search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106977"

    • கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • அரை மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை அவனியாபுரம் துக்காராம் தெரு, மருத்துவ காலனி பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர் சாக்கடையை சுத்தம் செய்யாததால் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவு நீர் வீட்டுக்குள் புகுந்தது.

    இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. இதையடுத்து பொதுமக்கள் இன்று அவனியாபுரம் பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த அவனி யாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் திலீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்கள் கலைந்து செல்ல வலியுறுத்தினார்.

    அதற்கு பொதுமக்கள் மறுத்ததால் உதவி பொறி யாளர் செல்வ விநாயகம் விரைந்து வந்து உங்கள் கோரிக்கையை சரி செய்கிறேன். சாக்கடையை சுத்தம் செய்கிறோம் என்று உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • அதிகாரிகள் பேச்சுவார்த்தை
    • உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டது

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த ரங்காபுரம் கூட்ரோட்டில், பயணிகள் நிழற்கூடம் அமைக்க நேற்று பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது பக்கத்தில் வசிக்கும் ஒருவர் தன்னுடைய பட்டா நிலத்தில் நிழற்கூடம் அமைக்க கூடாது என கூறியதாக கூறப்படுகிறது.

    இதை அறிந்த பகுதி மக்கள் நிழற்கூட பணியை தொடங்க வேண்டும் என்று கூறி, சோளிங்கர்-காவேரிப்பாக்கம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பிடிஓ முகமது சைபுதீன், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், விஏஒ முரளி மனோகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மேசிட், யோக பிரகாஷ், ஒன்றிய பொறியாளர் ஏகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேசி மறியலை கைவிட செய்தனர்.

    மேலும், நிழற்கூடம் அமைய உள்ள இடத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நிலத்தை மீண்டும் அளவீடு செய்து பணிகளை தொடங்க செய்தனர். பின்னர் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டது.

    • அதிராம்பட்டினம்- பட்டுக்கோட்டை சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல்.
    • அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வட மாநில தொழிலாளிகளுக்கு அனைத்து கட்டிடங்கள் சம்பந்தமான வேலைகளும் வழங்கப்படுவதால் கட்டிடத் தொழிலையே வாழ்வாதாரமாக உள்ள தமிழகத்தைச் சார்ந்த கொத்தனார், ஆசாரிகள், பெயிண்டர்கள் உள்ளிட்ட கட்டிட தொழிலாளிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இங்குள்ள கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று 100 மேற்பட்ட பெண்கள் உட்பட 300 கட்டிட தொழிலாளிகள் அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள சேர்மன்வாடி பகுதியில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சக்கரவர்த்தி மற்றும் போலிசார் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட குள்ளவீரன்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிபட்டு வந்தனர்.
    • அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், கொளத்தூர் நெடுஞ்சாலையில் திடீரென குடிநீர் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட குள்ளவீரன்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிபட்டு வந்தனர்.

    இந்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், கொளத்தூர் நெடுஞ்சாலையில் திடீரென குடிநீர் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    மறியல் குறித்து தகவல் அறிந்த மேட்டூர் போலீசார் மற்றும் நகராட்சி பொறியாளர் மணிமாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால், அந்த வழியாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து மறியலில் ஈடுபட்டனர்.
    • மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 19 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அருமனை:

    அருமனையை அடுத்த சிதறால் பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது.

    இந்த ஆலயம் முன்பு இன்று இந்து முன்னணி அமைப்பினர் திடீரென திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் அங்கு விநாயகர் சிலையையும் வைத்தனர்.

    இதனால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. தகவல் அறிந்து அருமனை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 19 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அந்த பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். இச்சம்பவம் காரணமாக இன்று அருமனை மற்றும் சிதறால் பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. 

    • இருக்கூர் அருகே உள்ள செஞ்சுடையாம்பாளையம் போயன்தோட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்ராஜா. இவரது மாட்டு தொழுவத்தில் கட்டியிருந்த பசுங்கன்று குட்டியை, மர்ம விலங்கு கடித்து கொன்றது.
    • அப்போது உடனடியாக இப்பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தை புலி என கருதப்படும் மர்ம விலங்கை பிடித்து வனபகுதியில் விடுவித்து, மக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, இருக்கூர் அருகே உள்ள செஞ்சுடையாம்பாளையம் போயன்தோட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்ராஜா. இவரது மாட்டு தொழுவத்தில் கட்டியிருந்த பசுங்கன்று குட்டியை, மர்ம விலங்கு கடித்து கொன்றது.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த இருக்கூர் கிராம நிர்வாக அலுவலர் வேனுகோபால், நாமக்கல் வனவர்கள் சந்திரசேகர், பிரியங்கா ஆகியோர் மர்ம விலங்கின் கால் தடங்களை பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதி மக்கள் கன்றுகுட்டியை சிறுத்தை புலி தாக்கி இருக்கலாம் என தெரிவித்தனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து அச்சத்தில் இருந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவில், செந்தில் ராஜாவின் தோட்டத்திற்கு அருகில் குடியிருக்கும் ராஜ்குமார் என்பவர் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்த்து வரும் நாயை, மர்ம விலங்கு கடித்து கொன்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து, இருக்கூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், இன்று காலை பரமத்தி-ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் உள்ள பிரிவு சாலையின் குறுக்கே அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது உடனடியாக இப்பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தை புலி என கருதப்படும் மர்ம விலங்கை பிடித்து வனபகுதியில் விடுவித்து, மக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    மறியல் குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரமத்தி வேலூர் சேகர் எம்.எல்.ஏ, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் வனத்துறை அதிகாரி சந்திரசேகர் தலைமையான குழுவினர் மற்றும் பரமத்திவேலூர் போலீஸ் டி.எஸ்.பி கலையரசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மர்ம விலங்கை விரைவில் பிடித்து அச்சத்தை போக்குவதாக உறுதி அளித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இருபுறமும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், அரசு பேருந்துகள், லாரிகள், கார்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கொடியேந்தி ஊர்வலம் செல்ல தடை விதித்ததால் பரபரப்பு
    • போலீசாருடன் வாக்குவாதம்

