search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107099"

    • நாளை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடக்கிறது.
    • 19-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) முதல் 26-ந்தேதி வரை வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது.

    முதல் நாளான இன்று ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரின் தீவிர பக்தரான கண்ணப்பருக்கே முதல் பூஜை வழக்கப்படும் என்பதைக் குறிக்கும் வகையில் ஸ்ரீகாளஹஸ்தி அருகே கண்ணப்பர் மலை மீதுள்ள கண்ணப்பர் கோவிலில் கண்ணப்பர் கொடியேற்றம் இன்று மாலை 4 மணியளவில் நடக்கிறது. அத்துடன் அங்குரார்ப்பணமும் நடக்கிறது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மூலவர் சன்னதி எதிரில் உள்ள தங்கக் கொடிமரத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடக்கிறது.

    15-ந்தேதி காலை 9 மணியளவில் சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், இரவு 8 மணியளவில் பூத வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் நான்கு மாட வீதிகளில் உலா.

    16-ந்தேதி காலை 9 மணியளவில் ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், இரவு 9 மணியளவில் ராவணசூர வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதி உலா.

    17-ந்தேதி காலை 9 மணியளவில் ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், இரவு சேஷ வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா.

    18-ந்தேதி மகா சிவராத்திரி விழா, காலை 10.30 மணியளவில் இந்திர விமான வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், இரவு 9.30 மணியளவில் தங்க நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், தங்க சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா.

    19-ந்தேதி காலை 11 மணியளவில் தேரோட்டம், இரவு 8 மணியளவில் நாரதர் புஷ்கரணியில் தெப்போற்சவம்.

    20-ந்தேதி காலை 9 மணியளவில அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், இரவு 9 மணியளவில் யானை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரா், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கோவிலில் இருந்து மணமக்கள் அலங்காரத்தில் ஊர்வலமாக புறப்பட்டு நகரி வீதியில் உள்ள கோவில் திருக்கல்யாண மண்டபத்தை அடைகின்றனர்.

    21-ந்தேதி அதிகாலை 3 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்-ஞானப்பிரசுனாம்பிகை தாயார் திருக்கல்யாண உற்சவம். காலை 11 மணியளவில் புதுமண தம்பதியர் அலங்காரத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் அம்பாரி வாகனங்களில் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து கோவில் வரை ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இரவு 7 மணியளவில் நடராஜர் (சபாபதி) திருக்கல்யாண உற்சவம்.

    22-ந்தேதி காலை 8 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் ஊர்வலமாக புறப்பட்டு கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்கிறார்கள். கிரிவலம் நிறைவடைந்ததும் இரவு 9 மணியளவில் குதிரை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா.

    23-ந்தேதி காலை 9 மணியளவில் கேடிக வாகனங்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா. மதியம் 12 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் வசந்த உற்சவம். கொடியிறக்கம், இரவு 9 மணியளவில் சிம்மாசனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதி உலா.

    24-ந்தேதி இரவு 8 மணியளவில் பல்லக்கு சேவை (3 பல்லக்குகள்)

    25-ந்தேதி இரவு 9 மணியளவில் ஞானப்பிரசுனாம்பிகை மூலவர் சன்னதி எதிரில் உள்ள பள்ளியறையில் ஏகாந்த சேவை.

    26-ந்தேதி காலை 9.30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவமூர்த்திகளுக்கு சாந்தி அபிஷேகம். இத்துடன் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா முடிகிறது.

    மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு தெரிவித்துள்ளார்.

    • நடன கலைஞர்களின் கோலாட்டங்கள், பஜனைகள் நடந்தது.
    • இன்று சிம்ம, முத்துப்பந்தல் வாகன வீதி உலா நடக்கிறது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் கையில் புல்லாங்குழலை வைத்துக் கொண்டு 'முரளி கிருஷ்ணர்' அலங்காரத்தில் சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    வாகனத்துக்கு முன்னால் நடன கலைஞர்களின் கோலாட்டங்கள், பஜனைகள் நடந்தது. மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை உற்சவர்களான கல்யாண வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கல்யாண வெங்கடேஸ்வரர் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதி உலா நடக்கிறது.

    • ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
    • இன்று பூத வாகன வீதிஉலா, சிம்ம வாகன வீதிஉலா நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை உற்சவர் கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் சூரியபிரபை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வாகனத்துக்கு முன்னால் வீதிகளில் பஜனைகள், கோலாட்டங்கள் நடந்தன. மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. உற்சவர்களான சோமஸ்கந்தமூர்த்திக்கும், காமாட்சி தாயாருக்கும் காலை 10.30 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், பழச்சாறு ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. இரவு சந்திர பிரபைவாகன வீதிஉலா நடந்தது. அதில் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை பூத வாகன வீதிஉலா, இரவு சிம்ம வாகன வீதிஉலா நடக்கிறது.

    • இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது.
    • இன்று இரவு ஹம்ச வாகன வீதிஉலா நடக்கிறது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

    கோவிலில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க, பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்ப வைகானச ஆகம விதிப்படி காலை 8.40 மணியில் இருந்து காலை 9 மணிக்குள் மீன லக்னத்தில் பாரம்பரிய கருட கொடியேற்றம், கங்கணப்பட்டர் பாலாஜி ரங்காச்சாரியுலு தலைமையில் நடந்தது.

    முன்னதாக காலை 6.30 மணியில் இருந்து காலை 8.15 மணி வரை திருச்சி உற்சவம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து, கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு கொடி மரம் அருகே வைக்கப்பட்டனர்.

    பிரதான அர்ச்சகர்கள் விஸ்வக்சேனர் வழிபாடு, வாஸ்து ஹோமம், கருட லிங்க ஹோமம், கருட பிரதிஷ்டை, ரக்ஷா பந்தனம் உள்ளிட்டவை நடத்தினர்.

    கொடியேற்றும் விழாவில் பங்கேற்ற திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மோற்சவ விழா வாகனச் சேவைகள் நடக்கின்றன. எனவே விழாவையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. தினமும் காலையில் 8 மணியில் இருந்து காலை 9 மணிவரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரையிலும் வாகனச் சேவைகள் நடக்கின்றன. பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும், என்றார்.

    கொடியேற்றும் நிகழ்ச்சியில் சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, வைகானச ஆகம ஆலோசகர் மோகன ரங்காச்சாரியுலு, உதவி அதிகாரி குருமூர்த்தி, கண்காணிப்பாளர் செங்கல்ராயலு, கோவில் ஆய்வாளர் கிரண்குமார் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து நேற்று இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா நடக்கிறது.

    • ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது.
    • இன்று சூரிய, சந்திர பிரபா வாகன வீதிஉலா நடக்கிறது.

    திருப்பதி கபிலதீர்த்தம் அருகில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் 10 நாள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. அதையொட்டி பஞ்சமூர்த்திகளான சோமாஸ் கந்தமூர்த்தி, காமாட்சி தாயார், விநாயகர், சண்டிகேஸ்வரர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி உற்சவர்கள் கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் காலை 8.54 மணிக்கு மீன லக்னத்தில் சைவ சமய நியதிப்படி கங்கணப்பட்டர் உதயசுவாமி தலைமையில் வேதமந்திரங்கள், சங்க நாதங்கள் முழங்க, பக்தர்கள் சிவ.. சிவ.. சங்கரா.. சம்போ மகாதேவா எனப் பக்தி கோஷம் எழுப்ப, வேதபண்டிதர்கள் ரிக், யஜுர், சாம, அதர்வன வேதங்களை ஓத, அர்ச்சகர்களின் சிவ நாமஸ்மரணங்களுக்கு இடையே சாஸ்திரபூர்வமாகக் கொடியேற்று விழா நடந்தது. சிவப்பு நிறத்தில் நந்தி உருவம் வரையப்பட்ட வெள்ளைநிற கொடியை கொடிமரத்தில் ஏற்றினர்.

