search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமங்கலம்"

    குடிநீர் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தியும் இன்று அந்தப்பகுதியைச் சேர்ந்த 60 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் திருமங்கலத்தில் உள்ள யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கீழக்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்டது லட்சுமிபுரம். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மின்மோட்டார் பழுதானதால் குடிநீர் வினியோகம் தடைபட்டது. இதனால் லட்சுமிபுரம் பகுதி பெண்கள் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று சுடுகாட்டுப் பகுதியில் உள்ள சுகாதாரமற்ற தண்ணீரை எடுத்து வந்தனர்.

    குடிநீர் பிரச்சினை தவிர, அடிப்படை வசதிகளும் சரிவர செய்துதரவில்லை. சாலை வசதி, சாக்கடை போன்றவை இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    இது தொடர்பாக லட்சுமிபுரம் கிராம மக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அதற்கு அவர்கள் போதிய நிதி இல்லை என தெரிவித்தனர்.

    இதை கண்டித்தும், குடிநீர் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தியும் இன்று அந்தப்பகுதியைச் சேர்ந்த 60 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் திருமங்கலத்தில் உள்ள யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கோ‌ஷ மிட்டனர். பொதுமக்கள் திரண்டு பல மணி நேரமாகியும் அதிகாரிகள் அங்கு வரவில்லை. பின்னர் திருமங்கலம் போலீசாரே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    திருமங்கலம் அருகே முன் விரோத தகராறில் பெண்ணை தாக்கி வீட்டில் இருந்த நகை-பணத்தை திருடிச் சென்றதாக 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள புங்கன்குளத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மனைவி ஜெயபாண்டி (வயது 39). இவர் அதே ஊரைச் சேர்ந்த ஆட்டுக்கறி வியாபாரி மொக்கராஜுடம் கறி வாங்கினாராம். அதற்கான பணத்தை கொடுப்பதில் அவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டது.

    இந்த விரோதத்தில் மொக்கராஜ், அவரது மனைவி பாப்பு, மகன் சரவணன், உறவினர்கள் பிரேமா, அங்கயற்கண்ணி, சிவனம்மாள் ஆகியோர் ஜெயபாண்டி வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளார்.

    அவர்கள் தன்னை தாக்கியதோடு, வீட்டில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ. 65 ஆயிரத்தை எடுத்துச் சென்று விட்டதாக திருமங்கலம் தாலுகா போலீசில் ஜெயபாண்டி புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மொக்கராஜ் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #Tamilnews
    திருமங்கலம் அருகே பேரையூர் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    பேரையூர்:

    விருதுநகர் மாவட்டம், வத்ராயிருப்பைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் பிரபாகரன் (வயது 26). இவர் சொந்தமாக மினி லாரி வைத்து இயக்கி வருகிறார். நேற்று திண்டுக்கல்லில் சரக்குகளை இறக்கி விட்டு ஊருக்கு புறப்பட்டார்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேரையூரை அடுத்துள்ள பாறை பட்டி 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியது.

    இதில் மினிலாரியின் உள்பகுதி பலத்த சேதமடைந்தது. உள்ளே இருந்த பிரபாகரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    மற்றொரு லாரியில் வந்த விருதுநகர் மாங்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த அருள்ஜீவா (29) படுகாயம் அடைந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த பேரையூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 1 மணி நேரம் போராடி மினி லாரியில் இறந்த பிரபாகரின் உடலை மீட்டனர். அருள் ஜீவா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #Tamilnews
    பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து நகையை மீட்டனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் நாகசாமி நகரைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி சித்ரா (வயது40). இவரும், இவரது மகளும் கடந்த 3-ந்தேதி அதே பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சித்ராவை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் சித்ராவிடம் நகையை பறித்தது சாக்கிலிப்பட்டியை சேர்ந்த செல்லக்கண்ணு மகன் திருப்பதிராஜா (வயது28), தனக்கன்குளத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி (30) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து 5 பவுன் நகையை மீட்டனர்.

