search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106242"

    • இந்த ஆசனம் பார்ப்பதற்கு கஷ்டமானதாகத் தான் தெரியும்.
    • இந்த ஆசனம் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க உதவுகிறது.

    செய்முறை

    இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் படுத்து, கைகளால் உடலை மேலே தூக்கி, கால்கள் தலைக்கு பின்னால் தரையை தொடுமாறும், பின் கைகள் தரையில் ஊன்றியிருக்குமாறும் செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இந்த நிலையில் சில நிமிடங்கள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். முதுகு தண்டில் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. வயிற்றில், முதுகில் அறுவை சிகிச்சை செய்தர்களுக்கும் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

    பயன்கள்

    இந்த ஆசனம் பார்ப்பதற்கு கஷ்டமானதாகத் தான் தெரியும். இது தைராய்டு சுரப்பியைத் தூண்டுகிறது. ஆனால் இந்த ஆசனத்தின் மூலம் இனப்பெருக்க உறுப்புகள் தூண்டப்பட்டு, மசாஜ் செய்தது போல் இருக்கும். மேலும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள், இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால், நிச்சயம் நல்ல பலனைக் காணலாம்.

    வயிற்று உறுப்புகளின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. முதுகெலும்பு மற்றும் தோள்பட்டைகளை நீட்டி பலப்படுத்துகிறது. இந்த ஆசனம் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க உதவுகிறது. இது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.இந்த ஆசனம் மெனோபாஸ் அறிகுறிகளை நிர்வகிக்க உதவுகிறது. இது கருவுறாமை, சைனசிடிஸ் மற்றும் முதுகுவலிக்கு எதிராகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    • கழுத்து வலி, தோள் வலி, சுவாசக் கோளாறுகள் சரியாகின்றன.
    • கணையம் உள்ளிட்ட உறுப்புகளின் செயல்பாடு சீராகிறது.

    உடம்பை சக்கரம் போல பின்பக்கமாக வளைக்கும் ஆசனம் 'சக்ராசனம்'. அதில் பாதி அளவுக்கு வளைப்பதால் இதற்கு 'அர்த்த சக்ராசனம்' என்ற பெயர்.

    செய்முறை

    விரிப்பில் நேராக நிமிர்ந்து நிற்கவும். கால்கள் சேர்ந்து இருக்கட்டும். ஒரு முறை மூச்சை நன்கு இழுத்து விடுங்கள். இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கை முழுவதும் இடுப்பு பகுதியில் நன்கு பதிந்திருக்கட்டும். விரல்கள் சேர்ந்து இருக்கட்டும். கைகளை மெல்ல நகர்த்தி பின்பக்கமாக கொண்டு செல்லவும். கைகளின் முட்டிகள் இயன்ற வரை நெருக்கமாக இருக்கட்டும்.

    ஒரு முறை மூச்சு நன்கு இழுத்து விடுங்கள். இப்போது, உள்ளங்கைகளால் இடுப்பை முன்னோக்கி அழுத்தவும். மெதுவாக, மூச்சை இழுத்தபடியே பின்பக்கமாக இடுப்பை வளைத்து, அண்ணாந்து மேல் வானத்தை பார்க்கவும். கழுத்து பகுதி ரிலாக்ஸாக இருக்கட்டும். 1-10 எண்ணுங்கள். மூச்சை விட்டுக்கொண்டே சமநிலைக்கு வரவும்.

    பயன்கள்

    இந்த ஆசனம் செய்வதால் தோள், தொடை, இடுப்பு பகுதிகள் வலுப்பெறுகின்றன. தொடை, வயிறு பகுதியில் தேவையற்ற சதைகள் கரைகின்றன. கழுத்து வலி, தோள் வலி, சுவாசக் கோளாறுகள் சரியாகின்றன. நுரையீரல் நன்கு விரிவடைவதால், முழு சுவாசம் கிடைக்கிறது. கணையம் உள்ளிட்ட உறுப்புகளின் செயல்பாடு சீராகிறது. வெர்ட்டிகோ, மைக்ரைன், தலைவலி உள்ளவர்கள் நிதானமாக செய்வது அவசியம். அதிகப்படியான கழுத்து, முதுகு, இடுப்பு வலி, குடலிறக்கம், குடல் புண், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

    • முதுகுத்தண்டு பிரச்சினை உள்ளவர்களும் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.
    • இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.

