search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107100"

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகை பப்ளிக் ஆபிஸ் ரோட்டில் அனிச்சியக்குடி முச்சந்தி மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பொங்கல் விழா மற்றும் முளைப்பாரி விதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று காலை தர்மகோவில் தெருவில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து மதியம் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பூசலாங்குடியில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

    மதியம் அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், அன்னதானம், அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் வீதியுலா நடைபெற்றது.

    தொடர்ந்து அக்னி கப்பரை வீதிஉலா நடைபெற்றது.

    • மேலூர் நாகம்மாள் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
    • 3 அடி முதல் 20 அடி நீளம் வரை உள்ள வாயில் அலகு குத்தி 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர்.

    மேலூர்

    மேலூர் நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள நாகம்மாள் கோவிலின் ஆடி திருவிழா இன்று நடந்தது.

    இதையொட்டி மேலூர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் மேலூர் மண் கட்டி தெப்பக்குளத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரிய கடை வீதி, செக்கடி பஜார் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

    அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. நேர்த்திக்கடன் நேர்த்திய பக்தர்கள் 3 அடி முதல் 20 அடி நீளம் வரை உள்ள வாயில் அலகு குத்தி 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர். நாளை மாலை பெண்கள் பங்கேற்கும் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.

    திருவிழாவையொட்டி மேலூர் மெயின் ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. போலீஸ் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி தலைமையில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் 100-க்கும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

    • சோழர்களின் தலைநகராக இருந்தது. அக்காலக்கட்டத்தில் முற்காலச் சோழர்களால் எடுக்கப்பட்ட கோவில்தான் வல்லம் ஏகவுரியம்மன் கோவில்.
    • தடைப்பட்ட திருமணம், பிள்ளை பாக்கியம் போன்றவற்றுக்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாக இந்தக் கோயிலைப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள வல்லம் ஏகவுரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை–யொட்டி நாளை 12-ந்தேதி பால்குடம், காவடி தீமிதி உற்சவம் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர் என்ற நகரம் தோன்றுவதற்கு முன்பு வல்லம் சோழர்களின் தலைநகராக இருந்தது. அக்காலக்கட்டத்தில் முற்காலச் சோழர்களால் எடுக்கப்பட்ட கோவில்தான் வல்லம் ஏகவுரியம்மன் கோவில்.

    சோழர்களின் வழிபடு தெய்வமாகவும், குல தெய்வமாகவும் அவர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கிய வல்லத்து காளியாகவும் விளங்கியவள்தான் இந்த ஏகவரியம்மன். தடைப்பட்ட திருமணம், பிள்ளை பாக்கியம் போன்றவற்றுக்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாக இந்தக் கோயிலைப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

    திருமணத் தடை உள்ள பெண்கள், இங்கே வந்து அம்மனுக்கு புடவை சாத்தி அம்மனின் திருப்பாதத்தில் குண்டு மஞ்சளை (குளியல் மஞ்சள்) வைத்து வணங்குகின்றனர். அதில் இருந்து ஒரேயொரு மஞ்சளை எடுத்து வந்து, தினமும் குளிக்கும்போது பூசிக்கொள்ள விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, ஐதீகம்.

    இதனால் கன்னிப் பெண்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து இங்கு வந்து அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கே எலுமிச்சைப் பழத்தை அம்மனின் திருப்பாதத்தில் வைத்து பூஜை செய்து, அதன் சாறை கோவிலிலேயே சாப்பிட்டுச் செல்ல, விரைவில் குழந்தைப் பிறப்பது உறுதி என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. அதுபோல பலனடைந்த பெண்கள் தங்களது குழந்தைக்கு இக்கோயிலில் மொட்டை அடித்து, மாவிளக்கு மாவு படைத்து நேர்த்திக் கடனைச் செலுத்திவிட்டுச் செல்கின்றனர்.

    தீராத நோய் அல்லது திடீர் விபத்தால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாகி விட்ட கணவருக்காக வேண்டிக் கொண்டு வரும் பெண்கள் அதிகம். தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் பெண்கள், தங்களது கணவரை எமனிட–மிருந்து காக்க வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் நேர்த்திக் கடனாக எருமைக் கன்றை காணிக்கைச் செலுத்தி வழிபடுகின்றனர்.

    மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாள்களில் அம்மனுக்குச் சிறப்பு ஹோமங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது இந்தக் கோயிலின் இன்னுமொரு சிறப்பம்சம்.

