search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பகோணம்"

    கும்பகோணத்தில் நள்ளிரவில் 3 அரசு பஸ்கள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கும்பகோணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கும்பகோணம்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியானார்கள்.

    துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் போராட்டம் பெரிய அளவில் வெடித்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இருந்த போதிலும் போராட்டக் காரர்கள் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக ஒரு அரசு விரைவு பஸ் சென்னைக்கு சென்றது. அப்போது அந்த பஸ் கும்பகோணம் அடுத்துள்ள சுந்தர பெருமாள் கோவில் பகுதியில் நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்த போது அங்கு மறைந்து இருந்த மர்ம நபர்கள் சிலர் பஸ்சின் கண்ணாடி மீது கற்களை வீசி தாக்கினர்.

    இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சேதமானது. உடனே பஸ் டிரைவர் இது குறித்து கும்பகோணம் போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டு பஸ்சை அங்கிருந்து எடுத்து சென்றார். இந்த சம்பவத்தால் கும்பகோணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது போன்று பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை பகுதியில் அரசு விரைவு பஸ் ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் அந்த பஸ்சின் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் பஸ்சின் இடதுபுறம் உள்ள கண்ணாடிகள் உடைந்தது.

    இதைத் தொடர்ந்து நாச்சியார் கோவில் அருகே உள்ள நரசிங்கபேட்டை பகுதியில் சென்ற அரசுபஸ் மீதும் மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவு கற்களை வீசியுள்ளனர். இதில் அந்த பஸ்சின் கண்ணாடியும் சேதமானது.

    கும்பகோணம் பகுதியில் நேற்று நள்ளிரவு மட்டுமே 3 அரசு பஸ்கள் மீது தாக்குதல் நடந்திருப்பது தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அந்தந்த சரகத்திற்குட்பட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பஸ்கள் மீது தாக்குதல் நடந்த இடத்தில் வைக்கப் பட்டிருக்கம் சி.சி.டி.வி. பதிவுகளை வைத்து போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 3 இடங்களிலும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் தான் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம் அருகே அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டையில் மிகவும் பழமை வாய்ந்த படைவெட்டி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தற்போது சிதலமடைந்து காணப்பட்டதால் கோவிலில் திருப்பணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு திருப்பணி பணியாளர்கள் வேலை முடிந்ததும் கோவில் அர்ச்சகர் கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டனர். இன்று காலை கோவில் வழியே சென்ற பொதுமக்கள் கோவிலின் முன்பக்க கதவின் பூட்டுகள் உடைக்கபட்டு இருப்பதை கண்டு கோவில் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் அவர்கள் கோவிலுக்கு வந்து பார்த்த போது உள்ளே சன்னதியில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நாச்சியார் கோவில் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் உடனடியாக கோவிலுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கோவிலில் திருப்பணிகள் நடைபெறுவதால் கடந்த பல மாதங்களாக இந்த உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படவில்லை என்பது தெரியவந்தது.

    இந்நிலையில் மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். உண்டியலில் பக்தர்களின் காணிக்கையாக செலுத்திய பணம் ரூ.50 ஆயிரத்துக்குமேல் இருந்திருக்கும் என்று கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சியில் நேற்று முன்தினம் ம.தி.முக. மற்றும் நாம் தமிழர்கள் கட்சியினர் மோதிக் கொண்டனர். இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறி 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கும்பகோணம்:

    திருச்சியில் நேற்று முன்தினம் ம.தி.முக. மற்றும் நாம் தமிழர்கள் கட்சியினர் மோதிக் கொண்டனர். இந்த மோதலில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

    இந்நிலையில் இது தொடர்பாக கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆனந்த், பிரதாப் ஆகிய 2 பேரையும் பந்தநல்லூர் போலீசார் கைது செய்துள்ளனர். 

    இதேபோல் கும்பகோணம் தாலுகாவை சேர்ந்த நாம் தமிழர் கட்சி ஒன்றிய இளைஞர் பாசறை துணை தலைவர் தினேஷ் பாபுவையும் போலீசார் கைது செய்தனர்.

