என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இரணியல்"
நாகர்கோவில்:
இரணியலை அடுத்த குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வில்சன்(வயது30). கட்டிடத் தொழிலாளி.
தற்போது மாங்காய் சீசன் என்பதால் அவரது வீட்டின் அருகே நின்ற மாமரத்தில் ஏராளமான மாங்காய்கள் கிடந்தது. இந்த நிலையில் வில்சன் சம்பவத்தன்று காலையில் தனது வீட்டின் மாடிக்கு சென்றிருந்த போது அருகில் நின்ற மாமரத்தில் மாங்காய் பறித்தார்.
அப்போது காற்று பலமாக வீசியதால் வில்சன் எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை, கழுத்து மற்றும் கால் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.
மேலும் படுகாயம் அடைந்த வில்சனை உறவினர்கள் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வில்சன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரேனியல் சேசுபாதம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜாக்கமங்கலம் முருங்கவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெயராம் (வயது 34). இவரது மனைவி ரம்யா (26). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி இரணியலை அடுத்த பட்டன்விளை பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கிருந்த அவர் திடீரென்று 2 குழந்தைகளுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ரம்யா மற்றும் அவரது குழந்தைகளை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்கள் எங்கும் இல்லை.
இதையடுத்து இரணியல் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் பொன்தேவி, சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான ரம்யா மற்றும் அவரது குழந்தைகளை தேடி வருகின்றனர்.
இரணியல்:
இரணியல் அருகே வில்லுக்குறி காரவிளை பகுதியை சேர்ந்தவர் வேணு (வயது 59). ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி. இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் குடும்பத்தோடு திருவனந்த புரத்திலும், மகள் இரணியல் அருகே மல்லங்கோடு பகுதியிலும் வசித்து வருகிறார்கள்.
வேணுவின் மனைவி திருவனந்தபுரத்தில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று இருந்தார். வேணு நேற்று காலை மகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து வீட்டை பூட்டிவிட்டு நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
பின்னர் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தது. அதில் இருந்த நகைகளும், பணமும் திருடப்பட்டிருந்தது.
வீட்டில் இருந்த 137 பவுன் நகை மற்றும் ரூ.26 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று இருந்தனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும்.
இதுகுறித்து இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ் பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ் பெக்டர் பிச்சை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத் தினார்கள்.
கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். 2 கைரேகைகள் சிக்கி உள்ளது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை நாய் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
கொள்ளை சம்பவம் குறித்து வேணு கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
வேணு வீட்டில் இருந்து வெளியே செல்வதை நோட்டமிட்டே கொள்ளையர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை சம்பவத்தின் போது வீட்டில் இருந்த வேணுவினுடைய நாயும் குறைக்க வில்லை. எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் தெரிந்த நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இரணியல் அருகே உள்ள செட்டியார்மடம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவிகா. இவர்களுக்கு பவுசிகா (13), ஜெபிஷா (7) என 2 மகள்கள் இருந்தனர்.
சுப்பிரமணியனுக்கும், தேவிகாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் 2 பேரும் பிரிந்து வாழ்கிறார்கள். குழந்தைகள் 2 பேரும் தேவிகாவுடன் இருந்தனர். மூத்த மகள் பவுசிகா அங்குள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பும், ஜெபிஷா 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இன்று காலை பவுசிகா விழித்தெழுந்ததும் வீட்டின் வெளிப்புற உத்திரத்தில் கட்டப்பட்டு இருந்த கயிற்றில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென கயிறு கட்டப்பட்டு இருந்த தூண் சரிந்து விழுந்தது. அந்த இடிபாடுகளில் பவுசிகா சிக்கி அலறினார். சத்தம் கேட்டு அவரது தாயார் தேவிகா ஓடி வந்தார்.
பவுசிகாவின் தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் வழிந்தது. தேவிகாவும், அக்கம்பக்கத்தினரும் சேர்ந்து பவுசிகாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், பவுசிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதை கேட்டு தேவிகா கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
இதுபற்றி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்