search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பகோணம்"

    கும்பகோணத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம், ஆண்டியப்பன் தெருவை சேர்ந்தவர் சாந்தாராமன் மகன் பிரவீன் (27). இவர் கடந்த 14-ந்தேதி வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைத்திருந்தார். கடந்த 14 ந்தேதி மர்ம நபர்கள் அதனை திருடி சென்றனர்.

    இதே போல் கும்பகோணம், செம்போடையை சேர்ந்தவர் ஞானசம்பந்தம் மகன் வைரவேந்தன் (26), இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார் கடந்த 14 ந்தேதி இரவு மர்ம நபர்கள் அதனை திருடி சென்றனர்.

    இது குறித்து பிரவீன் மற்றும் வைரவேந்தன் ஆகியோர் மேற்கு போலீசில் புகாரளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, தாராசுரம், எலுமிச்சங்கா பாளையத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் தீனதயாளன் (28), மாரி முத்து மகன் தாமோதரன் (24) மற்றும் மதுக்கூர், ராமானந்தபுரத்தை சேர்ந்த ரவி மகன் சிவபாரதி (20) ஆகியோரை கைது செய்தனர்.

    கும்பகோணம் அருகே தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே சாக்கோட்டை கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது47). கொத்தனார். இவரது மகன் பூவரசன்(22). ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். குடும்ப தகராறு காரணமாக பூவரசன் தனது அம்மாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதை தட்டிக்கேட்ட ரவியை அரிவாளால் பூவரசன் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ரவியை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து நாச்சியார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து பூவரசனை கைது செய்தனர்.

    கும்பகோணம் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே அண்ணலக்ரகாரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 46). தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. இந்நிலையில் மனமுடைந்த மோகன் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

    கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மோகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கும்பகோணம் அருகே இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே முத்தையாபுரம் கீழத் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுமதி (வயது 40). சுமதி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 25-ம் தேதி இவரது மகள் ரூபா (வயது 25). தனது தாய் சுமதியை ஆஸ்பத்திரியில் பார்த்து விட்டு ஊருக்கு போகிறேன் என்று தாயிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் இதுவரை ரூபா வீட்டுக்கு செல்லவில்லை.

    இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் சுமதி புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரூபாவை தேடி வருகின்றனர்.

    கும்பகோணத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    கும்பகோணம்:

    தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் அரசு அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படை அமைத்து 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை தொகுதியிலும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கும்பகோணத்தை அடுத்த அண்ணலக்கிரஹாரம் மாத்தி கேட் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி உஷா தலைமையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 44) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரது வாகனத்தை நிறுத்தி பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் அவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் எடுத்து செல்வது தெரியவந்தது. அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தாசில்தார் நெடுஞ்செழியனிடம் ஒப்படைத்தனர்.

    செல்வத்திடம் நடத்திய விசாரணையில் அவர் வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாகவும், தன்னிடம் கடன் பெறுபவர்களுக்கு பணத்தை கொடுக்க எடுத்து சென்றதாக கூறினார். அவரிடம் உரிய ஆவணம் இல்லாதததால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தாசில்தார் மூலம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது. #LokSabhaElections2019

    கும்பகோணத்தில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் திருப்பனந்தாள் சன்னதி தெருவை சேர்ந்தவர் உலகநாதன் (வயது55). இவர் நேற்று கும்பகோணத்திலுள்ள பழனிச்சாமி நகரை சேர்ந்த திருஞானசம்பந்தம் என்பவரது வீட்டில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது கம்பி இறக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சார வயரில் உரசியதால் தூக்கி வீசப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்.

    இது சம்பந்தமாக கும்பகோணம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்

    கும்பகோணம், ஒரத்தநாடு, பேராவூரணியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    கும்பகோணம்:

    அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை பகுதியில் நேற்று இரவு பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சங்கர் (வயது 49) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் வைத்திருந்தார். அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அந்த பணம் பூ வியாபாரிக்கு சொந்தமானது என்றும் அவரிடம் தான் ஊழியராக வேலை பார்த்து வருவதாக சங்கர் தெரிவித்தார். உரிய ஆவணத்தை காட்டி பணத்தை பெற்று கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அதன்படி நேற்று ஒரத்தநாட்டை அடுத்துள்ள நெய்வாசல் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மன்னார்குடி பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு சென்ற ரூ.3½ லட்சத்தை அதிகாரிகள் கைப்பற்றி ஒரத்தநாடு துணை தாசில்தார் (தேர்தல்) செல்வக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் அருகே தேர்தல் ஆணையத்தின் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாட்டாத்தி கொல்லையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவரிடம் உரிய ஆவணம் இன்றி ரூ.80 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #LSPolls

    கும்பகோணம் லாட்ஜில் சென்னை வாலிபர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    சென்னை அம்பத்தூர் சிட்கோ நகரை சேர்ந்தவர் திருவேங்கடம்(வயது41) என்பவர் கடந்த 22-ந்தேதி காலை கும்பகோணம் பஸ் நிலையம் அருகே ஜான் செல்வராஜ் நகரில் உள்ள தனியார் லாட்ஜில் வந்து தங்கி உள்ளார்.

    அன்று மதியம் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் அறைக்கு வந்தார். பின்னர் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லையாம்.

