search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹோன்டா"

    ஹோன்டா நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் ஸ்கூட்டர் ஜப்பான் நாட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    ஹோன்டா PCX 125 ஸ்கூட்டரை ஜப்பானில் வெளியிட ஹோன்டா திட்டமிட்டு வருகிறது. இது ஹோன்டாவின் முதல் ஹைப்ரிட் ஸ்கூட்டர் என்ற பெருமையுடன் செப்டம்பர் 14-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

    ஜப்பான் நாட்டில் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட இருக்கும் முதல் ஹைப்ரிட் ஸ்கூட்டராக ஹோன்டா PCX 125 இருக்கும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக ஜப்பான் நாட்டில் மட்டும் PCX 125 ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    எனினும் இந்த ஸ்கூட்டர் உலகின் மற்ற நாடுகளிலும் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இதுவரை ஹோன்டா PCX 125 இந்திய வெளியீடு குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஹோன்டா PCX 125 ஹைப்ரிட் மாடலில் 125சிசி, சிங்கிள்-சிலிண்டர் மற்றும் 48 வோல்ட் லி்தியம்-அன் பேட்டரி வழங்கப்படுகிறது.


    இதன் 0.98 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் துவக்கக்கட்ட அக்செலரேஷன் வழங்கி, 4 நொடிகளுக்கு பின் பெட்ரோல் இன்ஜின் இயங்கும். இதன் 4-ஸ்டிரோக் இன்ஜின் 12 பி.ஹெச்.பி. மற்றும் 1.5 பி.ஹெச்.பி  செயல்திறன் வழங்கும். இந்த பேட்டரி ஸ்கூட்டர் ஓடும்போதே சார்ஜ் ஆகும். மேலும் இந்த ஸ்கூட்டரின் அக்செலரேஷன் ஹோன்டா PCX ஸ்டான்டர்டு மாடலை விட வித்தியாசமானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹோன்டா PCX 125 ஹைப்ரிட் ஸ்கூட்டர் D மற்றும் S என இருவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கும் - இதன் S மோட் தேவையான சமயத்தில் கூடுதல் செயல்திறன் வழங்கும். PCX 125 மாடலில் ஹோன்டா ஸ்மார்ட் கீ சிஸ்டம் கொண்டிருக்கும் என்பதால் இன்ஜினை ஸ்டார்ட் செய்ய சாவி தேவைப்படாது என கூறப்படுகிறது.

    இந்தியாவில் ஹோன்டா நிறுவனத்தின் 2018 ஆக்டிவா 125 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கூட்டரின் விலை மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    2018 ஹோன்டா ஆக்டிவா 125 இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய அம்சங்களுடன் அறிமுகமாகி இருக்கும் ஆக்டிவா மாடலில் இம்முறை எல்இடி ஹெட்லைட் மற்றும் மேலும் சில புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும் ஆக்டிவா 125 மாடலின் எல்இடி ஹெட்லைட் பார்க்க ஆக்டிவா 5ஜி மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை போன்று காட்சியளிக்கிறது. மற்றபடி டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இகோ மோட் மற்றும் சர்வீஸ் டியூ இன்டிகேட்டர், சீட்-ஐ திறக்கும் ஸ்விட்ச் உள்பட நான்கு வசதிகள் கொண்ட லாக் வழங்கப்பட்டு இறுக்கிறது.

    காஸ்மெடிக் மாற்றங்களை பொருத்தவரை ஆக்டிவா 125 டாப்-என்ட் மாடலில் க்ரோம் மஃப்ளர் கவர், கிரே அலாய் வீல்கள் மிட் மற்றும் டாப் என்ட் மாடல்களில் வழங்கப்படுகிறது. மேட் கிரஸ்ட் மெட்டாலிக் மற்றும் மேட் செலின் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கும் புதிய ஆக்டிவா 125 மாடலில் மொபைல் சார்ஜிங் சாக்கெட் விரும்புவோர் தேர்வு செய்யும் அம்சமாக வழங்கப்படுகிறது.



    புதிய ஹோன்டா ஆக்டிவா 125 மாடலில் 124.9சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8.52 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 10.54 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மாற்றியமைக்கக்கூடிய 3-ஸ்டெப் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

    மெட்டல் பாடி பேனல்களை கொண்டிருக்கும் ஆக்டிவா 125 மாடலின் பேஸ் வேரியன்ட் மற்றும் மிட்-ரேஞ்ச் மாடல்களில் 130மில்லிமீட்டர் டிரம் பிரேக்கள் இரண்டு சக்கரங்களிலும் வழங்கப்படுகிறது. இதன் டாப்-என்ட் மாடலின் முன்பக்கம் 190 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. மூன்று வேரியன்ட்களிலும் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் பொதுவான அம்சமாக வழங்கப்படுகிறது.

