search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103912"

    ராஜஸ்தானில் பசுக்களை கடத்தியதாக கருதி வாலிபர் ஒருவரை வன்முறைக் கும்பல் அடித்துக் கொன்றது. இதற்கு மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா கடும் கண்டனம் தெரிவித்தார்.
    ஜெய்ப்பூர்:

    பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அப்பாவி மக்களை கடுமையாக தாக்கி கொலை செய்யும் சம்பவங்கள் வடமாநிலங்களில் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது.

    இதுபோன்ற வெறியாட்டத்தை அண்மையில் கடுமையாக கண்டித்த சுப்ரீம் கோர்ட்டு இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, மிகப்பெரிய குற்றமும் ஆகும் என்று கூறி யாரும் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ள மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது.

    இந்த உத்தரவுக்கு பிறகும் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் நகர் அருகே பசு பாதுகாவலர்கள் அப்பாவி ஒருவரை அடித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

    அரியானா மாநிலம் கலோகான் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் அக்பர் கான்(வயது 28). இவர் தனது நண்பரான அஸ்லாம் என்பவருடன் 2 பசுக்களை தனது சொந்த ஊருக்கு அல்வார் அருகேயுள்ள லாலாவாண்டி காட்டு்ப் பகுதி வழியாக நேற்று முன்தினம் இரவு ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர்கள் இருவரும் பசுக்களை கடத்திச் செல்வதாக கருதிய பசு பாதுகாவலர்கள் அமைப்பைச் சேர்ந்த கிராம மக்கள் சிலர் இருவரையும் வழி மறித்து கடுமையாக தாக்கினர்.

    அப்போது அஸ்லாம் அங்கிருந்து தப்பியோடி விட்டார். அக்பர்கான் மட்டும் அவர்களின் பிடியில் சிக்கிக் கொண்டார். இதனால் அவரை வன்முறைக் கும்பல் சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தது.

    இதில் படுகாயம் அடைந்த வாலிபர் அக்பர் கானை சிலர் மீட்டு அருகில் உள்ள ராம்கார் நகர ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். அவருடைய உடல் ராம்கார் அரசு ஆஸ்பத்திரியில் பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. அங்கு அக்பர்கானின் குடும்பத்தினர் விரைந்தனர்.

    இந்த படுகொலை தொடர்பாக ராம்கார் போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 2 பசுக்களும் கிராம மக்களிடம் இருந்து மீட்கப்பட்டன.

    இந்த சம்பவத்துக்கு மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய அத்தனை பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். 
    திருச்சியில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி, 5 மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி பாலக்கரை, எடத்தெரு ரோடு கீழப்படையாச்சி தெருவை சேர்ந்தவர் நடராஜன். தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காந்தி மார்க்கெட் 6-ம் எண் நுழைவாயில் அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். வேலை முடிந்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டுபோனது தெரியவந்தது. புகாரின்பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    திருச்சி மாநகரில் திருட்டுபோகும் மோட்டார் சைக்கிள்களை கண்டுபிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு வாகன திருடர்கள் தேடப்பட்டு வந்தனர். இந்த தனிப்படையினர் விஸ்வாஸ்நகர் பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது, சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரது பெயர் விஜய் (வயது28) என்பதும், திருச்சி மேலஅம்பிகாபுரம் ரெத்தினசாமி தெருவை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் நடராஜனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் விஜயை கைது செய்தனர். அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது.

    விசாரணையில், மேலும் 4 இடங்களில் அவர் மோட்டார் சைக்கிள்கள் திருடியதை ஒப்புக்கொண்டார். அதன்படி, திருச்சி-தஞ்சை ரோட்டில் உள்ள பூக்கொல்லை தெருவை சேர்ந்த சதாம் உசைன் என்பவர் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், திருச்சி நரசிம்மநாயுடு தெருவை சேர்ந்த ஆரோக்கிய செல்வராஜ்(38) தனது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள், தஞ்சை ரோடு ரம்பைகார தெருவை சேர்ந்த அப்துல்நசீர்(33)என்பவரின் மோட்டார் சைக்கிள், திருச்சி ராஜீவ்காந்தி நகர் 2-வது தெருவை சேர்ந்த செந்தில்குமார்(40)பழைய பால்பண்ணை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் விஜய் திருடி இருந்தார்.

