search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டனம்"

    • ஒரத்தநாடு பஸ் நிலையத்தின் எதிரில் மாவட்ட தலைவர் டாக்டர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார்.

    தஞ்சாவூர்:

    அக்னிபத் திட்டத்தை கண்டித்து தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக ஒரத்தநாடு பஸ் நிலையத்தின் எதிரில் மாவட்ட தலைவர் டாக்டர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார். இதில் மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள் மன்னை மதியழகன், குணா பரமேஸ்வரி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டி.எஸ்.ஆர். சிவசங்கரமூர்த்தி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அய்யப்பன், பாண்டித்துரை, ரவிச்சந்திரன், நாராயணசாமி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபு மண்கொண்டார், சிவாஜி சமூக பேரவைத்தலைவர் சதா வெங்கட்ராமன், மாவட்ட விவசாயப்பிரிவு தலைவர் கக்கரை சுகுமாறன், ஒரத்தநாடு நகரத்தலைவர் சுப்பு தங்கராஜூ, கண்ணுக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் வைத்தியநாதன், மனோகரன், சிவாஜி, சம்பத் வாண்டையார், இளைஞர் காங்கிரஸ் ஜெயசூரியன், ஜீவா, விநாயகம், ராமலிங்கம், அப்பாத்துரை, ஆடிட்டர் விஸ்வநாதன், மீனாட்சி சுந்தரம், பெருமகளுர் அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பா.ஜ.க.வுடன் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசைக்கு முக ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேசி வருவதாக இன்று காலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க.வுடன் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என பா.ஜ.க. தலைவர் தமிழிசைக்கு ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடியுடன் நான் பேசியதாக பச்சைப் பொய் கூறிய தமிழிசைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்



    பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை இந்த அளவு தரம் தாழ்த்திக் கொண்டது வேதனை அளிக்கிறது. 

    ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதில் இரட்டிப்பு உறுதியாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
    முத்தரசன், எஸ்றா.சற்குணம் ஆகியோருக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடும் விதத்தில் ராமதாஸ் பேசாத ஒன்றை பேசியதாக இட்டுக்கட்டி அறிக்கை வெளியிட்டு பதற்ற சூழ்நிலையை உருவாக்கியிருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #Ramadoss #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பொன்பரப்பி வன்முறையைக்கண்டித்து கடந்த 24-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், எஸ்றா.சற்குணம், ஆகியோருக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடும் விதத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் “பேசாத ஒன்றை பேசியதாக இட்டுக்கட்டி” ஓர் அறிக்கை வெளியிட்டு பதற்ற சூழ்நிலையை உருவாக்கியிருப்பதற்கு வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்காகவும் போராடி வரும் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

    சமூக நீதிப் போராளி பேராயர் எஸ்றா.சற்குணம் தனது வாழ்நாள் முழுவதும் மக்களின் சமூக, கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருபவர். சமூக நல்லிணக்கத்திற்காக உழைக்கும் இவர்கள் மீது கூட, ராமதாசுக்கு நம்பிக்கையில்லாமல் போனது மிகுந்த வேதனையளிக்கிறது. யார் மீதுதான் அவருக்கு நம்பிக்கை என்ற கேள்வியும் எழுகிறது.

    தம்மை அரசியலில் இன்னமும் நிலை நிறுத்திக் கொள்ள ஆக்கப்பூர்வமான பல வழிமுறைகள் இருக்கும் போது, அவர் பின்னடைவை ஏற்படுத்தும் வழியை ஏன் தேர்வு செய்கிறார் என்று அவர் மீது அன்பும் அக்கறையும் உள்ள பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

    அவரே ஒரு கற்பனைப் பேச்சை மனதில் செயற்கையாகக் கற்பித்து உருவாக்கிக் கொண்டு அதற்கு பதில் என்ற வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டு இந்த இரு தலைவர்கள் மீதும் வன்முறையை வீசும் தொலைபேசி மிரட்டல்களுக்குக் காரணமாக இருப்பது பொறுப்புள்ள முதிர்ந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு அழகல்ல உரிய செயலும் அல்ல!