    திருச்சி, 

    தைப்பூசத்தை முன்னிட்டு விசுவ இந்து பரிசத் அமைப் பினர் அகில இந்திய செயலாளர் சானுமலைஜி தலை–மையில் இன்று காவிரி படித்துறைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பால் குடம், காவடி, வேல் மற்றும் அனுமன் கொடியுடன் பாத யாத்திரை–யாக வயலூர் முருகன் கோவிலுக்கு புறப் பட்டனர்.அப்போது அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார். பின்னர் போலீசார் அவர்களிடம் கொடியேந்தி சொல்ல அனுமதிக்க இயலாது என கூறினர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு மற் றும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் தொடர்ந்து அம்மா மண்டபம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட் டது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் கொடிகள் இல்லாமல் பாதயாத்திரைக்கு செல்லவும், நடுவில் ஏதும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க வயலூர் வரை போலீசார் பாதுகாப்புக்கு வருவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து அனைவரும் பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.

    • கூட்டமைப்பினர் குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.
    • ரேசன் கடைகளை ஒரு மாதத்திற்குள் திறக்காவிட்டால் ஆயிரக்கண்க்கான பெண்களுடன் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றார்.

    புதுச்சேரி:

    அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் ரேஷன்கடைகளை திறந்து இலவச அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க வலியுறுத்தி இன்று குடிமைப்பொருள் வழங்கல்துறை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

    இதற்காக சாரம் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் ஒன்று திரண்டனர். அங்கிருந்து ஜனநாயக மாதர் சங்க செயலாளர் இளவரசி தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தை அகில இந்திய மாதர் சங்க செயற்குழு உறுப்பினர் சுதா சுந்தர்ராமன் தொடங்கி வைத்தார்.

    ஊர்வலத்தில் இந்திய தேசிய மாதர் சங்க செயலாளர் அமுதா, தலித் பெண்கள் கூட்டமைப்பு சரளா, சமம் பெண்கள் சுய சார்பு இயக்கம் சிவகாமி, ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் முனியம்மாள், சத்யா, உமா, ஹேமலதா உட்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

    ஊர்வலம் கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. சாலையில் அமர்ந்து பெண்கள் கூட்டமைப்பினர் கோஷம் எழுப்பினர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் பெண்கள் போராட்டத்திற்கு ஒரு பெண் போலீசார்கூட இல்லை. இதனால் பெண்கள் மீது கை வைத்ததால் போலீசாருக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம், தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து கூட்டமைப்பினர் குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். வேண்டாம், வேண்டாம் ரெஸ்டோ பார் வேண்டாம், வேண்டும், வேண்டும் ரேஷன்கடைகள் வேண்டும் என கோஷமிட்டனர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், நிர்வாகிகள் ராமச்சந்திரன், ராம்ஜி, பிரபுராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    இது குறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளவரசி நிருபர்களிடம் கூறும்போது, ரேசன் கடைகளை ஒரு மாதத்திற்குள் திறக்காவிட்டால் ஆயிரக்கண்க்கான பெண்களுடன் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றார்.

    • முறையான அனுமதி பெறாததால் தடை விதிக்கப்பட்டது.
    • வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது.

    இதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறு த்தியிருந்தது.

    இதனிடையே ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் சின்னதிருப்பதி கோவில் திருவிழாவையொட்டி இன்று எருது விடும் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் இதற்கு, உாிய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் விழாவையொட்டி அந்த பகுதியில் உள்ள காலி இடத்தை சீரமைத்து, தடுப்புகள் மற்றும் மேடை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடு களையும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    100-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகளை பிடிக்க எராளமான இளைஞர்களும் அங்கு திரண்டனர். ஆனால், எருது விடும் விழாவை நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாததால் தடை விதிக்கப்பட்டது.

    அதிகாரிகளும், போலீசாரும் அங்கு வந்து விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை கூறி அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

    இதனால் அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் ஆத்திரம் அடைந்தனர். திடீரென கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் திரண்ட அவர்கள் சாலையின் நடுவே கற்களை கொட்டி போக்குவரத்தை முடக்கினர்.