    இங்கு நடைபெறும் ஹோமத்தில் கலந்து கொண்டு அம்மனை வழிபட, சகல சங்கடங்களும் தீர்ந்து மகிழ்ச்சி நிலைக்கும் என்கின்றனர். கருவறையில் ஏகவரி அம்மனைச் சுற்றியபடி இரு நாகங்கள் இருப்பதைக் காணலாம். ராகுவும், கேதுவும் அம்மனின் கட்டுப்பாட்டில் இருக்கும் தலம் இது ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து அம்மனைத் தரிசித்தால் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் போன்ற அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    தஞ்சாவூரிலிருந்து திருச்சி சாலையில் 12 கி.மீ. தொலைவிலுள்ள வல்லம் என்ற பேரூரிலிருந்து, வடக்கு நோக்கிச் செல்லும் ஆலக்குடிச் சாலையில் ஒரு கி.மீ. தொலைவில் இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நாளை 12-ந்தேதி கடைசி ஆடி வெள்ளிக்கிழமை திருவிழாவையொட்டி காவடி, பால்குடம், தீமியுடன் விமர்சையாக நடைபெற உள்ளது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பாண்டி முனியய்யா கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
    • அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பால் மற்றும் திருநீர் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காட்டாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட சவுமிய நாராயண புரம்-சிவகங்கை சாலையில் பாண்டி முனியய்யா கோவில் உள்ளது. இங்கு 18-ம் ஆண்டு கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.

    விழாவில் காட்டாம்பூர், தேவரம்பூர், சவுமிய நாராய ணபுரம், கல்லுவெட்டுமேடு, குறிஞ்சி நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராள மானோர் ஆடி 1-ந் தேதி முதல் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்ற பால்குட விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கல்லுவெட்டுமேடு செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து முக்கிய வீதியில் வழியாக பாண்டிமுனியய்யா கோவில் வந்து சேர்ந்தனர்.

    பின்பு ஆலமரத்திற்கும், வேலுக்கும் அபிஷேகம் செய்து தீபாரதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்க ளுக்கு பால் மற்றும் திருநீர் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    மாலை பூத்தட்டு விழாவும் விமரிசையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தலையில் பூத்தட்டு சுமந்து வந்து பாண்டி முனியய்யா கோவிலில் பூச்சொரிதல் நடத்தினர்.

    பின்பு கோவில் வாசலில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட ஆட்டு கிடா வெட்டி அன்னதானம் நடந்தது.

    விழா ஏற்பாடுகளை பாண்டி முனியய்யா கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்

    • அம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம் நடந்தது.
    • இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேட்டையன்பட்டியில் காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி திருவிழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 7-ம் நாளான இன்று கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.

    முன்னதாக விநாயகர் கோவிலில் குழுமிய பக்தர்கள் அங்கிருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக வந்தனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  

    • நல்லாடை மெயின் ரோட்டில் உள்ள செல்லப்பா கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் சுமந்து கொண்டு கடைத்தெரு வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
    • மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்த பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் கண்டியன் குளத்தூர் மாரியம்மனுக்கு 21 ஆம் ஆண்டு பால்குட திருவிழா சமையல் கலைஞர்கள் தலைமையில் நடைபெற்றது. நல்லாடை மெயின் ரோட்டில் உள்ள செல்லப்பா கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் சுமந்து கொண்டு கடைத்தெரு வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

    பச்சைக்காளி பவளக்காளி நாதஸ்வர இன்னிசை மற்றும் பம்பை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர். கஞ்சி வார்த்தல் அன்னதானமும் செம்பனார்கோயில் சமையல் கலைஞர்கள் வழங்கினர்.

    பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சக்தி மலை முருகன் கோவிலுக்கு சென்றனர். ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

    கோத்தகிரி அருகே சக்தி மலை முருகன் கோவில் நேற்று வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு டானிங்டன் மகா சக்தி கணபதி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சக்தி மலை முருகன் கோவிலுக்கு சென்றனர். ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். இவ்விழாவில் இட்டக்கல் போஜராஜ், கோவில் கமிட்டி கோத்தகிரி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் கோவில் பூசாரிகள் கலந்து கொண்டனர்

    • தொண்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
    • 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் மீனவர்கள் அதிமாக வசிக்கும் பகுதியான கடற்கரை எதிரே கடல் சூழ்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் முன்பு அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். வலைகளில் அதிகமாக மீன் விழவேண்டும், புயல், மழை போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாக்க வேண்டிக்கொண்டு செல்வார்கள்.

    2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது திருவிழாநடைபெறும் நிலையில் மீனவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் தொண்டியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    • பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்
    • வைகாசி விசாக நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    கோவை:

    கோவை மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் அமைந்துள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு கோ பூஜை நடந்தது. 6.30 மணிக்கு மூலவருக்கு பன்னீர், ஜவ்வாது, சந்தனம் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வைரநகைகள் பொறிக்கப்பட்ட தங்க கவச உடை அணிந்த சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினார்கள். பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் கொண்டுவரும் பால்குடங்கள் சுப்பிரமணியசாமிக்கு ம், வள்ளி தெய்வானைக்கும் மூலவருக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12 மணியளவில் கோவில் அலங்கார முன் மண்டபத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் தங்க மயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். கோவில் முன் மண்டபத்தில் பக்தர்கள் காவடி ஆட்டம் நடைப்பெற்றது.‌ தொடர்ந்து மாலை 4 மணிக்கு மூலவருக்கு அபிஷேக தீபாராதனை நடைபெறுகிறது. 6 மணிக்கு தங்க ரதத்தில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    விழாவை தொடர்ந்து வடவள்ளி போலீசார் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக அடிவாரம் பகுதியில் பார்க்கீங் வசதி செய்து கொடுத்தனர். மலைக் கோவிலுக்கு செல்ல 50 வாகனங்கள் என ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அனுப்பி வைத்தனர். அதிகப்படியான பக்தர்கள் கோவில் பஸ்சில் செல்ல காத்து இருந்ததால் நீண்ட வரிசையில் காத்து இருந்து மலைக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

    மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். இன்று வேடபரி நிகழ்ச்சி நடக்கிறது.
    மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு வழிபாடு, மண்டகப்படி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய விழாவான பால்குட விழா நேற்று காலை நடைபெற்றது. முதலில் கொடியேற்றம் நடைபெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    பின்னர் மேளதாளம் முழங்க அந்த கோவிலில் இருந்து நாட்டாண்மை வீராசாமி குடும்பத்தினர் பால்குடம் எடுத்து முதலில் வர கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, செயல் அலுவலர் பிரபாகர் மற்றும் முக்கிய பிரமுகர்களை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். மேலும் கரும்பு தொட்டிலில் குழந்தைகளை சுமந்தும் பலர் வந்தனர். ராஜவீதிகளின் இரு ஓரங்களிலும் மக்கள் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றி வணங்கினர். அப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல்களில் பக்தர்களுக்கு குடிநீர், நீர்மோர், உணவு பொட்டலங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. மணப்பாறை தரகு வர்த்தக சங்கம், பெருந்தலைவர் காமராஜர் காய்கனி மார்க்கெட், அறிஞர் அண்ணா காய்கனி மார்க்கெட் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு உணவு வழங்கினர்.

    பால்குட ஊர்வலம் ராஜவீதிகளின் வழியாக வேப்பிலை மாரியம்மன் கோவிலை வந்தடைந்த பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பால்குட விழாவை தொடர்ந்து இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பொங்கல் விழா, அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல் நிகழ்ச்சியும், மாலையில் அம்மன் குதிரை வாகனத்தில் செல்லும் வேடபரி நிகழ்ச்சியும், பின்னர் முளைப்பாரியும் நடைபெறுகிறது.

    பக்தர்கள் வசதிக்கான தண்ணீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை மணப்பாறை நகராட்சி ஆணையர் தலைமையில் நகராட்சி அலுவலர்களும், பணியாளர்களும் செய்திருந்தனர். மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு சர்மு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ். வீரமணி, கோவில் செயல் அலுவலர் பிரபாகர் ஆகியோர் தலைமையில் செய்துள்ளனர். இதேபோல் தமிழ்நாடு ஊராளிக்கவுண்டர் பேரவை சார்பில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. 
    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் மாசி-பங்குனி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    காரைக்குடி மீனாட்சிபுரம் பகுதியில் இந்து சமய அற நிலையத்துறைக்குட்பட்ட முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி-பங்குனி திருவிழா 40 நாட்கள் வரை நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 12-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு திருவிழாவையொட்டி நடைபெறும் பால்குட விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இதில் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் வசிக்கும் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் திருவிழாவில் கலந்துகொண்டு பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது மற்றொரு தனிச்சிறப்பாகும். இந்த கோவில் பால்குட விழா மற்றும் பூக்குழி திருவிழா நாளை மறுநாள் நடக்கிறது.

    முன்னதாக இந்த கோவிலுக்கு காப்புக் கட்டி விரதம் இருக்க தொடங்கிய பக்தர்கள் தினமும் பால்குடம், அக்னி சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன் எடுத்து வருகின்றனர். நேற்று விடுமுறை தினமாக இருந்ததால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு அலுவலர்கள், தனியார் நிறுவன அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அதிகாலை முதலே காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அம்மனுக்கு அபிஷேகம் செய்த பால் அந்த பகுதியில் உள்ள கால்வாயில் பெருக்கெடுத்து ஓடுவதை படத்தில் காணலாம்.

    முன்னதாக பால்குடங்களில் உள்ள பாலை கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த பெரிய அண்டாவில் நிரப்பி, அதை மின் மோட்டார் மூலம் கோவில் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் பக்தர்கள் கழுத்தில் அணிந்து வந்த மாலைகள் கோவில் பின்புறம் மலைபோல் குவிந்து காணப்பட்டன. இதை நகராட்சி ஊழியர்கள் அவ்வப்போது அகற்றினர்.

    பக்தர்கள் நேர்த்திக்கடனாக சுமந்து வரும் பாலை அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அந்த பால் கோவிலை சுற்றியுள்ள கால்வாயில் பாலாறு போல் ஓடியது. இதையடுத்து எப்போதும் வறண்டு கிடந்த அந்த கால்வாயில் நேற்று பால் பெருகி ஓடியதை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.

    விழாவையொட்டி பல்வேறு சமூகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சியும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
    ×