என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பழவேற்காடு"
சென்னை:
பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செய்ய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும் தடையை மீறி படகு சவாரி தொடர்ந்து நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் படகு சவாரிக்கு 10-க்கும் மேற்பட்டோரை அழைத்து சென்றபோது 2 படகுகள் ஒன்றோடொன்று மோதின.
இதில் நிலைதடுமாறி படகு கவிழ்ந்ததில் காசிமேட்டை சேர்ந்த ஜான் என்பவரது மனைவி மேரி பலியானார். இதுகுறித்து திருப்பாலைவனம போலீசார் வழக்குப்பதிவு செய்து பழவேற்காடு லைட் ஹவுஸ் குப்பம், நடுவூர் மாதாகுப்பத்தை சேர்ந்த 3 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பொன்னேரி ஆர்.டி.ஒ. நந்தகுமார் கூறியதாவது:-
பழவேற்காட்டில் படகு சவாரி செய்ய மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. ஆனால் தடையை மீறி படகு சவாரி செய்தால் படகு ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்களது படகு பறிமுதல் செய்யபடும். அங்கு ரோந்துப்பணியில் போலீசார் ஈடுபடுவார்கள். படகு சவாரியை தடுக்க கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வருகிற சனி, ஞாயிறு இதுகுறித்து மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்’.
இவ்வாறு அவர் கூறினார்.
பழவேற்காட்டில் 40-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு மெதூர் கிராமத்தில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது கோடை வெயில் காரணமாக நீர் நிலைகள் வறண்டு காணப்படுவதால் வாரம் இரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் வருவாய் இன்றி தவித்து வரும் மீனவ குடும்பத்தினர் தற்போது குடிநீருக்காக மட்டும் நாளொன்றுக்கு 100 ரூபாய் வரை செலவழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதிவாசிகள் தடையில்லா குடிநீர் வழங்கக்கோரி மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் அறிந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் பழவேற்காடு மக்களுக்கு குடிநீர் வழங்க அவரது மன்ற நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து தற்போது பழவேற்காடு பகுதியில் ரஜினி ரசிகர்கள் வாகனங்களில் குடிநீர் கொண்டுவந்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர். இதேபோன்று மற்ற பகுதிகளிலும் குடிநீர் வழங்கப்படும் என ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி அருகே பழவேற்காடு பகுதியில் இருந்து ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி நள்ளிரவில் படகு மூலம் கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மைனர்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி, ஏட்டுகள் துரைமுருகன், முத்துமாணிக்கம், சுரேஷ் கண்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கடந்த 2நாட்களாக பழவேற்காடு ஏரிப்பகுதி மற்றும் கடற்கரை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர். இந்த நிலையில் கூனங்குப்பம் பகுதியில் உள்ள படகுத்துறையில் 50 கிலோ எடை கொண்ட 200 ரேஷன் அரிசி மூட்டைகளை 2 படகுகளில் ஏற்றி கொண்டு இருந்ததை போலீசார் பார்த்தனர். போலீசாரை பார்த்ததும் சிலர் தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து படகில் இருந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும், 2 படகுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். படகில் இருந்த ஆந்திரா மாநிலம் தடாவை சேர்ந்த குமார், ரங்கநாதன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
குறைந்த விலைக்கு பழவேற்காடு பகுதியில் ரேஷன் அரிசியை அடிக்கடி வாங்குவதும் இதனை படகு மூலம் ஆந்திராவுக்கு கடத்தி அதிக விலைக்கு விற்பதாக தெரிவித்தனர். இதனை அடுத்து திருவள்ளூர் குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
காணும் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடற்கரை, பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் பொது மக்கள் குடும்பத்துடன் சென்று உற்சாகமாக பொழுதை கழித்தனர்.
பழவேற்காட்டில் இன்று காலை முதல் பொது மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர். அவர்கள் பழவேற்காடு கடற்கரை டச்சுகல்லறை, லைட்அவுஸ் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்துடன் அமர்ந்து கொண்டு வந்த உணவை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். லைட்அவுஸ் குப்பம், செம்பாசிபள்ளி குப்பம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. படகு சவாரி, கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மாமல்லபுரத்தில் காணும் பொங்கலை கொண்டாட காலையிலே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. புரதான சின்னங்களான கடற்கரை கோவில், புலிக்குகை, அர்ச்சுனன் தபசு, பட்டர் பால், ஐந்துரதம் மற்றும் குடவரை கோவில் பகுதிகளை அவர்கள் கண்டு ரசித்தனர்.
காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வடநெம்மேலி, முதலை பண்ணை, திருவிடந்தை, பட்டிபுலம், தேவநேரி கடற்கரை பகுதியிலும் மக்கள் கூட்டம் இருந்தது. #KannumPongal
பொன்னேரி:
வங்கக்கடலில் உருவான ‘பெய்ட்டி’ புயல் இன்று ஆந்திராவில் கரையை கடக்கிறது. சென்னை அருகே புயல் நெருங்கி வந்த போது பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த மழை இல்லை.