    தேர்தலில் கூட்டணிகளும், முடிவுகளும் வெற்றி பெறும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு அமையாமல் போய் விட்டதே என்ற வருத்தம் இருக்கலாம். இதுவே அரசியலின் இறுதிக் கட்டம் இல்லை. அரசியலில் பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தவர் அவர். தேர்தல் அரசியலில் அவற்றை சகஜமாக எடுத்துக் கொள்வதே ராமதாஸ் போன்ற தலைவர்களுக்கு ஏற்ற குணமாக இருக்க முடியும்.

    அதை விடுத்து அமைதியாக நல்லிணக்கத்துடன் வாழும் சமுதாயங்களிடையே வெறுப்பைக் கக்கி, முத்தரசன் மற்றும் உயர்ந்த அணுகுமுறை கொண்ட ஜனநாயகவாதிகளுக்கு எதிராக கொலை மிரட்டல்கள் விடுக்கும் அளவிற்கு ஒரு பதற்றமான சூழலை தெரிந்தோ தெரியாமலோ உருவாக்குவது நமது தமிழ் சமூகத்திற்குப் பேராபத்தானது.

    தேர்தல் வெற்றி தோல்விகள் எல்லோருக்கும் பொதுவானவை என்பதை நன்கறிவார்.

    ஆகவே ராமதாஸ் அவர்கள் மீண்டும் இது போன்ற பதற்றச் சூழ்நிலைகள் உருவாகிட இடம் கொடுக்காமல் தமிழகத்தில் அனைத்து சமூகங்களும் நிம்மதியாகவும் அமைதியாகவும் நட்புறவோடும் வாழ்வதற்கு ஏற்ற சுமூகமான சூழ்நிலைகளை மட்டும் உருவாக்கி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மேலும் மேலும் முன்னேறுவதற்கு வழி ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    எல்லாவற்றையும் அறிந்திருப்பவர் அவர். அவருக்கு இது நிச்சயமாக அறிவுரை அல்ல, மனப்பூர்வமான வேண்டுகோள். முத்தரசன் மற்றும் பேராயருக்கு உரிய பாதுகாப்புகளை வழங்கி மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்தையும் பொது அமைதியையும் உறுதியோடு பாதுகாத்திட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Ramadoss #DMK #MKStalin
    தேர்தல் பிரசாரத்தில் தனது சாதியை பயன்படுத்தும் அளவுக்கு பிரதமர் மோடி கீழிறங்கி விட்டதாக பிரியங்கா குற்றம் சாட்டினார். #PriyankaGandhi #PMModi
    அமேதி:

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்குட்பட்ட முன்ஷிகஞ்ச் பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோரின் குறைகளை கேட்க விரும்பாத நிலையில் பா.ஜனதாவினர் உள்ளனர். அவர்களின் தேசியவாதம் என்னவென்றே புரியவில்லை. விவசாயிகள் வெறும் காலுடன் உங்கள் வீட்டுக்கு வரும்போது, அவர்களின் குறைகளை கேட்க உங்களால் முடியவில்லை.



    வேலைவாய்ப்பு குறித்து இளைஞர்களுக்கு போலி வாக்குறுதி அளிக்கப்படுகிறது.

    உத்தரபிரதேசத்தில் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி தனது சாதியை பயன்படுத்தி உள்ளார். அவர் என்ன சாதி என்று இப்போதுவரை எனக்கு தெரியாது. அதை தெரிந்து கொள்ளவும் நாங்கள் விரும்பவில்லை. எதிர்க்கட்சிகள், தேர்தல் பிரசாரத்தில் சாதியை பயன்படுத்தாமல், வளர்ச்சி பற்றியே பேசுகிறார்கள். தனிப்பட்ட விமர்சனம் செய்வது இல்லை. ஆனால், சாதி என்பது முக்கியமானது என்று நினைக்கும் அளவுக்கு பிரதமரை மாற்றியது எது? அந்த அளவுக்கு அவர் கீழிறங்கி விட்டார்.