    அவர் சொன்ன தகவலின் அடிப்படையில் 4 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டன. மோட்டார் சைக்கிள் திருடனை பிடித்த தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பாராட்டினார். 
    காட்பாடி ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் சினிமா பட பாணியில் பெற்றோருடன் ரெயிலில் இருந்த காதலியின் கையை பிடித்து இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    சென்னையில் இருந்து ஆலப்புழா- டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 7.45 மணியளவில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தது. ரெயிலில் இருந்த ஒரு பெட்டியில் ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்திருந்தார்.

    அப்போது திடீரென ஒரு வாலிபர் அந்த பெட்டியில் ஏறி இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தார். இதைப் பார்த்த இளம் பெண்ணின் தந்தை அந்த வாலிபரை தடுக்க முயற்சித்தார். ஆனால் அவரை தள்ளிவிட்டார். இதனால் அவரது உறவினர்கள் கூச்சலிட்டனர். அதற்குள் இளம்பெண்ணை அந்த வாலிபர் இழுத்துக் கொண்டு ரெயிலில் இருந்து கீழே இறங்கினார்.

    தொடர்ந்து பிளாட்பாரத்திலிருந்து இளம்பெண்ணை இழுத்தபடி ஓட்டம் பிடித்தார். இளம் பெண்ணும் அவருடன் ஓடி சென்றார்.

    இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இளம் பெண்ணை யாரோ மர்ம நபர்கள் கடத்தி செல்கின்றனர் என கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அதிர்ச்சி அடைந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் பயணிகள் வாலிபரை விரட்டி சென்றனர். அவர்களை காட்பாடி- குடியாத்தம் சாலையில் மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலீசார் கூறியதாவது:-

    ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்தவர் ஸ்வேதா (24). இவரும் அதே பகுதியை சேர்ந்த ராயடு (24) என்பவரும் காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். காதல் விவகாரத்தை அறிந்த ஸ்வேதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி ஸ்வேதாவும், ராயடுவும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

    இதனை அறிந்த பெற்றோர், ஸ்வேதாவை வெளியே விடாமல் வீட்டிலேயே பூட்டி வைத்தனர். மேலும் ராயடுவுடன் பேசுவதை தடுக்க அவரது செல்போனையும் பறித்துக் கொண்டனர். காதலனை சந்திக்க முடியாமல் பரிதவித்த ஸ்வேதா ஒருகட்டத்தில் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இதையடுத்து இருவரும் பதிவு திருமணம் செய்துள்ளனர்.

    பட்டதாரிகளான இருவரும் தங்களுக்கு வேலை கிடைத்தவுடன் திருமணத்தை பற்றி மற்றவர்களுக்கு தெரிவிக்கலாம் என்றும், அதுவரை இருவரும் தங்களது பெற்றோருடன் தங்கியிருப்பது என்றும் முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி இருவரும் அலைபாயுதே சினிமா பாணியில் தங்களது பெற்றோருடன் தங்கினர். அவ்வப்போது நண்பர்கள் உதவியுடன் சந்தித்து பேசி வந்தனர். ஸ்வேதாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுவதை அறிந்த பெற்றோர் அவரை கண்காணிக்க தொடங்கினர். அதில் ஸ்வேதா மீண்டும் ராயடுவுடன் பேசி வருவதை அறிந்தனர்.

    இதனிடையே ஸ்வேதாவின் உறவினர் பெண் ஒருவருக்கு வேலூரில் உள்ள கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. அவரை கல்லூரியில் சேர்க்க லட்சுமி அவரது கணவர் ஆகியோர் வேலூர் வர முடிவு செய்தனர். உடன் ஸ்வேதாவையும் அழைத்து வந்தனர்.

