search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவோணம்"

    திருவோணம் அருகே கூலி தொழிலாளிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே எடையாத்தியை சேர்ந்தவர்கள் பழனிவேல், கருப்பையன், செவ்வந்தி. இவர்கள் 3 பேரும் கூலித் தொழிலாளர்கள். அதே பகுதியை சேர்ந்தவர்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல் மற்றும் அண்ணாதுரை, அண்ணாமலை. இவர்கள் கூலித் தொழிலாளர்களான பழனிவேல் உள்ளிட்ட 3 பேரின் இடத்தை அபகரிக்கும் நோக்கத்தில் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் முத்துவேல், அண்ணாமலை, அண்ணாதுரை ஆகிய 3 பேரும் நேற்று பழனிவேல், கருப்பையன், செவ்வந்தி ஆகியோரது வீட்டுக்கு சென்று வீட்டை காலி செய்யுமாறு கூறி கற்களால் அவர்களை தாக்கியுள்ளனர். மேலும் 3 பேரின் வீடுகளையும் அடித்து சேதப்படுத்தியதோடு வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி உள்ளனர். கற்கள் வீசி தாக்கியதில் காயமடைந்த பழனிவேலை அப்பகுதியினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் பற்றி பழனிவேல் உள்ளிட்ட 3 பேரும் வாட்டாத்திக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் வழக்குப்பதிவு செய்து கூலித் தொழிலாளிகளை தாக்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 3 பேரையும் தேடிவருகின்றனர்.

    திருவோணம் அருகே வாலிபரை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவோணம்:

    தஞ்சை, கரம்பக்குடி அருகே உள்ள தென்நகரைச் சேர்ந்தவர் முத்து (வயது 37). டெய்லர். இவரது மனைவி விஜயலட்சுமி.

    முத்து நேற்று கரம்பக்குடியில் இருந்து ஊரணிபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருவோணம் அருகே பணிகொண்டான் விடுதி பிரிவு சாலையில் சென்றபோது கையில் முறுக்கு கம்பியுடன் வாலிபர் ஒருவர் முத்துவை வழிமறித்தார். இதை பார்த்து முத்து மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

    அப்போது அந்த நபர் கையில் வைத்திருந்த கம்பியால் முத்துவின் தலை மற்றும் உடலில் பலமாக தாக்கி விட்டு தப்பி சென்று விட்டார். இதில் தலையில் பலத்த காயத்துடன் முத்து கீழே சாய்ந்தார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருவோணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவோணம் போலீசார் முத்துவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துவை தாக்கிய நபர் யார்? எதற்காக தாக்கினார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×