    2018 ஹோன்டா ஆக்டிவா 125 மாடலின் டிரம் பிரேக் வேரியன்ட் விலை ரூ.59,621, ஆக்டிவா 125 டிரம் பிரேக் மற்றும் அலாய் வீல் மாடல் விலை ரூ.61,558 என்றும் ஆக்டிவா 125 டிஸ்க் பிரேக் விலை ரூ.64,007 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலையும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவில் ஹோன்டா நிறுவனத்தின் சிபி ஹார்னெட் 160ஆர் மற்றும் சிபிஆர்250ஆர் மோட்டார்சைக்கிள்களின் புதிய விலையை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஹோன்டா நிறுவனத்தின் சிபி ஹார்னெட் 160ஆர் மற்றும் சிபிஆர்250ஆர் மோட்டார்சைக்கிள்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

    இரண்டு பிரீமியம் மோட்டார்சைக்கிள்களின் விலையில் ரூ.559 அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இவை அனைத்து வேரியன்ட்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் ஹோன்டா சிபி ஹார்னெட் 160ஆர் பேஸ் மாடலின் புதிய விலை ரூ.85,234, டாப் என்ட் ஏபிஎஸ் மாடல் ரூ.92,675 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



    இதேபோன்று சிரிஆர்250ஆர் பேஸ் மாடல் விலை ரூ.1,64,143 என்றும் டாப் என்ட் ஏபிஎஸ் மாடல் விலை ரூ.1,93,666 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி ஆகும்.

    இரண்டு பிரீமியம் மோட்டார்சைக்கிள்களும் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. சிபி ஹார்னெட் 160ஆர் இந்தியாவில் ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையான மோட்டார்சைக்கிளாக இருக்கிறது.

    ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் பிரான்டு மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஹோன்டா சிபி ஹார்னெட் 160ஆர் விற்பனைக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. இந்தியாவில் சிபிஆர்250ஆர் மோட்டார்சைக்கிள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், 2018 சிபிஆர்250ஆர் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஹோன்டா கார்ஸ் நிறுவனத்தின் ஜாஸ் எலெக்ட்ரிக் வேரியன்ட் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஹோன்டா கார்ஸ் நிறுவனத்தின் ஜாஸ் எலெக்ட்ரிக் வேரியன்ட் சர்வதேச சந்தையில் வெளியிட திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய எலெக்ட்ரிக் வேரியன்ட் 2020-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    புதிய எலெக்ட்ரிக் ஜாஸ் மாடல் முதற்கட்டமாக சீனாவில் வெளியிடப்பட்டு அதன் பின் சர்வதேச சந்தைகளில் 2020-ம் ஆண்டு வாக்கில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஹோன்டா ஜாஸ் எலெக்ட்ரிக் மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பானாசோனிக் மற்றும் ஜிஎஸ் யுவாசா நிறுவனங்கள் தயாரிக்கும் பேட்டரிகளை ஹோன்டா பயன்படுத்துகிறது. இரு நிறுவனங்கள் தயாரிக்கும் பேட்டரிகள் ஆம்ப்ரெக்ஸ் தொழில்நுட்பம் சார்ந்து உருவாக்கப்படுகிறது.


    புதிய எலெக்ட்ரிக் மாடல் தற்போதைய ஜாஸ் போன்று காட்சியளிக்குமா அல்லது புதிய வடிவமைப்பை கொண்டிருக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. சமீபத்தில் ஹோன்டா நிறுவனம் HR-V எஸ்யுவி சார்ந்த புதிய எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்திருந்தது. பீஜிங் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட எஸ்யுவி எலெக்ட்ரிக் மாடல் இந்த ஆண்டு சீனாவில் விற்பனைக்கு வருகிறது.

    தற்சமயம் ஹோன்டா நிறுவனத்தின் ஒரு எலெக்ட்ரிக் மாடல் மட்டுமே சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் அமெரிக்காவில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலில் 25.5kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது, இது 129 பிஹெச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது.

    சீனாவில் ஹோன்டா எலெக்ட்ரிக் கார் விலை 24,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.16.36 லட்சம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000 ஹோன்டா ஜாஸ் எலெக்ட்ரிக் மாடல்களை விற்பனையாகும் என ஹோன்டா எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
    ஹோன்டா நிறுவனத்தின் டியோ 2018 ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா 2018 டியோ ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய டியோ இந்தியா முழுக்க அனைத்து ஹோன்டா விற்பனை மையங்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    புதிய 2018 டியோ மாடலில் எல்இடி ஹெட்லேம்ப், பொசிஷன் லேம்ப், 4-இன் லாக், சீட்-ஐ திறக்கும் ஸ்விட்ச் மற்றும் ஒன்பது வெவ்வேறு நிறங்களில் கிடைக்கிறது. புதிய டியோ மாடலில் மெட்டல் மஃப்ளர் ப்ரோடெக்டர், டீலக்ஸ் வேரியன்ட்-இல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், மூன்றடுக்க இகோ ஸ்பீட் இன்டிகேட்டர், கோல்டு-ஃபினிஷ் செய்யப்பட்ட ரிம்களை கொண்டிருக்கிறது. 