    மேலும் அவ்வழியாக வந்த வாகனங்களை மறித்து அவற்றின் மீது ஏறிநின்று மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

    இந்நிலையில் இளை ஞர்களின் போராட்டம் எதி ரொலியாக மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    ஆனாலும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் எருது விடும் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

    ஏராளமானஅரசு பஸ்கள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

    இதனால் மீண்டும் அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது கல்வீசினர்.

    இதில் போலீசார் சிலருக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

    இதையடுத்து போரா ட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.

    வாகனங்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.பின்னர் போலீசார் படிப்படியாக போக்குவரத்தை சீர் செய்தனர்.

    • ஏரிக்காடு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் விநியோகிக்கவில்லை.
    • ஒகேனக்கல் வழியாக செல்லும் அஞ்செட்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள ஏரிக்காடு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் விநியோகிக்கவில்லை.

    இதனால் பள்ளி குழந்தைகள், அலுவலகப் பணிக்கு செல்வோர் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இதுகுறித்து புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என தெரிவித்து ஆத்திரமடைந்த பெண்கள் காலி குடங்களுடன் இன்று காலை பென்னாகரம் ஒகேனக்கல் வழியாக செல்லும் அஞ்செட்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது பேச்சுவார்த்தை நடத்த வந்த பஞ்சாயத்து தலைவர் பாஸ்கரிடம் பெண்கள் சராசரியாக கேள்வி கேட்டனர். கடந்த ஒன்றரை மாதமாக சாலையை சீரமைக்கின்றோம் என்ற பெயரில் சாலையை உடைத்து பைப் லைனை துண்டித்து சாலைப் பணிகளை நிறுத்தப்பட்டுள்ளன என முறையிட்டனர்.

    அதற்கு பஞ்சாயத்தில் போதுமான நிதி ஆதாரம் இல்லாததால் வேலை பணிகள் நிறுத்தப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    ஒகேனக்கல்போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • சந்தோஷ் என்பவர் மாணவிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
    • மாணவியின் பெற்றோர் வாலிபர் வேலை செய்யும் இடத்திற்கு சென்று தாக்கியுள்ளனர்.

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் சந்தைமேடு பகுதியை சேர்ந்த ஒருவரின் மகள் அதே பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    மாணவி தினமும் பள்ளிக்கு செல்லும் போது அதே பகுதியில் உள்ள தனியார் பேக்கரியில் பணியாற்றும் தீர்த்தம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் மாணவிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை மாணவி தன்னுடைய தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து மாணவியின் பெற்றோர் வாலிபர் பேக்கரியில் வேலை செய்யும் இடத்திற்கு சென்று சந்தோஷை தாக்கியுள்ளனர். பின்னர் வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தனர்.

    வேலை செய்யும் இடத்திற்கு வந்து தன்னை தாக்கியதாக ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரது சகோதரர் திருநாவுக்கரசு மற்றும் நண்பர்கள் மணி, தரணி ஆகியோருடன் சேர்ந்து மாணவியின் வீட்டிற்குள் புகுந்து கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதனால் பலத்த காயமுற்ற மாணவியின் குடும்பத்தினரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும் இது குறித்து பள்ளி மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். வாலிபரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மாணவியின் தந்தை உட்பட 3 பேரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்நிலையில் மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபரையும் வீடு புகுந்து தாக்கியவர்களையும் கைது செய்ய கோரி மாணவியின் உறவினர்கள் ஒடுகத்தூர் பஸ் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது பெண்கள் 3 பேர் திடீரென தீக்குளிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. 

    • சேந்தமங்கலம் அடுத்த கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடந்த 2011 - 2013 ஆண்டில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கிணறு வெட்டப்பட்டது.
    • அந்த மனுவில பொதுமக்கள் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து இன்று கொல்லிமலை அடிவாரப்பகுதியான காரவள்ளியில் பொதுமக்கள் கடைகளை அடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடந்த 2011 - 2013 ஆண்டில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கிணறு வெட்டப்பட்டது. இந்த கிணற்றில் இருந்து அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீரை பயன்படுத்தி வந்த னர். அதன்பின் அடுத்து சில ஆண்டுகளில் 7 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிணற்றை தூர்வாரியும் ஆழப்படுத்தி மின்மோட்டார் வைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில், இந்த கிணற்றின் அருகா

    மையில் உள்ள நிலத்தின் உரிமையாளர் ஞானசே கரன் என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிணறு தன்னுடையது எனவும் கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடியாது என மின்மோட்டார் மற்றும் மின்சார வயர்களை அப்புறப்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் குடிநீர் இன்றி தவித்து வந்த அப்பகுதியினர் பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கலெக்டர் என பலரிடமும் மனு அளித்தனர்.

    ஆனால் அந்த மனு தொடர்பாக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து இன்று கொல்லிமலை அடிவாரப்பகுதியான காரவள்ளியில் பொதுமக்கள் கடைகளை அடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மேலும் 3 மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டு வரும் மக்களிடம் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராத

    தால் ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் தொடர்ந்து

    சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இச்சம்பவம் சேந்தமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×