search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106242"

    • முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு முதுகுத்தண்டை பலப்படுத்தவும் செய்கிறது.
    • தீவிரமான முட்டி வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

    அமர்ந்த நிலையில் செய்யப்படும் ஆசனமான பரத்வாஜாசனம் மூலாதாரம் மற்றும் அனாகதம் ஆகிய சக்கரங்களைத் தூண்டுகிறது. மூலாதாரச் சக்கரத்தின் சீரான இயக்கம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. அனாகதம் எனப்படும் இருதயச் சக்கரத்தின் சீரான செயல்பாட்டினால் அன்பு, காதல், கருணை போன்ற உணர்வுகள் மனதை நிறைக்கின்றன.

    பலன்கள்

    முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு முதுகுத்தண்டை பலப்படுத்தவும் செய்கிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

    தோள், இடுப்பு, முட்டி, கணுக்கால் ஆகியவற்றைப் பலப்படுத்துகிறது. மேல் மற்றும் நடு முதுகு வலியைப் போக்க உதவுகிறது. சையாடிக் பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது.

    செய்முறை

    விரிப்பில் கால்களை நீட்டி அமரவும். வலது காலை மடித்து வலது பாதத்தை வலது தொடையின் வெளிப்பக்கமாகத் தரையில் வைக்கவும்.இடது காலை மடித்து இடது பாதத்தை வலது தொடையின் மீது இடுப்பின் அருகே வைக்கவும். உங்கள் மேல் உடலை இடது பக்கமாகத் திருப்பவும்.

    உங்கள் இடது கையை முதுகுக்குப் பின்னால் கொண்டு சென்று வலது பக்கமாகக் கொண்டு வந்து உங்களின் இடது கால் விரல்களைப் பற்றிக் கொள்ளவும்.

    தலையை இடதுப்பக்கமாகத் திருப்பவும். வலது கையை இடது முட்டியின் மீது வைக்கவும். 30 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் காலை மாற்றி இதைத் திரும்பவும் செய்யவும்.

    அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் தூக்கமின்மை பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்ப்பது நல்லது. தீவிரமான முட்டி வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

    • இடுப்பு, முட்டியில் பிரச்சனை உள்ளவர்கள் இவ்வாசனத்தை தவிர்க்கவும்.
    • முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது.

    வடமொழியில் 'அஷ்ட' என்றால் 'எட்டு' என்று பொருள்; 'சந்திர' என்பது சந்திரனைக் குறிக்கும். இது ஆங்கிலத்தில் High Lunge Pose என்றும் Crescent High Lunge Pose என்றும் அழைக்கப்படுகிறது.

    அஷ்ட சந்திராசனத்தில் சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரக சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. மணிப்பூரகம் பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கிறது, சுவாதிட்டானம் படைப்பாற்றலை வளர்க்கிறது. அஷ்ட சந்திராசனத்தைத் தொடர்ந்து பயிலும் போது தன்மதிப்பு வளர்வதோடு மனநலமும் வளர்கிறது.

    பலன்கள்

    முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது. முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது. நுரையீரலைப் பலப்படுத்துகிறது. இருதய நலனைப் பாதுகாக்கிறது.

    வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. உடலின் நெகிழ்வுத்தன்மையை வளர்க்கிறது. உடல் ஆற்றலை வளர்க்கிறது. மூட்டுகளை பலப்படுத்துகிறது. கால்களை உறுதியாக்குகிறது

    செய்முறை

    விரிப்பில் நிற்கவும். இரண்டு பாதங்களுக்கு இடையில் சற்று இடைவெளி விட்டு நிற்கவும். மூச்சை வெளியேற்றியவாறு வலது காலை 3 முதல் 4 அடி பின்னால் வைக்கவும். கால் விரல்கள் தரையில் இருக்க வேண்டும். இடது காலை மடக்கவும்; இடது முட்டியும் இடது பாதமும் நேர்க்கோட்டில் இருக்குமாறு வைக்கவும்.

    மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தவும். உள்ளங்கைகள் ஒன்றை ஒன்று பார்த்தவாறு வைக்கவும். நேராகப் பார்க்கவும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் ஆரம்ப நிலைக்கு வரவும். பின் இடது காலைப் பின்னால் வைத்து பயிலவும்.

    குறிப்பு

    இடுப்பு மற்றும் முட்டியில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.

