search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106977"

    • கடந்த சில நாட்களாக தெரு குழாய்கள் மூலம் தண்ணீர் வருவதில்லை.
    • 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி- கல்லணை சாலையில் காவிரி, கொள்ளிடம் ஆற்றங்கரை களில் கோவிலடி என்ற ஊர் அமைந்துள்ளது.

    கோவிலடி கிராமத்தில் கடந்த சில நாட்களாக தெரு குழாய்கள் மூலம் குடிநீர் வருவதில்லை. கோடை காலத்தில் குடிநீர் வருவதில்லை என்பதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை திடீரென்று கோவிலடி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் திருக்காட்டுப்பள்ளி -கல்லணை சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தோகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஐயா பிள்ளை, திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன், ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கொள்ளிடத்தில் இருந்து கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டு தண்ணீர் பல கிராமங்களுக்கு சென்றாலும், கோவிலடி கிராமத்திற்கு மட்டும் தண்ணீர் வருவதில்லை.

    இது குறித்து பலமுறை ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவிக்கப்பட்டும், அதிகா ரிகளுக்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று புகார் கூறினர்.

    இதைத் தொடர்ந்து தோகூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஐயா பிள்ளை இது குறித்து உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    இதனால் இந்த வழித்தடத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் நடந்தது
    • குடிநீர் வழங்க கோரி நடைபெற்றது

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட 24 வார்டு பகுதிகளுக்கும், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. பின்னர் கடந்த சில வாரங்களாக வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில், துறையூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதிகளில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால், அதிருப்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகம் முன்பு சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனை அறிந்த துறையூர் காவல் உதவி ஆய்வாளர் சந்திரகாந்த் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நகராட்சி அதிகாரியிடம் குறைகளை தெரிவிக்க பொதுமக்களை நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். இதனை அடுத்து நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற அப்பகுதி பொதுமக்கள், தங்களது பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்க கோரியும், குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து அங்கிருந்து அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நகராட்சி அலுவலர்கள் உடனடியாக குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். துறையூரிலிருந்து பெரம்பலூர் செல்லும் பிரதான சாலையில், குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • உப்பு நீர் அதிகளவில் கலந்து வருவதாக குற்றச்சாட்டு
    • கல்லாற்றில் இருந்து குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்க கோரிக்கை

    பெரம்பலூர்,

    வேப்பந்தட்டையை அடுத்துள்ள மேட்டுச்சேரி கிராமத்தில் கிணறு மூலம் குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. இந்த கிணற்று நீரில் உவர்ப்பு தன்மை அதிகமாக இருப்பதால் கல்லாற்றில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து கல்லாற்றில் இருந்து குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்த பணி கடந்த சில நாட்களாக ஆமை வேகத்தில் நடப்பதாக கூறி, நேற்று அந்த பகுதி மக்கள் வி.களத்தூர்- வேப்பந்தட்டை சாலையில் மேட்டுச்சேரி பஸ் நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் பிரபு மற்றும் வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது விரைவில் குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்தவுடன் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். மறியலால் வேப்பந்தட்டை- வி.களத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ராகுல் காந்தி எம்.பி.பதவி பறிப்பு கண்டித்து ரயில்வே ஜங்ஷனில் நடைபெற்றது
    • மாநிலத் தலைவர் லெனின் பிரசாத் உட்பட 50 பேர் கைது

    திருச்சி,

    அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தியின்நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து நாடு முழுவதும் கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ராகுல் காந்தி எம்.பி பதவியை பறித்த மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத் தலைமையில் திரண்டனர்.பின்னர் அவர்கள் ரயில் நிலையத்துக்குள் புகுந்து ரயிலை மறித்து தண்டவாளத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதைத்தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத்,மாவட்டத் துணைத் தலைவர் முரளி,மாவட்ட பொதுச் செயலாளர்கள் வில்ஸ் முத்துக்குமார், ஜி.எம்.ஜி.மகேந்திரன்,கோட்டத் தலைவர் சிவாஜி சண்முகம்,மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சரவணன் சுப. சோமு,இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சந்திரன், பீம நகர் காசிம், மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.டி.பிரிவு பி.எம். ஆர் தினேஷ் மற்றும் ஹரிஷ் பிரபு,செந்தூர் வாசன்,பஜார் மைதீன்,மன்சூர், திருச்சி ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல், திருச்சி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஸ்ரீ ராகவேந்திரா,உறையூர் கீரைகொல்லை சக்கரபாணி, திருச்சி இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.மோகன், காத்துமுத்து, மணிகண்டன், நாகமங்கலம் சீனிவாசன், திருச்சி வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் பிரபாகரன், லால்குடி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் லியோ ஸ்டான்லி, கலைப்பிரிவு மார்க்கெட் கணேஷ், கிஷோர்,சுசீந்திரன், சசிகுமார், திருச்சி வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், வடக்கு மாவட்ட இளைஞரணி தினேஷ் சத்யராஜ், மணப்பாறை சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராம் பிரகாஷ் ,உறையூர் வீரா, பிரியங்கா பட்டேல்,லால்குடி தொகுதி இளைஞர் காங்கிரஸ் நகரச் செயலாளர் பாபு, ஜெயராஜ், ரமேஷ், லால்குடி பிரகாஷ் , திருச்சி கலைப்பிரிவு சண்முகம், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.

