search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107099"

    • பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது.
    • 9 நாட்களும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    திருப்பதியை அடுத்த அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (புதன்கிழமை) தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி நேற்று மாலை 6 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை சாஸ்திர பூர்வமாக மேதினி பூஜை, சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் நடந்தது.

    பிரம்மோற்சவ விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சாளுவப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரங்கோலி கோலம் வரையப்பட்டுள்ளது. பக்தர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    இன்று (புதன்கிழமை) காலை கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா, நாளை (வியாழக்கிழமை) காலை சின்ன சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 2-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 3-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, மாலை கல்யாணோற்சவம், இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா.

    4-ந்தேதி காலை மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, இரவு கருட வாகன வீதிஉலா, 5-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா, 6-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 7-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 8-ந்தேதி காலை சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது.

    மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி தனித்தும், உபயநாச்சியார்களுடன் இணைந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 9 நாட்களும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    • திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலின் பிரமோற்ச விழா நடைபெற்று வருகிறது.
    • சுவாமி, தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது.

    திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவிலின் பிரமோற்ச விழா நடைபெற்று வருகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடைபெறுகிறது.

    விழாவின் 5-வது நாளான நேற்று காலை மோகினி அலங்காரத்தில் காட்சியளித்தார். மங்கள வாத்தியங்கள் முழங்க, பஜனை, கோலாட்டங்களுடன் கோவில் மாட வீதிகளில் வாகனசேவை நடைபெற்றது. பின்னர் சுவாமி, தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை கருடவாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • 2-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 3-ந் தேரோட்டம் நடைபெறுகிறது.

    திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.திருவரங்கம் மேலை வீடு எனவும், திருவேங்கடம் வடக்கு வீடு எனவும், திருமாலிருஞ்சோலை தெற்கு வீடு எனவும், திருக்கண்ணபுரம் கீழை வீடு எனவும் போற்றப்படுகிறது.

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்க கருட சேவையும், சவுரிராஜ பெருமாள் ஓலை சப்பரத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, வருகிற 2-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 3-ந் தேரோட்டமும் நடைபெறுகிறது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன், கணக்கர் உமா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • 7-ந்தேதி மரத்தேரோட்டம் நடக்கிறது.
    • 8-ந்தேதி சக்கர ஸ்நானம் மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது.

    திருப்பதி மாவட்டம் நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (புதன்கிழமை) தொடங்கி 8-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.

    அதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அங்குரார்ப்பண நிகழ்ச்சியின் பாரம்பரிய சடங்குகளான புண்ய ஹவச்சனம், மிருத்ய கிரஹணம் மற்றும் சேனாதிபதி உற்சவம் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து நாளை (புதன்கிழமை) காலை கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா, 1-ந்தேதி காலை சின்ன சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 2-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதி, 3-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா, 4-ந்தேதி காலை பல்லக்கு வாகனத்தில் மோகினி அவதாரத்தில் வீதிஉலா, இரவு கருட வாகன வீதிஉலா.

    5-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா, 6-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 7-ந்தேதி காலை மரத்தேரோட்டம், மாலை கல்யாண உற்சவம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 8-ந்தேதி காலை சக்கர ஸ்நானம் மற்றும் இரவு கொடியிறக்கம் நடக்கிறது. அத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும் உபயநாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் இணைந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    பிரம்மோற்சவ விழாவையொட்டி திருப்பதி தேவஸ்தானத்தின்கீழ் செயல்படும் இந்து தர்மா பிரசார பரிஷத், தாச சாகித்ய திட்டம் மற்றும் அன்னமாச்சாரியார் திட்ட கலைஞர்கள் 9 நாட்களும் பஜனைகள், கோலாட்டம் போன்ற கலாசார நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

    • ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை கோவிந்தராஜசாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • இன்று தங்கக் கருட வாகன வீதிஉலா நடக்கிறது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 7 மணியில் இருந்து காலை 9 மணிவரை கற்பக விருட்ச வாகனத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அமிர்தம் வேண்டி பார்க்கடலை கடைந்தபோது, அதில் இருந்து தோன்றிய மரம் கற்பக விருட்சம். அந்த மரத்தின் கீழ் அமர்ந்து வரம் வேண்டி தியானம் செய்தால், பக்தர்கள் விரும்பும் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே பக்தர்களுக்கு வேண்டிய வரம் அளிக்க உற்சவர் கோவிந்தராஜசாமி உபயநாச்சியார்களுடன் இணைந்து சிறப்பு அலங்காரத்தில் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார்.

    அதைத்தொடர்ந்து காலை 9.30 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை கோவிந்தராஜசாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை சர்வ பூபால வாகனத்தில் உற்சவர்கள் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வீதிஉலாவில் திருமலை மடாதிபதிகள், கங்கணப்பட்டர் ஏ.பி.சீனிவாச தீட்சிதுலு, கோவில் துணை அதிகாரி சாந்தி, உதவி அதிகாரி ரவிக்குமார், கண்காணிப்பாளர் நாராயணா, கோவில் ஆய்வாளர் ராதாகிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணியில் இருந்து இரவு 9.30 மணி வரை கருடசேவை (தங்கக் கருட வாகன வீதிஉலா) நடக்கிறது.

    • ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை கோவிந்தராஜசாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • உற்சவர்களுக்கு ஊஞ்சல் சேவை நடந்தது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று அனந்த சுவாமி அலங்காரத்தில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தீய சக்திகளிடம் இருந்து பக்தர்களை காக்கும் கடவுளான மகாவிஷ்ணு எடுத்த அவதாரத்தில் ஒன்று நரசிம்மம். பாதி மனித உருவம், பாதி சிங்க உருவத்துடன் தூணில் இருந்து வெளிப்பட்டவர். தன்னை சரண் அடைந்தால் தீய சக்திகளிடம் இருந்து காப்பேன் என்று உணர்த்தவே மகாவிஷ்ணுவாகிய கோவிந்தராஜசாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதைத்தொடர்ந்து காலை 9.30 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை கோவிந்தராஜசாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை உற்சவர்களுக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 7 மணியில் இருந்து காலை 9 மணி வரை முத்துப்பந்தல் வாகனத்தில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    நிகழ்ச்சியில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், கங்கணபட்டர் ஏ.பி. சீனிவாசதீட்சிதுலு, கோவில் துணை அதிகாரி சாந்தி, உதவி அதிகாரி ரவிக்குமார், கண்காணிப்பாளர் மோகன் ராவ், ஆய்வாளர் தனஞ்சயலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 2-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
    • 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.

    திருவரங்கம் மேலை வீடு எனவும், திருவேங்கடம் வடக்கு வீடு எனவும், திருமாலிருஞ்சோலை தெற்கு வீடு எனவும், திருக்கண்ணபுரம் கீழை வீடு எனவும் போற்றப்படுகிறது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி வருகிற 29-ந் தேதி தங்க கருடசேவையும், 2-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 3-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், கோவில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • 30-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 1-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இத்தகைய சிறப்புவாய்ந்த இக்கோவிலில் பிரமோற்சவ விழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. புஷ்ப பல்லக்கு உற்சவத்தில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகிய அடியார்கள் நால்வரும் பல வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதையடுத்து வருகிற 28-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் ரிஷப வாகன சகோபுர வீதியுலாவும், 30-ந் தேதி காலை தேரோட்டமும், 31-ந் தேதி சனீஸ்வரர் பகவான் தங்ககாக வாகனத்தில் சகோபுர வீதியுலாவும், ஜூன் 1-ந் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • 2-ந்தேதி திருத்தேர் உற்சவம் நடக்கிறது.
    • 3-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

    காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தபுராணம் அரங்கேற்றிய திருக்கோவிலான குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை மூலவருக்கும், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான இன்று முதல் காலை மற்றும் மாலை இரு வேலைகளில் பல்வேறு வாகனங்களில் முருகர், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி நான்கு ராஜவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தர உள்ளார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 26-ந்தேதி மயில்வாகன வீதி உலாவும், ஜூன் 2-ந்தேதி திருத்தேர் உற்சவமும், ஜூன் 3-ந்தேதி வள்ளி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. ஜூன் 4-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

    • காலையில் மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.
    • பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழுப்புரம்:

    செஞ்சியை அடுத்த சிங்கவரம் கிராமத்தில் மலை மீது உள்ளது ரங்கநாத பெருமாள் கோவில். இக்கோவில் பல்லவர் கால குடவரை கோவிலாகும். செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்கு வணங்கிய தெய்வம். இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் பிரமோற்சவ திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியே ற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராத னைகள் நடந்தது. காலை, இரவு சாமி ஊர்வலம் ஆகியவை நடைபெற்றது.

    முக்கிய நிகழ்வாக இன்று தேர்த்திருவிழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு காலையில் மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆரா தனைகள் நடத்தப்பட்டது. பின்னர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் ஏற்றப்பட்டு தேர் திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராம ங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் மாட வீதி வழியாக சென்று மீண்டும் தேர் நிலையை அடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை யத்துறை மேல்மலை யனூர் அங்காளம்மன் கோவில் உதவி ஆணையர் ஜீவா னந்தம் மேற்பார்வையில் உபயதாரர்கள் மற்றும் கிராம பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் செய்தி ருந்தனர். பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பிரம்மோற்சவ விழா 26-ந்தேதி தொடங்கி ஜூன் 3-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
    • ஜூன் 2-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.

    அதையொட்டி 25-ந்தேதி மாலை அங்குரார்பணம், 26-ந்தேதி கொடியேற்றம், 30-ந்தேதி கருட வாகன வீதிஉலா, ஜூன் 2-ந்தேதி தேரோட்டம், 3-ந்தேதி சக்கர ஸ்நானம் ஆகியவை நடக்கிறது.

    பிரம்மோற்சவ விழா நாட்களில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பக்தி கலாசார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

    • பிரம்மோற்சவ விழா 31-ந்தேதி தொடங்கி ஜூன் 8-ந்தேதி வரை நடக்கிறது.
    • 7-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதி மாவட்டம் அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 31-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 8-ந்தேதி வரை நடக்கிறது.

    முக்கிய விழாவாக ஜூன் 3-ந்தேதி கல்யாணோற்சவம், 4-ந்தேதி கருட சேவை, 7-ந்தேதி தேரோட்டம், 8-ந்தேதி சக்கர ஸ்நானம் ஆகியவை நடக்கிறது.

    ×