    அமேதி தொகுதியில் போட்டியிடும் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, கடந்த 5 ஆண்டுகளில் வெறும் 16 தடவைதான் அமேதிக்கு வந்துள்ளார். ஒவ்வொரு தடவை வரும்போதும், 4 மணி நேரம் மட்டுமே இருப்பார்.

    பத்திரிகையாளர்களை தன்னுடன் அழைத்து வந்து, மக்களுக்கு சேலை, காலணி உள்ளிட்ட பொருட்களை வழங்கி விட்டு செல்வார்.

    அமேதி மக்கள் சுயமரியாதை கொண்டவர்கள். தங்களை பிச்சைக்காரர்கள் என்று நினைப்பவர்களை அவர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று எங்களுக்கு தெரியும்.

    நான் எப்போது இங்கே வந்தாலும், மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே முயற்சிப்பேன். அமேதியை எங்கள் வீடாகவும், அமேதி மக்களை எங்கள் குடும்ப உறுப்பினர்களாகவுமே நாங்கள் நடத்துகிறோம்.

    இவ்வாறு பிரியங்கா பேசினார்.
    என்னை இழிவுபடுத்துவதற்காக, ஒரு சமுதாயத்தையே திருடர்கள் என்று முத்திரை குத்துவதா? என்று ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். #PMModi #RahulGandhi
    ராய்ப்பூர்:

    மராட்டிய மாநிலத்தில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ஏன் எல்லா திருடர்களும் ‘மோடி’ என்றே பெயர் வைத்திருக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலம் பாடபாராவில் நேற்று பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இதற்கு பதிலடி கொடுத்தார். அவர் பேசியதாவது:-

    ஒடுக்கப்பட்டவர்களை விமர்சிப்பதும், அவர்களை அடிமை போல் நடத்துவதும் ‘பரம்பரை’ குடும்பத்தின் சுல்தான் மனநிலை. நாடு முழுவதும் பா.ஜனதா அலை வீசுவதால், காங்கிரசும், அதன் கலப்பட கூட்டணி கட்சிகளும் விரக்தியில் உள்ளன. அவர்களால் இரவில் தூங்க முடியவில்லை. அதனால்தான் இப்படி பேசுகின்றன. இதை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.



    இவர்கள் தினந்தோறும் எல்லை மீறி பேசி வருகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, மோடி என்ற பெயரில் யார் இருந்தாலும் திருடர். என்ன அரசியல் இது? என்னை இழிவுபடுத்துவதற்காக, ஒரு சமுதாயத்தையே திருடர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். இங்கே ‘சாஹு’ என்று அழைக்கப்படும் சமூகம்தான், குஜராத்தில் மோடி என்று அழைக்கப்படுகிறது.

    நேர்மையாக வரி செலுத்துபவர்களை சுயநலவாதிகள் என்று காங்கிரஸ் சொல்கிறது. பரம்பரை குடும்பம்தான், கோடிக்கணக்கான ரூபாய் வருமானவரி மோசடியில் ஈடுபட்டுள்ளது. தற்போது, ஜாமீனில் உள்ளது. பாதுகாப்பு தளவாட பேரங்களில் கமிஷன் வாங்கியது.

    உங்களது ஒரு ஓட்டின் வலிமைதான், துல்லிய தாக்குதல், எல்லை தாண்டி சென்று விமான தாக்குதல் நடத்தவும், செயற்கைகோளை சுட்டு வீழ்த்தவும் இந்தியாவுக்கு வழிவகுத்து கொடுத்தது.

    இவ்வாறு மோடி பேசினார்.

    சத்தீஷ்கார் மாநிலம் கொர்பாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:-

    தரக்குறைவாக பேசுவது பரம்பரை குடும்பத்தின் இயல்பாகி விட்டது. மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் திருடர்களா? இந்த கும்பலை நாம் தூக்கி எறிய வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி, நக்சலைட்டுகளுடன் கைகோர்த்து செயல்படுகிறது. தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை பார்த்து வன்முறையாளர்களும், பயங்கரவாதிகளும் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடுகிறார்கள். தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்வோம், ராணுவ சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறுவோம் என்றெல்லாம் சொல்கிறது.

    சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சி வந்த பிறகு, மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிறுத்தி விட்டனர். விவசாயிகள் நிதி உதவி திட்டத்துக்கு விவசாயிகள் பெயர்களையும் அனுப்பிவைக்கவில்லை. இதனால், மக்களுக்குத்தான் பாதிப்பு.

    இவ்வாறு மோடி பேசினார்.   #PMModi #RahulGandhi
    நடிகையும் பாஜக வேட்பாளருமான ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆசம் கானுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. #AazamKhan #LokSabhaElections2019
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரதா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ஆசம் கான், “இங்கு 10 வருடங்கள் ஒருவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தார் . ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன்” என்றார்.



    ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்து மிகவும் அருவருப்பான அவமானகரமான கருத்து என பாஜக செய்தித் தொடர்பாளர் சந்திர மோகன் கண்டித்தார். இதைவிட தரம் தாழ்ந்த அரசியல் இருக்க முடியாது என்றும், சமாஜ்வாடி கட்சியின் உண்மையான முகத்தை இது காட்டுவதாகவும் அவர் கூறினார்.

    ஆசம் கானின் கருத்தை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் கண்டித்துள்ளார். சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் கூறினார்.

    ஆனால், காக்கி என்று ஆசம் கான் குறிப்பிட்டது, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அணியும் அரைக்கால் சட்டை என சமாஜ்வாடி கட்சி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #AazamKhan #LokSabhaElections2019
    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். #PeriyarStatueVandalised #KSAlagiri #Ramadoss #vaiko
    சென்னை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் சமூகத்திற்கு எவருமே ஆற்ற முடியாத அரும்பெரும் பணிகளை செய்த பெரியாரின் சிலையை தமிழகத்திலுள்ள வகுப்புவாத சக்திகள் இத்தகைய வன்முறைச் செயலின் மூலம் சிலைக்கு சேதாரம் ஏற்படுத்தியது குறித்து காவல்துறையினர் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற வகுப்புவாத, பாசிச, பிற்போக்கு சக்திகளை அடையாளம் கண்டு, வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில் பெரியார் மீது பற்று கொண்ட மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் அணி திரண்டு கடுமையான போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படுமென தமிழக அரசை எச்சரிக்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    தமிழ்நாடு அமைதியாக இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத சக்திகள் தான் இந்த சமூக விரோத செயலை செய்துள்ளனர். இத்தகைய செயல்களை தமிழக அரசும், காவல்துறையும் இனியும் அனுமதிக்கக்கூடாது.

    பெரியாரின் சிலையை சேதப்படுத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

    பெரியாரின் கருத்துக்களை உடைக்க முடியாத கூட்டம், அவரது சிலைகளைச் சேதப்படுத்தி தமிழ்நாட்டில் ரத்தக்களரி ஏற்படுத்துவதற்குத் திட்டமிட்டு சதிவலை பின்னி வருவதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாராளுமன்ற பொதுத்தேர்தலைச் சந்திக்கும் நேரத்தில் பெரியார் சிலையை உடைத்து, கலவர விதைகளைத் தூவ நினைப்போரின் உள் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். #PeriyarStatueVandalised #KSAlagiri #Ramadoss #vaiko
    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே நிறுவப்பட்டிருந்த தந்தை பெரியார் சிலையின் தலை சிதைக்கப்பட்டிருப்பதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #PeriyarStatueVandalised #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேர்தல் களத்தில் தோல்வி பயம் கண்டவர்கள், அமைதியைக் குலைக்கும் வகையில் இழிவான செயல்களில் ஈடுபடுவது வழக்கம். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே நிறுவப்பட்டிருந்த தந்தை பெரியார் சிலையின் தலை சிதைக்கப்பட்டிருந்தது.

    அத்தகைய இழிவான செயல்களின் முன்னோட்டமாகத் தெரிகிறது. மிக மோசமான இந்தச் செயலை தி.மு.க வன்மையாகக் கண்டிக்கிறது.