    • யோகாசனம் நம்முடைய வாழ்வில் நோய்களை வராமல் தடுக்கும்.
    • பிராணாயாமமும், தியானமும் மன அழுத்தத்தை விரட்டும் ஆற்றல் படைத்தது.

    இன்றைக்கு மனிதன் சந்திக்கும் ஸ்ட்ரெஸ் முதல் இதய நோய் வரையிலான ஆறு மிக முக்கியமான பாதிப்புகளை யோகா எப்படி சரி செய்கிறது என்று பார்ப்போம்.

    பொதுவாக உடல் அழுத்தம், மன அழுத்தம் என இரண்டு அழுத்தங்கள் இருக்கின்றன. காலையில் எழும்போது உடல் புத்துணர்வோடு உடல்நலக்குறைவு தரும் மன அழுத்தத்தைவிட வாழ்க்கைமுறைகள், உறவுகள், நட்புகளால் ஏற்படும் மன அழுத்தம் அளவில்லாமல் உள்ளது. அதிக மன அழுத்தம் நம்மை முற்றிலும் மிதித்து கொல்லும் பேராபத்து உள்ளது.

    பிராணாயாமமும், தியானமும் மன அழுத்தத்தை விரட்டும் ஆற்றல் படைத்தது. மூச்சு பயிற்சி எடுத்தால் மன அழுத்தம் தானாகவே குறைந்து, மனம் அமைதியடையும். செய்யும் வேலைகளில் கவனமும் இருக்கும். பல எண்ணங்கள் மனதுக்குள் அலைமோதுவதால்தான் மன அழுத்தம் வருகிறது.. மூச்சுப்பயிற்சி செய்யச்செய்ய, நம்மை தொந்தரவு செய்யும் தேவையற்ற எண்ணங்கள் விலக ஆரம்பிக்கும்.

    ரத்தக்கொதிப்பை தடுக்கும் மூச்சுப்பயிற்சி

    நமது இதயம் எப்படி இளமையாக உள்ளது? இதய ஆரோக்கியத்தை அளக்கும் கருவி என்று கோட இரத்த அழுத்தத்தை சொல்ல முடியும்.தியானம், பிராணாயாமத்தின் ஒரு பகுதியான நாடிசுத்தி ஆகிய பயிற்சிகளை செய்வதன் மூலம் உடலையும், மனதையும் சீராக்கி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க முடியும்.

    முதுகுவலிக்கு பை பை சொல்லும் மார்ஜாரி ஆசனம்

    கழுத்திலிருந்து கீழ்பாகம் வரை நம் உடலின் எல்லா பகுதிகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இறுக்கமாக இருக்கும்போதுதான் முதுகுவலி வருகிறது. இரு சக்கர வாகனத்தை அதிகம் பயன்படுத்துவது, கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் வேலைப் பார்ப்பது ஆகியவை முதுகு வலிக்கு காரணங்களாக அமைகிறது. மார்ஜாரி ஆசனத்தின் மூலம் முதுகெலும்பின் இறுக்கத்தைக் குறைத்து, முதுகுவலியை விரட்ட முடியும்.

    சர்க்கரை நோய்க்கும் தீர்வு உண்டு !

    இந்தியாவில் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் தமிழ்நாடும் இடம் பெறத்தொடங்கி உள்ளது. வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையம் சரியாக செயல்படாதபோது இன்சுலின் சுரப்பு குறைந்து, சர்க்கரை நோய் உருவாகிறது. யோகாசனத்தின் மூலம் கணையத்தை சுறுசுறுப்பாக செயல்பட வைத்து இன்சுலின் சுரப்பை மீண்டும் இயல்புக்குக் கொண்டு வர முடியும். பஸ்சிமோத்தாசனம், தனுராசனம், சர்வாங்காசனம், ஹாலாசனம் ஆகிய பயிற்சி களை தொடர்ந்து மேற்கொண்டால் நீரிழிவிலிருந்து விலகி வாழலாம்.

    சிறுநீரகம் காக்கும் தனுராசனம்

    சர்க்கரை நோய் உட்பட பல நோய்களின் காரணமாக சிறுநீரகக் கோளாறு ஏற்படும். உணவில் உப்பைக் குறைப்பது, தண்ணீர் நிறைய குடிப்பது போன்ற மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில எளிய மாற்றங்களுடன் சலபாசனம், தனுராசனம் போன்ற ஆசனங்களை செய்து வந்தால் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். உட்டியாணா என்ற வயிற்றுக்காக செய்யப்படும் பயிற்சியும் அரைமணிநேரம் தவறாமல் செய்து வந்தால் நல்ல பலனை உணரலாம்.

