search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்னல்"

    வேலூரில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வேலூர்:

    வேலூரில் கோடை காலத்தில் தான் எப்போதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அப்போது 110 டிகிரி வரை வெயில் அளவு பதிவாகும்.

    இந்தாண்டு கோடை காலம் முடிந்த பின்னரும் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் வெயில் 100 டிகிரியை தொட்டது. அதைத்தொடர்ந்து இந்த மாதத்தின் முதல்வாரம் முதல் தொடர்ந்து சில நாட்கள் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் அளவு பதிவானது.

    நேற்று காலை 10 மணிக்கேவெயில் வாட்டி எடுத்தது. மதியம் 2 மணியளவில் 99.9 டிகிரி வெயில் அளவு பதிவானது.

    இந்த நிலையில் மாலை 4.30 மணியளவில் வேலூர் பகுதியில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 5 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மிதமாக பெய்த மழை சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பெய்தது. இவ்வாறாக சுமார் 1½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதைத்தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்து கொண்டிருந்தது.

    பலத்த மழை காரணமாக புதிய, பழைய பஸ் நிலையங்கள், ஆரணி சாலை, காமராஜர் சிலை அருகே மற்றும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். அதேபோன்று அலுவலக வேலை முடிந்து வீடுகளுக்கு சென்றவர்களும் அவதி அடைந்தனர்.

    பலத்த மழையால் வேலூரில் வெப்பம் தணிந்தது. அதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் மின்னலை பார்த்து மணமகன் பயந்ததால் மணமேடையிலேயே மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்னா:

    பொதுவாக, வடமாநிலங்களில் சில திருமணங்கள் வினோத காரணங்களுக்காக மேடையிலேயே நின்றுபோகும் நிகழ்வு அவ்வப்போது நடக்கிறது. உதாரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாப்பிள்ளை வீட்டாருக்கு ரசகுல்லா இல்லை என்பதற்காக நிறுத்தப்பட்ட கல்யாணம், ஐஸ் கிரீம் வைக்காததால் ஏற்பட்ட தகராறில் மண்டை உடைப்பு என திருமணம் நிறுத்தப்படுவதற்கான காரணங்கள் நீள்கின்றன.

    இந்த வரிசையில், பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நடந்த திருமணத்தின்போது மணமேடையில் இருந்த மாப்பிள்ளை மின்னலை பார்த்து பயந்து, வினோதமாக நடந்து கொண்டார். இதனைக் கண்ட மணப்பெண்ணோ மேடையிலேயே மாப்பிள்ளை வேண்டாம் எனக்கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

    இதனால் இரு வீட்டாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, மாப்பிள்ளை வீட்டார் சிலர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. சில வினாடிகள் தோன்றி மறைந்த மின்னல் மணமகனுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியா நினைவாக மாறிவிட்டது. 
    தலைநகர் டெல்லியில் இடி, மின்னலுடன் இன்று மாலை பெய்துவரும் கனமழை காரணமாக தரையிறங்க வேண்டிய 18 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. #raininDelhi #flightsdiverted
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள மக்களை கோடைக்கால வெயிலின் தாக்கம் கடந்த 15 நாட்களாக வறுத்து எடுத்து வருகின்றது. இந்நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் வானத்தில் கருமேக கூட்டம் திரண்டு பல பகுதிகளை இருளாக்கியது.

    மேலும், பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப் புயலும் தாக்கியதால் இதை எதிர்பாராத வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பாக, டெல்லியின் முக்கிய பகுதிகளான அக்பர் ரோடு, துவாரகா, ஆர்.கே.புரம் மற்றும் சத்தர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை வேளையில் முகப்பு விளக்குகள் ஒளிர பல வாகனங்கள் சென்றதை காண முடிந்தது.

    சூறைக்காற்றை தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழையும் பெய்து வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதும், விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த 24 மணிநேரத்துக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் டெல்லியில் இருந்து பிறபகுதிகளுக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், இங்கு தரையிறங்க வேண்டிய 18 விமானங்கள் பிறபகுதிகளில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. #raininDelhi #flightsdiverted 
    ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். #Lightningkills
    ஐதராபாத்:

    ஆந்திர பிரதேசத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் மின்னல் தாக்கி நேற்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மின்னல் தாக்கியதில் கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. நேற்று இரவு பெய்த கனமழையில் மரங்களும் மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. கடும் மழையினால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். #Lightningkills
    உத்தரப்பிரதேசத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், மின்னல் தாக்கத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #UPthunderstorm
    லக்னோ

    உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மற்றும் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேற்று இரவு ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதையடுத்து,  மீட்பு பணிகளை விரைவுபடுத்துமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. #UPthunderstorm
    திண்டுக்கல் அருகே நேற்று இரவு மழை பெய்தபோது இடி விழுந்து 2 வீடுகள் சேதமானது.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. பலத்த சூறாவளி காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்வதால் பொதுமக்கள் மழை பெய்யும் சமயங்களில் வீடுகளுக்குள்ளே முடங்கி விடுகின்றனர்.