    ராஜமுந்திரியில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் ரெயில் காட்பாடி நோக்கி வந்தனர். முன்னதாக ராயடுவை செல்போனில் ரகசியமாக தொடர்பு கொண்டு பேசிய ஸ்வேதா தன்னை காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்து அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி ராயடு தனது நண்பர்கள் 10 பேருடன் அதே ரெயிலில் வேறு பெட்டியில் பயணம் செய்தார்.

    காட்பாடி ரெயில் நிலையத்தில் ஸ்வேதா தனது பெற்றோருடன் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ராயடு, சினிமா பாணியில் ஸ்வேதாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஓடியது தெரியவந்தது. ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் இருவரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது இருவரும் சட்ட விதிகளின்படி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பதிவுத் திருமணம் செய்து கொண்டதற்கான ஆதாரங்களை காண்பித்தனர்.

    அதைத் தொடர்ந்து போலீசார் ஸ்வேதாவின் பெற்றோரிடம் சமாதானம் பேசினார். பின்னர், காதல் தம்பதியை பாதுகாப்பாக ராஜமுந்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    சேலத்தில் வாலிபர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடலை தண்டவாளத்தில் வீசி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் பொன்னம்மாபேட்டை ரெயில்வே கேட்டில் இருந்து அம்மாபேட்டை செல்லும் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் சுமார் 25 வயதுடைய வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவருடைய முகத்தின் ஒரு பகுதி சிதைந்திருந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சொன்றனர். தண்டவாள பகுதியில் வாலிபரின் உடல் கிடந்ததால் அவர்கள் சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ரெயில்வே போலீசாரும் அங்கு வந்தனர்.

    இதையடுத்து அவர்கள், இறந்து கிடந்த வாலிபரின் உடலை பார்த்தனர். அப்போது வாலிபரின் கழுத்து இறுக்கப்பட்டதற்கான அடையாளம் தெரிந்ததால் இது கொலையாக இருக்கலாம் என்று அவர்கள் கருதினர். இதனால் இந்த கொலை தொடர்பாக அம்மாபேட்டை போலீசார் விசாரிக்குமாறு ரெயில்வே போலீசார் கூறிவிட்டு சென்று விட்டனர்.

    பின்னர் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இந்த நாய் மோப்பம் பிடித்து அங்கிருந்து சிறிது தூரம் வரை ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வாலிபரின் கழுத்தில் கயிறு அல்லது வயரால் இறுக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்ததால் அவரை மர்ம ஆசாமிகள் வேறு ஒரு இடத்தில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்து பின்னர் அதை மறைப்பதற்காக தண்டவாளத்தில் உடலை வீசி சென்றிருக்கலாம்‘ என்பது தெரியவந்தது.

    அதிகாலையில் சென்ற ரெயில் அந்த வாலிபரின் முகத்தில் ஏறி சென்றதால் அடையாளம் தெரியவில்லை. இதையடுத்து வாலிபரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் நீலம், கருப்பு, வெள்ளை நிறங்களுடன் கூடிய டி-சர்ட்டும், சந்தன கலர் பேண்டும் அணிந்திருந்தார். மேலும் கொலையுண்ட வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கொலையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் இந்த சம்பவத்தால் சேலத்தில் இருந்து விருத்தாச்சலம் சென்ற பயணிகள் ரெயில் நடுவழியில் நின்றது. இந்த ரெயில் அரை மணி நேர கால தாமதத்திற்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றது. 
    திருத்துறைப்பூண்டியில் காசோலை மோசடி வழக்கில் வாலிபருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தோப்படி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரிடம் கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடியை சேர்ந்த ஹாஜாமைதீன் (வயது35) என்பவர் ரூ.5 லட்சம் கடன் பெற்றார். இந்த கடனை திரும்ப செலுத்துவதற்காக ஹாஜாமைதீன் வழங்கிய காசோலையை செல்வராஜ், ஒரு வங்கியில் செலுத்தினார். அப்போது ஹாஜாமைதீனின் வங்கி கணக்கில் பணம் இல்லாதது தெரியவந்தது.