    இதயத்துக்கு இதம் தரும் சர்வாங்காசனம்!

    விலங்குகளுக்கு இதய நோய் வருவதில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். 4 கால்களில் நிற்பதால் முதுகு மேலேயும் அதற்குக் கீழே இதயமும் இருக்கிறது. ஆனால், நாம் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து நிற்பதால் கீழிருந்து அதிக அழுத்தத்துடன் ரத்தம் மேலே ஏறுகிறது. இதனால் இதயத்துக்கு வேலைப்பளு அதிகமாகிறது. இதுவே மனிதர்களுக்கு இதய நோய் வர காரணங்களில் ஒன்று என்றும் சொல்கிறார்கள். முதுகுத்தண்டு மேலேயும், இதயம் கீழேயும் வரும் சர்வாங்காசனம், விபரீத கரணி ஆகிய பயிற்சிகள் இதய நோய்களை நம் அருகில் நெருங்கவிடாமல் தடுக்கும்.

    • கழுத்து மற்றும் முதுகு வலியைப் போக்குகிறது.
    • ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளை சரி செய்கிறது.

    வடமொழியில் 'மத்ஸ்ய' என்றால் 'மீன்' என்று பொருள். மத்ஸ்யாசனத்தில் உடல் மீன் நிலை போல் இருப்பதால் இப்பெயர் பெற்றது. இது ஆங்கிலத்தில் Fish Pose என்று அழைக்கப்படுகிறது. மத்ஸ்யாசனம் செய்வதால் அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, குரு மற்றும் சஹஸ்ரார சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. அன்பு மற்றும் பரிவு ஆகிய தன்மைகளை வளர்க்கிறது; ஞானம் அடைவதற்கான நிலையை இவ்வாசனம் அளிக்கிறது. தொடர்பாடல் திறன் மேம்படுகிறது.

    சர்வாங்காசனம், மற்றும் ஹலாசனம் ஆகிய ஆசனங்களைச் செய்த பின் முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்படும் பிடிப்புகளை மத்ஸ்யாசனம் போக்குகிறது.

    பலன்கள்

    முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்வதோடு அதன் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கிறது. முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது. நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளை சரி செய்கிறது.

    தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. கழுத்து மற்றும் முதுகு வலியைப் போக்குகிறது. தோள்களைத் தளர்த்துகிறது. வயிற்று உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. குழந்தையின்மை பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது

    செய்முறை

    விரிப்பில் கால்களை நீட்டிப் படுக்கவும். மாறாக, பத்மாசன நிலையில் கால்களை வைத்தும் படுக்கலாம். கைகளைத் தரையில் நன்றாக ஊன்றி, மார்பை மேல் நோக்கி உயர்த்தவும். மாறாக, கைகளைப் புட்டத்துக்குச் சற்று கீழாக வைத்தும் மார்பை உயர்த்தலாம். பத்மாசன நிலையில் பயிலும் போது கைகளைத் தொடையின் மீது வைத்துப் பயிலலாம்.

    தலையை நன்றாக கீழ் நோக்கி சாய்த்து, உச்சந்தலையைத் தரையில் வைக்கவும். தோள்களைத் தளர்த்தவும். இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு இந்நிலையில் இருக்கவும். பின், உடலை மெதுவாகத் தளர்த்தி, தலையைத் தரையில் வைத்து கைகளை நீட்டி ஆரம்ப நிலையில் படுத்து ஓய்வாசனத்தில் இருக்கவும்.

    குறிப்பு

    மார்பை மேல் நோக்கி உயர்த்துவது கடினமாக இருந்தால், முதுகின் கீழ் yoga block அல்லது தலையணை ஒன்றை வைத்து அதன் மீது சாய்ந்து பயிலவும்.

    தீவிர கழுத்து பிரச்சினை, முதுகுத்தண்டு கோளாறு உள்ளவர்கள் கண்டிப்பாக முதுகின் கீழ் yoga block அல்லது தலையணை வைத்து மட்டுமே இவ்வாசனத்தைப் பயில வேண்டும்.

