search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106327"

    கோவிலில் சிறப்பு பூஜைகள் என்ற பெயரில் பக்தர்களிடம் பணம் பறிக்கும் செயலில் பூசாரிகள் ஈடுபடக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. #MaduraiHighCourt
    மதுரை:

    ராஜபாளையத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ.250, ரூ.150, ரூ.100 கட்டண தரிசன முறை அமலில் உள்ளது. இந்த கட்டண டிக்கெட் வாங்கும் பக்தர்கள் சாமியை அருகில் நின்று தரிசிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

    கோவிலுக்கு சம்பந்தமே இல்லாத பலர் கோவில் முன்பகுதியில் நின்று கொண்டு பக்தர்களை சாமி அருகே அழைத்துச் சென்று தரிசிக்க வைப்பதாக கூறி டிக்கெட் வாங்காமல் கோவிலுக்குள் அழைத்து செல்கின்றனர்.

    அதே நேரத்தில் டிக்கெட்டுக்கு உரிய கட்டணத்தை வசூலித்துக்கொள்கின்றனர். இப்பணத்தை கோவில் நிர்வாகத்திடம் செலுத்துவதில்லை.

    இவ்வாறு கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. எனவே திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்தை முறைப்படுத்த தனி குழு அமைக்கவும், கோவிலுக்கு சம்பந்தம் இல்லாத அர்ச்சகர்கள், பக்தர்களிடம் பணம் வசூலிக்க தடை விதித்தும், கோவில் பணியாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கவும், கோவிலில் அறநிலையத்துறை ஊழியர்கள் வருகை பதிவுக்கு பயோமெட்ரிக் கருவியை பொருத்தவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதிகள் எம்.வி. முரளிதரன், டி. கிருஷ்ணவள்ளி ஆகியோர் ஏற்கனவே விசாரித்து தீர்ப்பினை ஒத்திவைத்தனர்.

    இந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் இன்று பிறப்பித்து உள்ளனர்.

    கோவிலில் சட்டபூர்வமாக நியமிக்கப்பட்ட பூசாரிகளால் மட்டுமே பூஜைகள் செய்யப்படுகின்றன என்பதை இந்து சமய அறநிலையத்துறை கமி‌ஷனர் மற்றும் கோவில் செயல் அலுவலர் உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து பக்தர்களையும் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி ஒரே விதமாக நடத்த வேண்டும்.

    கோவில் ஊழியர்கள் மற்றும் பூசாரிகள் வருகைக்காக பயோமெட்ரிக் பதிவு கருவியை பொருத்த வேண்டும். பக்தர்களிடம் சிறப்பு பூஜைகள் என்ற பெயரில் பணம் பறிக்கும் செயலில் பூசாரிகள் ஈடுபடக்கூடாது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை கமி‌ஷனர், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் வாரத்திற்கு ஒருமுறை திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    சட்டபூர்வமாக நியமிக்கப்படாத பூசாரிகள் குறித்த விழிப்புணர்வு பலகைகள் வைக்க வேண்டும். பக்தர்களின் வசதிக்காக கழிப்பறை வசதி, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். இந்த உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்து இந்து சமய அறநிலையத்துறை கமி‌ஷனர் மற்றும் கோவில் அதிகாரி ஆகியோர் வருகிற ஜூலை மாதம் 5-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர். #MaduraiHighCourt
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், முகூர்த்த நாள் என்பதாலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்கின்றனர். கோவிலில் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். கோடை விடுமுறையில் ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், முகூர்த்த நாள் என்பதாலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவிலில் கட்டண தரிசன வழி மற்றும் பொது தரிசன வழியாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் சார்பில் குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்தது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
    நாள்தோறும் 1 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதால் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்து திருப்பதி கோவிலுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. #Tirupati #GSTTAX
    திருமலை:

    திருப்பதி கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் குறைந்த விலையில் வாடகை அறை, மானிய விலையில் லட்டு, அன்னதானம் ஆகியவற்றை வழங்கி வருகிறது. சேவை வரியில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு விலக்கு இருந்து.

    இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. வரியில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட வில்லை. திருப்பதி தேவஸ்தானம் ஜி.எஸ்.டி.யில் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் மத்திய அரசு வரிவிலக்கு அளிக்க மறுத்தது.

    இதனால் திருப்பதியில் தங்கும் விடுதி, திருமண மண்டபத்திற்குரிய கட்டணம் மற்றும் தங்க டாலர் விலை உயர்த்தப்பட்டது. மேலும் சிபாரிசு கடிதம் மூலம் வழங்கப்படும் லட்டு, வடை விலையும் அதிகரித்தது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால், திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.


    இந்த நிலையில் பஞ்சாப் அமிர்தசரசில் உள்ள பொற் கோவிலுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு பக்தர்களுக்கு இலவசமாக ரொட்டி வழங்கப்படுகிறது. இதனை காரணம் காட்டி மத்திய அரசு ஜி.எஸ்.டி.யில் இருந்து பொற்கோவிலுக்கு வரிவிலக்கு அளித்துள்ளது.

    இதனை மேற்கோள் காட்டி திருப்பதி தேவஸ்தானம் திருப்பதியிலும் நாள்தோறும் 1 லட்சம் பக்தர்களுக்கு மேல் அன்னதானம் வழங்குகின்றோம். இதனால் எங்களுக்கும் ஜி.எஸ்.டியில் இருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

    இந்த கோரிக்கையை ஏற்று திருப்பதிக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரி விலக்கு அளிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அன்னதான திட்டத்திற்கு வாங்கப்படும் மூலப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதன் மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.30 கோடி வரை வரிவிலக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Tirupati #TirupatiTemple #GST #GSTTAX #Food
    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், முகூர்த்த நாள் என்பதாலும், மேலும் பிரதோஷம் என்பதாலும் திருவண்ணாமலை கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் நகரின் மையப் பகுதியில் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.