    இதையடுத்து செல்வராஜ், ஹாஜாமைதீன் மீது திருத்துறைப்பூண்டி விரைவு கோர்ட்டில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த விரைவு கோர்ட்டு நீதிபதி கண்ணன், ஹாஜாமைதீனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் கடன் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார். 
    கேரள மாநிலம் மலப்புரத்தில் பெண் தபால் அதிகாரியிடம் ரூ.4 லட்சம் பணத்தை கொள்ளையடித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூரில் உள்ளது தலைமை தபால் அலுவலகம். நேற்று மதியம் பெண் அதிகாரி பார்கவி மற்றும் உதவி அதிகாரி சுரேந்திரன் ஆகியோர் டெபாசிட்தாரர் ஒருவருக்கு கொடுக்க ரூ.4 லட்சத்தை எண்ணி மேஜை அருகே வைத்தனர். டெபாசிட் தாரர் அவசரம் என்று கேட்டதால் சாப்பிட கூட செல்லாமல்அவருக்காக காத்திருந்தனர்.

    அப்போது தொப்பி அணிந்த ஒரு வாலிபர் தபால் அலுவலகத்திற்கு வந்தார். அங்கிருந்த ஊழியர்கள் உள்ளே செல்லக்கூடாது என்று தடுத்தனர். அதையும் மீறி அந்த வாலிபர் உள்ளே சென்றார்.

    பெண் அதிகாரி பார்கவியிடம் தனக்கு பசிக்கிறது. சாப்பிட ஏதாவது தாருங்கள் என்று கேட்டார். மனம் இரங்கிய அதிகாரி தனது பேக்கில் இருந்து ரூ.20 எடுத்தார். உதவி அதிகாரி சுரேந்திரன் ஒரு தபாலை எடுக்க முயன்றார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய வாலிபர் மேஜையில் இருந்த ரூ.4 லட்சத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் சத்தம் போட்டனர். உஷாரான ஊழியர்கள் வாலிபரை மடக்கிப்பிடிக்க தயாரானார்கள். ஆனால் அவர்களால் வாலிபரை பிடிக்க முடியவில்லை. அங்கிருந்து மின்னல் வேகத்தில் வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து திரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தபால் அலுவலகம் எதிரே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் தொப்பி அணிந்த வாலிபர் உள்ளே நுழைவதும், சிறிது நேரத்தில் அவர் வெளியே தப்பி ஓடுவதும் பதிவாகி உள்ளது. கேமிரா பதிவுகளை வைத்து போலீசார் கொள்ளையனை தேடி வருகிறார்கள். இது குறித்து தகவல் அறிந்ததும் மஞ்சேரி தபால் துறை சூப்பிரண்டு அனில்குமார் திரூர் தலைமை தபால் நிலையத்திற்கு வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். #tamilnews
    சோழவந்தான் அருகே வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழவந்தான்:

    சோழவந்தானை அடுத்த கரட்டுப்பட்டி அருகேயுள்ள பொம்மன்பட்டியைச் சேர்ந்தவர் பாக்கியம். இவரது மகன் சின்னு என்ற சின்னத்தம்பி (வயது 27). பொம்மன்பட்டி அருகே மட்டப்பாறையில் உள்ள கோவில் திருவிழாவுக்கு சின்னத்தம்பி நேற்று இரவு சென்றார். இன்று காலை அவர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் அவர் கரட்டுப்பட்டி பெரியார் பாசன கால்வாய் பாலத்தின் கீழ் முகத்தில் காயத்துடன் இறந்து கிடப்பது தெரியவந்தது.

    அவரது இடுப்பில் 2 செருப்புகள் செருகப்பட்டிருந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சோழவந்தான் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சின்னத்தம்பியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சின்னத்தம்பியின் முகத்தில் காயம் உள்ளதால் அவரை யாராவது அடித்துக் கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    பிரேத பரிசோதனையின் முடிவில் தான் சின்னத்தம்பி எப்படி இறந்தார்? என்று தெரியவரும். #tamilnews
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆற்றில் தவறி விழுந்த சிறுவனை மீட்கும் முயற்சியில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஆம்வாரி ஜீரோ பாலத்தில் இருந்து சிறுவன் ஒருவன் தவறி ஆற்றில் விழுந்துள்ளார். இதைக்கண்ட அப்பகுதியில் இருந்த ஷகிர் வானி என்ற வாலிபர் விரைந்து செயல்பட்டு ஆற்றில் விழுந்த சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளார்.