    காக்கையின் உருவ அமைப்பை ஒத்து இருப்பதால் இந்த ஆசனம் காகாசனம் என்று பெயர் பெற்றது. மேலும், காக்கையின் கால்கள் பலமாக இருப்பது போல், காகத்தின் கால்களாக பயன்படுத்தப்படும் நம் கைகள் பலம் பெறுகின்றன. காகங்கள் மிக புத்திசாலியான பறவைகள், அவை சூழலுக்கு ஏற்றாற் போல் தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் திறன் பெற்றவை. காகாசனத்தில் நம்முடைய சுவாதிட்டான சக்கரம் தூண்டப்படுவதால் நம் உடலின் ஆற்றல் பெருகுகிறது.

    செய்முறை

    விரிப்பில் நேராக நிற்கவும். மூச்சை வெளியேற்றிக் கொண்டே குனிந்து உள்ளங்கைகளை தரையில் வைக்கவும். இரண்டு உள்ளங்கைகளுக்கு இடையில் தோள் அளவு இடைவெளி இருக்க வேண்டும்.

    கை முட்டியை மடக்கி, குதிகால்களை உயர்த்தி கால் முட்டியை மேல்கைகளின் மேல் வைக்கவும். மெதுவாக கால்களை உயர்த்தி கைகளால் உடலைத் தாங்கி நிற்கவும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் மீண்டும் பழைய நிலைக்கு வரவும்.

    தோள், முட்டி, மணிக்கட்டு ஆகிய பகுதிகளில் வலி இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்யும்போது வலி ஏற்பட்டால் தொடர்ந்து பயில்வதைத் தவிர்க்கவும். முதுகுத்தண்டு பிரச்சினை உள்ளவர்களும் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

    பலன்கள்

    கைகளையும் மணிக்கட்டுகளையும் பலப்படுத்துகிறது. சீரணத்தை மேம்படுத்துகிறது. வயிற்று உள் உறுப்புகளின் இயக்கத்தை செம்மையாக்குகிறது.

    கவனத்தை கூர்மையாக்குகிறது. சமநிலையான உடலையும் மனதையும் அளிக்கிறது.

    • நுரையீரலைப் பலப்படுத்துகிறது.
    • வெரிகோஸ் வெயின் (Varicose vein) எனப்படும் நரம்பு சுருண்டு வீங்கிய நிலையை சரி செய்கிறது.

    வஜ்ராசனம் என்பது உடலை வைரம் போல் உறுதியாக்கும் ஆசனம் என்றும் பார்த்திருப்போம். சுப்த வஜ்ராசனம் என்பது படுத்த நிலையில் வீராசனத்தில் இருப்பதாகும். வட மொழியில் 'சுப்த' என்றால் 'படுத்திருத்தல்' என்று அர்த்தம். ஆக, இது படுத்த நிலையில் வஜ்ராசனம் செய்வதாகும்.

    வஜ்ராசனம் போலவே சுப்த வஜ்ராசனமும் ஜுரணக் கோளாறுகளை சீர் செய்து சீரண உறுப்புகளை சரியாக இயங்க வைக்கிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை செம்மையாக்குகிறது. இந்த ஆசனத்தில் கால்கள் வீராசன நிலையில் இருப்பதால், இது சுப்த வீராசனம் என்றும் அழைக்கப்படுவது உண்டு. இந்த ஆசனத்தை பயிலும் முன் வஜ்ராசனம், வீராசனம் ஆகிய இரண்டிலும் நல்ல பயிற்சி பெற்றிருப்பது அவசியம்.

    பலன்கள்

    நுரையீரலைப் பலப்படுத்துகிறது. வாயுக் கோளாறைப் போக்குகிறது. தொடை முதல் பாதம் வரை கால்கள் முழுவதையும் பலப்படுத்துகிறது.

