search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைப்பு"

    பெட்ரோல் விலை, தொடர்ந்து 5-வது நாளாக நேற்று குறைந்தது. சென்னையில், நேற்று முன்தினம் இருந்த விலையை விட நேற்று 10 காசு குறைந்தது. #Petrol #Diesel
    புதுடெல்லி:

    பெட்ரோல் விலை, தொடர்ந்து 5-வது நாளாக நேற்று குறைந்தது. சென்னையில், நேற்று முன்தினம் இருந்த விலையை விட நேற்று 10 காசு குறைந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.09 ஆக இருந்தது.

    ஆனால், டீசல் விலையில் நேற்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  #Petrol #Diesel
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக சற்று குறைந்து வரும் நிலையில் நேற்று லிட்டருக்கு 9 காசு குறைந்த்து. #Petrol #Diesel
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. இந்த நிலையில், கடந்த 4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக சற்று குறைந்து வருகிறது.

    பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை நேற்று லிட்டருக்கு 9 காசு குறைந்தது. இதனால் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 81 ரூபாய் 19 காசாகவும், டீசல் விலை 72 ரூபாய் 97 காசாகவும் இருந்தது.    #Petrol #Diesel #tamilnews 
    கடந்த புதன்கிழமை பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு தலா 1 காசு குறைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் பெட்ரோலுக்கு 7 காசுகளும், டீசலுக்கு 5 காசுகளும் குறைந்தது. #Petrol #Diesel
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மாற்றத்தை பொறுத்து, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பிறகு கடந்த மாதம் 14-ந் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து, குறைந்து வருகிறது. கடந்த புதன்கிழமை பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு தலா 1 காசு குறைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் பெட்ரோலுக்கு 7 காசுகளும், டீசலுக்கு 5 காசுகளும் குறைந்தது.

    இதன் தொடர்ச்சியாக நேற்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 6 காசுகளும், டீசல் லிட்டருக்கு 5 காசுகளும் குறைந்தது.  #Petrol #Diesel 
    தூத்துக்குடியில் முழு அளவில் சகஜ நிலை திரும்பியதாலும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாலும் போலீஸ் எண்ணிக்கை தற்போது குறைக்கப்பட்டு உள்ளது. #BanSterlite #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினார்கள். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பொதுமக்கள் இந்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டதுமே 21-ந்தேதி காலையில் இருந்தே தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

    கலெக்டர் அலுவலகம், ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள சிப்காட் வளாகத்தில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டனர். ஸ்டெர்லைட் ஆலையில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து துப்பாகி சூடு, அதை தொடர்ந்து வன்முறை காரணமாக தூத்துக்குடிக்கு நெல்லை, குமரி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டனர்.

    உச்சபட்சமாக 5 ஆயிரம் போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தார்கள். கமாண்டோ படையும் வரவழைக்கப்பட்டிருந்தது. மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் தூத்துக்குடியில் அமைதி திரும்பியது. முழுமையான அமைதி திரும்பும்வரை போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், அதன்பின்னர் போலீஸ் எண்ணிக்கை குறைக்கப்படும் எனவும் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவித்திருந்தார்.



    அதன்படி தற்போது தூத்துக்குடியில் முழு அளவில் சகஜ நிலை திரும்பியதாலும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாலும் போலீஸ் எண்ணிக்கை தற்போது குறைக்கப்பட்டு உள்ளது. வெளிமாவட்ட போலீசார் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இன்று கவர்னர் வந்துள்ளதால் அவருடன் பாதுகாப்புக்கு உள்ள போலீசார் தவிர குறைவான போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.  #BanSterlite #SterliteProtest

    பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்க எடப்பாடி பழனிசாமி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.#edappadipalanisamy #TTVDinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழக  துணை  பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் மிக பெரிய தாக்குதல். விலைவாசி உயர்வு அனைத்திற்கும் காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான்.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வை காரணம் காட்டும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரின் விளக்கம் என்பது கண்டனத்திற்குரியது.

