search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105298"

    • விநாயகர் மற்றும் பஞ்ச மூர்த்திகள் கொடிமரத்தின் முன்பு எழுந்தருளினர்.
    • திருவிழா நாட்களில் தினமும் காலையும் இரவும் சுவாமி வீதி உலா நடைபெறும்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளியில் அக்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.இத் திருக்கோயிலில் வருடம் தோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறும். திருவிழாவை ஒட்டி துவஜாரோகணம் என்னும் கொடியேற்று நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

    கொடியேற்ற நிகழ்ச்சியை ஒட்டி விநாயகர் மற்றும் பஞ்ச மூர்த்திகள் சிறிய தேரில் கொடி மரத்தின் முன்னே வீற்றிருந்தனர்.

    சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு திரவங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க பங்குனி உத்திர திருவிழா தொடக்கமாக கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பங்குனி உத்திர பெருவிழா குழு தலைவர் வக்கீல் ஜெயக்குமார், பேரூராட்சி தலைவர் மெய்யழகன், பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன், பேரூராட்சி துணைத்தலைவர் ரமணி, பங்குனி உத்திர பெருவிழா குழு பொதுச்செயலாளர் ஜெயராமன், பொருளாளர் ராஜேஸ்வரன், மற்றும் பங்குனி உத்திர பெருவிழா குழு நிர்வாகிகள் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நேற்று இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.

    திருவிழா நாட்களில் தினமும் காலையும் இரவும் சுவாமி வீதி உலா நடைபெறும்.

    பங்குனி உத்திர நாளான அடுத்த மாதம் (ஏப்ரல்) நான்காம் தேதி காலை கோவிலில் இருந்துவிநாயகர், சௌந்தரநாயகி அம்பாள் சமேத அக்னீஸ்வரர், சோமாஸ் கந்தர், வள்ளி தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளும் மலர் அலங்காரத்துடன் கோவிலிலிருந்து கோபுர தரிசனம் கண்டு பல்வேறு இசை நிகழ்ச்சிகளுடன் திருக்காட்டுப்பள்ளி மற்றும் ஒன்பத்துவேலி வீதிகளில் உலா வரும்.மாலை பஞ்சமூர்த்திகளும் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தலில் எழுந்தருள செய்து மகா அபிஷேகம் நடைபெறும்.

    பின்னர் இசை கச்சேரிகள் வாண வேடிக்கைகள் நடைபெறும் விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குனி உத்திர பெருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • 4 கிராம மக்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர்
    • கட்லா, விரால், ஜிலேபி வகை மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி

    பொன்னமராவதி

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்று வட்டாரத்தில் மதியாணி, தேனூர்,ரெட்டியபட்டி, கண்டியா நத்தம் புதுப்பட்டி ஆகிய நான்கு கிராமங்களில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.நெல் அறுவடைக்கு பின்னர் ஊர் விவசாய பாசன கன்மாய்களில் தண்ணீர் வற்றத் தொடங்கும்.அப்போது ஊர் முக்கியஸ்தர்களால் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு மீன்பிடித் திருவிழா நடைபெறும். இவ்வாறு நடைபெறும் மீன்பிடித் திருவிழாவில் ஊர் முக்கியஸ்தர்களால் வெள்ளை வீசப்பட்ட பின்னர் கிராம மக்கள் கம்மைகளில் துள்ளி குதித்து தங்கள் கையில் வைத்திருந்த மீன்பிடி உபகரணமான கூடை ,வலை போன்றவற்றை கொண்டு மீன்பிடிக்க தொடங்கினர்.இதில் நாட்டு வகை மீன்களான 5 கிலோ எடை கொண்ட கட்லா மீனும் , 3 கிலோ எடை கொண்ட விரால் வகை மீன்களும் ஜிலேபி கெண்டை அயிரை மீன்கள் கிடைத்தன இதனை மகிழ்ச்சியோடு பிடித்துச் சென்றனர்.பொன்னமராவதி அருகில் உள்ள உள்ள கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் இன்று இரவு நடைபெறுவதால் காப்பு கட்டப்பட்ட 15 தினங்களுக்கு எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளோ சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறாது. அவ்வாறு நடைபெறும் சுப தினங்கள் 15 தினங்களுக்குப் பின்னர் தான் நடைபெறும் ஆகையால் இன்று பொன்னமராவதி சுற்று வட்டாரத்தில் நான்கு கிராமங்களில் இன்று மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. 