    கும்பகோணம் அருகே வீடு புகுந்து ரூ.2½ லட்சம் மதிப்புள்ள வெள்ளி சாமி சிலைகள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே பந்தல்லூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது56). இவரது மனைவி சொர்ணலதா. விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பூஜை அறையில் இருந்த ரூ.2½ லட்சம் மதிப்புள்ள வெள்ளியால் ஆன ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் சிலைகளையும், சிறிய அளவிலான தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்று விட்டனராம்.

    காலையில் எழுந்து பார்த்தபோது சுவாமி சிலைகள் காணாமல் போனது குறித்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணசாமி இதுகுறித்து பந்தநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளி சாமி சிலைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

    கும்பகோணம் அருகே சாலை விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் கம்மாளத் தெருவை சேர்ந்தவர் வேம்பு மகன் ராஜா(வயது28). இவரது நண்பர் ஜான்பீட்டர்(26). இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் பட்டீஸ்வரம் சென்றனர். பின்னர் இருவரும் தாராசுரம் வழியாக கும்பகோணம் வந்து கொண்டிருந்தனர்.

    சோழன்மாளிகை என்ற இடத்தில் வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    படுகாயமடைந்த ஜான்பீட்டரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம் அருகே 10-ம் வகுப்பு மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதால் உறவினர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே சுவாமிமலையை அடுத்த நாககுடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 26). இவர் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது ஆன 10-ம் வகுப்பு மாணவி தேவிக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணம் செய்ய அவர்களது உறவினர்களால் பேசி நிச்சயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவருக்கும் இன்று (20-ந்தேதி) சுவாமிமலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

    திருமணத்தையொட்டி இருவீட்டாரும் உறவினர்களுக்கு திருமண பத்திரிக்கை விநியோகித்து வந்தனர்.

    இதற்கிடையே மணமகள் தேவிக்கு 15 வயது ஆகிறது என்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுக்கு காத்திருக்கும் மாணவி என்றும் சுவாமிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. மேலும் மாணவி திருமணத்தை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரகசியமாக சிலர் போலீசுக்கு தெரியபடுத்தினர்.

    மாணவியின் திருமணத்தை தடுத்த நிறுத்த போலீசார் முடிவு செய்தனர். அதன் படி இன்று அதிகாலை 4 மணியளவில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் ரேகாராணி தலைமையில் போலீசார் திருமண மண்டபத்திற்கு சென்றனர். மண்டபத்தில் இருவீட்டார் உறவினர்களும் திரண்டு இருந்தனர்.

    அப்போது மணமக்களின் பெற்றோரை அழைத்து இன்ஸ்பெக்டர் ரேகாராணி பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவிக்கு சட்டபடி திருமண வயதை எட்டவில்லை. திருமணம் செய்து வைத்தால் சட்டபடி குற்றம். எனவே திருமணத்தை நிறுத்துங்கள் என்று கூறினார். இதை ஏற்று இரு வீட்டாரும் திருமணத்தை நிறுத்த ஒப்புக்கொண்டனர்.

    திருமணம் திடீரென நிறுத்தப்பட்டதால் வந்திருந்த உறவினர்கள் சோகம் அடைந்தனர். அவர்கள் மணமக்களை வாழ்த்த முடியவில்லை என ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    கும்பகோணம் அருகே கிணற்றின் சந்துபொந்தில் கிடந்த 15 பாம்புகளை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறை, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் கோபிநாத பெருமாள் கோவிலில் நாக சுந்தரம் என்பவரது தென்ன தோப்பு உள்ளது. இந்த பகுதியில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான கிணறு சுமார் 20 ஆடி ஆழத்தில் இருந்தது.

    கிணற்றில் தண்ணீர் இல்லாததால், தற்போது செடி கொடிகள் மண்டி கிடக்கிறது.

    இந்த நிலையில் அப்பகுதி கிராம மக்கள் சிலர், மூங்கில் மரங்களை வெட்டுவதற்காக சென்று போது, பழமையான கிணறு அருகே சென்றனர்.

    அப்போது கிணற்றில் இருந்து உஸ்.. உஸ்.. என்று சத்தம் கேட்டது. இதனால் சத்தம் வந்த கிணற்றின் அருகே போய் பார்த்தனர்.

    அப்போது அங்கு சுமார் 6 அடி நீளமுள்ள 2 பாம்புகள் கிணற்றின் சுவர் நெளிந்து கொண்டு இருந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கிணற்றின் அடியில் பார்த்த போது அங்கு சுமார் 10-க்கும் மேற்பட்ட பாம்புகள் இருந்தன.