    எண்ணை நிறுவனங்களே ஒவ்வொரு நாளும் விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற ஆபத்தான முடிவை மத்திய அரசு எடுத்த காரணத்தினால், பெரும் பின்னடைவை இந்திய மக்கள் சந்தித்து வருகின்றனர். ஆனால், கர்நாடக தேர்தல் பிரச்சாரம் நடைப்பெற்ற காலத்தில் மட்டும், மந்திரம் போல் உயராமல் இருந்த பெட்ரோல் டீசல் விலை, தேர்தல் முடிந்த உடன் உயர்ந்து விட்ட விநோதத்தை மத்திய பா.ஜ.க. அரசு தான் விளக்க வேண்டும்.

    தங்களின் ஆதாய அரசியலுக்காக, பெட்ரோல்டீசல் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இப்பொது தேர்தல் முடிந்தவுடன் மக்களின் தலையில் தாங்கமுடியாத இப்பெரும் சுமையை ஏற்றக் காரணமாய் இருக்கும் மத்திய அரசிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.



    தற்போது கச்சா எண்ணை விலை பேரல் ஒன்றுக்கு 80 டாலர் விலையில் உள்ள இந்தச் சூழலில், பெட்ரோல் டீசல் விலை இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்றால், இன்னும் சில நாட்களில் கச்சா எண்ணையின் விலை பேரல் ஒன்றிக்கு 100 டாலர் எட்டும் என்று கணிக்கப்படுகிறது. அப்போது பெட்ரோல் டீசல் விலை எவ்வளவு உயரும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

    தெற்காசியாவிலேயே இந்தியா தான் அதிக அளவு பெட்ரோல்-டீசல் மீதான வரிகளை சுமத்துகிறது என்பதையும் இத்தருணத்தில் நான் நினைவுபடுத்துகிறேன். இப்பிரச்சினையில் பழனிசாமியின் அரசு வழக்கம் போல கொஞ்சம் கூட அக்கறை காட்டாமல் உள்ளது, மிகவும் அத்தியாவசியமாகி விட்ட பெட்ரோல் டீசலின் மூலம் தங்களின் வரி வருவாயை பெருக்குவதில் முனைப்பு காட்டும் மத்திய, மாநில அரசுகள், தங்கள் போக்கை மாற்றிக்கொண்டு பெட்ரோல் டீசல் மீதான வரிகளை உடனடியாக குறைத்து மக்களை காக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.#Edappadipalanisamy #TTVDinakaran
    விலை உயர்வை தடுக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. #Petrol #Diesel #LowerDuties
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஓராண்டாக தினசரி அடிப்படையில் பெட்ரோல், டீசல் மீதான விலையை உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 4 வாரங்களாக ஏறுமுகமாக உள்ளது.

    தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 80 அமெரிக்க டாலர்களை கடந்து விட்டது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தற்போதுள்ளதை விட இன்னும் சில ரூபாய்கள் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பீப்பாய் 85 டாலர்கள் என்ற நிலையை அடைந்து விட்டால் டெல்லியில் சில்லரை விற்பனையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.89 என்ற அளவிற்கு உயர்ந்து விடும். சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத் நகரங்களிலும் இந்த விலை உயர்வின் தாக்கம் கடுமையாக இருக்கும்.

    இதையடுத்து பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி மற்றும் பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் ஓரிரு நாட்களில் சந்தித்து பேச இருக்கின்றனர்.

    இதுபற்றி பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க மத்திய அரசு அவற்றின் மீதான உற்பத்தி வரியை குறைக்க திட்டமிட்டு உள்ளது. இது மோடி அரசு 4 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்ததற்காக நுகர்வோருக்கு அளிக்கும் வெகுமதியாக இருக்கும்” என்றார்.

    இந்த வரி குறைப்பு அடுத்த வார இறுதியில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உற்பத்தி வரியை குறைப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 வரை குறையும்.

    அதேநேரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தால் 2-வது கட்டமாகவும் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி குறைக்கப்பட்டு விலை உயர்வை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.  #Petrol #Diesel #LowerDuties 
    ×