search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106242"

    • மனம் ஒரு நிலை அடைந்து தியான சக்தி தூண்டப்படுகிறது.
    • ஜீரண சக்தி அதிகமாகிறது.

    செய்முறை :

    விரிப்பில் நேராக நிற்க வேண்டும். பார்வையை ஒரு இடத்தில் பதித்து, இடது கையை மேலே உயர்த்தி, இடது கன்னத்தை ஒட்டியவாறு வைக்க வேண்டும்.

    பின்னர் வலது காலை இடுப்பு வரை தூக்கி வலது பக்கமாக திருப்ப வேண்டும். கால் முட்டியை மடக்கக்கூடாது. வலது கையால் இடது கால் கட்டை விரலை பிடித்து கொள்ள வேண்டும்.(படத்தில் உள்ளபடி)

    இப்போது இடது கையை பக்கவாட்டில் நீட்டி சின் முத்திரை வைத்து தலையை இடது பக்கமாக திருப்பி சின் முத்திரையை பார்க்க வேண்டும். நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். முதுகை வளைக்கக்கூடாது. இந்த நிலையில் ஒவ்வொரு முறையும், 20 முதல் 30 வினாடிகள் நின்ற பிறகு பழைய நிலைக்கு வரவும். பின்னர் கால்களை மாற்றி வலது பக்கம் இவ்வாறு செய்ய வேண்டும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யலாம்.

    இடுப்பு அல்லது மூட்டுகளில் தீவிரப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும். ஒற்றைக் காலில் நிற்பது கடினமாக இருந்தால் சுவரோடு லேசாக ஒட்டியபடி நின்று இவ்வாசனத்தைப் பழகவும்.

    பயன்கள் :

    மூட்டுப்பகுதி நன்கு வலுவடைகிறது. கால்களை நீட்சியடையச் செய்வதுடன் கால் தசைகளைப் பலப்படுத்தவும் செய்கிறது.

    மனம் ஒரு நிலை அடைந்து தியான சக்தி தூண்டப்படுகிறது. ஜீரண சக்தி அதிகமாகிறது. ஜணன உறுப்புகள் நன்கு தூண்டப்பட்டு சரியாக இயங்குகிறது.

    நரம்பு சுருள் பிரச்னை சரியாகிறது. நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது.

    • தீவிரமான முட்டி வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
    • முதுகுத்தண்டை பலப்படுத்தும்.

    பரத்வாஜாசனம் என்னும் ஆசனம் பரத்வாஜ முனிவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. அமர்ந்த நிலையில் செய்யப்படும் ஆசனமான பரத்வாஜாசனம் மூலாதாரம் மற்றும் அனாகதம் ஆகிய சக்கரங்களைத் தூண்டுகிறது. மூலாதாரச் சக்கரத்தின் சீரான இயக்கம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.

    பலன்கள் :

    முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு முதுகுத்தண்டை பலப்படுத்தவும் செய்கிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. தோள், இடுப்பு, முட்டி, கணுக்கால் ஆகியவற்றைப் பலப்படுத்துகிறது.

    மேல் மற்றும் நடு முதுகு வலியைப் போக்க உதவுகிறது. சையாடிக் பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது.

    செய்முறை :

    விரிப்பில் கால்களை நீட்டி அமரவும். வலது காலை மடித்து வலது பாதத்தை வலது தொடையின் வெளிப்பக்கமாகத் தரையில் வைக்கவும். இடது காலை மடித்து இடது பாதத்தை வலது தொடையின் மீது இடுப்பின் அருகே வைக்கவும். உங்கள் மேல் உடலை இடது பக்கமாகத் திருப்பவும்.

    உங்கள் இடது கையை முதுகுக்குப் பின்னால் கொண்டு சென்று வலது பக்கமாகக் கொண்டு வந்து உங்களின் இடது கால் விரல்களைப் பற்றிக் கொள்ளவும். தலையை இடதுப்பக்கமாகத் திருப்பவும். வலது கையை இடது முட்டியின் மீது வைக்கவும்.

    30 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் காலை மாற்றி இதைத் திரும்பவும் செய்யவும்.