    நேற்று 24-ந்தேதி இரவு வரை அறையை விட்டு வெளியில் வராததால் கதவை தட்டியும் திறக்காததால் லாட்ஜ் உரிமையாளர் இதுபற்றி கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    இதன்பேரில் போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது துண்டு மட்டும் அணிந்த நிலையில் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. அருகில் மூச்சுத் திணறலுக்கு பயன்படுத்தும் மருந்து ஸ்பிரே கிடந்தது. அவரை உடைமைகளை பரிசோதித்ததில் அவர் சென்னையில் இருந்துதான் வந்து தங்கி இருந்தது தெரியவந்ததையடுத்து அவரது வீட்டுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் உடலை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து அவர் மூச்சுத் திணறலில் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கும்பகோணம் அருகே ரூ.30 லட்சம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தி செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் வேலன்தொட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் சுபபிரியா (வயது 21). இவர் கும்பகோணம் அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் சுபபிரியா கல்லூரிக்கு சென்றார். அதன்பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் சுபபிரியாவின் தாய் சித்ரா அதிர்ச்சி அடைந்து மகளை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் காணவில்லை.

    கும்பகோணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கும் சென்று மகளை தேடி பார்த்தனர். அங்கும் அவர் இல்லை.

    இதற்கிடையே சுபபிரியாவின் செல்போன் எண்ணில் இருந்து தாய் சித்ராவின் செல்போனுக்கு நேற்று மாலை ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    அதில், உங்களது மகள் சுபபிரியாவை கடத்தி வைத்துள்ளோம். எங்களுக்கு ரூ.30 லட்சம் கொடுத்து மகளை மீட்டு கொள்ளுங்கள். பணம் கொடுக்கவில்லை என்றால் மாணவியின் உடலை வீட்டுக்கு அனுப்புவோம்’ என்று குறிப்பிட்டு இருந்தது.

    இதை படித்து பார்த்து அதிர்ச்சி அடைந்த சித்ரா, உடனடியாக பந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாணவியை கடத்திய கும்பல், பெற்றோருக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். மட்டுமே அனுப்பி உள்ளனர். போனில் எதுவும் பேசவில்லை என்பதால் போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மாணவி சுபபிரியா காதல் விவகாரத்தில் கடத்தப்பட்டு உள்ளாரா? பணத்தை பறிக்கும் நோக்கில் மர்ம கும்பல் அவரை கடத்தி சென்றுள்ளதா? அல்லது மாணவியே கடத்தல் நாடகம் நடத்துகிறாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    ரூ.30 லட்சம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தி செல்லப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    கும்பகோணத்தில் அடுத்தடுத்த 3 கடைகளில் ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் சுவாமிமலை ரோட்டில் உள்ள மேலக்காவிரியில் ஒரு காம்பளக்ஸ் உள்ளது. இங்கு 4 கடைகள் உள்ளன. இந்த கடைகளை இரவு வியாபாரிகள் பூட்டி விட்டுசென்று விட்டனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு காம்பளசுக்கு வந்த கொள்ளையர்கள் 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டனர். அவர்கள் ஜெய் லாபுதீன் என்பவரின் டிராவல்ஸ் நிறுவனத்துக்குள் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.23 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்தனர். மேலும் பைசல் என்பவரது செல்போன் கடையில் 5 செல்போன்கள் மற்றும் பொருட்களை திருடியுள்ளனர். மேலும் பால்கடை, எலக்ட்ரிக்கல் கடை பூட்டையும் உடைத்துளனர். மேலும் அடுத்த காம்பளக்சில் உள்ள ரபீக் மளிகை கடையில் ரூ.12 ஆயிரத்தை திருடினர். 3 கடைகளிலும் கொள்ளை போனவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் என்று கூறப்படுகிறது.

    இந்த துணிகர கொள்ளை குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 கடைகளில் திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அடுத்தடுத்த கடைகளில் கொள்ளை நடந்தது கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கும்பகோணம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தை அடுத்த மணகுடியை சேர்ந்தவர் பாண்டியன், விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் பானுபிரியா (வயது 25).

    இவருக்கு பெற்றோர் மாப்பிளை பார்த்து வந்தனர். சிலர் வந்து பெண் கேட்டும் திருமணம் நிச்சயமாகவில்லை. இதனால் பாண்டியனும், அவரது மனைவியும் வேதனை அடைந்தனர். அவர்கள் இது தொடர்பாக நேற்று இரவு பேசிக் கொண்டு இருந்தனர். அதனை பானுபிரியா கேட்டதும் தனக்கு திருமணமாகாதது பெற்றோருக்கு மிகுந்த கஷ்டத்தை கொடுப்பதாக எண்ணி மனமுடைந்தார். அவர் எலி மருந்தை தின்று விட்டு படுத்து கொண்டார். இன்று காலை பானுபிரியா எலி மருந்தை தின்றது தெரியவந்தது. அவரை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடலை வீட்டுக்கு எடுத்து சென்றனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் அமையாததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மனகுடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கும்பகோணத்தில் டாஸ்மாக் கடையில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே தேப்பெருமாள் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல்காதீர். இவரது மகன் சேட்டு என்கிற கமல் பாட்ஷா.

    நேற்று இரவு 10 மணிக்கு கமல்பாட்ஷா கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். அப்போது ஊழியர்கள் கடையை அடைத்து விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த கமல்பாட்ஷா டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் மது கேட்டு கத்தியை காட்டி மிரட்டி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் தர்மன் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கமல் பாட்ஷாவை கைது செய்தனர்.

    ×