    விழாவின் ஒரு பகுதியாக கொடிமரத்துக்கு அபிஷேகம், பலி, யாகம், திருவிளக்கு வழிபாடு, உபசாரம் நடந்தது. ஆண்டுக்கு ஒருமுறை பிரம்மோற்சவ விழாவையொட்டி கொடியேற்ற நாளில் மட்டும் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

    தீபாராதனையின் ஒரு பகுதியாக ரத ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, தீபாராதனை, கும்ப ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு சத்திரம், சாமரம், கண்ணாடி, சூரியன் சந்திரன், விசாணக்கரம், கொடி போன்றவற்றை வைத்து உபசாரம் செய்யப்பட்டது.

    பின்னர் உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் தனித்தனி பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணிவரை ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    கொடியேற்றும் நிகழ்ச்சியில் கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி பார்த்தசாரதி மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சூரிய பிரபா வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபா வாகன வீதிஉலா நடக்கிறது.

    • பிரம்மோற்சவ விழா மார்ச் 30-ந்தேதி தொடங்க உள்ளது.
    • ஏப்ரல் 5-ந்தேதி சீதா-ராமர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

    ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடுகளை தேவஸ்தான இணை அதிகாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில் உள்ள கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (மார்ச்) 30-ந்தேதி அங்குரார்ப்பணத்துடன் தொடங்க உள்ளது. அதையொட்டி முன்னேற்பாடு பணிகளை 2 மாதங்களுக்கு முன்பே திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தொடங்கினர்.

    இந்தநிலையில் திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், கோவில் மற்றும் கல்யாண மண்டபங்களில் நடந்து வரும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு துறை அதிகாரிகளுடன் துறை சார்ந்த பணிகளின் நிலவரங்கள் குறித்துக் கேட்டறிந்தார்.

    பின்னர் நிருபர்களிடம் வீரபிரம்மன் கூறுகையில், ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோவிலில் நடக்க உள்ள பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் கால அட்டவணைக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஏப்ரல் மாதம் 5-ந்தேதி சீதா-ராமர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அன்று ஆந்திர மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார்.

    கோவிலின் நுழைவு வாயில்கள், கேலரிகள், அன்னப்பிரசாதம், குடிநீர் ஏற்பாடுகள், நடனம் மற்றும் இசை உள்ளிட்ட ஆன்மிக கலாசார நிகழ்ச்சிகள், மலர் மற்றும் மின் அலங்காரங்கள், பாதுகாப்பு போன்ற ஏற்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ விழா தொடர்பாக தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி. தர்மா ரெட்டி அனைத்து அதிகாரிகளுடனும் ஆய்வுக்கூட்டத்தை நடத்துவார், எனத் தெரிவித்தார்.

    ஆய்வின்போது என்ஜினீயர்கள் நாகேஸ்வர ராவ், வெங்கடேஸ்வருலு, சுமதி, கோவில் துணை அதிகாரிகள் நடேஷ்பாபு, சுப்பிரமணியம், குணபூஷன்ரெட்டி, சந்திரசேகர், கூடுதல் சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சுனில் குமார், பூங்கா இலாகா அதிகாரி சீனிவாஸ், சிறப்பு கேட்டரிங் அதிகாரி ஜி.எல்.என்.சாஸ்திரி, பப்ளிகேஷன்ஸ் பிரிவு சிறப்பு அதிகாரி ராமராஜு மற்றும் பிற அதிகாரிகள் உடனிருந்தனர்.

    முன்னதாக, ராஜம்பேட்டை மாவட்டத்தில் உள்ள 108 அடி உயரம் அமைக்கப்பட்டுள்ள தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார் உருவச்சிலையில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புண்யாஹவச்சனம், மிருட்சங்கரஹணம், சேனாதிபதி உற்சவம் நடந்தது.
    • புற்று மண் எடுத்து சிறப்பு பூஜை நடந்தது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை கோவில் வளாகத்தில் புற்று மண் எடுத்து சிறப்புப்பூஜைகள் செய்து அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக புண்யாஹவச்சனம், மிருட்சங்கரஹணம், சேனாதிபதி உற்சவம் நடந்தது.