    ஆனால், சிறுவனை காப்பாற்றி கரை சேர்த்த சில வினாடிகளில் ஷகிரை வெள்ளம் இழுத்து சென்றது. இதனால் அவர் சிறிது நேரத்தில் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ஷகிர் பி.யு.சி படிக்கும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிறிதும் அஞ்சாமல் சிறுவனின் உயிரை காப்பாற்ற தன் உயிரை இழந்த 16 வயது சிறுவனின் உடலுக்கு அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
    கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆத்திரமடைந்த போலீசார் வாலிபரை சரமாரியாக தாக்கியதில் அவரின் பார்வை பறிபோனது. இது குறித்து 3 போலீசார் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் ஆலுவாய் நகரம் குஞ்சாட்டுக்கரையை சேர்ந்தவர் உஸ்மான் (வயது 36). இவர் ஆலுவாய் நகருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது முன்னால் சென்ற கார் மீது லேசாக மோட்டார் சைக்கிள் உரசியது. இதில் நிலைதடுமாறிய உஸ்மான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இதனையடுத்து காரில் இருந்து இறங்கி 3 பேர் உஸ்மானை சரமாரியாக தாக்கினர். முகத்தில் பலமாக தாக்கினர். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஓடிவந்து தட்டிக்கேட்டனர். ஆனால் நாங்கள் எடத்தலா போலீஸ் அதிகாரிகள் என்று கூறினர்.

    பின்னர் மீண்டும் உஸ்மானை தாக்கிய போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துக் சென்று அங்கேயும் பலமாக தாக்கினர். வாலிபரை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக அமைப்புகள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

    வேறு வழியில்லாமல் உஸ்மானை போலீசார் விடுவித்தனர். படுகாயம் அடைந்த அவரை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் சோதனை செய்தபோது உஸ்மானின் 2 பற்கள் உடைந்துபோனது. கண்ணுக்கு அடியில் இருந்த எலும்பு முறிந்துபோனது. தாடை எலும்பு முறிந்துபோனது. இது தவிர கண்ணுக்கு செல்லும் ரத்த குழாய் சேதம் ஏற்பட்டதால் 50 சதவீத பார்வை பறிபோனது தெரியவந்தது.

    இது குறித்து முதல்-மந்திரி, மந்திரி மற்றும் டி.எஸ்.பி. ஆகியோருக்கு புகார் செய்யப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தியதில் மோசமான தாக்குதல் இதுவென்று கூறி உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

    இதனையடுத்து ஆலுவாய் டி.எஸ்.பி. திருதுலசந்திரன் தாக்குதலில் ஈடுபட்ட ஏ.எஸ்.ஐ. புஷ்பராஜ் மற்றும் போலீஸ்காரர்கள் ஜலில், அப்சல் ஆகியோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து இடமாற்றம் செய்தார். பலத்த காயம் அடைந்த உஸ்மான் துபாயில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சொந்த ஊர் வந்தார்.

    இந்நிலையில் தான் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதல் நடத்திய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.எஸ்.பி. தெரிவித்தார். #tamilnews
    கும்மிடிப்பூண்டி அருகே செல்போனில் படம் எடுத்தபோது மின்னல் தாக்கி சென்னையை சேர்ந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கும்மிடிப்பூண்டி:

    சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). மஸ்கட்டில் (வெளிநாடு) உள்ள பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்து வந்த ரமேஷ், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து சென்னை வந்தார். பின்னர் தனது நண்பர்கள் கோடம்பாக்கத்தை சேர்ந்த சங்கர் (45) மற்றும் மயிலாப்பூரை சேர்ந்த பிரபாகரன் (44) ஆகியோருடன் சேர்ந்து பழைய கார்களை வாங்கி விற்பது உள்பட பல்வேறு தொழில்களில் பங்குதாரராக இருந்து வந்தார்.