    திருப்பதிராஜா காலையில் ஆட்டோ டிரைவராகவும், இரவில் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். செல்லப்பாண்டி மீது நகை பறிப்பு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    கல்லூரி பேராசிரியையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வருவாய் ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், திருமங்கலம்- சோழவந்தான் ரோடு பகுதியைச்சேர்ந்தவர் பாண்டி. புதுக்கோட்டையில் வருவாய்த்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி வித்யா (வயது 27). விருதுநகரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இதனால் கணவன் -மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வித்யா தனது பெற்றோர் வீட்டிலேயே வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் பாண்டி, வித்யா வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வித்யா திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    வருவாய் ஊழியர் பாண்டி உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மனைவியுடன் சென்ற கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். ஒருதலைக் காதலால் இந்த விபரீத செயலில் இறங்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியைச் சேர்ந்த வேலு மகன் கருப்பையா (24). இவர் மைசூரில் தேயிலை ஏஜெண்டாக உள்ளார்.

    இவருக்கும், திருமங்கலத்தை அடுத்த கண்டு குளத்தைச்சேர்ந்த மாரநாடு மகள் திவ்யாவுக்கும் (20) கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    அதன் பிறகு மைசூரில் கணவருடன் வசித்து வந்தார். தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு கருப்பையாவும், திவ்யாவும் ஊருக்கு வந்தனர். நேற்று மாலை 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திருமங்கலம் காய்கறி மார்க்கெட்டுக்கு வந்தனர்.

    அங்கு காய்கறிகள் வாங்கிவிட்டு கண்டுகுளம் நோக்கி புறப்பட்டனர். தாளமுத்தையா கோவில் அருகே சென்ற போது ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்தார்.

    அவர் கண் இமைக்கும் நேரத்தில் கருப்பையா மற்றும் திவ்யாவை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    ரத்த வெள்ளத்தில் சாய்ந்த கணவன்-மனைவி இருவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா பரிதாபமாக இறந்தார். திவ்யா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து திருமங்கலம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் கத்தியால் குத்திவிட்டு தப்பியவர், திவ்யாவின் வீடு அருகே வசிக்கும் பாலமுருகன் (23) என தெரியவந்தது. போலீசார் அதிரடியாக செயல்பட்டு அவனை கைது செய்தனர்.

    திவ்யாவை ஒருதலையாக காதலித்ததாவும், அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்ததால் தன்னால் தாங்கிக் கொள்ள முடியாததால் கத்தியால் குத்தியதாகவும் பாலமுருகன் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    திருமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு தலைக்காதல் சம்பவம் கொலையில் முடிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருதலைக்காதலில் மாணவி மீது திராவகம் ஊற்றப்பட்டதில் அவர் பலியானார்.

    திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டையைச் சேர்ந்த சோலைராஜா மனைவி மணிமாலா (27). கணவரை பிரிந்து தனியாக வாழும் இவர், தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று வேலை முடிந்து மணிமாலா வீட்டுக்கு திரும்பியபோது அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (22) என்பவர் வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மணிமாலா சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல் சூளையில் தலை துண்டித்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள விரிசங்குளம் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 40). இவர் அதே பகுதியில் நாராயணன் என்பவர் நடத்தி வரும் சிமெண்டு செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். பாலமுருகனுக்கு வள்ளி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    வழக்கம் போல் பாலமுருகன் வேலைக்கு சென்றார். அவர் தொழிற்சாலையில் உள்ள செங்கல் தயாரிக்கும் அச்சு எடுக்கும் எந்திரத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக “ஏர் கம்ப்ரசர்” லீக் ஆகி எந்திரம் செயல் பட தொடங்கியது. பால முருகனின் தலை எந்திரத்தில் சிக்கியது. இதில் அவர் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நகை பட்டறை தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் துப்புரவு தொழிலாளர் காலனியை சேர்ந்த 8 வயதுடைய சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    தற்போது பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் இருந்து வந்தாள். சம்பவத்தன்று அந்த சிறுமி தனது 5 வயது தங்கையுடன் காந்திஜி தெருவில் உள்ள ஆசிரியையை பார்க்க சென்றாள்.

    அப்போது அங்கு ஆசிரியை இல்லை. கீழ் வீட்டில் இருந்த அய்யப்பன் மகன் பாலவிக்னேஷ் (வயது 24) என்பவர் 2 சிறுமிகளிடமும் மிட்டாய் தருவதாக கூறி வீட்டுக்குள் அழைத்து சென்றார். அங்கு 2 நிறுமி களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து பாலவிக்னேசை கைது செய்தனர். இவர் நகை பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.