    • ஏப்ரல் 1 முதல் 2 ஆகிய தேதிகளில் திருவிழா நடைபெறுகிறது.
    • பொதுமக்கள் திருவிழாவில் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    நீடாமங்கலம்:

    கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மாரியம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு, இன்று மற்றும் நாளை பல்லக்கு திருவிழாவும், ஏப்ரல் 1 முதல் 2 வரை நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு, இரவு, பகல் முழுவதும் தஞ்சாவூர், கும்பகோணம், நீடாமங்கலம், குடவாசல், பாபநாசம் மற்றும் மன்னார்குடி உள்ளிட்ட சுற்றுப்புற ஊர்களில் இருந்து பொதுமக்கள் திருவிழாவில் கலந்து கொள்ளும் வகையில் வலங்கைமானுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அருப்புக்கோட்டையில் தேர் வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி நடந்தது.
    • வருகிற 28-ந்தேதி கொடியேற்றத்துடன் இந்த திருவிழா தொடங்குகிறது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு பங்குனி மாதம் பூக்குழி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவில் அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று நேர்த்தி கடன் செலுத்துவார்கள். இந்த ஆண்டு வருகிற 28-ந் தேதி கொடியேற்றத்துடன் இந்த திருவிழா தொடங்குகிறது. ஏப்ரல் 4-ந் தேதி பூக்குழி திருவிழா நடக்கிறது. இந்த நிலையில் 11 வருடங்களுக்குப் பிறகு முத்துமாரியம்மன் கோவிலில் தேர் வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி நடந்தது. பங்குனி மாத கடைசி வெள்ளியன்று நகரின் முக்கிய பகுதியில் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வெள்ளோட்ட நிகழ்ச்சியில் நாடார் உறவின் முறை தலைவர் காமராஜன், கோவில் டிரஸ்டி ராஜரத்தினம், உதவிச் செயலாளர் முத்துசாமி, சிறப்பு ஆலோசகர் ரவீந்திரன், முன்னாள் உறவின்முறை தலைவர் மனோகரன், எஸ்.பி.கே. ஆண்கள் பள்ளி செயலாளர் மணி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 1,352 குழந்தைகள் தூக்க நேர்ச்சையில் பங்கேற்றனர்
    • கோவிலுக்கு தூக்ககாரர்களின் அணிவகுப்பு ஊர்வலமும் நடத்தப்பட்டது

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட த்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று கொல்லங்கோடு ஸ்ரீ பத்ர காளி அம்மன் கோவில்.

    இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் பரணி நட்சத்திர நாளில் தூக்கத் திருவிழா நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக் கான தூக்கத் திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கியது.

    தொடர்ந்து நாள் தோறும் கணபதி ஹோமம், பாரா யணம், சமய சொற்பொ ழிவு, நமஸ்காரம், அன்ன தானம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றன.

    9-ம் நாளான நேற்று தூக்கக்காரர்கள் பிரதான பூஜாரியுடன் வள்ளவிளை கடலில் நீராடி, பஞ்சகவ்ய முழுக்கல், கடல் பூஜை செய்து விட்டு கோவிலை அடைந்து நமஸ்காரம் செய்தனர். மாலை 6 மணிக்கு தூக்க வில்லின் வெள்ளோ ட்டமான வண்டியோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    விழாவின் சிறப்பு நிகழ்வான தூக்க நேர்ச்சை இன்று (சனிக்கிழமை) அதி காலை நடைபெற்றது. தூக்கக்காரர்கள் முட்டுக் குத்தி நமஸ்காரம் செய்தனர்.தொடர்ந்து அம்மன் பச்சைப் பந்தலில் எழுந்தருளினார். காலை 6.30 மணிக்கு தூக்க நேர்ச்சை தொடங்கியது. முதலில் 4 அம்மன் தூக்க நேர்ச்சை நடைபெற்றது.

    அதன்பிறகு குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடைபெற்றது. 1,352 குழந்தைகள் தூக்க நேர்ச்சையில் பங்கேற்றனர். இந்த வழிபாடு நள்ளிரவு வரை நடைபெறும். பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு தூக்க காரர்களின் அணிவகுப்பு ஊர்வலமும் நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு தேவையானஉணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.

    தூக்க நேர்ச்சை விழாவையொட்டி குமரி மாவட்டம் மற்றும் கேர ளத்தின் திருவனந்தபுரம் மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழக, கேரள அரசுப் போக்கு வரத்துக்கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் வக்கீல் ராமச் சந்திரன் நாயர், செயலர் மோகன்குமார், பொருளாளர் ஸ்ரீனிவா சன்தம்பி, துணைத் தலைவர் சதி குமாரன் நாயர், இணைச் செயலர் பிஜூகுமார், கமிட்டி உறுப்பினர்கள் சஜிகுமார், புவனேந்திரன் நாயர், ஸ்ரீகண்டன்தம்பி, ஸ்ரீகுமாரன் நாயர், பிஜூ, சதிகுமாரன் நாயர் ஆகி யோர் செய்துள்ளனர்.

    • இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது
    • திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதியில் அய்யா வைகுண்ட சாமி கோவில் பங்குனி தேரோட்ட திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    இதையொட்டி 1-ம் திருவிழாவான இன்று(24-ந் தேதி) அதிகாலை 5.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. கொடிபட்டத்தை மலர்களால் அலங்கரித்து கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கோவிலின் முன்புறம் உள்ள கொடிமரத்தில் மேளதாளங்கள் மங்கல இசை மற்றும் சங்கு நாதம் முழங்க "அய்யா அரகர சிவசிவ" என்ற பக்தி கோஷம் விண்ணதிர கொடி ஏற்றப்பட்டது.

    முட்டப்பதி தலைமை தர்மகர்த்தா பாலசுந்தரம் கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன்பின்னர் முட்டப் பதி கடலில் அய்யா வழி பக்தர்கள் தீர்த்தமாடி பதமிடும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் உச்சிப்படிப்பு, அன்ன தர்மம் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தது. இரவு 7 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் எழுந் தருளி கோவிலை சுற்றி மேளதாளங்கள்முழங்க வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    2-ம் திருவிழா வான நாளை (25-ந்தேதி) முதல் 7-ம் திருவிழாவான 30-ந் தேதி வரை தினமும் பணி விடைகள், உச்சிப் படிப்பு, தர்மங்கள் மற்றும் இரவு வாகன பவனி போன்றவை நடக்கிறது. 2 மற்றும் 3-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு அய்யா கருட வாகனத்திலும், 4 மற்றும் 5-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு அன்னவாகனத்திலும், 6-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு சர்ப்ப வாகனத்திலும், 7-ம்திருவிழாஅன்றுஇரவு 7.30மணிக்கு அய்யாகருட வாகனத்திலும் பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    8-ம் திருவிழாவான 31-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் அதைத்தொடர்ந்து உகப்படிப்பும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு உச்சிப் படிப்பு, பால்அன்னதர்மம் போன்றவை நடக்கிறது. இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு ஒற்றையால்விளை, மாதவபுரம் வழியாக முட்டப்பதி வரை பவனி வந்து வடக்கு வாசலுக்கு எதிரே அமைந்துஉள்ள கடலில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11 மணிக்கு அன்னதர்மம் நிகழ்ச்சி நடக்கிறது.

    9 மற்றும் 10-ம் திருவிழா நாட்களில் இரவு 7.30 மணிக்கு சப்பர வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.11-ம் திருவிழாவான 3-ந்தேதி பகல் 12 மணிக்கு அய்யா தேரில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 4-ந் தேதி திருக்கொடி இறக்க நிகழ்ச்சியும் தான தர்மங்களும் நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடு களை முட்டப்பதி தலைமை தர்மகர்த்தா பாலசுந்தரம், தர்மகர்த்தா செல்வராஜ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை முரளிதரன் செய்துள்ளார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் ஜெனக நாராயணபெருமாள் கோவில் 47-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை விஸ்வக்சேனர் புறப்பாடு நடந்தது. உபயதாரர் கோச்சாயி அய்யர் குமாரர் ரவிக்குமார் நேற்று யாகசாலை மண்டபத்தில் ரெகுராமபட்டர் ஸ்ரீபதி பட்டர் ஆகியோர் தலைமையில் யாக பூஜை நடந்தது.

    இதைத்தொடர்ந்து 9.30 மணியளவில் திருவிழா கொடி மேளதாளத் துடன் 4 ரத வீதியும் எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் கோவில் முன்புள்ள கொடி மரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    விழாவை முன்னிட்டு நேற்றுஇரவு அன்ன வாகனத்தில் சுவாமி உலா வருதல் நடைெபற்றது. உபயதார் கன்னியப்பன் முதலியார், செயல் அலுவலர் சுதா, கோவில் பணியாளர்கள் முரளிதரன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    வருகிற 28-ந்தேதி காலை 10 மணியளவில் திருக்கல்யாண விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி உலாவரும் நிகழ்ச்சி, மாலையில் சக்கரத்தாழ்வார் புறப்பாடு நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை முரளிதரன் செய்துள்ளார்.

    • தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா 29-ந் தேதி தொடங்குகிறது
    • அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. திருவிழா தொடங்குவதற்கு முன்னதாகவே அம்மன் தரிசனம் செய்ய கோவிலில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா வருகிற 29-ந்தேதி இரவு 10 மணிக்கு கொடியேற்றத்து டன் தொடங்குகிறது.