சென்னையில் கடந்த 2 நாட்களாக கடுங்குளிர் மற்றும் வானம் மேக மூட்டத்துடன் ரம்யமான சூழல் நிலவியது. பலத்த காற்றும் வீசியது. பழவேற்காடு, எண்ணூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் கடல் கடும் சீற்றமாக காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று புயல் ஆந்திராவை நெருங்கிய பின்னரும் சென்னையில் கடலின் சீற்றம் நீடித்தது. ஆனால் காற்றின் வேகமும், குளிரும் குறைந்து இருந்தது. வெயில் வழக்கம் போல் சுட்டெரித்தது. இதனால் கடற்கரையோர மீனவ கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.
பழவேற்காடு பகுதியில் கடல் சீற்றம் காரணமாக கோரைக்குப்பம் மீனவ கிராமத்தில் இருந்த 230 பேர் திருப்பாலைவனம் அருகே உள்ள பேரிடர் மீட்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இன்று காலை அவர்கள் தங்களது கிராமத்துக்கு சென்றனர்.
கடல் சீற்றம் காரணமாக பழவேற்காடு மற்றும் மீனவ கிராமங்களில் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட படகுகள் ஒன்றோடு ஒன்றுமோதி சேதம் அடைந்தன.
தொடர்ந்து கடல் சீற்றம் நீடிப்பதால் இன்று 5-வது நாளாக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வில்லை.
கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, துறைமுகம் உள்பட கடற்கரையோர பகுதிகளில் காற்று பலமாக வீசுகிறது.
தேவனாம்பட்டினம் கடற்கரையோரம் அரிப்பு ஏற்படுவதை தடுக்க வைக்கப்பட்டிருந்த கற்களை அலைகள் இழுத்து சென்றன. 5 மீட்டர் உயரத்துக்கு அதிக சத்தத்துடன் அலைகள் வந்த வண்ணம் இருந்தது.
நேற்று இரவு வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிக அளவு காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்ததால் கடல்நீர் கடற்கரையோரம் உள்ள போலீஸ் பூத் வரையில் வந்தது. தொடர்ந்து கடல் சீற்றம் மற்றும் சூறாவளி காற்று வீசி வருவதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் இன்று 6-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.
மரக்காணம் கடற் பகுதியிலும் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கடல் சீற்றத்துடனும், கொந்தளிப்புடனும் காணப்படுகிறது. 5 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்து வந்து கரையில் மேடாக இருந்த மணல் பகுதியை அரித்து சென்றது.
காரைக்காலில் நேற்று மாலை வழக்கத்தைவிட பலத்த காற்றுடன் கடல் சீற்றம் அதிக அளவு காணப்பட்டது.
கடலோர மீனவ கிராமங்களில் 20 அடி முதல் 40 அடிவரையிலும் காரைக்கால் அரசலாற்றங்கரை யோரம் உள்ள கடற்கரை பகுதியில் 100 மீட்டர்தூரம் வரை கடல் நீர் உட்புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர்.
கடல் சீற்றம் தொடர்ந்து காணப்படுவதால் காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரிமேடு, திருமலைராயன்பட்டினம் உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தைச்சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.
பொன்னேரி:
பழவேற்காட்டை சுற்றி உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். தடைகாலம் முடிந்து கடலுக்குள் சென்ற போது அவர்களுக்கு எதிர்பார்த்த அளவு மீன்கள் சிக்கவில்லை.
இந்த நிலையில் பழவேற்காடு கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் வலையில் திடீரென டன் கணக்கில் ஏராளமான மீன்கள் சிக்கியது.
பாறைமீன் வகைகளில் ஒன்றான ராப்பாறை மீன்கள் ஒவ்வொரு மீனவர்களின் வலை கிழியக்கூடிய அளவிற்கு சிக்கியது. சுறா மீனும் பிடிபட்டது. அவற்றை மீனவர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு கரைக்கு கொண்டு வந்தனர்.
அதிகமாக மீன்கள் கிடைத்தது பற்றி அறிந்ததும் ஏராளமான மீன் வியாபாரிகள் அங்கு குவிந்தனர்.
அவர்கள் மீன்களை போட்டிபோட்டு வாங்கி வெளிசந்தைக்கும், கேரளா மற்றும் வெளிநாட்டிற்கு 15-க்கும் மேற்பட்ட லாரிகளில் அனுப்பி வைத்தனர்.
ஒரு கிலோ பாறை மீன் ரூ.250-க்கு விற்கப்பட்டது. ஒரு மீன் 10 கிலோ முதல் 15 கிலோ வரை எடை இருந்தது. ஒரு லாரியில் 10 டன் மீன் ஏற்றப்பட்டது.
இது பற்றி பழவேற்காட்டை சேர்ந்த மீனவர் முத்து கூறும்போது, “நான் 25 வருடத்திற்கு மேலாக மீன் பிடித்து வருகிறேன். இந்தவகை பாறை மீன் இவ்வளவு அதிகமாக கிடைக்கவில்லை. இதுதான் முதல் முறை. இரண்டு மாதமாக மீன் கிடைக்காததால் வருமானம் இல்லாமல் இருந்தோம். இப்போது அதிக அளவு மீன்கள் சிக்கி இருப்பது எங்கள் பகுதி மீனவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்