருசாமி, ராமர், சங்கர், மாநகர் அவைத்தலைவர் ஆறுமுகம்,

    இணைச்செயலாளர் கீதா முருகேசன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த கபேரியேல் ராஜ், துணை அமைப்பாளர் நிர்மல் ராஜ், காங்கிரஸ் சார்பில் தேவி பிரபாகர், சந்திரபோஸ், மைதீன், குமார முருகேசன், நடே‌ஷகுமார், முத்து விஜயா, ம.தி.மு.க. சார்பில் முருக பூபதி, ரூஸ்வெல்ட்,

    சுந்தர்ராஜ், மகாராஜன், செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ராஜா, முத்து மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கோட்டு ராசா, ரவீந்திரன், பாலு, திலகராஜ், சாரதி, பிரபாகர், ஆல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    திருப்பத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூரில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருப்பத்தூர்:

    எல்.ஐ.சி. பாலிசிதாரர்களுக்கு பாலிசியின் மீது வழங்கப்படும் போனஸ் தொகையை உயர்த்த வேண்டும், பிரிமிய தொகையின் மீதும், தாமத கட்டணத்தின் மீதும் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும், காலாவதியான பாலிசிகளை புதுப்பித்தலுக்கான கால அளவை 2 ஆண்டில் இருந்து 5 ஆண்டுகளாக மாற்ற வேண்டும், லாபம் ஈட்டும் நிறுவனங்களில் மட்டும் எல்.ஐ.சி. நிதியை முதலீடு செய்ய வேண்டும், ஐ.ஆர்.டி.ஏ. நிர்ணயித்துள்ள அளவிற்கு முகவர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூரில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முகவர்கள் சங்க துணைத்தலைவர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் வீரப்பன், மாவட்ட செயலாளர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பொருளாளர் மகாலிங்கம் நன்றி கூறினார். இதனைத்தொடர்ந்து 7-ந்தேதி வரை ஆர்ப்பாட்டம் தொடரும் என்றும், எல்.ஐ.சி. வாரவிழாவை புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்தனர். 
    திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    பேரையூர்:

    ஊதிய குழுவால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், சத்துணவு அமைப்பாளருக்கு பிற துறையில் ஏற்படும் காலி பணியிடங்களில் பதவி உயர்வு வழங்க வேண்டும். சத்துணவு மையங்களில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    மதுரை மாவட்டத்தில் ஆட்சியாளர்களின் நடவடிக்கையால் காலிபணியிடங்களை நிரப்பாமல் சத்துணவு ஊழியர்கள் தங்களுடைய சொந்த செலவில் சமையலர்களை கூலிக்கு அமர்த்தும் அவல நிலை உள்ளது. இதனை களைய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஒன்றிய தலைவர் தனபால் தாங்கினார். ஒன்றிய செயலாளர் மணி வண்ணன், அரசு ஊழியர் சங்க தலைவர் ஜெயராமன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் அசோக்குமார், மாவட்ட பொருளாளர் சந்தரபாண்டி ஆகியோர் பேசினர். ஒன்றிய பொருளாளர் செலின் பிரமிளா நன்றி கூறினார். #tamilnews
    கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததை கண்டித்து நீடாமங்கலத்தில் வருகிற 2-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். #ttvdinakaran
    மன்னார்குடி:

    காவிரியில் நீர் கரை புரண்டோடும் நிலையிலும் டெல்டா மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள்,குளங்கள் வறண்டு கிடக்கிறது. மேலும்  பலலட்சம் ஏக்கர் பாசனப்பகுதி இன்னும் பாலைவனமாக உள்ளது. ஆறு, குளங்கள், ஏரிகளில் தூர்வாரும் பணி நடைபெறாததால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததை கண்டித்தும் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)  மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் காவிரி எஸ்.ரெங்கநாதன், தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த ஆர்ப்பாட்டம் குறித்த முன்னேற்பாடுப் பணிகள் குறித்து நீடாமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில பொருளாளர் எம்,ரெங்கசாமி , திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், கட்சியின் அமைப்புச்செயலாளர் சிவா.ராஜ மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. கு.சீனிவாசன், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.சங்கர், நகர செயலாளர் எஸ்.சங்கர்  மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேடை அமைக்கும் பணி , வாகனங்கள் நிறுத்து மிடங்களையும் தேர்வு செய்து பார்வையிட்டனர். #ttvdinakaran 
    இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கும்பகோணம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கும்பகோணம்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கும்பகோணம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாரதி கண்டன உரையாற்றினார். மேட்டூர் அணை 3 முறை நிரம்பியும் கொள்ளிடம் ஆற்றில் விடப்பட்ட தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. கும்பகோணத்தில் 35-க்கு மேல் உள்ள குளங்களுக்கு வாய்க்கால் மூலம் தண்ணீர் விடாததால் வறண்டு கிடக்கிறது.