    மூட்டுகளை பலப்படுத்துகிறது.

    தொடர் பயிற்சியில் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலிகளைப் போக்குகிறது. சையாடிக் பிரச்சினையைப்போக்குகிறது.வெரிகோஸ் வெயின் (Varicose vein) எனப்படும் நரம்பு சுருண்டு வீங்கிய நிலையை சரி செய்கிறது. தூக்கமின்மையை போக்குகிறது.

    செய்முறை

    வஜ்ராசனத்தில் அமரவும். பின், கால்களை விரித்து வீராசன நிலைக்கு வரவும். கால் பாதங்களை கைகளால் பிடித்து கொள்ளவும். உங்கள் முன்கைகளை தரையில் வைத்து பின்னால் மெதுவாக சாயவும். மேலும் நன்றாக சாய்ந்து தரையில் படுக்கவும்.

    இப்பொழுது உங்கள் கைகளை தலைக்கு பின்னால் கொண்டு வந்து வலது தோளை இடது கையாலும் இடது தோளை வலது கையாலும் பற்றி முன்கைகளை தரையில் வைக்கவும். 30 வினாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இந்த நிலையில் இருக்கவும். குறிப்பிட்ட நேரம் இந்த நிலையில் இருந்த பின் பாதங்களைப் பற்றி எழுந்து பின் கால்களை சேர்த்து வஜ்ராசன நிலைக்கு வரவும்.

    குறிப்பு

    பின்னால் சாய்ந்து தரையில் படுக்க முடியாதவர்கள், ஒரு தலையணை அல்லது yoga block ஒன்றை முதுகுக்கு பின்னால் வைத்து அதன் மேல் படுக்கலாம்.

    வஜ்ராசனம் அல்லது வீராசன நிலையில் கால்களை வைக்க கடினமாக இருந்தால் கணுக்கால்களின் கீழ் தலையணை, தடித்த விரிப்பு அல்லது yoga block வைத்து அமரவும்.

    கால் முட்டியிலும், இடுப்பிலும் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனம் பயில்வதைத் தவிர்க்கவும்.

    • முதுகுத்தண்டு மற்றும் முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது.
    • நுரையீரலைப் பலப்படுத்துகிறது.

    ஆஞ்சநேயாசனத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம் மற்றும் அனாகதம் ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இவ்வாசனத்தைத் தொடர்ந்து பயின்று வர இருதய நலன் பாதுகாக்கப்படுவதோடு பிராண ஆற்றலையும் உடல் முழுவதும் செலுத்த உதவுகிறது.

    உடலின் முக்கியமான உறுப்பு தண்டுவடம். உடல் இயக்கத்துக்கு அடிப்படையான 33 நரம்புகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. மூளை மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்கு இடையே உள்ள தகவல் பரிமாற்றத்துக்கு தண்டுவடம் அடிப்படையானது. உட்காருவது, நடப்பது, நிற்பது, பொருட்களை தூக்குவது போன்ற செயல்களின்போது நமது தோரணை சீரற்று இருப்பதால், தண்டுவடத்தில் பாதிப்புகள் ஏற்படும். இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் குணப்படுத்த முடியும்.

    விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். வலது காலை முன் நோக்கி நகர்த்தி தரையில் பாதம் பதியும்படி ஊன்றிக்கொள்ளவும். பின்பு இடது காலை பின்னோக்கி கொண்டு சென்று, முழங்கால் தரையில் படுமாறு கிடைமட்டமாக வைக்கவும். பின்னர் இரண்டு கைகளையும் கூப்பி தலைக்கு மேல் நேராக தூக்கவும். இந்த நிலையில் முதுகுப் பகுதியை பின் நோக்கி வளைக்க வேண்டும். பிறகு ஆரம்ப நிலைக்கு வரலாம். இதைப் போன்று மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும்.