    10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது தினமும் முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதிஉலா நடைபெறும்.

    விழாவின் முக்கிய உற்சவங்களான பொங்கல் வைபவம் ஏப்ரல் 5-ந் தேதியும், மின்விளக்கு தேர் பவனி 6-ந் தேதியும் 7-ந் தேதி பால்குடம் மற்றும் ஊஞ்சல் உற்சவமும், இரவு புஷ்பபல்லக்கு வீதி உலாவும் நடக்கிறது. 8-ந் தேதி தீர்த்தவாரி உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறு கிறது. திருவிழாவை முன்னிட்டு கோவில் பிரகாரத்தை சுற்றி பக்தர்கள் வசதிக்காக பந்தல் மற்றும் வரிசையில் செல்ல காலரி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வறண்டிருந்த தீர்த்த குளம் தூர்வாரி சீரமைக்கப்பட்டு தற்போது தண்ணீர் நிரப்பி குளம் நிறைந்து காணப்படுகிறது.

    திருவிழா நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தாயமங்க லத்துக்கு வரும் பக்தர்கள் முத்து மாரியப்பனுக்கு முடி காணிக்கை செலுத்தியும், ஆடு, கோழிகளை பலியிட்டும், பொங்கல் வைத்தும், தீச்சட்டி சுமந்தும் நேர்த்தி கடன் நிறைவேற்றி அம்மனை வழிபாடு செய்வார்கள்.

    திருவிழா தொடங்கு வதற்கு முன்னதாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பஸ், கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களில் தாயமங்கலத்துக்கு வந்து வேண்டுதல் நிறை வேற்றி முத்துமாரியம்மன் தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.

    அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

    பக்தர்களுக்கு தேவையான வசதிகளையும் திருவிழா ஏற்பாடுகளையும் கோவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செட்டியார் செய்து வருகிறார்.

    • 24-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது
    • 11-ம் திருவிழாவான 3-ந்தேதி அய்யா தேரில் எழுந்தருளி பதியை சுற்றி வலம்வரும் தேரோட்ட நிகழ்ச்சி

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிஅருகே உள்ள முட்டப்பதியில் அய்யா வைகுண்டசாமி கோவில் உள்ளது.

    இது அய்யா வைகுண்ட சாமியின் பஞ்சபதிகளில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 11 நாட்கள் திருவிழா நடை பெறுவது வழக்கம். அதே போல இந்தஆண்டுக்கான பங்குனிதேரோட்டதிருவிழா வருகிற 24-ந்தேதிகொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்ததிருவிழாஅடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இதையொட்டி 1-ம் திருவிழாவான நாளை மறுநாள் (24-ந்தேதி) அதிகாலை 5.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. பகல் 11.30 மணிக்கு முட்டப்பதி திருபாற் கடலில்அய்யாவழிபக்தர் கள்தீர்த்த மாடி பதமிடும் நிகழ்ச்சி நடக்கிறது.பின்னர் உச்சிப்படிப்பு, அன்னதர்மம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கி றது. இரவு 7.30 மணி க்குஅய்யா கருட வாகனத் தில்எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதா ளங்கள் முழங்க வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    2-ம் திருவிழாவான 25-ந்தேதி முதல் 7-ம் திருவிழாவான 30-ந்தேதி வரை தினமும் பணிவிடைகள், உச்சிப்படிப்பு, தர்மங்கள் மற்றும் இரவு வாகன பவனி போன்றவை நடக்கிறது. 2 மற்றும் 3-ம் திருவிழா அன்று இரவு7-30 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் 4 மற்றும்5-ம்திருவிழா அன்று இரவு 7-30மணிக்கு அன்ன வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சியும் 6-ம் திருவிழா அன்று இரவு 7-30 மணிக்கு சர்ப்ப வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சியும் 7-ம் திருவிழாஅன்றுஇரவு7-30 அய்யா கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    8-ம் திருவிழா வான 31-ந்தேதி இரவு அய்யா வைகுண்டசாமி முட்டப்பதி கடலில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி அன்றுஅதிகாலை 4 மணி க்கு அய்யாவுக்கு பணிவிடையும் அதைத்தொடர்ந்து உகப்ப டிப்பும் நடக்கிறது. பகல் 12மணிக்குஉச்சிப்படிப்பு, பால்அன்னதர்மம் போன்றவை நடக்கிறது. இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு ஒற்றையால்விளை, மாதவபுரம் வழியாக முட்டப்பதி வரை பவனி வந்து வடக்கு வாசலுக்கு எதிரே அமைந்துஉள்ள கடலில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.இரவு 11 மணிக்குஅன்னதர்மம் நிகழ்ச்சி நடக்கிறது.