    • கால் முட்டி வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.
    • நுரையீரல் கோளாறுகளை சரி செய்து நுரையீரலை பலப்படுத்துகிறது.

    'சிம்ஹ' என்ற வடமொழி சொல்லின் பொருள் 'சிங்கம்' என்பதாகும். சிங்கத்தின் நாக்கு ஒரு ஆயுதம். இரையின் மாமிசத்தை கிழித்தெடுக்கும் சக்தி சிங்கத்தின் நாக்குக்கு உண்டு. சிங்காசனத்தில் நாம் கர்ஜிப்பதன் மூலம் பிலடிஸ்மா எனப்படும் தோள்பட்டை எலும்பிலிருந்து தாடை வரை இருக்கும் தசைகளை உறுதியாக்குகிறது. மூலாதாரம், ஜாலந்தரம் மற்றும் உட்டியாண பந்தங்களின் இயக்கத்தை செம்மையாக்கி உடம்பில் பிராண சக்தி ஓட்டத்தை சீர்ப்படுத்துகிற்து.

    பலன்கள்

    நுரையீரல் கோளாறுகளை சரி செய்து நுரையீரலை பலப்படுத்துகிறது. நோய் எதிர்க்கும் திறனை வளர்க்கிறது. முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது. நரம்பு மண்டலத்தை உறுதியாக்குகிறது.

    கண் பார்வையை கூர்மையாக்குகிறது. முகத்துக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. முதுகு வலியை போக்க உதவுகிறது.

    செய்முறை

    வஜ்ஜிராசனத்தில் அமரவும்.கால் முட்டியை விரித்து, உடலை சற்று முன்னால் சாய்த்து இரண்டு உள்ளங்கைகளையும் கால்களுக்கு இடையிலான இடைவெளியில் விரல்கள் உங்களை நோக்கி இருக்குமாறு வைக்கவும். முதுகை வளைத்து தலையை சற்று மேல் நோக்கி உயர்த்தவும்.

    உங்கள் புருவ மத்தியை பார்க்கவும். மெதுவாக ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து, மூச்சை வெளியே விடும் போது வாயைத் திறந்து நாக்கை வெளியே நீட்டவும். மூச்சை வெளியேற்றும் போது, தொண்டையிலிருந்து 'ஆஆஹ்' என ஒலி எழுப்பவும். ச்சை வெளியேற்றிய பின் வாயை மூடி சாதாரண மூச்சில் இருக்கவும்.

    இது போல் 5 முறை செய்யவும்.

    குறிப்பு

    சிங்காசனத்தை பத்மாசனம் முறையில் கால்களை மடக்கி, உள்ளங்கைகளை விரல்கள் முன்புறம் பார்க்குமாறு வைத்து, உடலை முன்புறமாக கால் முட்டி தரையில் இருக்கும் வண்ணம் சாய்த்தும் செய்யலாம்.

    கால் முட்டி வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும். மணிக்கட்டு பிரச்சினை உள்ளவர்கள் கைகளை கீழே வைக்காமல் வஜ்ராசனத்தில் அமர்ந்து இந்த ஆசனத்தை பயிலலாம்.

    புருவ மத்தியை பார்க்கும்போது தலை சுற்றுவது போல் இருந்தால் நேராக பார்க்கவும்.

    • அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிறு கோளாறுகளை குணப்படுத்துகிறது.
    • தொப்பையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆசனப்பயிற்சி.

    விரிப்பில் படுத்து கைகள் இரண்டையும் பக்க வாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மூச்சை உள்ளிழுத்தபடி கால்கள் இரண்டையும் சற்றே உயரமாக 45 டிகிரி கோணத்தில் தூக்க வேண்டும். இதேநிலையில் சில நிமிடங்கள் இருக்க வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இதேபோன்று 3-லிருந்து 5 முறை செய்யலாம்.

    பலன்கள்

    அசிடிட்டி, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிறு கோளாறுகளை குணப்படுத்துகிறது. அடிவயிற்று உறுப்புகளை வலுவடையச் செய்கிறது. முதுகு, இடுப்பு மற்றும் தொடை தசைகளை வலுவாக்குகிறது. வாய்வுக் கோளாறு, அஜீரண வாந்தி, மூட்டுவலி, இதயக் கோளாறு மற்றும் இடுப்பு வலியைப் போக்குகிறது.முதுகுவலியைப் போக்குகிறது.