    • விடுதலை சிறுத்தை கட்சி யினர் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
    • 50-க்கும் மேற்பட்டோர், காரைக்கால்-கும்ப கோணம் நெடுஞ் சாலையில், திருநள்ளாறு உள்வட்ட சாலை அருகே நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாரில் உள்ள கிராம பகுதிகளில் சேத மடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, விடுதலை சிறுத்தை கட்சி யினர் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட கிராமப் பகுதிகளில், பல சாலைகள் சேத மடைந்துள்ளதாக, அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ.விடம் பலமுறை எடுத்துகூறியும் யாரும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் கிராம பகுதியில் சேதம டைந்துள்ள சாலை களை உடனே சீரமைக்க வலியுறுத்தி, காரைக்கால் விடுதலை சிறுத்தை கட்சியினர், 50-க்கும் மேற்பட்டோர், காரைக்கால்-கும்ப கோணம் நெடுஞ் சாலையில், திருநள்ளாறு உள்வட்ட சாலை அருகே நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த திருநள்ளாறு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதனைத் தொடர்ந்து, வி.சி.க.வினர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மதுரை, திருமங்கலத்தில் காங்கிரசார் திடீர் மறியலில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மதுரை

    பிரதமர் நரேந்திர மோடி குறித்து கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக குஜராத் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து நாடு முழுவதும் காங்கிரசார் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மதுரையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோரிப்பாளையம் பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.மாவட்டத்தலைவர் கார்த்திகேயன், முன்னாள் நியமனக்குழுத்தலைவர் சிலுவை,செய்யது பாபு, பால் ஜோசப் உள்ளிட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக காங்கிரசார் கோஷம் எழுப்பினர்.



    திருமங்கலத்தில் காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர்.

    இதேபோன்று திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதில் நகர தலைவர் சவுந்தரபாண்டி, மாநில பொதுச் செயலாளர் மகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிகுமார், வட்டார தலைவர்கள் காசிநாதன், முருகேசன், மகளிரணி பிரவீனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.

    • குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.
    • அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார்.

    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.க்கு, அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தர விட்டது. இந்த நிலை யில் ராகுல்காந்திக்கு வழங்கிய தண்டனையை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.இரணியலில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடை பெற்றது. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார்.

    சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் ஜேக்கப் (குளச்சல்), சட்ட மன்ற சக்தி வேல்(பத்மநாபபுரம்) ஆகி யோர் முன்னிலை வகித்தனர். திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வந்த மெம்மோ ரயிலை மறித்த அவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன், ரீத்தாபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் விஜூமோன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜோண், ராபர்ட், ராஜன், நிஷாந்த், மணிகண்டன், ராஜேஷ், ஸ்டான்லி உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் இரணியல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர், தனிப் பிரிவு ஏட்டு சுஜின் ஆகியோர் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். மேலும் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெட்டூர்ணிமடம் சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நாகர்கோவில், மார்ச்.23-

    ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் சார்பில் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள விஜய்வசந்த் எம்பி அலுவலகம் முன்பு இருந்து மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் ஊர்வலமாக சென்று வெட்டூர்ணிமடம் சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் போலிங் பூத் தலைவர் ராதா கிருஷ்ணன், நாகர்கோவில் மேற்கு மண்டல தலைவர் சிவ பிரபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    போராட் டக்காரர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • காலி குடத்துடன் நடந்த மறியல் போராட்டத்தால் பரபரப்பு
    • அதிகாரிகள் தாமதத்தால் 3 மணி நேரம் ெதாடர்ந்த அவலம்