    பலன்கள்: பெண்களுக்கு கை மற்றும் இடுப்பு பகுதியில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரையும். வாகனத்தில் பயணித்தல் மற்றும் பணியிடத்தில் கணினி முன்பு நீண்ட நேரம் வேலை பார்க்கும்போது ஏற்படும் தண்டுவட பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

    முதுகுத்தண்டு மற்றும் முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது. தோள்களை விரிக்கிறது. நுரையீரலைப் பலப்படுத்துகிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. உடலின் ஆற்றலை வளர்க்கிறது. இடுப்புப் பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. இடுப்புப் பகுதியில் உள்ள அதிக சதையைக் கரைக்க உதவுகிறது.

    • கர்ப்பமாக இருக்கும் போது கண்டிப்பாக இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
    • கழுத்து பகுதிக்கு சரியான இரத்த ஓட்டத்தை அளிக்கும்.

    செய்முறை:

    முதலில் கால்களை நீட்டியவாறு விரிப்பில் அமரவும். தலை, முதுகு, முதலியவை நேராக நிமிர்ந்து உட்காரவும். கைகளை தொடையோடு சேர்த்து வைத்திருக்க வேண்டும்.

    அடுத்து கைகைளை தரையில் ஊன்றி புட்டப் பகுதியை மேலே தூக்கி கால்களை கைகளின் வெளிப்புறமாக வளைத்து போட்டு கணுக்கால்களை ஒன்றோடொன்று பின்னி கொள்ள வேண்டும்.

    இப்போது உடல் பாரம் முழுவதும் தரையில் ஊன்றப்பட்டிருக்கும் கைகளின் மீதே இருக்கும். இந்த நிலையில் சில வினாடி இருந்த பின்பு கால்களை விடுவித்து அவற்றின் முழங்கால்கள் கைகளின் புஜங்களின் மீது பதித்து இருக்கும் விதத்தில் சில நிமிடங்கள் இருக்கவும்.

    பத்து முதல் 20 விநாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும்.

    பயன்கள்

    இந்த ஆசனம் தோள்களுக்கு பிரமாதமான வலிமையை கொடுத்து மூளையின் ஆற்றலை அதிகப்படுத்தும். இருதய ரோகங்களை நீக்கும். கழுத்து பகுதிக்கு சரியான இரத்த ஓட்டத்தை அளிக்கும்.

    பெண்கள் இந்த ஆசனத்தை பொதுவாக செய்து வந்தாலும் பிரசவம் எளிமையாகவும், சிக்கல் இல்லாமலும் அமையும். ஆனால் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது கண்டிப்பாக இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

    உங்கள் மணிக்கட்டு, கைகள், கைகள், மார்பு, தோள்கள் மற்றும் மேல் முதுகில் வலிமையடையும். இடுப்பு நெகிழ்வு மற்றும் தொடை எலும்புகளில் நெகிழ்வுத்தன்மை அடைகிறது. ஆழ்ந்த சுவாசத்தை பயிற்சி செய்யும் போது நீண்ட நேரம் நிலைநிறுத்துவதன் மூலம் அதிக நன்மைகளைப் பெறுவீர்கள்.

    மணிக்கட்டில் அசௌகரியம் அல்லது வலியை உணர்ந்தால், இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. உங்கள் தோள்கள், முழங்கைகள் அல்லது கீழ் முதுகில் பிரச்சனை இருந்தால், இந்த ஆசனத்தைச் செய்யக்கூடாது.

    • மனஅழுத்தம் என்பது சிக்கலான சூழல்களில் உங்கள் உடலும் மனமும் எதிர்வினையாற்றும் முறையாகும்.
    • யோகாசனம் பயில்வதால் மனதில் அமைதி ஏற்படுகிறது.

    மன அழுத்தம், தன்மை, சூழல், அளவுக்கு ஏற்ப நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளைத் தரக் கூடியது. மனிதன் தோன்றிய காலம் முதலே stress மனிதனில் இயல்பாக இருந்திருக்கும். வேட்டையாடி சமூகத்தின் சூழல் தரும் சவால்களில் மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்திருக்கும். மனிதனின் பரிணாம வளர்ச்சியோடு மன அழுத்தத்தின் தன்மையும், விளைவுகளும் மாற்றம் அடைந்து வந்திருக்கிறது.