    இதைத்தொடர்ந்து கிராம மக்கள், வனத்துறை, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து கும்ப கோணம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முத்து குமார் தலைமையில் வந்த வீரர்களும், வனத்துறை சார்பில் வன காப்பாளர் ஜான்சன் கென்னடி தலைமையில் வீரர்கள் , பொது மக்கள் போராடி பாம்புகளை பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனர்.

    இதுபற்றி அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    பாழடைந்த கிணற்றில் தற்போது 15 பாம்புகள் உள்ளது. குட்டி பாம்புகள்- பெரிய பாம்புகள் என 3 அடி முதல் 8 அடி வரை உள்ளன. இவை அனைத்தும் வி‌ஷம் உள்ளவை ஆகும். இவைகளை உடனடியாக இந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து காட்டில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கிணற்றில் குவியல்.. குவியலாக கிடந்த பாம்புகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


    தமிழகத்தில் வறட்சி காலத்திலும் வளர்ச்சி திட்டங்களை அறிவிப்பவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் துரைக்கண்ணு கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் அமைச்சர் துரைக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகா மாநிலத்தில் யார் ஆட்சி அமைத்தாலும் தமிழகத்துக்கு தண்ணீர் வருமா? என்பதற்கெல்லாம் யூகமாக பதில் கூற முடியாது. தமிழக முதல்வர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு இதுவரை எந்த வகையில் அழுத்தம் கொடுத்தாரோ, அதே போல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அழுத்தம் கொடுப்பார்.

    மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்துக்கும் செல்வார். மத்தியஅரசு அமைத்துள்ள வரைவு திட்டத்தை ஏற்று கொண்டதா? இல்லையா? என்பதில் பிரச்சினை இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகத்துக்குரிய 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் கொடுத்தே ஆக வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தான் தமிழக முதல்வரின் கோரிக்கை. எங்களுடைய கோரிக்கையும், செயல்பாடும் அது தான்.

    குறுவை சாகுபடி கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தான் பொய்த்துள்ளது. அப்படியும் உணவு தானிய உற்பத்தியில் இந்திய அளவில் தமிழகம் சிறப்பிடம் பெற்றுள்ளது.

    தமிழகத்தில் கடந்த 144 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடந்தாண்டு வறட்சி ஏற்பட்டது. அந்த வறட்சியிலும் தமிழக முதல்வர் வளர்ச்சி காண்கின்ற வகையில் வளர்ச்சி திட்டங்களை செய்திருந்தார்.குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் குறித்து இதுவரை விவாதிக்கவில்லை. குறுவை சாகுபடிக்கான கால அவகாசம் இருக்கிறது, பருவ மழை தொடங்க இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தண்ணீர் பெற இருக்கிறோம்.

    குடிமராமத்து பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்வது பற்றி ஆயத்த பணி நடைபெற்று வருகிறது. உரிய நிதியை ஒரிரு நாட்களில் முதல்வர் அறிவிப்பார். அதன்மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கும்பகோணம் அருகே மனநிலை பாதித்த பெண்ணை மானப்பங்கப் படுத்த முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் தாலுகா களம்பரம் பகுதி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ரஜேஸ்வரி(வயது45). இவரது மகள் பிரான்சிஸ் மேரி(17). மனநிலை பாதிக்கப்பட்டவர். அதே தெருவை சேர்ந்தவர் ராமதாஸ். இவர் பிரான்சிஸ் மேரியை அடிக்கடி கேலியும், கிண்டலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் கண்டித்து வந்துள்ளார்.

    கடந்த 14-ந்தேதி இதேபோல் பிரான்சிஸ் மேரியை ராமதாஸ் கிண்டல் செய்தததை கண்ட ராஜேஸ்வரி கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த ராமதாஸ் நேற்று வீட்டில் தனியாக இருந்த பிரான்சிஸ் மேரியை மானபங்கம் படுத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ராஜேஸ்வரி தனது மகளை ராமதாசிடம் இருந்து மீட்டார்.