    குறிப்பு :

    அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் தூக்கமின்மை பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்ப்பது நல்லது.

    தீவிரமான முட்டி வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

    • ரத்த கொதிப்பு, தலைவலி இருப்பவர்கள் இந்த யோகாவை தவிர்க்கவும்.
    • அடிவயிற்றில் உள்ள உறுப்புக்களை செயல்படவைக்கும்

    இடுப்பு வலிக்கு தீர்வுகள் நிறைய இருந்தாலும், இடுப்பும், தொடையும் இணையும் கவட்டிப் பகுதியில் வலியை போக்க யோகாவில் ஒரு ஆசனம் இருக்கிறது. அது பரிவ்ரத பார்ச்வ கோணாசனா என்பதாகும். இந்த ஆசனத்தை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

    முதலில் தடாசனத்தில் நிற்க வேண்டும். அதாவது நேராக நிறக் வேண்டும். மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்தபடியே இரண்டு கால்களையும் அகற்றி நில்லுங்கள். கைகள் நேராக உடலோடு சேர்ந்து இருக்க வேண்டும். பின்னர் மூச்சை விட்டபடி, உடலை வலது பக்கம் திருப்புங்கள்.

    இடது கால் நேராக நீட்டியபடி இருக்க வேண்டும். இப்போது வலது கையை மேலே தலைக்கு மேலே உயர்த்துங்கள். தலையை மேலே பார்த்தபடி வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஆசனத்தில் அரை நிமிடம் இருக்க வேண்டும். பின்னர் மெதுவாய் கைகளையும், கால்களையும் தளர்த்தி, இயல்பு நிலைக்கு வாருங்கள். இதே போல் அடுத்த காலுக்கும் செய்யவும்.

    பலன்கள் : இடுப்பு மற்றும் தொடைப் பகுதியில் நெகிழ்வுத் தன்மையை தரும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்க வைக்கும். அடிவயிற்றில் உள்ள உறுப்புக்களை செயல்படவைக்கும்

    குறிப்பு : ரத்த கொதிப்பு, தூக்கமின்மை தலைவலி இருப்பவர்கள் இந்த யோகாவை தவிர்க்கவும்.

    • தொப்பையை குறைப்பதோடு தசைகளுக்கு அதிக வலிமையை இது தருகிறது.
    • வயிற்றில் உள்ள தசைகளும் உறுதி பெறுகிறது.

    தொப்பையை குறைப்பதில் இந்த முறை முதன்மையான பங்கு வகிக்கிறது. தொப்பையை குறைப்பதோடு தசைகளுக்கு அதிக வலிமையை இது தருகிறது. அத்துடன் வயிற்றில் உள்ள தசைகளும் உறுதி பெறுகிறது. கிட்டத்தட்ட "புஸ் அப்ஸ்" போன்ற நிலையில் தான் இதை நீங்கள் செய்ய வேண்டும்.

    செய்முறை :

    முதலில் விரிப்பில் வஜ்ராசனத்தில் அமரவும் (தொழுகை செய்தல் போல). இது ஆரம்ப நிலை. மெதுவாக முழங்காலிடவும். உள்ளங்கையைத் தரையில் பதித்து முன்நோக்கி உடலை நகர்த்தவும். புட்டத்தை உயர்த்தி முழங்கால் மூட்டை நேர் செய்யவும். சுவாசத்தை உள்ளிழுத்து கைகளை முழுவதுமாக நேர் செய்யவும்.

    தலை முதல் குதிங்கால் வரை உடல் ஒரே நேர் கோட்டில் இருத்தல் அவசியம். கால் விரல்களை நன்கு தரையில் ஊன்றி கொள்ளவும்.சுவாசத்தை உள்ளடக்கித் தலையை உயர்த்தி நேராகப் பார்க்கவும். இது இறுதி நிலை. 15 விநாடிகள் இதில் நிற்கவும். சுவாசத்தை மெதுவாக வெளியேற்றி ஆரம்ப நிலைக்கு வரவும். 5 - 7 முறைகள் இப்பயிற்சியைச் செய்யலாம்.

    பயன்கள் :

    நமது நரம்பு மண்டலத்தை சீர்படுத்தி சமன் செய்கிறது.