    ஆனால், மன அழுத்தம் பல்வேறு எதிர்மறை பாதிப்புகளை அளிக்கக் கூடியதாக, சமூகத்தில் பரவலாக பலரையும் பாதிக்கக் கூடியதான ஒன்றாக ஆனது சமீபத்திய வருடங்களில்தான். 1950 மற்றும் 1960-களின் காலக்கட்டத்தில் மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் மனச்சோர்வு என்பது அபூர்வமனதாக இருந்தது போய் 21-ம் நூற்றாண்டிலே, மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு, உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் முக்கிய நோய்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

    Stress என்பது சிக்கலான சூழல்களில் உங்கள் உடலும் மனமும் எதிர்வினையாற்றும் முறையாகும். ஒரு சிக்கலான சூழலில், stress hormones வெளிவருவதால் உங்களின் இருதயத் துடிப்பும் இரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. இதன் விளைவாக உடலில் பிராணவாயு ஓட்டம் அதிகரிக்கிறது, உங்கள் நோய் எதிர்க்கும் திறன் தூண்டப்பட்டு உங்கள் உடலையும் மனதையும் சிக்கலை துணிவாக எதிர்கொள்ளவும் வெல்லவும் வைக்கிறது.

    யோகாசனம் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது. உணர்வுகளின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகளைக் கட்டுக்குள் கொண்டு வருவதோடு உணர்வுகளைக் கையாளும் திறனை மேம்படுத்துகிறது.

    யோகப்பயிற்சி செய்வதால் ஒருவர் தாம் செய்யும் வேலையில் மனதை ஈடுபடுத்துவதற்கு மனதைப் பழக்க முடியும். இதை ஆங்கிலத்தில் 'being in the moment' அல்லது 'mindfulness' என்று குறிப்பிடலாம். எப்பொழுது மனம், செய்யும் வேலையில் ஈடுபடுத்தப்படுகிறதோ, அப்பொழுதே மன அழுத்தத்தை உருவாக்கும் காரணங்களிலிருந்து மனம் விலகி விடுகிறது.

    யோகாசனம் பயில்வதால் மனதில் அமைதி ஏற்படுகிறது. சிந்தனையில் தெளிவு பிறக்கிறது.

    யோகப்பயிற்சி தூக்கமின்மையைப் போக்குகிறது. உடல், மன நலத்துக்கு தூக்கத்தின் இன்றியமையாமையைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. மன அழுத்தத்தின் விளைவுகளில் ஒன்றான தூக்கமின்மை, மன அழுத்தத்தை மேலும் அதிகப்படுத்துவதாகி விடும். தொடர்ந்து யோகாசன பயிற்சி செய்து வர தூக்கமின்மை நீங்கும் என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    யோகா மற்றும் பிராணாயாமப் பயிற்சிகள் மூச்சு விடும் முறைகளை செம்மையாக்குகிறது. தன்னிச்சையாக மூச்சு விடுவதைப் போல் அல்லாமல் பிராணாயாமத்தில் கவனத்தைக் குவித்து மூச்சை நிதானமாக இழுத்து விடும் சில பிராணாயாம வகைகள் parasympathetic nervous system-ஐ தூண்டுகின்றன. Sympathetic nervous system உடலை fight or flight mode-ற்குத் தயார் செய்கிறது என்றால் parasympathetic nervous system உடல் ஓய்வு கொள்ள உதவுகிறது. இது தூண்டப் பெறுவதன் மூலம் உடலும் மனமும் அமைதி நிலையை அடைகிறது.

    பிராணாயாம முறைகளில் ஆழ்ந்த மூச்சு விடும் பொழுது சஞ்சாரி நரம்பு (vagus nerve) தூண்டப்பெறுகிறது. சஞ்சாரி நரம்பு தூண்டப்படுவதால் மனநிலை மாற்றங்கள் (mood swings) மற்றும் மன அழுத்தம் குணமடைகின்றன.

    • தற்போது சிறு வயதிலேயே கண் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.
    • கண் பிரச்சனைக்கு யோகாவில் நிரந்தர தீர்வு உண்டு.

