search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டப்பிடாரம்"

    ஒட்டப்பிடாரம் தொகுதியில் 143 வாக்குச்சாவடிகளில் வெப்-கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.
    ஒட்டப்பிடாரம்:

    ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் பொதுமக்கள் வாக்களிக்க 257 பூத்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூத்கள் 20 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள 257 வாக்குச்சாவடிகளிலும் மத்திய அரசின் ஊழியர்களை நுண்பார்வையாளர்களாக நியமித்துள்ளனர். இதையடுத்து டெல்லி உள்ளிட்ட எந்த இடத்தில் இருந்தும் வாக்குப்பதிவை கண்காணிக்கும் வகையில் இதில் 143 வாக்குச்சாவடிகளில் வெப்-கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    மொத்தம் களத்தில் 15 வேட்பாளர்கள் உள்ளதால் ஒரு வாக்குப்பதிவு எந்திரங்கள் மட்டுமே பயன் படுத்தப்படுகிறது. மேலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிபடுத்த ஒரு வி.வி.பாட் எந்திரங்களும் வைக்கப்படுகிறது. 257 வாக்குச் சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக ஒரு வீல் சேர் உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு தொகுதி முழுவதும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

    பதற்றமான வாக்குச்சாவடிகள் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 3 மத்திய கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பாட் எந்திரங்கள் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அரவக்குறிச்சி, சூலூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #electioncommission #aravakurichiconstituency
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. இதில் வேலூர் மக்களவை தொகுதி தவிர்த்து மற்ற 38 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்தது. 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களுக்கும் மக்கள் வாக்களித்தனர்.

    இதேபோல், மே 19-ம் தேதி அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
     
    இதற்கிடையே, அரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வரும் 29-ம் தேதியாகும்.

    மனுக்கள் மீதான பரிசீலனை 30-ம் தேதி நடக்கிறது. மே மாதம் 2-ம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். அன்று மாலை 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

    மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் நிலையில்,பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 23-ம் தேதி இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஏற்கனவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. #electioncommission #aravakurichiconstituency
    ஓட்டப்பிடாரம் அருகே கோவில் விழாவையொட்டி கபடி போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற முப்புலிவெட்டி ஜெயசேகர் அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்புலிவெட்டி சந்தனமாரியம்மன், உச்சினிமாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 18-வது ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. போட்டிக்கு ஊர் தலைவர் ஜோசி தலைமை தாங்கினார். போட்டியில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் உட்பட பல மாவட்டங்களில் இருந்து 40 அணிகள் கலந்து கொண்டனர்.

    இறுதி போட்டியில் முப்புலிவெட்டி ஜெயசேகர் அணியும் தூத்துக்குடி ஏ.கே பிரதர்ஸ் அணியும் மோதின. இறுதி போட்டியை தூத்துக்குடி கேபிள் டி.வி தாசில்தார் செல்வக்குமார் தொடங்கி வைத்தார். இதில் முப்புலிவெட்டி ஜெயசேகர் அணி வெற்றி பெற்றது. இந்த அணிக்கு ரூ.26 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது.

    2-வது பரிசு பெற்ற தூத்துக்குடி ஏ.கே பிரதர்ஸ் அணிக்கு ரூ.21 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, சிலோன் காலனி தில்லைநாயகம், முப்புலி வெட்டி சங்கரநாராயணன், தூத்துக்குடி கேபிள் டி.வி தாசில்தார் செல்வக்குமார் மற்றும் பலர் பரிசு மற்றும் வெற்றி கோப்பை வழங்கினார்.

    ×