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம அருகே வேப்பூர் ஒன்றியம் புதுவேட்டைகுடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 1வது வார்டில் சுமார் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு கொடுப்பதற்காக, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் அனைத்திற்கும் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் இதற்கான பணிகள் முடிவடைந்து 6 மாதங்களுக்கும் மேல் ஆகியும் இதுவரை குடிநீர் சப்ளை நடைபெறவில்லை. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், உள்ளாட்சி துறை அலுவலர்கள் என பல இடங்களில் மனு அளித்தும் எந்த வித பயனும் இல்லை, இதனால் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீர் என்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குடியில் உள்ள அரியலூர் சாலையில் காலி குடங்களுடன் திரண்ட பெண்கள் குடிநீர் வழங்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.மறியல் போராட்டம் கேள்விப்பட்டு அப்பகுதிக்கு வந்த குன்னம் போலீசார் பெண்களை சமாதானம் செய்வதற்கு முயற்சி செய்தனர். ஆனால் அரசு அலுவலர்கள் வந்து உரிய பதில் அளிக்கும் வரை மறியல் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று பெண்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் அரசு அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவித்த போது தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்டு இருப்பதால் கூட்டம் முடிந்தவுடன்தான் வரமுடியும் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை மறியல் போராட்டமானது சுமார் 3 மணி நேரமாக தொடர்ந்தது. இதனால் போக்குவரத்து அப்பகுதியில் தடை பட்டது.கிராமசபா கூட்டம் முடிந்து அதன் பின்னர் மறியல் நடந்த இடத்திற்கு வந்த அரசு அலுவலர்கள் 2 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. தண்ணீர் தினத்தன்று தண்ணீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அரசு அலுவலர்கள் பேச்சு வார்த்தை
    • சுத்தமான குடிநீர் வழங்குவதாக உறுதி

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கிளியூர் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் வசித்து வருகின்றனர். நன்னை ஊராட்சியில் இருந்து கிளியூர் பகுதிக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் கிளியூர் பகுதிக்கு வழங்கப்படும் குடிநீர், பொதுமக்கள் குடிப்பதற்கு தகுதியற்றதாகவும், அதிக அளவில் சுண்ணாம்பு சத்து கலந்து இருப்பதால் இதனைப் பயன்படுத்தும் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்களும், சிறுநீரக கோளாறும் ஏற்படுகிறது.சுத்தமான குடிநீர் வழங்கக்கோரி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் செயல்படுத்தாததால் ஆத்திரம் அடைந்த கிளியூர் பொதுமக்கள், தங்களுக்கு தரமானதாகவும், சுகாதாரமானதாகவும் குடிநீர் வழங்க கோரி திடீரென நன்னை துணை மின் நிலையம் அருகில் பெருமத்தூர் சாலையில், காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்த தகவல் அறிந்த வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், குன்னம் போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து தூய குடிநீர் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அதனை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் பெருமத்தூர் நன்னை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சோலைப்பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் 448 குடியிருப்புகள் உள்ளன.
    • குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது.

    அவினாசி :

    அவினாசி சேவூர் ரோட்டில் உள்ள சோலைப்பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 448 குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு போதிய சாக்கடை வசதிகள் இல்லை என்று உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் அந்த பகுதி மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை இல்லை என்று கூறி இன்று காலை 9 மணியளவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்; குடியிருப்பு பகுதியில் சாக்கடை நீர் வெளியேற முடியாமல் குட்டை போல் தேங்கியுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது. இது குறித்து அதிகாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட வர்களிடம் அவினாசி தாசில்தார், பேரூராட்சித் தலைவர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் தாசில்தார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் இன்னும் 4 நாட்களில் முழுமையாக உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

    ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தொகுதி எம். எல். ஏ, மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் வர வேண்டும் அதுவரை போராட்டத்தை கை விட மாட்டம் என்று சாலையில் படுத்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவினாசி -சேவூர் சாலைகளின் இரண்டு புறங்களிலும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருக்கின்றன.

    • மேட்டு மகாதானபுரத்தில் குடிநீர் வராததை கண்டித்து பொது மக்கள் மறியல் போராட்டம்
    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    குளித்தலை,

    குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மகாதானபுரம் ஊராட்சி பகுதியான மகாதானபுரம் நான்காவது வார்டு பொதுமக்கள் சுமார் பத்து நாட்களுக்கு மேலாக குடிநீர் பிரச்சினை ஏற்படுவதாகவும், இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டி பழைய ஜெயங்கொண்டம் முதல் கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் மேட்டு மகாதானபுரம் பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தை தொடர்ந்து பகுதி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தகவல் அறிந்த லாலாபேட்டை காவல் துறையினர் மற்றும் ஊராட்சி துணைத் தலைவர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது, சாலை மறியல் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்,கிராமப் பகுதியில் ஏற்பட்ட சாலை மறியல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


    ×