    அங்குரார்ப்பண நிகழ்ச்சியில் சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, உதவி அதிகாரி குருமூர்த்தி, கண்காணிப்பாளர் செங்கல்ராயலு, கோவில் ஆய்வாளர் கிரண்குமார் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) காலை 8.40 மணியில் இருந்து காலை 9 மணி வரை மீன லக்னத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    • பிரம்மோற்சவம் இன்று தொடங்குகிறது.
    • கோவில் வளாகத்தில் புற்று மண் எடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ கொடியேற்றம் இன்று (சனிக்கிழமை) காலை 8.54 மணிக்கு மீன லக்னத்தில் நடக்கிறது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் முறையே காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையிலும், இரவு 8 மணியில் இருந்து 10 மணி வரையில் வாகன சேவைகள் நடக்கின்றன.

    பிரம்மோற்சவத்துக்கான அங்குரார்ப்பண உற்சவம் நேற்று மாலை நடந்தது. கோவில் வளாகத்தில் புற்று மண் எடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    அதில் தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி பார்த்தசாரதி, கண்காணிப்பாளர் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த விழா 13-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.
    • 20-ந்தேதி சிவ பார்வதி திருக்கல்யாணம் நடக்கிறது.

    ஆந்திர மாநிலம், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வரும் 13-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 13 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

    அதன்படி முதல் நாளான 13-ந் தேதி பிற்பகல் 2 மணியளவில் சிவன் கோவிலில் மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞான பிரசுனாம்பிகை தாயார், பக்த கண்ணப்பர் ஆகியோருக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்படும்.

    அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயார், பக்த கண்ணப்பர் ஆகியோரை பல்லக்கில் வைத்தும், உடுக்கை படம் வரையப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடியை மேள தாளம் முழங்க, வாண வேடிக்கைகளுடன் ஸ்ரீகாளஹஸ்தியில் இருந்து பக்த கண்ணப்பர் கோவிலான கைலாசகிரி மலைக்குப் பக்தர்கள், ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர்.

    அங்கு, வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க பக்த கண்ணப்பர் கோவில் கொடி மரத்தில் அர்ச்சகர்கள் கொடியேற்ற உள்ளனர். பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. கோவில் கோபுரங்கள் வாகன சேவையில் ஈடு படுத்தப்படும் வாகனங்களுக்கு வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்களை கவரும் வகையில் 4 மாட வீதிகளில் தரையில் வண்ண ரங்கோலி கோலங்கள் வரையப்பட்டு வருகின்றன. 2-வது நாள் காளஹஸ்தி சிவன் கோவிலில் கொடியேற்றம் நடைபெறுகிறது இதையடுத்து 15-ந் தேதி காலை பூத வாகன சேவையும் மாலை சுக வாகன சேவையும் நடைபெறுகிறது.

    16-ந் தேதி காலை ராவண வாகன சேவையும், மாலை மயூர வாகன சேவையும் 17ஆம் தேதி சேஷ வாகன சேவையும் மாலை யாழி வாகனமும் 18-ந் தேதி மகா சிவராத்திரி அன்று லிங்கோத்ஷவமும், மாலை இந்திர விமான வாகன சேவையும், 19-ந் தேதி முக்கிய நிகழ்வாக ரத உற்சவம் நடைபெறுகிறது. மாலை கோவில் வளாகத்தில் உள்ள திருக்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.

    20-ந்தேதி சிவ பார்வதி திருக்கல்யாணமும், 21-ந் தேதி சபாபதி திருக்கல்யாணமும், 22ந் தேதி கிரி பிரதக்ஷனா நடைபெறுகிறது.23-ந் தேதி யாத்ரிகர் துவாரஜனம் நடைபெற உள்ளது.

    26 ஆம் தேதி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் நித்திய பூஜைகளுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. பிரமோற்சவ விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட இடங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சமூக விரோத கும்பலை கண்காணிக்க கூடுதலாக ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது.