    கணையச் சுரப்பியின் வேலையைத் தூண்டுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.செரிமான உறுப்புகளின் வேலையை துரிதப்படுத்துகிறது. இரைப்பையில் தேங்கியுள்ள வாயுவை வெளியேற்றுகிறது.தொப்பையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆசனப்பயிற்சி.

    • உடலில் உள்ள அதிகளவு கலோரியை குறைக்க இந்த யோகசனத்தை செய்யலாம்.
    • கழுத்துத் தசைகளை உறுதியாக்குகிறது.

    சதுரங்க தண்டாசனம் மணிப்பூரக சக்கரத்தைத் தூண்டி அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மணிப்பூரகம் பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் திறன் கொண்டது. இச்சக்கரம் சீராக இயங்கும்போது உடல் மற்றும் மனதில் மறைந்திருக்கும் அளப்பரிய ஆற்றல் வெளிக் கொண்டு வரப்பட்டு, வாழ்க்கையில் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் வல்லமை வளர்கிறது.

    செய்முறை

    விரிப்பில் குப்புற படுத்து கொள்ளவும். பின்னர் கும்பகாசன நிலையில் இருந்து உங்களை சதுரங்கள் தண்டாசனத்திற்கு கீழே இறக்கவும். இதை செய்வதற்கு உங்கள் பாதங்களை நகர்த்தி முன்னால் வரவும் மற்றும் உங்கள் மேல் கைகளால் கீழே வரவும். உங்கள் மேல் கைகளால் 90 டிகிரி (படத்தில் உள்ளபடி) கோணத்தை செய்யவும், நீங்கள் பிளாங்க் போஸில் செய்வது போல் உங்கள் விலா மற்றும் தசைகளையும் இழுத்து வைத்துக் கொள்ளவும்.

    உங்கள் முதுகுதண்டை நேராக வைத்துக் கொள்ளவும். நீங்கள் உங்கள் தோள்களை கீழே இறக்காமல் நேராக முன்னோக்கி இருப்பதை உறுதி செய்யவும். நீங்கள் நிலையற்றதாக நினைத்தால், உங்கள் முழங்கால்களை இறக்கிக் கொள்ளலாம். இங்கிருந்து திரும்பவும் பிளங்க போஸ் அல்லது மேல்நோக்கி எதிர்கொள்ளும் நிலைக்கு வரவும். இதை 10 முறைகள் திரும்பச் செய்யுங்கள்.

    பயன்கள்

    கால்கள், கைகளுக்கு வலிமை தருகிறது. தொப்பையை குறைக்க உதவுகிறது. உடலில் உள்ள அதிகளவு கலோரியை குறைக்க இந்த யோகசனத்தை செய்யலாம்.

    முதுகுத்தண்டை நீட்சியடையவும் பலப்படுத்தவும் செய்கிறது. முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது. முதுகு வலியைப் போக்க உதவுகிறது

    தோள், கை, மணிக்கட்டு பலம் பெறுகிறது. கழுத்துத் தசைகளை உறுதியாக்குகிறது. வயிற்று தசைகளை உறுதியாக்குவதோடு வயிற்று உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்கிறது. சீரண மண்டல இயக்கத்தை மேம்படுத்துகிறது.

    உடலின் சமநிலையைப் பராமரிக்கிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது

    • யோகா பயில்வதால் மனம் அமைதி பெறுகிறது; மனச் சோர்வு அகலுகிறது.
    • தொடர்ந்து ஆசனம் பழகுவதால் உடல் உள்ளுறுப்புகளின் நலன் பாதுகாக்கப்படுகிறது.

    முதுமை அடைவது என்பது இயல்பான போக்கு என்றாலும் முதுமைக்கான அறிகுறிகளை ஒத்திப் போடுவதில் யோகப் பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது.

    * ஒருவரின் முதுகெலும்பு எவ்வளவுக்கெவ்வளவு நலமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவரின் உடல் நலம் மேம்பட்டதாக இருக்கும். ஒருவரின் முதுகுத்தண்டு எந்த அளவு நெகிழ்வுத்தன்மையோடு இருக்கிறதோ அந்த அளவிற்கு வயதாவதால் ஏற்படும் உடல் இறுக்கம் தவிர்க்கப்படுகிறது. யோகா பயில்வதால் முதுகெலும்பின் நெகிழ்வுத் தன்மை பாதுகாக்கப்படுகிறது.