    யோகா என்பது பல கோணங்களில் உடலை சுருக்கி மனதையும் ஒருமுகப்படுத்தி செய்யும் பயிற்சி. இந்த பயிற்சியால் மனதையும் உடலையும் இணைத்து நீடித்த ஆரோக்கியத்தை பெறலாம்.

    யோகாவை முறையாக பயிற்சி செய்தால் இரத்த அழுத்தம் சீராகும், மன அழுத்தம் குறையும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புத் தன்மையை நீங்கும்.

    அதிக நேரம் டிவி, மெபைல் போன், கம்ப்யூட்டர் பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு கண்களில் பல கோளாறுகள் வரும். கண்களில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் யோகாவில் தீர்வு உண்டு.

    வேலை பளு காரணமாக கண்களில் எரிச்சல், வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கான யோகா பயிற்சியை இப்போது பார்க்கலாம்.

    நிமிர்ந்து நேராக உட்கார வேண்டும். வலது கையில் கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களை மடக்கி, பார்வைக்கு நேராக உயர்த்தி, கட்டைவிரலைப் பார்க்க வேண்டும். நம் பார்வை, கட்டை விரலில் நிலைத்திருக்க வேண்டும். கையை மெதுவாக வலப்புறம் நகர்த்த வேண்டும்.

    கையை நகர்த்தும்போது, விழிகள் மட்டும் கையோடு சேர்ந்து நகர வேண்டும். தலையைத் திருப்பக் கூடாது. கழுத்து, முதுகு, நேராக இருப்பது அவசியம். கட்டை விரலைத் தெளிவாகப் பார்க்கக்கூடிய தூரம் வரை மட்டுமே கையை நகர்த்தவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு, கையை அப்படியே பழைய நிலைக்குக் கொண்டுவரவும். இதை, ஐந்து முறை செய்ய வேண்டும். பயிற்சி செய்யும்போது, கண்களைச் சிமிட்டக் கூடாது. இதேபோல கை பெருவிரலை இடது பக்கம் நகர்த்தி செய்ய வேண்டும்.

    நேராக உட்கார்ந்து, மூக்கின் நுனியை உற்று நோக்கவும். கண்களோ, தலையோ வலிப்பது போன்று இருந்தால், கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டுத் தொடரலாம். பிறகு, கண்களை மூடி ஓய்வெடுக்கவும்.

    நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை 10 முதல் 20 முறை சிமிட்டவும். பிறகு, கண்களைத் திறந்து நேராகப் பார்க்கவும். இடது கண் விழியை வலது பக்கமும், வலது கண் விழியை இடது பக்கமும் கொண்டுவந்து பயிற்சி செய்யவும். அதன் பிறகு, கைகளை தேய்த்து கண்களில் வைத்துக்கொள்ளவும். மீண்டும் 10- 20 முறை கண்களைச் சிமிட்டவும்.

    • தீவிர மூட்டு வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.
    • இடுப்பு தொடங்கி கால் விரல்கள் வரை நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.

    பெயரிலேயே புரிந்திருக்கும், இது வீரம் பெறக் கூடிய ஆசனம். பயத்திற்கு எதிர்ப்பதம் வீரம். பயத்தைப் போக்கி பலமானவர்களாக நம்மை உணர வைப்பது இந்த வீராசனம்.

    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்யும் போது கணுக்கால்கள், மூட்டுகள், இடுப்பு, கழுத்து பகுதி, தோள்கள், முதுகுத்தண்டு ஆகியவை இரத்த ஓட்டத்தையும் பலத்தையும் பெறுகிறது. முக்கியமாக, நரம்பு மண்டலத்தையும் தசை இயக்கத்தையும் ஒருங்கிணைக்கிறது. இயல்பாகவே தசைகளும், நரம்புகளும் பலம் பெறும்போது பலவீனமான தசைகள் நரம்புகளுக்குள் ஒளிந்திருக்கும் பயம் தங்க இடமில்லாது போய் விடுகிறது. உடலை பலப்படுத்த கூடியது, வீரம் இயல்பாகவே வந்து விடும் என்பதாலேயே வீராசனம் என்று பெயர் பெற்றுள்ளது.