    பக்தர்களை கட்டுப்படுத்தி வரிசையில் தரிசனத்திற்கு அனுப்பு வதற்காக ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • நாளை அங்குரார்ப்பணம் நடக்கிறது.
    • 18-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருகிற 11-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்க உள்ளது. அதையொட்டி 10-ந்தேதி மாலை கோவிலில் அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து 11-ந்தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் மீன லக்னத்தில் நடக்கிறது. அன்று இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 12-ந்தேதி காலை சூரிய பிரபா வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபா வாகன வீதிஉலா, 13-ந்தேதி காலை பூத வாகன வீதிஉலா, இரவு சிம்ம வாகன வீதிஉலா, 14-ந்தேதி காலை மகர வாகன வீதிஉலா, இரவு சேஷ வாகன வீதிஉலா, 15-ந்தேதி காலை திருச்சி உற்சவம், இரவு அதிகார நந்தி வாகன வீதிஉலா.

    16-ந்தேதி காலை வியாக்ர வாகன வீதிஉலா, இரவு கஜ வாகன வீதிஉலா, 17-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு குதிரை வாகன வீதிஉலா, 18-ந்தேதி காலை தேரோட்டம் (போகி தேர்), இரவு நந்தி வாகன வீதிஉலா, 19-ந்தேதி காலை புருஷா மிருக வாகன வீதிஉலா, மாலை சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம், இரவு திருச்சி உற்சவம், 20-ந்தேதி காலை சூரிய பிரபா வாகன வீதிஉலா, திரிசூல ஸ்நானம், இரவு கொடி இறங்குதல், ராவணாசூர வாகன வீதிஉலா நடக்கிறது. இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    மேற்கண்ட வாகனங்களில் உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மேள தாளம் மற்றும் மங்கல இறை இசை வாத்தியங்கள் இசைக்க வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    கபிலேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி வாகனச் சேவை விவரம் அச்சிடப்பட்ட புத்தகத்தை திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் தனது அலுவலகத்தில் வெளியிட்டார். அப்போது அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    • கோவில் வளாகம் முழுவதும் நீரால் சுத்தம் செய்யப்படுகிறது.
    • கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 11-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வரும் 11-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) காலை 11.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணிவரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.

    அப்போது கோவில் வளாகம் முழுவதும் நீரால் சுத்தம் செய்யப்படுகிறது. அதேபோல் பூஜை பொருட்களும் சுத்தம் செய்யப்படுகின்றன. அதன்பிறகு கோவில் முழுவதும் வாசனை திரவியங்கள் தெளிக்கப்படுகிறது. எனவே நாளை காலை 8 மணியில் இருந்து காலை 11 மணி வரையிலும், மதியம் 2.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். எனினும், காலை 11.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணிவரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    அதேபோல் சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருகிற 11-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணியில் இருந்து காலை 11 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • 15-ந்தேதி கருடசேவை நடக்கிறது.
    • 18-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 11-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை நடக்கிறது. அதையொட்டி 10-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் வெளியீட்டு விழா திருப்பதியில் தேவஸ்தான நிர்வாக அலுவலக கட்டிடத்தில் உள்ள இணை அதிகாரியின் அறையில் நடந்தது. இணை அதிகாரி வீரபிரம்மன் பங்கேற்று சுவரொட்டிகளை வெளியிட்டார்.

    இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவை பெரிய அளவில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியாக 11-ந்தேதி கொடியேற்றம், 15-ந்தேதி கருடசேவை, 16-ந்தேதி தங்கத் தேர், 18-ந்தேதி தேரோட்டம், 19-ந்தேதி சக்கர ஸ்நானம் ஆகியவைகள் நடக்கிறது.

    அப்போது தேவஸ்தான சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, கண்காணிப்பாளர் செங்கல்ராயலு, கோவில் ஆய்வாளர் கிரண்குமார் ரெட்டி மற்றும் பலர் உடனிருந்தனர்.

    ×