    கை, தோள்பட்டை மற்றும் பின்முதுகுத்தசைகளை வலுவடையச் செய்கிறது.

    Core muscle என சொல்லப்படும் முக்கிய தசைகளை வலுவடையச் செய்கிறது.

    வயிற்று தசைகள் இறுக்கப் பெறுவதால் தொப்பை குறைய உதவுகிறது.

    • இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டை வலிமையாக்கும்.
    • சிறுநீரகத்தை தூண்டச் செய்து கழிவுநீரை வெளியேற்ற உதவுகிறது.

    இக்காலக்கட்த்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பாதிக்கப்படுவது இரத்தசோகை. அதுமட்டுமின்றி பெண்கள் கர்ப்பப்பை கோளாறுகளால் குழந்தையின்மையை அடைகின்றன. இக்குறைகளைத் தீர்க்க இக்கூர்மாசனத்தை தினமுமம் செய்து பயன் பெறுங்கள்..

    பெயர்க்காரணம்: கூர்மம் என்றால் ஆமை. இந்த ஆசனம் செய்யும் போது நம் உடலானது ஆமையின் வடிவத்தில் இருப்பதால் இதற்கு கூர்மாசனம் என்ற பெயர் வந்தது.

    செய்முறை

    விரிப்பின் மீது அமர்ந்த நிலையில் முழங்காலை மடித்து இருகால்களின் அடிப்பாகம், அதாவது பாதங்களை ஒன்றுக்கொன்று எதிராக சுமார் பத்து அங்குல இடைவெளி இருக்கும்படி கொண்டு வரவும். அந்த இடைவெளியில் நெற்றியில் தரையில் பதித்தபடி, இரு கைகளையும் முதுகின் பின்புறமாக (படத்தில் உள்ளபடி) பிடிக்க வேண்டும். முதலில் அவ்வாறு பிடிக்க வராது. பின்னர் நன்றாக பழகிய பின்னர் சுலபமாகும். இந்த நிலையில் 15 வினாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். குனியும்போது முதுகுத் தண்டின் கீழே (நுனி பாகத்தை )யும், நிமிரும்போது புருவ மத்தியிலும் நினைவை செலுத்தவும். மூன்னு முறை இந்த ஆசனத்தை இரண்டு நிமிட இடைவெளி விட்டு செய்யவும்..

    பலன்கள்

    இந்த யோகாசனம் செய்வதால் மன அமைதி கிடைக்கும். இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டு எலும்பு, கழுத்தெலும்பு சமந்தப் பட்ட வலி நீங்கும். ரத்தத்தில் சிகப்பணுக்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் குறைந்து குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்யும்..

    உண்ட உணவுகளை எளிதில் செரிமானம் அடையச்செய்து செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் இருக்க செய்கிறது. சுவாசப்பாதையை சீர் செய்வதுடன் மூக்கடைப்பு, நெஞ்சு சளி, இருமல், மூச்சுவிட சிரமம் ஏற்படுதல், இவற்றை சரி செய்கிறது.

    தண்டுவடத்திற்கும், முள்ளந்தண்டு எலும்புகளுக்கும் வன்மையை அளிக்கிறது. இதயத்திற்கு செல்லும் இரத்தத்தை அதிகரித்து இதயத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்க செய்கிறது.

    நுரையீரலுக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கச்செய்கிறது. சிறுநீரகத்தை தூண்டச் செய்து கழிவுநீரை வெளியேற்ற உதவுகிறது. பெண்களின் இடுப்பு பகுதி தசைகளை வன்மையடையச் செய்கிறது. கருப்பையை தூண்டி கருப்பை சம்பந்தமான நோய்களை சரி செய்கிறது. நரம்பு மண்டலத்தை தூண்டச்செய்கிறது. சுக மகப்பேறு அடைவதற்கு உதவி புரிகிறது.

    • கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
    • இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.

