search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமங்கலம்"

    திருமங்கலம் பகுதியில் வருகிற 21-ந்தேதி மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.

    பேரையூர்:

    தே.கல்லுப்பட்டி துணை மின் நிலையத்தில் வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அந்த நேரத்தில் தே.கல்லுப்பட்டி, குன்னத்தூர், காடனேரி, எம்.சுப்புலாபுரம், வில்லூர், கள்ளிக்குடி, புளியம்பட்டி, புளியங்குளம், வையூர், சென்னம்பட்டி, ஆவல்சூரம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை திருமங்கலம் மின் வினியோக செயற் பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

    திருமங்கலம் அருகே விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). கட்டிட தொழிலாளியான இவர் வெளியே புறப்பட்டார். திருமங்கலத்தில் உள்ள ராஜாஜி சிலை வளைவில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மணிகண்டன் ஓட்டி வந்த ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது.

    இதில் மணிகண்டன், மோட்டார் சைக்கிளில் வந்த மதுரையைச் சேர்ந்த ஷியாம்சுந்தர் (29) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    உயிருக்கு போராடிய அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். ஷியாம்சுந்தர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    திருமங்கலம் அருகே உள்ள செங்குளத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் நேற்று அதே பகுதியில் உள்ள 4 வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு சென்றது. படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து நடந்த சில மணி நேரத்தில் அதே பகுதியில் மற்றொரு விபத்தும் நடந்தது.

    திருமங்கலம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜோதிகண்ணன் (38) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜோதிகண்ணன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த 3 விபத்து தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டத்தில் சர்வ சாதாரணமாக கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்து சமூக விரோதிகள் கஞ்சா வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் இளைய சமுதாயத்தினர் போதைக்கு அடிமையாகி வாழ்வை தொலைத்து வருகின்றனர்.

    கஞ்சா விற்பனையை தடுக்க மாநகர, மாவட்ட போலீசார் தீவிரம் காட்டியதாக தெரியவில்லை. திருமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து திருமங்கலம் நகர் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வந்தனர். அப்போது மேலஉரப்பனூர் பகுதியில் உள்ள பள்ளியின் முன்பு கஞ்சா விற்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மலைச் சாமி (வயது45) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் கல்லூரி, பள்ளி மாணவர்களிடம் அவர் கஞ்சா விற்றது தெரியவந்தது.

    திருமங்கலம் அருகே இன்று அதிகாலை கார் கவிழ்ந்த விபத்தில் பெண்பலியானார். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
    பேரையூர்:

    கன்னியாகுமரி மாவட் டம், தேவாளை காட்டுப் புதூரைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி இன்பம் (வயது 52). இவர் தனது உறவினர்களுடன் கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா புறப்பட்டார்.

    காரை டிரைவர் ராஜ முகேஷ் (26) ஓட்டி வந்தார். கார் இன்று அதிகாலை மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கள்ளிக்குடி 4 வழிச்சாலையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தது.

    அந்த சமயத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இன்பம் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். மற்ற 9 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜமுகேஷ், அரசு (29), வசந்தா (26), ரேவதி (24) ஆகியோர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    திருமங்கலம் பகுதியில் ஏ.டி.எம்.களில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.1¼ கோடியை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #Parliamentelection #LSPolls

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த மேலக்கோட்டை பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக திருமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவதற்காக தனியார் நிறுவன வாகனம் வந்தது.


    வாகனத்தில் இருந்தவர்களிடம் உள்ள ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆவணத்தில் உள்ள எண்ணும், வேனின் பதிவு எண்ணும் வித்தியாசமாக இருந்தது.

    இதைத்தொடர்ந்து வேனில் கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடியே 35 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வேனும், பணமும் திருமங்கலம் தாசில்தார் தனலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அந்த பணத்தை திருமங்கலம் கருவூலத்தில் ஒப்படைத்தார்.  #Parliamentelection #LSPolls

    திருமங்கலம் அருகே சாலையில் கவிழ்ந்த கார் தீ பிடித்ததில் வியாபாரி பலியானார்.

    பேரையூர்:

    நாகர்கோவில் எறும்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெலஸ்டின் (வயது 59). கருவாடு வியாபாரி. இவர் நேற்று நாமக்கல் செல்வதற்காக காரில் புறப்பட்டார். கன்னியாகுமரி அருகே உள்ள ஆலங்கோட்டையைச் சேர்ந்த மோகன் மகன் சதீஷ் காரை ஓட்டி வந்தார்.

    இன்று அதிகாலை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கே.வெள்ளாகுளம் 4 வழிச்சாலையில் கார் வந்தபோது திடீரென நிலைதடுமாறியது.