    * தொடர்ந்து ஆசனம் பழகுவதால் உடல் உள்ளுறுப்புகளின் நலன் பாதுகாக்கப்படுகிறது. பொதுவாக வயது கூடும் போது மலச்சிக்கல் மற்றும் செரியாமை ஆகியவை ஏற்பட வாய்ப்புண்டு. ஆசனங்கள் உடல் உள்ளுறுப்புகளின் இயக்கத்தை மேம்படுத்துவதால் இப்பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டு செரிமான மண்டலம் செம்மையாக இயங்குகிறது.

    * வயதாகும் போது ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று உடல் சமநிலையில் (balance) மாற்றம் ஏற்படுவது. யோகாசனம் உடல் சம நிலையை மேம்படுத்துவதன் மூலம் முதுமையினால் சமநிலை இழத்தல் தவிர்க்கப்படுகிறது.

    * யோகாசனம் பயில்வதால் மூட்டுகள் பலமாக இருப்பதோடு மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையும் பாதுகாக்கப்படுகிறது.

    * தொடர்ந்து யோகப்பயிற்சி செய்யும் போது நினைவாற்றல் பெருகுகிறது. வயது கூடும் போது நினைவாற்றல் குறைதல் என்பது பொதுவாகக் காணக் கூடியது. ஆனால், ஆசனங்கள் பயில்வதன் மூலம் அந்நிலையைத் தவிர்க்கலாம்.

    * மனச்சோர்வு என்பது இக்காலத்தில் இளையவர்களிடமும் காணப்பட்டாலும், வயதில் முதியவர்களுக்கு மனச் சோர்வு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. யோகா பயில்வதால் மனம் அமைதி பெறுகிறது; மனச் சோர்வு அகலுகிறது.

    அனைத்திற்கும் மேலாக எந்த அளவிற்கு நாம் யோகா போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறோமோ அந்த அளவிற்கு நம் மனம் இளமையாக இருக்கும். இளமையான மனம் உடலை இளமையாக வைக்க உதவுகிறது.

    • இந்த ஆசனம் ஆரம்ப கட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது.
    • நரம்பு கோளாறுகளை குணமாக்குகிறது..

    செய்முறை

    விரிப்பில் நேராக நின்று கொண்டு கால்களை 2 அடி இடைவெளி விட்டு நிற்கவும். வலது கால் பாதத்தை வலது பக்கமாக திருப்பி வைக்கவும். பின்னர் வலது பக்கமாக குனிந்து வலது கையை வலது கால் பாதத்திற்கு முன்பாகவும், இடது கையை வலது காலின் பின்புறமும் வைத்து தலையால் கால் முட்டியை தொட வேண்டும். இவ்வாறு 30 விநாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும். பின்னர் கால்களை மாற்றி இடது காலில் இவ்வாறு செய்ய வேண்டும். இந்த ஆசனத்தை 2 முதல் 3 முறை செய்ய வேண்டும்.

    பயன்கள்

    இந்த ஆசனம் உங்களுக்கு உடல் ரீதியான மற்றும் உளவியல் நன்மைகளை தருகிறது. மேலும் விந்தணு கோளாறுகள் மற்றும் பாலியல் செயல்திறனை மேம்படுத்துகிறது. நரம்புகளை தூண்டுகிறது. நரம்பு கோளாறுகள் குணமாகின்றன. இடுப்பு பகுதியை வலுவூட்டுகிறது, இடுப்பில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்கிறது.

    தொடை, கால்கள், கால் மூட்டுகளுக்கு வலிமை தருகிறது. முதுகெலும்பு வலுவடைகிறது. தூக்கமின்மை குணப்படுத்துகிறது. இந்த ஆசனம் ஆரம்ப கட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. தொடைப் பகுதியில் உள்ள அதிகக் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. தொடர்ந்து பழகி வர இளமையான தோற்றத்தைத் தருகிறது.

    • ஊர்த்துவ தனுராசனம் உடல் முழுமைக்கும் ஆற்றல் அளிக்கிறது.
    • முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது; முதுகுவலியைப் போக்குகிறது.