    வடமொழியில் 'மாலா' என்றால் மாலை, 'நமஸ்காரம்' என்றால் வணக்கம். அதாவது இந்த ஆசனத்தை செய்யும் போது உடல் மாலை வடிவில் இருப்பதால் மாலாசனம் என்றும் இதில் வணக்கம் சொல்வதால் நமஸ்காராசனம் எனவும் அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் Garland Pose மற்றும் Squat Pose என்றும் அழைக்கப்படுகிறது.

    மாலாசனம் அடி முதுகு, இடுப்பு தொடங்கி பாதம் வரை நீட்சியடைய (stretch) வைக்கிறது. மனதை ஒருமுகப்படுத்தும் ஆசனமான இது தியானத்திற்கு மிகவும் ஏற்றதாகும். இது மனதை அமைதிப்படுத்துவதுடன், கவனத்தை ஒருமுகப்படுத்தும் வலிமையும் கொண்டது.

    பலன்கள்

    இடுப்பை வலுப்படுத்துவதுடன் இடுப்பின் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. தொடைகளை வலுப்படுத்துகிறது.

    தொடர்ந்து பயிலும்போது சுகப்பிரசவம் ஆக உதவுகிறது. அடிவயிறு மற்றும் இடுப்புப் பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

    கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

    செய்முறை

    விரிப்பில் தாடாசனத்தில் நிற்கவும். கால்களுக்கு இடையில் சுமார் இரண்டு அடி இடைவெளி விட்டு நிற்கவும். கால் முட்டியை மடித்து உட்காருவது போல் இடுப்பைத் தாழ்த்தவும். தொடைகளை விரிக்கவும். தொடைகளுக்கு இடையில் உங்களின் மேல் உடலை விட அதிக அகலத்தில் இடைவெளி இருக்க வேண்டும். மேலுடலைச் சற்று முன்புறமாகக் கொண்டு வரவும்.

    கைகளை மடித்து இரண்டு உள்ளங்கைகளையும் வணக்கம் சொல்லும் முறையில் சேர்த்து வைக்கவும். மேற்கைகள் தொடைகளின் உள்பக்கம் இருக்குமாறு வைக்கவும். பாதங்கள் தரையில் இருக்க வேண்டும். 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும். பயிற்சி செய்யச் செய்ய நேரத்தை அதிகரித்து ஒன்றிலிருந்து இரண்டு நிமிடங்கள் வரை இந்த ஆசனத்தில் இருக்கவும்.

    தீவிர அடி முதுகு வலி மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும்.

    • மூட்டு வலி, முதுகு வலி உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
    • வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடு தூண்டப்படும்.

    ஆசனத்தின் பெயரை சொல்வதுதான் சிரமமாக இருக்கிறதே தவிர, ஆசனம் ஓரளவு ஈஸிதான்.

    விரிப்பில் நிமிர்ந்து உட்கார்ந்து காலை நீட்டிக் கொள்ளுங்கள். வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும். வலது பாதம் உடம்பை ஒட்டி இருக்கட்டும். இடது கால் நேராக நீட்டியும், விரல்கள் மேல் நோக்கியும் இருக்கட்டும்.

    வலது கையை பின்பக்கமாக கொண்டு சென்று, இடுப்பை ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மடித்து வைத்திருக்கும் வலது காலின் கட்டை விரல் அந்த ஏரியாவில்தான் இருக்கும். அதை வலது கையால் பிடிக்க முயற்சியுங்கள். இடுப்பில் இருந்து முன்னோக்கி குனிந்து இடது கையால் இடது காலை பிடிக்கவும். நெற்றியால் கால் முட்டியை தொடவும். சுவாசம் சீராக இருக்கட்டும். இதே நிலையில் 1-5 எண்ணவும்.

    அடுத்து, கால்களை மாற்றிக் கொண்டு, இடது பக்கம் செய்யவும்.

    மீண்டும், வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும். இடது கால் நீட்டி இருக்கட்டும். இடுப்பில் இருந்து குனிந்து, இரு கைகளாலும் இடது காலை தொட முயற்சிக்கவும். 1-10 எண்ணவும். அடுத்து, கால்களை மாற்றி இதேபோல செய்யவும்.