    மழை பெய்ய ஆரம்பித்தவுடன் மின் இணைப்பும் துண்டிக்கபடுவதால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி விடுகின்றனர். நேற்று மாலை சின்னாளபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது.

    அம்பாத்துரையில் ஜவுளி வியாபாரி மோகன்ராஜ், அருகில் வசிக்கும் கோழிக்கடை மாணிக்கம் ஆகிய 2 பேர் வீடுகளிலும் இடி விழுந்தது. அந்த சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்களே சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அப்போது இருவரது வீடுகளின் சுவர்களில் விரிசல் விழுந்தது.

    மேலும் மின் இணைப்புகள் அனைத்தும் தீ பிடித்து எரியத் தொடங்கியது. கட்டில்கள் மற்றும் ஆடைகளில் தீ பிடிக்க தொடங்கியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அலறியடித்தவாறு வெளியே ஓடிவந்தனர்.

    வீட்டில் உள்ள பொருட்களும் சிதறி ஓடியதுடன் மிகப்பெரிய பள்ளம் உண்டானது. இடி விழுந்தால் என்ன ஆகும் என்பது குறித்து அப்பகுதி மக்களுக்கு நேற்று கண்கூடாக தெரியவந்தது. மழை பெய்த நேரத்தில் மின்சாரம் இருந்ததால்தான் மின் சாதனங்கள் எரிந்துள்ளதாக மின்வாரிய ஊயர்கள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    உசிலம்பட்டி அருகே நேற்று இடி- மின்னலுடன் மழை பெய்தது. அப்போது இடி தாக்கியதில் ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள சிந்துபட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தும்மக்குண்டை அடுத்துள்ள டி.பெருமாள் பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராமச்சந்திரன் (வயது 29).

    ராணுவ வீரரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார். நேற்று மாலை வீட்டின்மாடியில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதில் இடி தாக்கியதில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காவேரிப்பட்டணம் அருகே மின்னல் தாக்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தாள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பன்னிஅள்ளி புதூர் பக்கமுள்ளது பெரமன்கொட்டாய். இந்த ஊரைச் சேர்ந்தவர் சின்னவன், கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி பெருமா. இவர்களின் மகள் பிரியா (வயது 13). இவர் பன்னிஅள்ளிபுதூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    நேற்று மாலை சிறுமி பிரியா தனது தாயாருடன் வீட்டு அருகில் உள்ள கிணற்று பக்கத்தில் துணி துவைத்து கொண்டிருந்தாள். அந்த நேரம் திடீரென்று பலத்த இடி சத்தத்துடன் மின்னல் ஏற்பட்டது. இதில் மின்னல் தாக்கி சிறுமி பிரியா பலத்த காயம் அடைந்தாள். மேலும் அருகில் இருந்த தாய் பெருமா மயக்கம் அடைந்தார்.

    இதை அருகில் இருந்தவர்கள் கவனித்து அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமி பிரியாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவளது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமியின் தாய் பெருமாவிற்கு காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மின்னல் தாக்கி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    உத்தர பிரதேசம் மாநிலத்தில் பெய்து வரும் மழையில் நேற்று மின்னல் தாக்கியதில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. #Lightning #Fire
    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இந்த மாநிலத்தில் புழுதி புயலும் பலமாக தாக்கியது. இந்த புழுதி புயலில் சிக்கி 18 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    இந்நிலையில், உ.பி.யின் சம்பால் நகரில் நேற்று இரவு ராஜ்புரா பகுதியில் மின்னல் தாக்கியது.
    இதில் அந்த பகுதியில் உள்ள 100க்கு மேற்பட்ட குடிசை வீடுகள் தீ பிடித்து எரிந்தது.

    தகவலறிந்து அங்கு மூன்றுக்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்றன. அவர்கள் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். #Lightning #Fire
    ×