    2018 ஹோன்டா டியோ ஸ்டேன்டர்டு மாடல் வைப்ரன்ட் ஆரஞ்சு, பியல் ஸ்போர்ட்ஸ் எல்லோ, ஸ்போர்ட்ஸ் ரெட், கேன்டி ஜேஸ் புளு மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே என ஐந்து வித நிறங்களை கொண்டிருக்கிறது. இதன் டீலக்ஸ் வேரியன்ட் டேசில் எல்லோ மெட்டாலிக், மேட் மார்ஷல் கிரீன், பியல் இக்னியஸ் பிளாக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் என நான்கு வித ஷேட்களில் கிடைக்கிறது.



    2018 டியோ மாடலில் 110சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினஅ 8 பிஹெச்பி @ 7000 ஆர்பிஎம் மற்றும் 8.9 என்எம் டார்கியூ @ 5500 ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது. ஹோன்டா டியோ மாடலில் CVT டிரான்ஸ்மிஷன் மற்றும் அதிகபட்சம் மணிக்கு 83 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    ஹோன்டா டியோ 2018 விலை இந்தியாவில் ரூ.51,292 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என துவங்குகிறது. ஹோன்டா டியோ டீலக்ஸ் வேரியன்ட் விலை ரூ.53,292 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஹோன்டா நிறுவனத்தின் அமேஸ் 2018 கார் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய காரின் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஹோன்டா நிறுவனத்தின் அமேஸ் 2018 கார் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட அமேஸ் 2018 கார் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் புதிய அம்சங்களை கொண்டுள்ளது. 

    ஹோன்டா அமேஸ் 2018 மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 89 பிஹெச்பி @6000 ஆர்பிஎம், 110 என்எம் டார்கியூ @4800 ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது. இதன் டீசல் மோட்டார் 99 பிஹெச்பி @3600 ஆர்பிஎம், 200 என்எம் டார்கியூ @1500 ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது. இரு இன்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. 

    புதிய ஹோன்டா CVT கியர்பாக்ஸ் கொண்ட மாடல் 79 பிஹெச்பி மற்றும் 160 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஹோன்டா அமேஸ் 2018 முற்றிலும் புதிய பிளாட்ஃபார்ம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. புதிய அமேஸ் முந்தைய மாடலை விட எடை குறைவாகவும், 5 மில்லிமீட்டர் நீலமாகவும், 15 மில்லிமீட்டர் அகலமாகவும் உள்ளது.

    புதிய ஹோன்டா அமேஸ் 2018 மேனுவல் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 19.5 கிலோமீட்டரும், டீசல் இன்ஜின் 27.8 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் CVT பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட் லிட்டருக்கு 19 கிலோமீட்டர் மற்றும் 23.8 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    வெளிப்புறங்களில் இதன் வடிவமைப்பு ஹோன்டா சிட்டி போன்று காட்சியளிக்கிறது. கூர்மையான வளைவுகள், பிரம்மாண்ட வடிவமைப்பு மற்றும் புதிய க்ரோம் கிரில் மற்றும் ஹோன்டா லோகோ நடுவில் பொருத்தப்பட்டுள்ளது. புதிய ஹெட்லேம்ப்களில் எல்இடி டேடைம் ரன்னிங் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய அமேஸ் மாடலில் 15 இன்ச் அலாய் வீல், சி வடிவம் கொண்ட எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புற பூட் லிட் ஸ்பாயிலர் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய மாடலை விட புதிய அமேஸ் அதிக அகலமாக உருவாக்கப்பட்டு, உள்புறம் அதிக இடவசதியை கொண்டுள்ளது.

    உள்புறம் டூயல்-டோன் டேஷ்போர்டு பெய்க் மற்றும் பிளாக் தீம் செய்யப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்த வரை தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கண்ட்ரோலில் டச் பட்டன்கள், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, ஸ்டார்ட், ஸ்டாப் பட்டன், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஹோன்டா அமேஸ் 2018 E, S, V மற்றும் VX என நான்கு வித வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் மாடல் விலை ரூ.5.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்குகிறது. ஹோன்டா அமேஸ் 2018 டீசல் இன்ஜின் மாடலின் விலை ரூ.6.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்குகிறது.
    ×