search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டி"

    சாலை வசதி செய்து தரக்கோரி ஊட்டியில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். கோத்தகிரியை அடுத்த பாரதிநகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    பாரதிநகர் பகுதியில் நடைபாதை, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. குண்டும், குழியுமான பாதையை பொதுமக்களே சரிசெய்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் வாகனங்கள் சென்று வர முடியாத நிலை உள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் பாரதிநகருக்கு நேரில் வந்து ஆய்வு செய்து சாலை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அட்டவளை பகுதியில் இருந்து பாரதி நகருக்கு சாலை வசதி செய்து தரக்கோரி வருகிற 18-ந் தேதி கோத்தகிரி-ஊட்டி சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். ஆகவே, சாலை வசதி ஏற்படுத்த உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்து முன்னணி மாவட்ட தலைவர் மஞ்சுநாத் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஊட்டி காந்தல் ஸ்லேட்டர்ஹவுஸ் பகுதியில் நகராட்சி இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து மின் இணைப்பு பெற்று உள்ளார். இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டபோது, மின் இணைப்பு வழங்க நகராட்சி மூலம் எந்தவித சான்றிதழும் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்த தகவலில் நகராட்சி அதிகாரிகள் மூலம் வழங்கிய தடை இல்லா சான்று மற்றும் வரிச்சான்று மூலமே மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப் பட்டு இருந்தது. 2 துறைகளும் மாறுபட்ட கருத்து கூறுவதால் மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குன்னூரில் இந்து முன்னணி சார்பில் பேனர் வைத்த போது, போலீசார் வழக்குப்பதிவு செய்து பேனரை அகற்ற வேண்டும் என்றனர். ஆனால், ஊட்டியில் அரசியல் கட்சியினர் நகராட்சி அனுமதி இல்லாமல் பேனர் மற்றும் கொடிக்கம்பம் வைத்து உள்ளனர். எனவே போலீசார் பாரபட்சமாக செயல்படுவது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது. 
    ஊட்டியில் தொடங்கிய கண்காட்சியில் 25 ஆயிரம் ரோஜா மலர்களால் பிரமாண்ட இந்தியா கேட் உருவாக்கப்பட்டு உள்ளது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை முன்னிட்டு ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத் தப்பட்டு வருகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் ஊட்டி ரோஜா பூங்காவில் 16-வது ரோஜா கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி., கோபாலகிருஷ்ணன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



    இந்நிகழ்ச்சியில் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் அமர் குஷ்வாஹா, சாந்தி ராமு எம்.எல்.ஏ., தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) சிவசுப்ரமணியம், துணை இயக்குனர் உமாராணி, ஆவின் இணைய தலைவர் மில்லர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ரோஜா கண்காட்சியில் இந்திய தலைநகரமான டெல்லியில் அமைந்து உள்ள இந்தியா கேட் போன்று (இந்திய நுழைவு வாயில்) 25 ஆயிரம் ரோஜா மலர்களால் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது 12 அடி நீளம், 16 அடி உயரத்தில் கம்பீரமாக தோற்றமளித்தது. அதன் முன்பு ராணுவ பாதுகாப்பு குறித்த படம் இருந்தது. சிவப்பு மற்றும் வெள்ளை நிற ரோஜா மலர்கள் கண்களை கவரும் வகையில் அமைந்தது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் அதற்கு முன் நின்று தங்களது குடும்பத்தினருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    குழந்தைகள் விரும்பி பார்க்கும் கார்ட்டூன் நிகழ்ச்சியில் இடம்பெறும் சோட்டா பீம் 5 ஆயிரம் ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்டு இருந்தது. சுற்றுலா பயணிகளின் குழந்தைகள் சோட்டா பீம்மை ஆர்வமுடன் பார்த்தனர். பூங்காவின் முன்பகுதியில் ரோஜா இதழ்களை கொண்டு ட்வீட்டி ரங்கோலி அழகாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ரோஜா பூங்காவுக்குள் நுழைந்ததுமே சுற்றுலா பயணிகளின் மனதில் இந்த ரங்கோலி பிரமிப்பை ஏற்படுத்தியது. ரோஜா கண்காட்சியை காண பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.



    இதுதவிர மதுரை மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில், 6 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு ஜல்லிக்கட்டு காளை, ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் 6 ஆயிரம் ரோஜா மலர்களால் மயில், கிருஷ்ணகிரி தோட்டக்கலைத்துறை சார்பில் 5 ஆயிரம் மலர்களை கொண்டு படகு ஆகியவை வடிவமைக்கப்பட்டு இருந்தன. இந்த படகில் காய்கறிகள், பழங்கள் வைக்கப்பட்டு இருந்தது.

    திருநெல்வேலி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில், ரோஜா மலர்களால் ஆன ரோஜா மாலை, ரோஜா இதழ்களை கொண்டு தயாரிக்கப்பட்ட திருநெல்வேலி ரோஜா அல்வா காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கண்காட்சியில் போட்டியாளர்கள் கலந்துகொண்டு வீட்டில் அலங்காரத்திற்காக வைக்கப்படும் கோப்பைகள், மரத்தொட்டிகளிலும் ரோஜா மலர்களை அலங்காரம் செய்து வைத்திருந்தனர்.
    ×