search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடிதம்"

    நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் நீங்கள் பங்கேற்கக்கூடாது என்று பிரணாப் முகர்ஜிக்கு முன்னாள் மத்திய மந்திரி ஜாபர் ஷெரீப் கடிதம் எழுதி உள்ளார்.
    பெங்களூரு:

    ஆர்.எஸ்.எஸ். சார்பில் நாக்பூரில் ஜூன் 7-ந் தேதி நடக்கும் விழாவில் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரணாப் முகர்ஜிக்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரும், முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரியுமான ஜாபர் ஷெரீப் கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ஆர்.எஸ்.எஸ். விழாவில் நீங்கள் (பிரணாப் முகர்ஜி) கலந்து கொள்ள இருக்கும் செய்தி அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. மத சார்பற்ற கொள்கையோடு பல ஆண்டுகள் அரசியலில் இருந்து நாட்டின் உயர்ந்த பதவியான குடியரசு தலைவர் பதவி வகித்த நீங்கள், பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ஆர்.எஸ்.எஸ். விழாவில் கலந்து கொள்வது சரியல்ல. நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் நீங்கள் பங்கேற்கக்கூடாது.

    இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

    கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் பரிசீலனையின்போது, ‘குடியரசு தலைவர் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை வேட்பாளராக அறிவிப்பதில் யாரும் தவறு காண முடியாது. அவரது நாட்டுப்பற்றை யாரும் சந்தேகிக்க முடியாது’ என்று பிரதமர் மோடிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜாபர் ஷெரீப் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.


    ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடிதம் அனுப்பி உள்ளார்.
    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதும், அதில் 12 பேர் பலியானதும், பலர் படுகாயம் அடைந்ததும் நெஞ்சை பதற செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இப்படி ஒரு அராஜக போக்கை போலீசார் நடத்தியிருப்பதை கடுமையான கண்டிக்கிறோம்.



    மத்திய-மாநில அரசுகளுக்கு வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறோம். போராட்டத்தில் படுகாயம் அடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளித்து மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களின் ஆதரவு இன்றி எந்தவொரு திட்டத்தையும் அமல்படுத்த அரசாங்கத்தால் முடியாது. எனவே இனியாவது மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அரசு தவறிவிட்டது. எனவே இனியும் இந்த அ.தி.மு.க. அரசு ஆட்சியில் தொடராத வகையில் கலைக்கப்பட வேண்டும். அதற்கான முக்கிய முடிவுகளை தமிழக கவர்னர் அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    கோவை அருகே 2-வது திருமணம் செய்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை இடிகரை செங்காளிபாளையம் சிறுகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மாசாணி. இவரது மகன் நாகராஜ் (வயது 23). இவரது மனைவி மேரி என்ற ஹேமலதா (20). ஹேமலதாவுக்கு ஏற்கனவே அழகுபாண்டியன் என்பவருடன் திருமணம் நடந்தது. 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது. குழந்தை ஒரு வயதாக இருக்கும்போது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் பிரிந்து வந்து விட்டார். குழந்தையை தனது தாயிடம் ஒப்படைத்து விட்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு மில்லுக்கு வேலைக்கு சென்றார். அப்போது தான் அதே மில்லில் வேலை செய்த நாகராஜூடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் மேரி கர்ப்பமானார்.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மருதமலை கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் நாகராஜ் வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த மேரி கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சோதனையில் மேரி எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் நான் எனது கணவர் நாகராஜை அதிகம் காதலிக்கிறேன். அவரை எனக்கு ரெம்ப பிடிக்கும். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதியிருந்தார். மேரியின் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×