    செய்முறை

    தரையில் முட்டி போட்டு வஜ்ராசனத்தில் அமரவும். முன்னால் குனிந்து கால்களை விலக்கி வைத்து இரண்டு கால்களுக்கும் இடையில் இருக்கும் இடத்தில் அமரவும். கைகளை தொடையின் மேல் வைக்கவும். உள்ளங்கைகள் கீழ் நோக்கி இருக்க வேண்டும். மாறாக, இரண்டு கை விரல்களையும் கோர்த்து தலைக்கு மேல் உயர்த்தி உள்ளங்கைகள் மேல் நோக்கி இருக்குமாறும் வைக்கலாம்.

    20 நொடிகள் இந்த நிலையில் அம்ர்ந்த பின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். தொடர்ந்து பயிற்சி செய்யும் போது இந்த நிலையில் ஒரு நிமிடம் வரை இருக்கலாம்.

    தரையில் அமர முடியாதவர்கள், ஒரு தலையணை அல்லது yoga block ஒன்றை வைத்து அதில் அமர்ந்து பயிற்சி செய்யவும். தீவிர மூட்டு வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

    பலன்கள்

    இடுப்பு தொடங்கி கால் விரல்கள் வரை நெகிழ்வுத்தன்மையை (flexibility) அதிகரிக்கிறது. கால்களின் சோர்வை போக்குகிறது. மூச்சுக் கோளாறுகளை போக்க உதவுகிறது.

    சீரணத்தை மேம்படுத்துகிறது. மாதவிடாய் கால வலிகளை போக்குகிறது. அதிக இரத்த அழுத்தத்தை சரி செய்ய உதவுகிறது. பாதத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது.

    • முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது.
    • திக்கு வாய் பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது.

    'சிம்ஹ' என்ற வடமொழி சொல்லின் பொருள் 'சிங்கம்' என்பதாகும். இது சிம்மாசனம் என்றும் அழைக்கப்படுகிறது.

    செய்முறை

    விரிப்பில் வஜ்ஜிராசனத்தில் அமரவும். கால் முட்டியை விரித்து, உடலை சற்று முன்னால் சாய்த்து இரண்டு உள்ளங்கைகளையும் கால்களுக்கு இடையிலான இடைவெளியில் விரல்கள் உங்களை நோக்கி இருக்குமாறு வைக்கவும். முதுகை வளைத்து தலையை சற்று மேல் நோக்கி உயர்த்தவும்.

    உங்கள் புருவ மத்தியை பார்க்கவும்.

    மெதுவாக ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து, மூச்சை வெளியே விடும் போது வாயைத் திறந்து நாக்கை வெளியே நீட்டவும். மூச்சை வெளியேற்றும் போது, தொண்டையிலிருந்து 'ஆஆஹ்' என ஒலி எழுப்பவும். மூச்சை வெளியேற்றிய பின் வாயை மூடி சாதாரண மூச்சில் இருக்கவும். இது போல் 5 முறை செய்யவும்.

    சிங்காசனத்தை பத்மாசனம் முறையில் கால்களை மடக்கி, உள்ளங்கைகளை விரல்கள் முன்புறம் பார்க்குமாறு வைத்து, உடலை முன்புறமாக கால் முட்டி தரையில் இருக்கும் வண்ணம் சாய்த்தும் செய்யலாம்.

    கால் முட்டி வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும். மணிக்கட்டு பிரச்சினை உள்ளவர்கள் கைகளை கீழே வைக்காமல் வஜ்ராசனத்தில் அமர்ந்து இந்த ஆசனத்தை பயிலலாம். புருவ மத்தியை பார்க்கும்போது தலை சுற்றுவது போல் இருந்தால் நேராக பார்க்கவும்.

    பலன்கள்

    நுரையீரல் கோளாறுகளை சரி செய்து நுரையீரலை பலப்படுத்துகிறது. நோய் எதிர்க்கும் திறனை வளர்க்கிறது. முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது.

    நரம்பு மண்டலத்தை உறுதியாக்குகிறது. கண் பார்வையை கூர்மையாக்குகிறது.