    9 மற்றும் 10-ம் திருவிழா வான அடுத்த மாதம் (ஏப்ரல்) 1 மற்றும் 2-ந்தேதிகளில் இரவு7-30மணிக்கு சப்பர வாகனத்தில் அய்யா எழுந் தருளி கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.11-ம் திருவிழாவான 3-ந்தேதி பகல் 12 மணிக்கு அய்யா தேரில் எழுந்தருளி பதியை சுற்றி வலம்வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் (4-ந்தேதி) அதிகாலை ௪ மணிக்கு திருக்கொடி இறக்க நிகழ்ச்சியும்தான தர்மங்களும்நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை முட்டப்பதி தலைமை தர்மகர்த்தாஆர்.பாலசுந்தர ம், தர்மகர்த்தா ஆர்.செல்வராஜன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற 10க்கும் மேற்பட்ட ஆடுகளையும், 100க்கும் மேற்பட்ட கோழிகளையும் பலியிட்டனர்.
    • பலியிட்ட ஆடுகள் மற்றும் கோழிகளின் இறைச்சிகளைக் கொண்டு கோயில் அருகில் சமைத்து, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கறி விருந்து படைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோயிலில் 3ம் ஆண்டு மெகா கறி விருந்து திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தன. பின்னர் கோயில் முன்பு விழாக்குழுவின் சார்பில் 35 ஆடுகளை பலியிட்டனர். மேலும் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற 10க்கும் மேற்பட்ட ஆடுகளையும், 100க்கும் மேற்பட்ட கோழிகளையும் பலியிட்டனர். பலியிட்ட ஆடுகள் மற்றும் கோழிகளின் இறைச்சிகளைக் கொண்டு கோயில் அருகில் சமைத்து, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கறி விருந்து படைத்தனர். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். விருந்தில் கலந்து கொண்டவர்கள் மொய் எழுதினர். இதற்கான ஏற்பாடுகளை மகாராஜகடை ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • நஞ்சுண்டேசுவரருக்கும், பழனி ஆண்டவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை-ஊத்துக்குளி ரோட்டில் பாலதொழுவு ஊராட்சியில் உள்ளது நஞ்சுண்டேசுவரர் கோவில்.

    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புலிங்கமாக தோன்றிய நஞ்சுண்டேசுவரருக்கு கண்ணடக்கம், கண் மலர் ஆகியவற்றை காணிக்கை யாக வழங்கி வழிபட்டால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும் என நம்பிக்கையாக உள்ளது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மற்றும் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பங்குனி மாதத்தின் முதல் திங்கட்கிழமையான இன்று நள்ளிரவு 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து நஞ்சுண்டேசுவரருக்கும், பழனி ஆண்டவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அப்போதே பக்தர்கள் திரண்டு விட்டனர்.

    இதில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 2 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக சென்னிமலை, ஊத்துக்குளி ஆகிய ஊர்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் பங்குனி தேர்த் திருவிழா வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • ஏப்ரல் 1-ந் தேதி கருட வாகனம், 2-ந் தேதி சேச வாகனம், 3-ந் தேதி யானை வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெறுகின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற நரசிம்மர் சுவாமி, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் தேர்த் திருவிழா நடைபெறும்.

    அதன்படி நடப்பாண்டில் பங்குனி தேர்த் திருவிழா வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 30-ந் தேதி பல்லக்கு புறப்பாடு, சிம்ம வாகனத்தில் சாமி வீதியுலா, 31-ந் தேதி அனுமந்த வாகனம், ஏப்ரல் 1-ந் தேதி கருட வாகனம், 2-ந் தேதி சேச வாகனம், 3-ந் தேதி யானை வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெறுகின்றன.

    4-ந் தேதி 10 மணிக்கு நரசிம்மர் நாமகிரி தாயார் திருக்கல்யாணம், 5-ந் தேதி குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு, திருவேடு பரி உற்சவம் நடைபெறுகிறது. 6-ந் தேதி காலை 8.30 மணிக்கு நரசிம்மர் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது. பிற்பகல் 4.30 மணிக்கு அரங்கநாதர், ஆஞ்சநேயர் கோவில் தேரோட்டம் நடைபெறுகிறது.

    7-ந் தேதி சப்த வர்ணம் கஜலட்சுமி வாகனம் வீதி உலா, 8-ந் தேதி வசந்த உற்சவம், 9-ந் தேதி விடையாட்சி உற்சவம், 10-ம் தேதி புஷ்ப பல்லக்கு, 11-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் மற்றும் 12-ந் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    ×