search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செம்மரம்"

    திருப்பதி அருகே செம்மரம் வெட்டிய விழுப்புரம் வாலிபர்கள் 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமலை:

    திருப்பதி அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில் விலை உயர்ந்த ஏராளமான செம்மரங்கள் வளர்ந்துள்ளன.

    இந்த செம்மரங்கள் வெளிநாடுகளில் அதிக அளவில் விலை போவதால் இதனை வெட்டி கடத்தும் கும்பல் அதிக அளவில் உள்ளனர்.செம்மர கடத்தலை தடுக்க செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கல்யாண் டேம் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது செம்மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கொண்டிருந்ததை கண்டு அவர்களை சுற்றி வளைத்தனர். இதில் 2 வாலிபர்கள் சிக்கனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 10 செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் கருமந்துறையை சேர்ந்த மாதையன் மகன் ஆண்டி (30) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சடையன் மகன் தருமன் (32) என தெரிய வந்தது.

    அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    திருப்பதியில் செம்மரம் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் ஏராளமான விலை உயர்ந்த செம்மரங்கள் உள்ளன.

    செம்மரங்களுக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகம் என்பதால் செம்மரம் வெட்டி கடத்தும் கும்பலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வாசு தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 4 மணிக்கு திருப்பதி அடுத்த சந்திரகிரி பெருமாள்பல்லி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். போலீசார் வருவதை கண்ட கும்பல் வனப்பகுதிக்குள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்றனர். ஒருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    இதையடுத்து அவர்கள் விட்டு சென்ற 14 செம்மரங்களை பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தினர்.

    அவர் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை சேர்ந்த அண்ணாமலை (வயது 35) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலும் அவருடன் 14 பேர் வந்ததாகவும் தெரிவித்து உள்ளார். மோப்ப நாய் உதவியுடன் வனப்பகுதிக்குள் தப்பி சென்றவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பதி அருகே செம்மரம் வெட்டிய தமிழக வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி அடுத்த சேஷாசலம் வனப்பகுதி எர்ரவாரி பாளையம் என்ற இடத்தில் ஒரு கும்பல் செம்மரம் வெட்டி கொண்டிருப்பதாக திருப்பதி மாவட்ட வன அலுவலர் நாகார்ஜூனுக்கு ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வனத்துறையினர் ஏர்வாரி பாளையம் வனப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். வனத்துறையினர் வருவதை கண்ட கும்பல் தப்பி ஓடி விட்டனர்.

    அவர்களில் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்த வனத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் வேலூர் மாவட்டம் அனைக்கட்டை சேர்ந்த ஜெயபிரகாஷ் (வயது 37), என்பது தெரியவந்தது. அவரை வனத்துறையினர் கைது செய்தனர். அதேப்போல் பாஜிராப்பேட்டையில் வனத்துறை அதிகாரிகள் ஜோதி, வினோத்குமார், வசந்தன் குமார் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

    அப்போது ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரை மட்டும் வனத்துறையினர் பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்கள் விட்டு சென்ற 33 செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.

    பிடிப்பவரிடம் விசாரணை நடத்தியதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி (வயது 30), என தெரியவந்தது. அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    ஆந்திராவில் செம்மரம் வெட்டிய நான்கு தமிழர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #RedSandalwood
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ஸ்ரீவாரி மெட்டு வனப்பகுதியில் சிலர் செம்மரம் வெட்டுவதாக போலீசாருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் செம்மரங்களை வெட்டியவர்கள் போலீசார் மீது கற்களால் தாக்குதல் நடத்தினர்.

    அவர்களிடம் இருந்து தப்பிக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு செம்மரம் வெட்டிய நான்கு தமிழர்களை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. மேலும் பலர் அங்கிருந்து தப்பியோடினர். கைதானவர்களிடம் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான செம்மரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். #RedSandalwood
    ×