    ஊர்த்துவ தனுராசனத்தை சக்ராசனம் என்றும் அழைப்பர். ஆனால், சக்ராசனத்தில் முழுமையான சக்கர வடிவில் கால்களின் அருகே கைகள் இருக்கும். ஊர்த்துவ தனுராசனத்தில் கால்களுக்கும் கைகளுக்கும் இடையில் இடைவெளி இருக்கும். வடமொழியில் 'ஊர்த்துவ' என்றால் 'மேல் நோக்கும்' என்றும் 'தனுர்' என்றால் 'வில்' என்றும் பொருள். இது ஆங்கிலத்தில் Upward Bow Pose என்று அழைக்கப்படுகிறது.

    சக்ராசனத்தைப் போலவே ஊர்த்துவ தனுராசனமும் எட்டு சக்கரங்களையும் தூண்டி அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. ஊர்த்துவ தனுராசனம் உடல் முழுமைக்கும் ஆற்றல் அளிக்கிறது.

    பலன்கள்

    உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது; முதுகெலும்பை பலப்படுத்துகிறது. முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது; முதுகுவலியைப் போக்குகிறது.

    தோள்களை விரிக்கிறது. நுரையீரலைப் பலப்படுத்துகிறது. இருதய நலன் காக்கிறது. தலைவலியைப் போக்க உதவுகிறது. வயிற்று உள் உறுப்புகளின் இயக்கத்தை சீர் செய்கிறது.

    இனப் பெருக்க உறுப்புகளின் பணியை மேம்படுத்துகிறது. கால்களை நீட்சியடையச் செய்கிறது; கால் தசைகளை உறுதியாக்குகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது

    செய்முறை

    விரிப்பில் படுக்கவும். கால்களை மடித்து பாதங்களை உங்கள் புட்டத்தின் அருகே வைக்கவும். இரண்டு பாதங்களுக்கு இடையில் இடைவெளி விடவும். கைகளை உயர்த்தி, தோள்களுக்கும் பின்னால் தரையில் வைக்கவும். விரல்கள் உங்கள் தோள்களை நோக்கிய வண்ணம் இருக்க வேண்டும்.

    உள்ளங்கைகளையும் பாதங்களையும் நன்றாகத் தரையில் ஊன்றி மூச்சை உள்ளிழுத்தவாறு மெதுவாக உடலை மேலே உயர்த்தவும். தலையை பின்னால் சாய்க்கவும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும். மெதுவாகத் தரையில் படுத்து கால்களையும் கைகளையும் நீட்டி ஆரம்ப நிலையில் படுக்கவும்.

    குறிப்பு

    தீவிர முதுகுத்தண்டு கோளாறு, இடுப்பு வலி, தோள் மற்றும் மூட்டுப் பிரச்சினை உள்ளவர்கள் ஊர்த்துவ தனுராசனம் செய்வதைத் தவிர்க்கவும்.

    • மாதவிடாய் நிற்கும் காலக்கட்டத்தில் (menopause) ஏற்படும் அசவுகரியங்களைப் போக்குகிறது.
    • முதுகுத்தண்டு, முதுகு, தோள், கைகளில் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

    அதோ முக ஸ்வானாசனத்தின் ஒரு வகையாக அர்த்த பிஞ்ச மயூராசனத்தைக் கூறலாம். அதோ முக ஸ்வானாசனத்தின் பெரும்பாலான பலன்கள் அர்த்த பிஞ்ச மயூராசனத்துக்கும் பொருந்தும்.

    பலன்கள்

    நுரையீரலைப் பலப்படுத்துகிறது. கால்களை நீட்சியடையவும் பலப்படுத்தவும் செய்கிறது. தோள்களையும் முதுகுத்தண்டையும் நீட்சியடையச் செய்கிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. சீரணத்தைச் செம்மையாக்குகிறது

    கைகளைப் பலப்படுத்துகிறது. தலைவலியைப் போக்க உதவுகிறது. முதுகு வலியைப் போக்குகிறது. சையாடிக் பிரச்சினையை சரி செய்கிறது. மூட்டுப் பிரச்சினைகளைப் போக்குகிறது.

    சிறு வயது முதலே பயின்று வந்தால் தட்டைப் பாதம் சரியாக உதவுகிறது. மாதவிடாய் நிற்கும் காலக்கட்டத்தில் (menopause) ஏற்படும் அசவுகரியங்களைப் போக்குகிறது. நினைவாற்றலை வளர்க்கிறது.

    செய்முறை

    தவழும் நிலைக்கு வரவும். அதாவது, உங்கள் மணிக்கட்டுகள் தோள்களுக்கு நேர் கீழாகவும், உங்கள் கால் முட்டி இடுப்புக்கு நேர் கீழாகவும் இருக்கும் வகையில் உங்கள் உள்ளங்கைகளையும் கால்களையும் தரையில் வைக்கவும்.

