search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106977"

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிற்சங்கங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
    • தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணபுரம் காமராஜர் சிலை முன்பு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் துணைச் செயலாளர் கோவிந்தன், ஆட்டோ தொழிற்சங்க செல்வம் தலைமை தாங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னுபாண்டியன், முன்னாள் எம்.பி. அழகிரிசாமி முன்னிலை வகித்தனர். 240 நாட்கள் நிறைவடைந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும். உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியம், கட்டிட தொழிலாளர் நல வாரியம், ஆட்டோ தொழிலாளர் நல வாரியங்களை முறையாக செயல்படுத்த வேண்டும். ஆட்டோ,லோடு வேன்களை தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா செயலாளர் பலவேசம், ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ சங்கம் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிற்சங்கங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
    • தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணபுரம் காமராஜர் சிலை முன்பு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் துணைச் செயலாளர் கோவிந்தன், ஆட்டோ தொழிற்சங்க செல்வம் தலைமை தாங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னுபாண்டியன், முன்னாள் எம்.பி. அழகிரிசாமி முன்னிலை வகித்தனர். 240 நாட்கள் நிறைவடைந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும். உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியம், கட்டிட தொழிலாளர் நல வாரியம், ஆட்டோ தொழிலாளர் நல வாரியங்களை முறையாக செயல்படுத்த வேண்டும். ஆட்டோ,லோடு வேன்களை தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா செயலாளர் பலவேசம், ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ சங்கம் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • ஆடுதுறை வாய்க்காலில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
    • கும்பகோணம்- திருவையாறு சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள உள்ளிக்கடை ஊராட்சி, விசித்திரராஜபுரம் கிராமத்தில் காலனி தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. நீண்ட நாட்களாக சீர் செய்ய கோரியும், இந்த சாலையை சீரமைக்க யாரும் முன் வரவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை உடன் சீர் செய்ய வேண்டும் எனவும், சாலையில் மேற்புறம் உள்ள ஆடுதுறை வாய்க்காலில் தடுப்புச் சுவர் அமைத்திட வேண்டும் எனவும் இதற்கான நிதியை கூடுதலாக ஒதுக்ககோரி அந்த பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம வாசிகள் கும்பகோணம்- திருவையாறு நெடுஞ்சாலையில் விசித்திர ராஜபுரம் கிராமத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சிவகுமார், சுதா, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, மற்றும் வருவாய் துறையினர், காவல் துறையினர், விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த பேச்சு வார்த்தையில் இன்னும் மூன்று மாத காலத்திற்குள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றுவதாக உத்தரவாதம் அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் கும்பகோணம்- திருவையாறு சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • வாண்டான் கோட்டை பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பதில்லை என குற்றச்சாட்டு
    • உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி

    ஆலங்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருவரங்குளம் வாண்டா கோட்டை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இவ்வழியாக செல்லும் அரசு பேருந்துங்கள் இங்குள்ள பஸ் நிறுத்த்தில் நீண்ட காலமாக நிறுத்துவதில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும்மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்து வந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் போக்குவரத்து கழகத்தில் பலமுறை மனு கொடுத்தும் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் புதுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் சாலையில் நின்றதால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இது குறித்து தகவல் அறிந்தசம்பவ இடத்திற்கு வந்த வல்லத்திரக்கோட்டை போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வழியாக கடந்த கொரோனா காலத்திற்கு முன்பு சில பேருந்துகள் இயக்கப்பட்டு அந்த வழியாக சென்று வந்தது.
    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வழியாக கடந்த கொரோனா காலத்திற்கு முன்பு சில பேருந்துகள் இயக்கப்பட்டு அந்த வழியாக சென்று வந்தது. அதில் கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் பேருந்தில் ஏறி தாங்கள் செல்லும் பகுதிகளுக்கு சென்று வந்து பயனடைந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. அதிலிருந்து பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்து கழகம் இயக்கவில்லை. இதனால் கிராம பகுதியான கபிலர் மலை சுற்றுவட்டார பகுதியிலிருந்து வெளியூருக்கு செல்பவர்கள் பேருந்தில் ஏறி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 9 கிலோமீட்டர் சென்று பேருந்து ஏற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சம்பந்தப்பட்ட போக்குவரத்து த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் கபிலக்குறிச்சி ஊராட்சி கபிலர்மலை பகுதியில் கொரோனா காலத்திற்கு முன்பு இருந்த பேருந்து போக்குவரத்து வசதிகளை போலவே மீண்டும் அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கபில குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல் தலைமையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் கை சந்தித்து மனு கொடுத்தனர். ஆனாலும் இதுவரை பஸ்கள் இயக்கப்படவில்லை.

    ெகாரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க கோரியும், இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துவது குறித்தும் ஊர் பொதுக்கூட்டத்தில் முடிவு செய்னர். அதன்படி இன்று பொதுமக்கள் திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளை கண்டித்து கபிலர்மலை முழுவதும் இன்று கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேருந்து இயக்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

    • குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து மறியல்
    • போக்குவரத்து பாதிப்பு

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெருமத்தூர் குடிக்காடு காலனி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் இப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாதநிலை ஏற்பட்டது. மேலும் இப்பகுதி மக்கள் சமைப்பதற்கும், குடிநீருக்கும் மற்றும் தங்களின் அன்றாட தேவைகளுக்கும் போதிய குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் காலை திடீரென்று பெருமத்தூர் குடிக்காடு-வைத்தியநாதபுரம் சாலை வழியாக வந்த ஒரு அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது முறையாக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அரசு பஸ்சை இயக்க கோரி பொன்னேரி பஸ்நிலையம் அருகே புதிய தேரடி தெரு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    • பொன்னேரி போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்

    பொன்னேரி:

    பொன்னேரி பணிமனையில் இருந்து மொத்தம் 55 பஸ்கள் திருவள்ளூர், செங்குன்றம், கோயம்பேடு கும்மிடிப்பூண்டி, பழவேற்காடு சுண்ணாம்பு குளம், அண்ணாமலைச்சேரி, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் நேற்று இரவு பொன்னேரி பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் அண்ணாமலைச்சேரி பகுதிக்கு செல்லும் அரசு பஸ்சுக்காக (எண்:90சி) காத்திருந்தனர்.

    ஆனால நீண்ட நேரமாக பஸ்கள் வரவில்லை. இதனால் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்தனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது சரிவர பதில் கூறவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் குறித்த நேரத்தில் அரசு பஸ்சை இயக்க கோரி பொன்னேரி பஸ்நிலையம் அருகே புதிய தேரடி தெரு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் பொன்னேரி போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து பஸ்டிரைவர் ஒருவர் கூறும்போது, 'பொன்னேரி பஸ்பணி மனையில் மொத்தம் 55 பஸ்கள் உள்ளன. இதனை இயக்குவதற்கு 110 டிரைவர்கள் தேவை. ஆனால் 90 டிரைவர்கள் மட்டுமே உள்ளனர்.

    இதனால் அதிகமாக வேலை பளு உள்ளது. பல வழித்தடங்களுக்கு செல்ல வேண்டிய பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன' என்றார்.

    • சுப்பிரமணியபுரம் பகுதியில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்
    • கடந்த 5 தினங்களாக குடிநீரின்றி அப்பகுதி மக்கள் தவித்து வந்தனர்

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி 47வது வார்டுக்கு உட்பட்ட சுப்ரமணியபுரம் பகுதிகளில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியின் போது சுப்பிரமணியபுரம் பகுதிக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாயை நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் உடைத்துவிட்டனர். இதனால் கடந்த 5 தினங்களுக்கு மேலாக சுப்ரமணியபுரம் பகுதிக்கு மாநகராட்சி குடிநீர் வரவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் தரப்பிலும், அ.ம.மு.க. கவுன்சிலர் செந்தில்நாதன் தரப்பிலும் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உடைக்கப்பட்ட குடிநீர் குழாயை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனால் கடந்த 5 தினங்களாக குடிநீரின்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். இதரப் பகுதிகளை நோக்கி குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அலையும் நிலை உள்ளது.இந்நிலையில் குடிநீர் குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து இன்று கவுன்சிலர் செந்தில்நாதன் தலைமையில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் சுப்பிரமணியபுரம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த கே.கே நகர் போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கவுன்சிலர் செந்தில்நாதன் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் குழாயை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


    • மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள டிப்போ முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • இதில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    மதுரை

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (29-ந் தேதி) அரசை கண்டித்து மறியல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று காலை மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு அந்த அமைப்பை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் அலுவலகம் முன்புள்ள மெயின் ரோட்டில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

    மாநில தலைவர் கிருஷ்ணன், துணை பொது செயலாளர் தேவராஜ், அனைத்து துறை ஓய்வூதியர் கூட்டமைப்பு தலைவர் பிச்சைராஜன், மாவட்ட செயலாளர் பால்முருகன் உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    இதில் பங்கேற்றவர்கள் பதாகைகளை ஏந்தி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    மாதந்தோறும் முதல் தேதியில் பென்சன் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 86 மாத அகவிலைப்படி உயர்வு தொகை நிலுவையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    மறியல் காரணமாக இன்று காலை பைபாஸ் ரோட்டில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நின்றன.

    மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • நலமுடன் இருந்த குழந்தை, நேற்று திடீரென உயிரிழந்தது.
    • திடீரென அனைவரும் மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    ஓசூர்,

    ஓசூர் அருகேயுள்ள பேகேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ், கூலித் தொழிலாளி. இவரது மனைவி சத்யா (22).இவர்களுக்கு திருமணமாகி 1 வருடம் ஆகிறது.

    இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சத்யா கடந்த வெள்ளிக்கிழமை ஓசூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அதிகாலை அவருக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

    பிரசவத்தின்போது குழந்தை எளிதாக வெளியே வராததால், குழந்தையை டாக்டர்கள் கருவிகள் மூலம் வெளியே இழுத்து பிரசவம் பார்த்ததாகவும்.

    இதில் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து குழந்தை, மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது.

    நலமுடன் இருந்த குழந்தை, நேற்று திடீரென உயிரிழந்தது. இதனால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதையடுத்து அவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து ஆவேசத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவமனை நிர்வாகம் மற்றும் டாக்டர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் திடீரென அனைவரும் மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஓசூர் டவுன் போலீசார் மற்றும் தாசில்தார் கவாஸ்கர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். குழந்தை இறந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

    • மகுடஞ்சாவடி யூனியனுக்கு உட்பட்ட கன்னந்தேரியில் இன்று காலை விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட னர்.
    • பொங்கல் பரிசு உடன் கரும்பை அரசு அறிவிக்க கோரி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து விவசாயிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி யூனியனுக்கு உட்பட்ட கன்னந்தேரியில் இன்று காலை விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட னர். கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் பொங்கல் பரிசாக கரும்பை அரசு அறிவிக்கும் என்ற நோக்கில் பெருமளவில் விவசாயிகள் கரும்பை பயிர் செய்தனர். ஆனால் இந்த ஆண்டு அரசு அறிவித்த பொங்கல் பரிசில் கரும்பு இடம்பெறாததால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

    பெருமளவில் முதலீடு செய்து ஓராண்டாக வளர்த்தும் உரிய விலை கிடைக்காது என்ற ஆதங்கத்தில் பொங்கல் பரிசு உடன் கரும்பை அரசு அறிவிக்க கோரி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து விவசாயிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்ததின் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

    • சேலம் லீ பஜார் அருகே உள்ள 1 3/4 ஏக்கர் நிலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது.
    • அந்த இடத்தில் வீடு கட்டி கொடுக்க முடியாது என்பதற்கான கடிதத்தை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பித்த தாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் லீ பஜார் அருகே உள்ள 1 3/4 ஏக்கர் நிலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது. இதனை எதிர்த்து லீ பஜார் தரப்பில் கோர்ட்டில் வழக்கு

    தொடரப்பட்டது. தற்போது வரை வழக்கு நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு இதுவரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை.

    இது தொடர்பாக பலமுறை

    அந்த பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

    ஆனாலும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் வருவாய் துறை சார்பில், அந்த இடத்தில் வீடு கட்டி கொடுக்க முடியாது என்பதற்கான கடிதத்தை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பித்த தாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர், தெப்பக்குளம் அருகே 3 ரோடு செல்லும் சாலையில் திரண்டனர். பின்னர் அங்கு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மறியல் போராட்டம் நடந்தது. இதற்கிடையே அங்கு வந்த செவ்வாய்பேட்டை போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனாலும் பொதுமக்கள் மறியலை கைவிடவில்லை. வருவாய்த்துறையினர் வந்து வீடு கட்டி தருவதாக உறுதி அளித்தால் தான் அங்கிருந்து கலைந்து செல்வோம் என்றும் கூறினார். இதனால் மறியல் போராட்டம் நீடித்து வருகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு நிலவுவதால், அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபடி உள்ளனர். 

    ×