    இந்த ஆசனத்தால் கால் முட்டி பகுதிகள் நன்கு நெகிழ்வுத் தன்மை பெறும். வயிறு பகுதி நன்கு அழுத்தப்படுவதால், உள் உறுப்புகளின் செயல்பாடு தூண்டப்படும். அதிக மூட்டு வலி, முதுகு வலி, ஸ்லிப் டிஸ்க் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

    • செரிமானம் சீராகிறது.
    • முதுகுவலி குறைகிறது.

    விரிப்பில் கால்களை நீட்டி அமர்ந்து நன்கு ஒரு முறை மூச்சை இழுத்து விடவும். வலது கையால் இடது கால் கட்டை விரலை பிடிக்கவும். இடது கையை தலைக்கு மேல் உயர்த்தவும். கை, காதை ஒட்டி இருக்கட்டும். மெல்ல இடது பக்கம் திரும்பியவாறு முன்னோக்கி குனியவும். உயர்த்திய இடது கையாலும் இடது கால் கட்டை விரலை பிடிக்க முயற்சிக்கவும். இதே நிலையில் 1-10 எண்ணவும். மூச்சை இழுத்தபடியே கைகளை விடுவித்துக் கொண்டு சமநிலைக்கு வரவும்.

    அடுத்து, அதேபோல இடது கையால் வலது கால் கட்டை விரலை பிடிக்கவும். வலது கையை உயர்த்தி, வலது பக்கம் திரும்பி, முன்னோக்கி குனியவும். வலது கையாலும் வலது கால் கட்டை விரலை பிடிக்க முயற்சிக்கவும். 1-10 எண்ணவும். மூச்சை இழுத்தபடியே சமநிலைக்கு வரவும்.

    இந்த ஆசனத்தின் மூலம் வயிற்று பகுதியில் இருக்கும் அனைத்து உள் உறுப்புகளின் இயக்கமும் சீரடைகின்றன. செரிமானம் சீராகிறது. முதுகுத் தண்டு பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், முதுகுவலி குறைகிறது. இடுப்பு பகுதி இழுக்கப்பட்டு, ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், இனப்பெருக்க சுரப்பிகளின் இயக்கம் சீரடைந்து, எதிர்ப்பு சக்தி, உயிர்ச் சக்தி அதிகரிக்கிறது.

    • இந்த ஆசனத்தைச் செய்யும்போது இயல்பாக மூச்சு விடலாம்.
    • மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

    பெண்களுக்கு மிகவும் ஏற்ற ஆசனம். தாய்மை அடைந்த பிறகு நிறைய பெண்கள் வாயு பிரச்சனையால் அவதிப்படுவார்கள். சிசேரியன் மூலமாகவோ அல்லது நார்மல் டெலிவரியாகவோ குழந்தை பெற்றாலும் ஒரு சில பெண்களுக்கு கர்ப்பப்பை சுருங்காமல் வாயுத்தொல்லை இருக்கும். ஸ்காவ்டிங் (Squatting) நிலையில் உட்கார்ந்து 2 கைகளால் பாதத்தைப் பிடித்துக்கொள்ள வேண்டும்.

    இந்த ஆசனத்தைச் செய்யும்போது இயல்பாக மூச்சு விடலாம். உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தக்குழாயில் அடைப்பு உள்ளவர்கள் மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும். முதுகுத் தண்டுவடத்தைச் சீராக வைக்க உதவும். இடுப்பு பகுதியில் உள்ள உறுப்புக்களை வலிமைப்படுத்தும்.

    • தொப்பையைக் குறைப்பதற்கும் இந்த ஆசனம் உதவும்.
    • இடுப்பு தசைப்பகுதியை வலிமைப்படுத்தும்.

    அந்தக்காலத்தில், வீட்டில் பாட்டி-தாத்தா போன்ற பெரியவர்கள் துணி துவைத்தல், மாவு ஆட்டுதல், மரம் வெட்டுதல், வீடு பெருக்குதல் போன்ற ஒவ்வொரு வேலையையும் உடற்பயிற்சியாகவே பார்த்தார்கள். எனவேதான், நமது பாட்டிமார்கள் பத்து குழந்தைகள் பெற்றாலும், எந்த வயதிலும் முழு ஆரோக்கியத்துடன் இருந்தார்கள். சக்கி சாலன் ஆசனமும் அதைப் போன்றதுதான்.உரலில் மாவு ஆட்டுவதைப் போன்றுதான் இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டும். தரையில் மென்மையான துணியொன்றை விரித்து அதன்மேல் 2 கால்களையும் நன்றாக விரித்து உட்கார வேண்டும். அதன்பிறகு, 2 கைகளையும் நன்றாக நீட்டி (கைமுட்டி மடங்காமல்) ஒன்றாகச் சேர்த்து பிடிக்கவும்.