    திருமங்கலம் அருகே வருகிற 4-ந்தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுப்பெண் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டியை அடுத்துள்ள வி.அம்மா பட்டியை சேர்ந்தவர் சின்னக்காளை. இவரது மகள் பவானி (வயது 20). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு வருகிற 4-ந்தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

    திருமணத்திற்கு சில நாட்களே இருந்ததால் சின்னக்காளை மற்றும் உறவினர்கள் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை பவானி வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்றார். அதன் பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த சின்னக்காளை மகளை காணாமல் உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    எனவே டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர். திருமணத்துக்கு இரண்டு நாட்களே இருந்த நிலையில் மணப்பெண் மாயமானதால் குடும்பமே சோகத்தில் மூழ்கியது. #Tamilnews
    திருமங்கலம் அருகே வியாபாரி வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகத்துக்குட்பட்ட வி.டி.மணி நகரைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது65). பழைய இரும்ப பொருட்கள் வாங்கி விற்று வருகிறார்.

    இவர் கடந்த 24-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கும்பகோணம் சென்றார். இன்று அதிகாலை அவர்கள் வீடு திரும்பினர். வீட்டிற்குள் சென்றபோது பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கள்ளிக்குடி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் பின்பக்க கிரீல்கேட்டை உடைத்து உள்ளே வந்த மர்ம மனிதர்கள் ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டிற்குள் புகுந்திருப்பது தெரிய வந்தது.

    வீட்டின் பீரோவில் இருந்த 2½ பவுன் தங்க நகைகள், ரூ.4 ஆயிரத்து 500 மற்றும் 1 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் கணேஷ் தெரிவித்தார்.

    இதே பகுதியில்தான் அரசு என்ஜினீயர் வீட்டில் நேற்று கொள்ளை சம்பவம் நடைபெற்றது. தற்போது வியாபாரி வீட்டிலும் அதே போன்று சம்பவம் நடை பெற்று இருப்பது மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    2 வீடுகளிலும் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு இருப்பதால் ஒரே கும்பல் தான் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொதுப்பணித்துறை என்ஜினீயர் வீட்டில் நகை -பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி மணி நகரைச் சேர்ந்தவர் முத்து ராஜ். இவருடைய மகன் ரத்தினவேல் (வயது38).

    இவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் என்ஜினீயராக உள்ளார். சம்பவத்தன்று மனைவி சசிகலாவுடன் தென்காசியில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு ரத்தினவேல் சென்றார்.

    நேற்று மாலை அவர்கள் வீடு திரும்பினர். கதவை திறந்து உள்ளே சென்ற ரத்தினவேல், வீட்டிற்குள் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்அறையில் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் கீழே கிடந்தன. இதனால் வீட்டிற்குள் மர்ம நபர்கள் நுழைந்திருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து வீட்டை பார்வை விட்டனர். பீரோவில் இருந்த 6 பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளைபோய் இருப்பதாக போலீசாரிடம் ரத்தின வேல் தெரிவித்தார்.

    வீட்டு பூட்டு திறக்கப் படாமல் இருக்கும்போது கொள்ளையர்கள் எப்படி உள்ளே புகுந்தனர் என போலீசார் விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பியை உடைத்து மர்ம மனிதர்கள் வீட்டுக்குள் புகுந்திருப்பது தெரியவந்தது. ஆக்சா பிளேடு மூலம் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டுள்ளன.

    வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு யாரோ மர்ம மனிதர்கள் இந்த துணிகர செயலில் இறங்கி உள்ளனர். அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன.

    ரே‌ஷன் கடை மேற்கூரை இடிந்து விழுந்ததில் தந்தை-மகன் காயம் அடைந்தனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள சின்ன உலகாணியில் ரே‌ஷன் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கட்டிடம் பழமையானது என்பதால் சிதிலமடைந்து உள்ளது.

    பல இடங்களில் மேற்கூரை பெயர்ந்து காணப்பட்டதால் மிகுந்த அச்சத்துடனேயே பொதுமக்கள் ரே‌ஷன் கடைக்கு வந்து சென்றனர்.

    நேற்று அந்தப்பகுதியைச் சேர்ந்த பாண்டி (வயது 32).தனது மகன் கருப்பசாமியுடன் (10) ரே‌ஷன் கடைக்கு வந்தார். அவர்கள் பொருட்கள் வாங்க வரிசையில் நின்ற போது, சிதிலமடைந்த கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.

    இதில் பாண்டி, கருப்பசாமி காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ரே‌ஷன் கடை 15 ஆண்டுகளுக்கு முன் புள்ள கட்டிடத்தில் செயல்படுவதால், வேறு கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×