search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகூர்"

    நாகூரில் லோடு ஆட்டோவில் மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் மதுபானங்களை தடுக்க வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில்  துணை சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மேற்பார்வையில் நாகூர் போலீசார் இன்று காலையில் வாஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் .

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பல லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி மதுபாட்டில் கடத்தி வந்தது தெரியவந்தது.இதைதொடர்ந்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் நாகூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் திருச்சி உறையூர் ஜக்கம்மா நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அருண்குமார் (வயது 32) என்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் கடத்தி வந்த மதுபாட்டில்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்து அருண்குமாரை கைது செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாட்டில் மதிப்பு ரூ. 1 லட்சத்துக்கு மேல் என கூறப்படுகிறது.

    நாகூர் அருகே வாகனம் மோதி காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகூரை அடுத்த பாலக்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் வீரமணி (வயது 55). இவர் நாகூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீன்வளத்துறை பல்கலைகழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். வீரமணி கடந்த 12-ம் தேதி இரவு வீட்டில் இருந்து வேலைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போதுகிழக்கு கடற்கரை சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனே சென்று காயமடைந்த வீரமணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வீரமணி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகூர் அருகே சாராயம் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், நாகூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது நாகூர் வெட்டாறு பாலம் அருகில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    போலீசார் அவர்களை நிறுத்தி சோதனை செய்யும்போது பாண்டி சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் பனங்குடி சன்னமங்கலம் ஓடை மேடு தெருவை சேர்ந்த ராஜு (வயது 30) அதே பகுதி செவ்வந்தி வீதி தெருவை சேர்ந்த ரஞ்சித் (22) என்பதும் தெரியவந்தது இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்

    தொடர்ந்து வாழ ஒக்கூர் பகுதியில் நடத்திய சோதனையில் பாண்டி சாராயம் கடத்தி வந்த திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு தெரு ஆனந்தகுமார் (25) அதே பகுதி பெருக்கு தெருவைச் சேர்ந்த சுமன் (24) ஆகிய 2 பேரையும் கைது செய்து 110 லிட்டர் பாக்கெட் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    நாகூர் அருகே வேன் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகூரை அடுத்த சன்னாமங்களம் காரைமேடு தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் கவியரசன் (வயது 17) இவர் நேற்று இரவு நாகூரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றபோது நாகூர் தேரடி மெயின் ரோட்டில் லோடு வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தகவலறிந்த நாகூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் உடலை நாகை அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதை வழக்கு பதிவு செய்து போலீசார் டிரைவரை தேடி வருகிறார்கள்.

    ×