    பின்னர் இதுகுறித்து அவர் சுவாமிமலை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரேகாராணி வழக்குப்பதிவு செய்து மனநிலை பாதித்த பெண்ணை மானபங்கம் படுத்த முயன்ற ராமதாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கும்பகோணத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவி தலையில் கியாஸ் சிலிண்டரை போட்டு கணவர் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாக்கோட்டை மெயின்ரோட்டில் வசித்து வருபவர் பசீர் அகமது (வயது 42). இவரது மனைவி பாத்திமா (33). பசீர் அகமது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    பாத்திமாவின் சொந்த ஊர் சென்னை திருவான்மியூர் ஆகும். பாத்திமா ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். பின்னர் முதல் கணவரை பிரிந்து வாழ்ந்த அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பசீர் அகமதுவை திருமணம் செய்து கொண்டார். பசீர் அகமதுவுக்கு பாத்திமா 3-வது மனைவி ஆவார்.

    பாத்திமா வீட்டிலேயே டெய்லர் கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து பசீர் அகமது , கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பினார். ஊருக்கு வந்த அவர் மதுகுடித்து விட்டு மனைவி பாத்திமாவிடம் தகராறு செய்து வந்தார். இதேபோல் அடிக்கடி அவர் தகராறு செய்ததால் பாத்திமா பீவி நாச்சியார் கோவிலில் உள்ள உறவினர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றார்.

    இதையடுத்து நேற்றுமுன் தினம் நாச்சியார் கோவிலுக்கு சென்ற பசீர் அகமது பேச்சுவார்த்தை நடத்தி மனைவியை குடும்பம் நடத்த சாக்கோட்டைக்கு அழைத்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவில் திடீரென கணவன்- மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு வந்தது. இதையடுத்து இருவரும் ஒருவரையொருவர் சத்தம் போட்டப்படி இருந்தனர். பிறகு பசீர் அகமது அங்கிருந்து சென்றார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் பாத்திமா வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பசீர் அகமது திடீரென வீட்டின் சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டரை தூக்கினார். அதை அப்படியே தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் ‘டமார்’ என போட்டார். இதில் பாத்திமா மூளை சிதறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    மனைவி இறந்து விட்டார் என்பதை அறிந்த பசீர் அகமது அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    பாத்திமா கொலை செய்யப்பட்ட சம்பவம் நாச்சியார் கோவில் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய கவுரி மற்றும் போலீசார் விரைந்து வந்து பாத்திமா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே மனைவி தலையில் சிலிண்டர் போட்டு கொலை செய்த பசீர் அகமது இன்று காலை நாச்சியார் கோவில் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ரஜினிகாந்தின் பேச்சுக்கு எதிராக விமர்சித்து அமைச்சர் ஜெயக்குமார் சுய விளம்பரம் தேடிக் கொள்வதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார். #Rajinikanth #Arjunsampath
    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலியில் மணல் கொள்ளையை தடுத்த போலீஸ்காரர் கொல்லப்பட்டார். வேலூர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது லாரி ஏற்றி கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.

    தமிழக அரசு மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் ஆதி திராவிடர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது. அவர்களை கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவது இல்லை. இன்னும் அங்கு இரட்டை குவளை முறை தான் நடைமுறையில் உள்ளது.

    ஆனால் இதுகுறித்து திருமாவளவன் எதுவும் பேசாமல் மவுனம் காத்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.


    அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து கமல், ரஜினி மீது தரக்குறைவான விமர்சனங்களை கூறி வருகிறார். ரஜினி பட விழாவில் அவர் பேச்சுக்கு எதிராக விமர்சித்து ஜெயக்குமார் சுய விளம்பரம் தேடிக் கொள்கிறார்.

    ஆனால் சமீபத்தில் வெளியான ‘‘இருட்டு அறையில் முரட்டு குத்து’’ என்ற ஆபாசப்படம் குறித்து தமிழக அரசு கருத்தோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் தமிழகம் வஞ்சிக்கப்படும். ஆனால் அங்கு தனிப்பெரும்பான்மையோடு பா.ஜனதா ஆட்சி அமைக்கும். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பா.ஜனதா பெரும் வெற்றி பெறும்.

    வருகிற 29-ந் தேதி இந்து வணிகர் சங்க மாநாடு நடைபெற உள்ளது. இதில் அனைத்து இந்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொள்ள வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களால் சிறுகுறு வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #Arjunsampath
    ×