search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோழவரம்"

    சோழவரம் அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்குன்றம்:

    சோழவரம் அருகே ஆத்தூரில் உள்ள பைபாஸ் சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு கடையை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர்.

    அப்பகுதியில் இன்று அதிகாலை போலீசார் ரோந்து சென்றபோது, டாஸ்மாக் கடையின் பின்புறம் சுவரில் துளை போடப்பட்டு இருப்பதை பார்த்தனர்.

    உடனே டாஸ்மாக் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். கடையை திறந்தபோது ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து இருப்பது தெரியவந்தது.விற்பனை பணம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை ஊழியர்கள் மறைவான இடத்தில் வைத்ததால் தப்பியது.

    இது குறித்து சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்.

    புழல் அருகே மேக்கரா மார்வெல் நகரை சேர்ந்தவர் நித்தியானந்தம். இவர் புழல் பாலாஜி நகரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இன்று காலை கடையை திறந்தபோது ‌ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கடைக்குள் சென்று பார்த்தபோது ரூ.10 ஆயிரம் பணம், ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போயிருந்தது.

    சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் வரும் நாட்களில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    சென்னை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகள் உள்ளன. பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பவில்லை.

    நான்கு ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம் தற்போது மொத்தம் வெறும் ஆயிரத்து 162 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் உள்ளது. இது வெறும் 10 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு இதே நாளில் மொத்தம் 4 ஆயிரத்து 875 மில்லியன் கனஅடி தண்ணீர் ஏரிகளில் இருந்தது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது வெறும் 65 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. (மொத்தக்கொள்ளளவு 3645 மி.கனஅடி) இதே போல் சோழவரம் ஏரியில் 48 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருக்கிறது.(மொத்த கொள்ளளவு 1081).

    எனவே வரும் வாரங்களில் செம்பரம்பாக்கம் ஏரியும், சோழவரம் ஏரியும் முழுவதும் வறண்டு விடும் சூழ்நிலை உருவாகி உள்ளன. பூண்டி ஏரியில் 236 மி.கன அடியும் (3231 மி.கனஅடி).செங்குன்றம் ஏரியில் 813 மி.கனஅடியும்(3300 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் வரும் நாட்களில் சென்னை மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

    சென்னையில் வழக்கமாக ஒரு குடும்பத்துக்கு 140 லிட்டர் என்ற அளவில் மொத்தம் 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தினமும் சப்ளை செய்யப்பட்டு வந்தது. பருவமழை பொய்த்ததன் காரணமாக கடந்த மாதம் முதலே நீர் சப்ளை குறைக்கப்பட்டுவிட்டது.

    தற்போது 450 முதல் 480 மில்லியன் லிட்டர் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது.

    இது தினந்தோறும் ஒருவருக்கு வழங்கப்படும் தண்ணீரில் 60 லிட்டர் குறைப்பு ஆகும். வரும் நாட்களில் தண்ணீர் வினியோகம் மேலும் குறைக்கப்படும் என்று தெரிகிறது.

    தற்போதைய நிலையில் மீஞ்சூர், நெமிலிச்சேரியில் உள்ள கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையம், விவசாய கிணறுகள், கல்குவாரி நீரை மட்டுமே சென்னை மக்கள் நம்பி இருக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

    குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் தொழில் நிறுவனங்கள் சுத்திகரித்த நீரை மீண்டும் பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    சென்னை மக்களின் ஒரே நம்பிக்கையாக வீராணம் ஏரி மட்டும் உள்ளது. வீராணம் ஏரி முழு கொள்ளவை எட்டி இருப்பதால் அங்கிருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவது அதிகரித்து உள்ளது. #tamilnews
    சோழவரத்தில் ரவுடி கொலையில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்குன்றம்:

    வியாசர்பாடி, கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் திவாகர் (36) ரவுடி. கடந்த 30-ந்தேதி இரவு அவர் சோழவரம் ஏரிக்கரையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இது தொடர்பாக செங்குன்றத்தை அடுத்த பாலகணஷ் நகரைச் சேர்ந்த சுரேஷ் என்கிற பாபா சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். நண்பரின் கொலைக்கு பழிக்கு பழியாக திவாகரை தீர்த்து கட்டியதாக கூறி உள்ளார். இந்த கொலை தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக சோழவரம் மற்றும் மாதவரத்தில் 12 செமீ மழை பெய்துள்ளது. #TNRains #NEMonsoon
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில தினங்களாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. உள் மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் மற்றும் கனமழையால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ள நிலையில்,  தற்போது தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டு வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கிறது.


    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் மற்றும் மாதவரத்தில் 12 செமீ மழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர், திருவள்ளூர் மாவட்டம் ரெட்ஹில்ஸ் பகுதியில் 11 செமீ மழையும், பொன்னேரியில் 10 செமீ மழையும் பதிவாகி உள்ளது.

    சென்னை வடக்கு, டிஜிபி அலுவலகம், மரக்காணம், திண்டிவனம் மற்றும் பண்ருட்டியில் 9 செமீ, தாமரைப்பாக்கம், நெய்வேலியில் தலா 8 செமீ மழை பெய்துள்ளது. #TNRains #NEMonsoon
    சோழவரம் அருகே 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து ரூ.27 லட்சத்து 80 ஆயிரத்தை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. பணத்தை பறிகொடுத்த 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ‘ஜெர்சி’ என்ற பால் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் பால் பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் பாலை பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் உள்ள கடைகளுக்கு அனுப்பி விற்கப்பட்டு வருகிறது.

    பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனைக்கு ஏற்ப தினந்தோறும் பணத்தை ஒரக்காடு கம்பெனிக்கு அனுப்பிவைப்பார்கள். இந்த பணத்தை மொத்தமாக சேர்த்து தினமும் சென்னை கிண்டியில் உள்ள வங்கி கிளையில் செலுத்துவார்கள். பால் கம்பெனியில் இருந்து தனியார் ஏஜென்சி மூலம் இந்த பணம் எடுத்துச்செல்லப்படுவது வழக்கம்.

    தனியார் ஏஜென்சியின் காரை தேனி மாவட்டத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 26) என்பவர் ஓட்டி வந்தார். இதில் துப்பாக்கி ஏந்திய ஒப்பந்த காவலர் திருத்தணியை சேர்ந்த லோகநாதன் (52) பாதுகாப்புக்காக வருவார். பணத்தை கொண்டு செல்வதற்கான பணியில் காஞ்சீபுரம் மாவட்டம் சூணாம்பேட்டை சேர்ந்த ஏஜென்ட் ராஜ்குமார் (27), அம்பத்தூர் வெங்கடாபுரத்தை சேர்ந்த காசாளர் பாலாஜி (42) ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த 4 பேரும் நேற்று மாலை வழக்கம்போல ஒரக்காடு பால் கம்பெனிக்கு வந்து நிர்வாகத்திடம் இருந்து வசூலான ரூ.27 லட்சத்து 80 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு ஒரு பெட்டியில் வைத்து காரில் எடுத்துச் சென்றனர். இந்த கார் பணத்துடன் கம்பெனியில் இருந்து 500 மீட்டர் தூரம் சென்றவுடன் 4 மோட்டார் சைக்கிளில் 8 பேர் கொண்ட கும்பல் வந்து காரை வழிமறித்தது.

    அந்த கும்பல் கார் கண்ணாடியை உடைத்ததும் டிரைவர் காரை நிறுத்திவிட்டார். உடனே அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி காரில் இருந்த ரூ.27 லட்சத்து 80 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி தகவலறிந்த சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சம்பவ இடத்தில் விசாரணை செய்த பின்னர், கார் டிரைவர் பாலசுப்பிரமணி, பாதுகாவலர் லோகநாதன், ஏஜென்ட் ராஜ்குமார், காசாளர் பாலாஜி ஆகியோரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி, பொன்னேரி துணை சூப்பிரண்டு ராஜா ஆகியோர் சோழவரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து 4 பேரிடமும் சந்தேகத்தின் பேரில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் சோழவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சோழவரம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு கத்திகள், உருட்டுக் கட்டைகள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    பொன்னேரி:

    சோழவரத்தை அடுத்த எடப்பாளையம், பழைய விமான நிலையம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசாரை கண்டதும் சாலையோரத்தில் பதுங்கி இருந்த 5 பேர் கும்பல் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அவர்கள் சென்னையை சேர்ந்த சிவா, தினேஷ், ஆனந்த் குமார், விஜயகுமார், விஜய் என்பது தெரிய வந்தது.

    சாலையில் செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி கூட்டு கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு கத்திகள், உருட்டுக் கட்டைகள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #Tamilnews
    பொன்னேரி-சோழவரம் பகுதியில் விதிகளை மீறி வாகனம் ஓட்டிய மொத்தம் 330 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி உட்கோட்ட போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சோழவரம், பொன்னேரி, காட்டூர், திருப்பாலைவனம், மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிகவேகமாக வாகனம் ஓட்டி வந்தது, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், லைசென்ஸ், ஹெல் மேட் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்தவர்கள் என விதிமுறை மீறிய மொத்தம் 330 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களி டம் இருந்து ரூ. 33 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது. #tamilnews
    சோழவரத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை கொன்ற வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    திருவள்ளூர்:

    சோழவரம் சோலையம்மன் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கற்பகம். இவர்களது மகள் லதா (வயது 17).

    இவர்களது வீட்டுக்கு புதுச்சேரி தன்வந்திரி நகரை சேர்ந்த எழிலரசன் (26) அடிக்கடி வந்து சென்றார். அப்போது லதாவை அவர் ஒருதலையாக காதலித்து வந்தார்.

    கடந்த 7.4.2011 அன்று, ஆறுமுகம் மனைவியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தார். வீட்டில் லதாவும், அவரது தங்கையும் இருந்தனர்.

    அப்போது வீட்டுக்கு வந்த எழிலரசன், லதாவிடம், நான் உன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறினார். லதா மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த எழிலரசன், லதாவை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

    சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழிலரசனை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி பரணிதரன் தீர்ப்பு அளித்தார். அதில், கொலை, ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் எழிலரசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    மேலும் அபராதத் தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறினார். இதைத்தொடர்ந்து சோழவரம் போலீசார் எழிலரசனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். #tamilnews
    ×