    அதே வேகத்தில் அங்குள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்து உருண்டது. இதில் கார் தீ பிடித்தது.

    இந்த விபத்தில் வியாபாரி ஜெலஸ்டின் காயம் அடைந்தும், தீயில் கருகியும் சம்பவ இடத்திலேயே இறந்தார். டிரைவர் சதீஷ் படுகாயத்துடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார்.

    விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
    பேரையூர்:

    சேலம் மாவட்டம், பண்ணைப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கார்த்திக் ஆனந்த் (வயது 28). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கார்த்திக் ஆனந்துக்கு திருமணமாகி 5 மாத குழந்தை உள்ளது.

    நேற்று நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நடந்த நண்பர் திருமணத்தில் பங்கேற்றுவிட்டு இன்று அதிகாலை கார்த்திக் ஆனந்த் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லுக்கு புறப்பட்டார்.

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம், கார்த்திக் ஆனந்த் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிச் சென்றது.

    இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் ஆனந்த் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


    மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு, திருமங்கலம், கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் மூன்று வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய்க்கோட்டம் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே அரசு சேவைகளை வழங்க இந்த அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2011-ம் ஆண்டு முதல், 79 புதிய வருவாய் வட்டங்களும், 10 புதிய வருவாய்க் கோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 2018-2019ஆம் ஆண்டில் மட்டும், எட்டு வருவாய் வட்டங்களை இந்த அரசு உருவாக்கியுள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு, திருமங்கலம், கள்ளிக்குடி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய்க்கோட்டம் ஒன்று 2019-2020ஆம் ஆண்டில் உருவாக்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    திருமங்கலத்தில் பெண் ணிடம் 7 பவுன் நகையை கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.

    மதுரை:

    திருங்கலம் அருகே உள்ள முகம்மதுஷாபுரம் போஸ் தெருவைச் சேர்ந்தவர் ராமராஜேஸ்வரன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது64). இவர் நேற்று காலை வெளியே சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    மறவன்குளம் பகுதியில் விஜயலட்சுமி சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டனர்.

    இதுதொடர்பாக விஜய லட்சுமி திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தினகரன் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமியிடம் நகையை பறித்த கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகிறார்.

    திருமங்கலம் மறவன் குளத்தில் பட்டப்பகலில் தொடர்ச்சியாக வழிப்பறி சம்பவங்கள் நடப்பது அந்த பகுதியில் வசிப்பவர்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    திருமங்கலம் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பேரையூர்:

    திருமங்கலத்தை அடுத்துள்ள சிவரக்கோட்டை ரெயில்வே தண்டவாளத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலை, உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    தகவல் அறிந்ததும் விருதுநகர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ரெயில் மோதி இறந்த அந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. பலியான வாலிபர் தனது கையில் மஞ்சள், கருப்பு கயிறு கட்டியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

    திருமங்கலம் கோவில் விழாவில் கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டியில் முனியாண்டி கோவில் விழாவையொட்டி ஆடல்- பாடல் நிகழ்ச்சி நடந்தது. தொட்டியபட்டி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ரசித்தனர்.

    அப்போது உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கும், தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த அய்யலுராஜ் மகன் அருண் (வயது 19) என்பவர் ‘‘எங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்’’என்று திருமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

    ஆனாலும் போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய தயக்கம் காட்டியதாக தெரிகிறது. இதையடுத்து புதுப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தினகரன் புதுப்பட்டி கோஷ்டி மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தொட்டியப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் பிரகாஷ் (19), மார்நாடு மகன் ஜெகதீஸ்வரன் (20), அழகுமலை மகன் லட்சுமணன் (23) ஆகிய 3 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தவிர தப்பி ஓடி தலைமறைவான பிரிய தர்‌ஷன், கண்ணன், தர்மதுரை, திருமேனி, முருகேசன், முரளி ஆகிய 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே 2 வாலிபர்களை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அண்ணா நகரைச் சேர்ந்த ஆண்டிச்சாமி மகன் வீரமணி (வயது 34). இவரது பக்கத்து வீட்டுக்காரர் விருமாண்டி (35). இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் வீரமணி போதையில் வந்து விருமாண்டியிடம் சண்டை போட்டார். தகராறு முற்றவே வீரமணி ஆத்திரமடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விருமாண்டியின் வயிற்றில் குத்தினார். இதைத் தடுக்க வந்த முத்தையா (32) என்பவரது கையிலும் கத்திக்குத்து விழுந்தது.

    கத்திக்குத்தில் காயமடைந்த இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கத்திக்குத்து குறித்து திருமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.

    ×