    இதனை கவனிக்க வேண்டிய பொதுப்பணித்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. தமிழக அரசு கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள 8 இடங்களில் தூர்வாரும் பணி, குடிமராமத்து பணிகள் செய்வதற்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் எந்த வேலையும் நடக்கவில்லை. எனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை மோசடி நடந்துள்ளது.

    எனவே இதில் தொடர்புடைய பொதுப் பணித்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தஞ்சை மாவட்டத்திற்கு குடிமராமத்து பணிகளுக்கு ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டது அதில் கும்பகோணத்திற்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது 8 பணிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது ஆனால் அதில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்தும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #tamilnews
    கருவடிக்குப்பத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை அகற்றக்கோரி சோசலிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் இன்று மதுக்கடை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    புதுச்சேரி:

    புதுவை கருவடிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற சித்தானந்தா கோவில், தனியார் பள்ளிகள் அமைந்துள்ளது.

    இங்கு ஏற்கனவே அமைந்துள்ள சாராயக்கடை மற்றும் கள்ளுக்கடைகளால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள்.

    இந்த மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து இருந்த நிலையில் தற்போது அந்த பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஏற்கனவே உள்ள சாராய-கள்ளுக்கடைகளையும், புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை அகற்றக்கோரி சோசலிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் இன்று மதுக்கடை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு சோசலிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார். ஏ.ஐ.யூ.டி.யூ.சி. மாநில செயலாளர் முத்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சேகர், சுதாகர், பிரளயன், ஏழுமலை, சீனு, சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    கடைமடை வரை அனைத்து வாய்க்கால்களிலும் போர்க்கால அடிப்படையில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி பா.ம.க. கட்சி சார்பில் வருகிற 4-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி 170 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கும் நிலையில் பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடவில்லை. எனவே கடைமடைவரை அனைத்து வாய்க்கால்களிலும் போர்க்கால அடிப்படையில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி பா.ம.க. கட்சி சார்பில் வருகிற 4-ந்தேதி காலை 10 மணி அளவில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    நாசரேத் அருகே பிள்ளையன்மனை குளத்தில் குளிப்பதற்கு படித்துறை கட்ட வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    நாசரேத்:

    தாமிரபரணி ஆற்றில் இருந்து மருதூர் மேல்கால் வழியாக வெள்ளமடம் பெரியகுளம், நொச்சிக்குளம், பிள்ளையன்மனை குளத்திற்கு தண்ணீர் வருவது வழக்கம். அதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளமடம் பெரியகுளம் நிரம்பி நொச்சிக் குளத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒரு சில நாட்களில் நொச்சிக்குளம் நிரம்பி பிள்ளையன் மனை குளத்திற்கு தண்ணீர் வந்துவிடும்.

    இந்தநிலையில் பொதுப் பணித்துறை சார்பாக கடந்த ஒரு வாரமாக பிள்ளையன்மனை குளம் ஜே.சி.பி. மூலம் தூர் வாரப்பட்டு வருகிறது. படித்துறை இடிக்கப்பட்டதோடு கரையில் கற்கள் சிமெண்ட் வைத்து பூசாமல் வெறும் கற்களை வைத்து மட்டுமே கரையில் அடைத்து வருகிறார்கள்.

    இதனை கண்டித்து பிள்ளையன்மனை வடக்கூர் மக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். குளத்தில் குளிப்பதற்கு படித்துறை கட்ட வேண்டும் என்றும், குளத்துக்கரையில் அடைக்கும் பணியை சீராக செய்யவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் குளம் தூர்வாரும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
    ×