    இவர்களது நண்பரான பார்த்திபன் (45) கும்மிடிப்பூண்டியை அடுத்த சுண்ணாம்புகுளம் கிராமத்தில் இறால் பண்ணை நடத்தி வருகிறார். இந்த பண்ணையை பார்ப்பதற்காக ரமேஷ் மற்றும் அவரது 2 நண்பர்களும் நேற்று மதியம் காரில் சுண்ணாம்புகுளம் கிராமத்திற்கு வந்தனர்.

    இறால் பண்ணையை பார்த்திபனுடன் அவரது நண்பர்களும் பார்வையிட்டனர். ரமேஷ் முன்னால் செல்ல அவருக்கு பின்னால் பார்த்திபன் உள்ளிட்டோர் சென்றனர்.

    இறால் பண்ணை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை தனது செல்போனில் படம் பிடித்தவாறு ரமேஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது இடியுடன் லேசான மழை பெய்தது.

    அப்போது மின்னல் தாக்கியதில் ரமேஷ் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்தனர். ஆனால் அவர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை.

    உயிரிழந்த ரமேசுக்கு உமா (38) என்ற மனைவியும், தியா (9) என்ற மகளும் உள்ளனர். ரமேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள 70 அடி ஆழ கிணற்றில் வாலிபர் ஒருவர் தவறி விழுந்து பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள செட்டியப்பட்டியில் 70 அடி ஆழ கிணற்றில் ஒரு வாலிபர் தவறி விழுந்து விட்டதாக மணப்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கிணற்றுக்குள் விழுந்த வாலிபரை மீட்டு, சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அந்த வாலிபர் இறந்தார்.

    அந்த வாலிபரின் பெயர், ஊர் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரை சேர்ந்த பஷிர்(வயது 35) என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது பஷிர் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து திண்டுக்கல் செல்ல ரெயில் டிக்கெட் எடுத்து விட்டு இடையில் செட்டியப்பட்டியில் இறங்கியுள்ளார். பின்னர் அந்த வழியாக வந்த நபரிடம் தன்னை ஒரு இடத்தில் இறக்கி விடும்படி கூறியுள்ளார். இதனிடையே சந்தேகமடைந்த அந்த நபர், செல்போனை எடுத்து பேச முயன்ற போது, தன்னை பற்றித்தான் யாரிடமோ பேச போகிறார் என்று எண்ணி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள 70 அடி ஆழ தரை மட்ட கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.

    பஷிர் சென்னையில் வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு நெல்லையில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு பயணித்துள்ளார். இடையில் அவர் மணப்பாறையில் இறங்கியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    அரியானா மாநிலத்தில் வாட்ஸ்அப்பில் அனுப்பிய புகைப்படத்தால் மோதல் ஏற்பட்டு, 28 வயது வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #WhatsAppGroupAdmin #SonepatViolent
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் சோனிபட் நகரைச் சேர்ந்த லவ் ஜோகர் (வயது 28) என்பவர் வாட்ஸ்அப் குரூப்பின் அட்மினாக செயல்பட்டு வருகிறார். அப்பகுதியில் வசிப்பவர்கள் அனைவரும் இந்த குரூப்பில் இணைந்து, தங்கள் சமுதாயம் சார்ந்த தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனர். இந்த தேர்தலில் எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு எடுப்பதற்காக இந்த குரூப் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வாட்ஸ்அப் குரூப்பில் தனது தனிப்பட்ட புகைப்படத்தை லவ் ஜோகர் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக லவ் ஜோகருக்கும் தினேஷ் என்பவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் பிரச்சினையை பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று தினேஷ் கூற, அவரது வீட்டிற்கு லவ் ஜோகர் சென்றுள்ளார். அவருடன் அவரது சகோதரர்களும் சென்றுள்ளனர்.



    தினேஷ் வீட்டில் பேச்சுவார்த்தை நடந்தபோது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் லவ் ஜோகர் மற்றும் அவரது சகோதரர்களை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த லவ் ஜோகர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். சகோதரர்கள் 3 பேர் காயமடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தினேஷ் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர். தங்கள் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்துவது யார்? என்பதில் ஏற்பட்ட போட்டியே சண்டை ஏற்பட காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. #WhatsAppGroupAdmin #SonepatViolent

    ×