    முகத்துக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. திக்கு வாய் பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது. முதுகு வலியை போக்க உதவுகிறது. தன்னம்பிக்கையை வளர்க்கிறது.

    • இடுப்புப் பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.
    • இடுப்பு, வயிறு, தொடை ஆகிய பகுதிகளில் உள்ள அதிக சதையைக் குறைக்கிறது

    செய்முறை

    விரிப்பில் குப்புறப்படுக்கவும். உள்ளங்கைகளை மார்புக்கு அருகில் தரையில் வைக்கவும். மூச்சை உள்ளிழுத்தவாறு இடுப்பு வரை உடலை உயர்த்தவும். கைகள் வளையாமல் இருக்க வேண்டும். மூச்சை வெளியேற்றவும். தோள்களை விரிக்கவும்.

    உள்ளங்கைகளைத் தரையில் நன்றாக ஊன்றியவாறு கால்களை மடித்து பாதங்களைத் தலையை நோக்கி கொண்டு வரவும். மூச்சை உள்ளிழுத்தவாறு முதுகை நன்றாகப் பின்னால் வளைத்துத் தலையை பின்புறம் சாய்த்து பாதங்களின் மேல் வைக்கவும்.

    30 வினாடிகள் இந்நிலையில் இருக்கவும். மெதுவாகக் கால்களைக் கீழிறக்கி, மேலுடலையும் கீழிறக்கி ஆரம்ப நிலைக்கு வரவும்.

    தீவிர முதுகுத்தண்டு கோளாறு, தீவிர இடுப்புப் பிரச்சினை, உயர் இரத்த அழுத்தம், வயிற்றுப் புண் அல்லது குடலிறக்கம் உள்ளவர்கள் இராஜ புஜங்காசனத்தைத் தவிர்க்கவும்.

    பலன்கள்

    முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்வதுடன் பலப்படுத்தவும் செய்கிறது. முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது. நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இருதய இயக்கத்தைச் செம்மையாக்குகிறது. நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கிறது. தோள், கழுத்து மற்றும் மணிக்கட்டைப் பலப்படுத்துகிறது.

    இடுப்புப் பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. இடுப்பு, வயிறு, தொடை ஆகிய பகுதிகளில் உள்ள அதிக சதையைக் குறைக்கிறது.

    நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. வயிற்று உள்ளுறுப்புகளின் இயக்கத்தைச் சீராக வைக்கிறது.அசதியைப் போக்குகிறது. மாதவிடாய் கோளாறுகளைச் சரி செய்கிறது.

    • தூக்கமின்மை, மலச்சிக்கல் நீங்கும்.
    • பெண்களுக்கு மிக வரப்பிரசாதமான ஆசனம்.

    செய்முறை :

    மல்லாந்து படுக்கவும். இரு கால்களையும் படத்தில் உள்ளபடி முழங்கால் அளவு மடக்கி, கைகளை தலைக்குப் பின்னால் நீட்டவும். மூச்சை இழுத்து நிறுத்தி, மார்பு, இடுப்பு பகுதிகளை நன்றாக படத்தில் உள்ளதுபோல் தூக்கவும். இப்போது சாதாரண நிலையில் சுவாசம் செய்யவும். 20 எண்ணும் வரை இருந்து கால்களை கீழே போடும்போது மூச்சை இழுத்து நிறுத்தி கால்களை நீட்டவும். ஓய்வு எடுத்த பின்னா் அடுத்த முறை செய்யவும். இவ்வாறு 3 முதல் 5 தடவைகள் செய்யலாம்.

    பலன்கள் :

    தூக்கமின்மை, மலச்சிக்கல் நீங்கும். கால்கள் வலிமை பெறும். இதய பலவீனம் அகன்றுவிடும். மூளைக்கு புத்துணா்ச்சி கிடைக்கும். தைராய்டு கோளாறுகள் சரியாகும். பெண்களுக்கு மிக வரப்பிரசாதமான ஆசனம். மார்பகங்கள் தொய்வற்று என்றும் இளமையோடு இருக்கும்.

    ×