    இத்தகைய செயல்பாடுகள் மூலம், தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டின் பொது அமைதியைக் குலைத்து, வன்முறையைத் தூண்ட நினைக்கும் சக்திகளை ஒடுக்க வேண்டிய கட்டாயமும் பொறுப்பும் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது.

    பெரியார் சிலையைச் சிதைத்த காலிகளை, காவல் துறை மூலம் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் வன்முறைக்குத் துளியும் இடம்தராத வகையில், அத்தகைய தீய எண்ணத்தில் இருக்கும் நாசகார சக்திகள் எதுவாக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி, இரும்புக் கரம்கொண்டு முறியடிக்கப்பட வேண்டும், நசுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #PeriyarStatueVandalised #DMK #MKStalin
    டெல்லியில் இன்று பேட்டியளித்த ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், 'தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு எதிராக அவதூறு பரப்புபவர்கள் மீது வழக்கு தொடருவோம் 'என எச்சரிக்கை விடுத்துள்ளார். #NirmalaSitharaman #Congress
    புதுடெல்லி:

    கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி  கடந்த 2016-ம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தார். 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் செய்தியாளர்களை சந்தித்து வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை காலத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவர் புதிய நோட்டுகளை மாற்ற 40 சதவீதம் கமிஷனாக கேட்டது பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. ஆனால், இந்த வீடியோ போலியானது என பா.ஜ.க. மறுத்துள்ளது.

    இந்நிலையில், ராணுவ துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. மீது அவதூறு பரப்புபவர்கள் மீது வழக்கு தொடுக்க உள்ளோம். போலி வீடியோக்களை வெளியிட்டு பா.ஜ.க.வின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டு பாஜக மீது அவதூறு பரப்புவது காங்கிரஸ் கட்சிக்கு இது முதல் முறையல்ல. அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என பா.ஜ.க. தலைவர் பூபேந்திர் யாதவ் குறிப்பிட்டுள்ளார். #NirmalaSitharaman #Congress
    நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #RadhaRavi #MKStalin #DMK
    சென்னை:

    கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி பேசும்போது, நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது பேச்சுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



    இதனையடுத்து அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டார். அவர் தனது அறிக்கையில், நடிகர் ராதாரவி கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக கூறியிருந்தார்.

    இந்நிலையில், நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவியின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார். #RadhaRavi #MKStalin #DMK
    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டு பிரதமருக்கு நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். #MosqueShooting #NewZealandShooting #PMModi
    புதுடெல்லி:

    நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 49 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

    இதையடுத்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தடுப்பு படை போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். நியூசிலாந்தில் கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசனும் உறுதி செய்துள்ளார்.

    இந்நிலையில், நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆடர்னுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு அப்பாவி மக்கள் பலியானது அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளார். பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர், நியூசிலாந்துக்கு தேவைப்படும் உதவிகளை அளிக்க தயாராக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளது. #MosqueShooting #NewZealandShooting #PMModi
    சிரியாவில் இரட்டைக் குண்டுவெடிப்பு நிகழ்த்தி பொதுமக்களை கொன்று குவித்த கொடூர செயலுக்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. #SyriaBombings #UNCondenm
    நியூயார்க்:

    சிரியாவில் அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டுப் போரில் பொதுமக்கள் பலியாவது தொடர்கிறது. கடந்த திங்கட்கிழமையன்று இட்லிப் நகரின் அருகே உள்ள அல்குசார் பகுதியில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர். சுமார் 100 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



    இதுதொடர்பாக ஐநா பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது:-

    சிரியாவின் வடமேற்குப் பகுதியில் நடந்து வரும் உள்நாட்டு சண்டை மற்றும் அதிகரித்து வரும் உயிர்ப்பலி தொடர்பாக வரும் தகவல்களால் ஐநா கடும் கவலை அடைந்துள்ளது.

    போர் காரணமாக இட்லிப் மாகாணத்தில் மட்டும் 130 பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இதனால் சுமார் 50 ஆயிரம் குழந்தைகளின் கல்வி தடைபட்டுள்ளது.

    மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து தரப்பையும் ஐநா சபை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #SyriaBombings #UNCondenm
    ×