    பின்னர், மாவு ஆட்டுவதுபோல், இடுப்பு பகுதியில் இருந்து 2 கைகளையும் தொடைப்பகுதி வரைக்கும் 5 தடவை சுற்ற வேண்டும். பின்னர், எதிர் திசையில் 5 தடவை அதே மாதிரி சுற்ற வேண்டும். மூச்சை நன்றாக உள்ளிழுத்துக்கொண்டு, பின்புறமாக கைகளைக் கொண்டு போக வேண்டும். முன்புறமாக கைகளைக் கொண்டு வரும்போது மூச்சை மெதுவாக வெளியே விட வேண்டும். இடுப்பு தசைகள் (Pavic muslces) நன்றாக இயங்க உதவும் இந்த ஆசனம் மாதவிடாய் மற்றும் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தவும் பயன்படுகின்றது. தாய்மை அடைந்த பெண்கள் முதல் 3 மாதம் இந்த ஆசனத்தைத் தாராளமாகச் செய்யலாம். குழந்தை பெற்ற பிறகு இடுப்பு தசைப்பகுதியை வலிமைப்படுத்தவும், தொப்பையைக் குறைப்பதற்கும் இந்த ஆசனம் உதவும்.

    • நமஸ்காரம் செய்வது என்பதும் இந்தக் கலாச்சாரத்தில் கற்றுத் தரப்பட்டிருக்கிறது.
    • நமஸ்காரம் என்பதும் ஒரு முத்திரைதான்.

    மற்றவர்களைப் பார்த்தால் நாம் நமஸ்காரம் செய்வதுகூட நாம் வளர்வதற்கான ஒரு வழிதான். உடல் உறுப்புகள் ஒவ்வொன்றையும் நம் உள்வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை நாம் ஒரு கலாச்சாரமாகவே அறிந்து வந்திருக்கிறோம். அதன் ஒரு பகுதிதான் யோக ஆசனங்கள்.

    இந்த உடல் நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும். நாம் சொல்வதை இந்த உடல் கேட்கவேண்டும். அது சொல்வதுபோல நாம் கேட்கக்கூடாது. அதற்காகத்தான் அத்தனை ஆசனப் பயிற்சிகளும். உடல் உறுப்புகள் நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது எந்த ஒரு செயலிலும் நாம் நினைப்பதுபோல் அவை இயங்கும்.

    கைகளை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும், கால்களை எப்படி வைத்துக் கொள்ளவேண்டும், ஒரு பொருளை எப்படி வாங்குவது, எப்படிக் கொடுப்பது, எப்படி சாப்பிடுவது என்று அனைத்தையுமே, ஒரு விஞ்ஞானமாக, ஒரு மனிதன் விதையாகவே இருந்துவிடாமல் எப்படியாவது மலர வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றுதான் நமஸ்காரமும்.

    உங்கள் நாக்கு பேசுவதைக் காட்டிலும் உங்கள் கைகள் அதிகம் பேசி விடுகின்றன. ஒருவரை, நெஞ்சுக்கு நேரே இரு கை குவித்து நமஸ்காரம் செய்து வரவேற்கும்போது, உங்களுக்குள் எந்த மாதிரி உணர்வு ஏற்படுகிறது என்பதை கவனியுங்கள். இதையே ஒரு கை மட்டும் பயன்படுத்தியோ அல்லது வேறு மாதிரி கைகளை வைத்தோ வணங்கி அப்போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வை கவனியுங்கள். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அப்போது உங்களால் நன்கு புரிந்துகொள்ள முடியும்.