    கோவிலில் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், முகூர்த்த நாள் என்பதாலும், மேலும் பிரதோஷம் என்பதாலும் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோவிலில் பக்தர்கள் கட்டண தரிசன வழி மற்றும் பொது தரிசன வழியாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்திருந்தனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
    விடுமுறை தினத்தையொட்டி பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதன் காரணமாக சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி விளங்குகிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். திருவிழா காலங்கள் என்றில்லாமல் ஆண்டு முழுவதும் பழனி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். அதிலும் விடுமுறை தினங்களில் வழக்கத்தைவிட இருமடங்கு பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள்.

    அந்த வகையில் விடுமுறை தினம் மற்றும் வைகாசி விசாக திருவிழா திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றதையொட்டி நேற்று மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் வருகை இருந்ததால் படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம் ஆகியவற்றில் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    பக்தர்கள் வருகை அதிகரித்ததால் மலைக்கோவில் வெளிப்பிரகாரம், பொது, கட்டணம், சிறப்பு தரிசன வழிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. சுமார் 3 மணி நேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சாமி தரிசனம் செய்தவர்கள் மின் இழுவை ரெயில் மற்றும் ரோப்காருக்காக காத்திருக்காமல் படிப்பாதை வழியாக இறங்கிச்செல்லவும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது. 
    கோடை விடுமுறையையொட்டி 2 நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    கோடை விடுமுறையையொட்டி 2 நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருப்பதியில் எங்குப் பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காட்சி அளிக்கின்றன. டைம் ஸ்லாட் கார்டு பெற்ற பக்தர்கள் திருமலையில் உள்ள கடைவீதிகளில் சுற்றித்திரிகிறார்கள்.

    பக்தர்களுக்கு தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்காததால் ஏராளமான பக்தர்கள் நாராயணகிரி பூங்காவில் தங்கி ஓய்வெடுக்கிறார்கள். கடந்த 2001 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் திருமலையில் இதேபோல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது இலவச தரிசனத்துக்கு 72 மணிநேரம் ஆனது. அதேபோல் தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இலவச தரிசன பக்தர்களுக்கு 58 மணிநேரம் ஆகிறது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 30 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு காத்திருக்கிறார்கள்.

    திவ்ய தரிசனம், 300 ரூபாய் டிக்கெட் பக்தர்கள், இலவச தரிசன பக்தர்கள் ஆகியோர் தனித்தனி கவுண்ட்டர்களில் சென்று ஒரு இடத்தில் ஒன்றாக சேருகின்றனர். இதனால், தரிசன கவுண்ட்டர்களில் நெரிசல் ஏற்படுகிறது. ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் 3 நாட்கள் காத்திருக்க வேண்டி வருவதால் தேவஸ்தானம் திருமலையில் உள்ள நேர ஒதுக்கீடு கவுன்ட்டர்களை நேற்று முதல் வரும் 2-ந் தேதி வரை தற்காலிகமாக மூடியுள்ளது.

    பக்தர்களின் வருகை குறைந்தவுடன் விரைவில் அவை மீண்டும் திறக்கப்படும். திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்கள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 78 ஆயிரத்து 64 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். 
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், முகூர்த்த நாள் என்பதாலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் நகரின் மையப் பகுதியில் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.

    கோவிலில் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், முகூர்த்த நாள் என்பதாலும் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோவிலில் பக்தர்கள் கட்டண தரிசன வழி மற்றும் பொது தரிசன வழியாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தது. 
    உத்தரகாண்டில் உள்ள பூர்ணாகிரி ஆலயத்திற்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது லாரி மோதியதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து உத்தரகாண்ட் மாநிலம் பூர்ணாகிரி ஆலயத்துக்கு, சிறுவர்கள், இளைஞர்கள் என பலர் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இன்று அதிகாலை பாரியெல்லி பகுதியில் கட்டுப்பாடின்றி ஓடிய லாரி, பாதயாத்திரை சென்றவர்கள் மீது மோதியதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 3 பேரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய ஓட்டுநரை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #devoteeskilled
    வைகாசி மாத பிறப்பையொட்டி அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனிக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விசேஷ மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

    இந்தநிலையில் நேற்று, கார்த்திகை விழா, வைகாசி மாத பிறப்பு மற்றும் அமாவாசை போன்றவை ஒரே நாளில் வந்தது. இதையொட்டி சுவாமிக்கு 16 வகை அபிஷேகங்களும், சிறப்பு யாகமும் நடைபெற்றது. மேலும் மலைக்கோவிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    இதற்கிடையே சுவாமி தரிசனம் செய்ய, பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். மின்இழுவை ரெயில்நிலையம், ரோப் கார் உள்ளிட்டவைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 
    தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலங்களில் ஒன்றான உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இங்கு அதிகளவில் வெளிநாட்டு பக்தர்களும் வந்து செல்கின்றனர்.

    இக்கோவிலின் சிறப்பு அம்சமாக கார்த்திகை தீபத்திருவிழா அன்று திருவண்ணாமலை நகரமே மக்கள் வெள்ளத்தில் மிதக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்வார்கள். திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலையை பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    மேலும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது கோடை காலம் என்பதால் பலர் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. எனினும் நேற்று விடுமுறை தினம் என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அவர்கள் கட்டண தரிசனம் வழி மற்றும் பொது தரிசன வழியாக வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பள்ளி விடுமுறை என்பதால் பலர் தங்களது குழந்தைகளையும் திருவண்ணாமலை கோவிலுக்கு அழைத்து வந்திருந்தனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
    ×