    முன்கைகளை மடக்கித் தரையில் வைக்கவும். மூச்சை வெளியேற்றியவாறு பாதங்களைத் தரையில் வைத்து இடுப்பை நன்றாக மேலே உயர்த்தவும். உங்கள் கால் முட்டி மடங்காமல் நன்றாக நீட்டப்பட்டு இருக்க வேண்டும்.

    தலை உங்கள் மேற்கைகளுக்கு இடையில் இருக்க வேண்டும். 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும். இடுப்பை இறக்கி முட்டியைத் தரையில் வைத்து முன்கைகளை நேராக்கவும்.

    குறிப்பு

    கால்களை முழுவதுமாக நீட்ட முடியவில்லை என்றால் முட்டியை மடக்கி ஆசனத்தைப் பயிலவும். பழகப் பழக, ஆசனத்தை முழுமையான வடிவில் பயில முடியும்.

    முதுகுத்தண்டு, முதுகு, தோள், கைகள் ஆகியவற்றில் தீவிரப் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும். அதிக இரத்த அழுத்தம் மற்றும் தீவிரக் கண் கோளாறு உள்ளவர்களும் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

    • தோள் அல்லது கழுத்தில் தீவிர பிரச்சனை உள்ளவர்கள் செய்யவேண்டாம்.
    • மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உபாதைகளைப் போக்க உதவுகிறது.

    சேதுபந்தாசனம் என்கிற ஆசனத்தின் ஒரு மாற்று முறைதான் சதுஷ் பாதாசனம். சதுஷ் பாதாசனத்தில் மூலாதாரம், மணிப்பூரகம், அனாகதம் மற்றும் விசுத்தி ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இதன் விளைவாக, நிலையான தன்மை, படைப்புத் திறன் வளர்கின்றன. அன்பும் கனிவும் வளர்கின்றன. பிரபஞ்ச சக்தியைக் கவரும் திறன் உருவாகிறது. தொடர்பாடல் திறன் மேம்படுகிறது. தன் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைத் தெளிவாக வெளிப்படுத்தும் திறன் அதிகரிக்கிறது.

    பலன்கள்

    முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது. முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது. கழுத்து, மார்பு பகுதிகளை விரிக்கிறது. கைகளை நீட்சியடையச் செய்வதுடன் வலுப்படுத்தவும் செய்கிறது. தோள்களை நீட்சியடையச் செய்கிறது, அவற்றின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.

    தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. நுரையீரலைப் பலப்படுத்துகிறது. இருதய இயக்கத்தைச் சீராக வைக்க உதவுகிறது. அதிக இரத்த அழுத்தத்தைச் சரி செய்ய உதவுகிறது. இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.

    வயிற்று உள்ளுறுப்புகளின் நலனைப் பாதுகாக்கிறது. ஜீரண இயக்கத்தை மேம்படுத்துகிறது. தலைவலியைப் போக்க உதவுகிறது

    மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உபாதைகளைப் போக்க உதவுகிறது. கால் வலியைப் போக்குகிறது; கால்களைப் பலப்படுத்துகிறது.

    தூக்கமின்மையை சரி செய்கிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது.

    செய்முறை

    விரிப்பில் படுக்கவும். கால்களை மடக்கி இரண்டு பாதங்களையும் தரையில் வைக்கவும். கணுக்கால், முட்டிக்கு நேர் கீழே இருக்க வேண்டும். கைகள் நீட்டியிருக்க வேண்டும். கைகளால் கணுக்கால்களைப் பற்றிக் கொள்ளவும்.

    மூச்சை உள்ளிழுத்தவாறு பாதங்களையும் கைகளையும் தரையோடு அழுத்தி இடுப்பை மேல் நோக்கி உயர்த்தவும். தோள்களை விரிக்கவும்.

    ஒரு நிமிடம் இந்நிலையில் இருக்கவும். ஆசன நிலையிலிருந்து வெளியேற, இடுப்பைத் தரையில் வைத்து, கணுக்கால்களை விடுவித்து கால்களை நீட்டவும்.

    குறிப்பு

    தோள் அல்லது கழுத்தில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் சதுஷ் பாதாசனம் செய்வதைத் தவிர்க்கவும்.

    ×