    கை குவித்து செய்யும் நமஸ்காரத்தையே முகத்திற்கு நேராக அல்லது தலைக்கு மேலே வைத்து என்று செய்யும் போதும்கூட வெவ்வேறு விதமான உணர்வுகள் உங்களுக்குள் ஏற்படுவதை காணலாம். எங்கு எப்படி நமஸ்காரம் செய்வது என்பதும் இந்தக் கலாச்சாரத்தில் கற்றுத் தரப்பட்டிருக்கிறது.

    நமஸ்காரம் வெவ்வேறு விதமாக செய்யும்போது நுரையீலின் வெவ்வேறு பகுதிகள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் உள்ளங்கைகளில்தான் நரம்புகள் முடிகின்றன. எனவே இரு உள்ளங்கைகளையும் குவித்து வணங்கும்போது உங்கள் சக்திநிலை ஒன்றிணைந்து செயல்படுகிறது. யோகாவில் கைகளில் வைக்கும் முத்திரைகளுக்கு என முழு விஞ்ஞானமே இருக்கிறது.

    நமஸ்காரம் என்பதும் ஒரு முத்திரைதான். கைகளைக் குவித்து வணங்கும்போது, முக்கியமாக எதிரில் நிற்பவரைப் பற்றிய உங்கள் விருப்பு-வெறுப்புகள் மறைகின்றன. அப்போது அவருக்குள் இருக்கும் தெய்வீகத்தையும் உங்களால் உணர முடிவதால் உங்களால் உண்மையாகவே வணங்க முடிகிறது.

    உடல் என்பது மிகவும் சூட்சுமமான சூப்பர் கம்ப்யூட்டர். ஆனால் இதை முறையாக எப்படி உபயோகப்படுத்துவது என்பதை மறந்து வருகிறோம். நீங்கள் ஓரிடத்திற்கு தனியாக சென்று நெஞ்சுக்கு நேரே குவித்து வெறுமனே கும்பிட்டு பாருங்கள். கடவுளைக்கூட நினைக்க வேண்டாம். நீங்கள் நாத்திகராகக் கூட இருங்கள்.

    ஆனாலும் இதை 10 நிமிடம் தனியாக உட்கார்ந்து செய்து பாருங்கள். உங்கள் உடல்நிலை மற்றும் உள்நிலையில் மாறுதல்களைக் கவனிக்க முடியும். இவை எல்லாமே அறிவுப்பூர்வமாக உணர்ந்த ஒரு விஞ்ஞானமாக நமது கலாச்சாரத்தில் இருந்தது. ஆனால், இப்போது மேற்கத்திய நாட்டிலிருந்து வருவதை மட்டுமே நாம் விஞ்ஞானமாக அங்கீகரிக்கிறோம்.

    • கைகள், கால் மூட்டியை வலுவாக்கும்.
    • மனதிற்கும் அமைதி கிடைக்கும்.

    செய்முறை

    விரிப்பில் பத்மாசனத்தில் அமரவும். பின்னர் மெதுவாக கால்களை பிரிக்காமல் முன்னால் குப்புற படுக்கவும். இப்போது உங்கள் கால்கள் பத்மாசன நிலையில் இருக்கும். தடையை தரையில் படும்படி வைக்கவும். இந்த நிலையில் கைகளை முதுகுக்கு பின்னால் கொண்டு சென்று நமஸ்காரம் போஸ் செய்யவும். இந்த நிலையில் சில நிமிடங்கள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்ய வேண்டும். இயல்பான சுவாசத்தில் பயிற்சி செய்யவும்.

    பலன்கள்

    இந்த ஆசனம் செய்வதால் உடலுக்கும், மனதிற்கும் அமைதி கிடைக்கும். அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் உணர்ச்சி சமநிலையைத் தூண்டுவதால், இது ஒரு தளர்வு அல்லது தியான போஸாகப் பயன்படுத்தப்படலாம்.

    இந்த ஆசனம் முதுகெலும்பின் குறைபாடுகளை சரிசெய்கிறது. கைகள், கால் மூட்டியை வலுவாக்கும்.

    கடுமையான கணுக்கால், முழங்கால், இடுப்பு அல்லது கீழ் முதுகில் காயம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

    ×