search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊத்துக்கோட்டை"

    ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் அரசு மணல் குவாரியை எதிர்த்து தி.மு.க.வினர் ஊத்துக் கோட்டை கிராம நிர்வாக அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.#DMK
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் அரசு மணல் குவாரியை எதிர்த்து தி.மு.க.வினர் ஊத்துக் கோட்டை கிராம நிர்வாக அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட வடக்கு செயலாளர் கி.வேணு தலைமைதாங்கி னார். அவைத்தலைவர் பகலவன், முன்னாள் அமைச்சர் சுந்தரம், முன்னாள் எம்பி கிருஷ்ணசாமி, தீர்மானக்குழு உறுப்பினர் சி.ஹெச்.சேகர், செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் அபிராமி குமரவேல், குணசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    இதில் இளைஞர் அணி அமைப்பாளர் லோக்கேஷ், நகர செயலாளர் அப்துல் ரஷீத், நிர்வாகிகள் மோகன், சம்சுதீன், அப்துல்ரகீம், சிராஜூதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்துக்கு பின்னர் தி.மு.க.வினர் தாலூக்கா அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து தாசில்தார் ரவிச்சந்திரனிடம் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனர்.#DMK
    ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி துவக்க உள்ளதை கண்டித்து வருகிற 17-ந் தேதி திமுக போராட்டம நடத்த போவதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி அமைக்க முடிவு செய்து ஆரம்பகட்ட பணிகள் துவங்கி உள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூள மேனியில் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் கி.வேனு தலைமை தாங்கினார். அவைத் தலைவர் பகலவன், முன்னாள் அமைச்சர் சுந்தரம், முன்னாள் எம்பி கிருஷ்ணசாமி, செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தராசன், மூர்த்தி, குணசேகர், ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகர், சத்தியவேல், இளைஞர் அணி அமைப்பாளர் லோக் கேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி துவக்க உள்ளதை கண்டித்து வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும், கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #tamilnews
    ஊத்துக்கோட்டை அருகே சவுடு மணல் கடத்தியதாக 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் நேற்று இரவு 9 மணி அளவில் தொம்பரம்பேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

    அப்போது ஒன்றின் பின் ஒன்றாக 10 லாரிகள் வேகமாக நிற்காமல் சென்றதால் சந்தேகம் அடைந்த சந்திரதாசன் ஜீப்பில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தி சென்று அந்த லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார்.

    லாரிகளில் சவுடு மணல் இருந்தது. இதற்கான ஆவணம் எதுவும் இல்லை. இதையடுத்து சவுடு மணல் கடத்தியதாக 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் ஊத்துக்கோட்டை எல்லையில் உள்ள ஆரணி ஆற்றில் மணல் குவாரிக்காக முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக தடம் அமைக்க சவுடு மணல் எடுத்து செல்வதாக விசாரணையில் தெரியவந்தது.

    எனினும் எந்தவித ஆவணங்கள் இல்லாமல் சவுடு மணல் கடத்தியதால் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தெரிவித்தார்.

    தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் வெங்கல் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தாமரைப்பாக்கம் ஏரியில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த 4 மாட்டு வண்டிகளை போலீசார் மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக அமணம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர்களான வெங்கடேசன், தமிழரசன், விவேக் ஆகியோரை கைது செய்தனர். #Tamilnews
    கொசஸ்தலை ஆற்றில் தடுப்பு அணை பணிகளை ஆகஸ்டு மாத இறுதிக்குள் கட்டி முடிக்க திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் ‌ஷட்டர்கள் வழியாக தண்ணீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடுவது வழக்கம்.

    அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் பூண்டி, ஆற்றம்பாக்கம், ஓதப்பை, சோமதேவன்பட்டு, கொரகண்தண்டலம், மோவூர், மெய்யூர், செம்பேடு, தாமரை பாக்கம், அணைக்கட்டு வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது.

    கடந்த 2015-ம் வருடம் பெய்த மழைக்கு அணை முழுவதுமாக நிரம்பியதால் அதிகபட்சமாக வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. மொத்தம் 30 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது.

    பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து விவசாயிகள் பயன்படும் விதத்திலும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்காகவும் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஓதப்பை பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்ட ரூ. 6.70 கோடி ஒதுக்கப்பட்டது.

    இந்த நிதியை கொண்டு 200 மீட்டர் நீளத்துக்கு தடுப்பு அணை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தொடங்கப்பட்டது.

    கடந்த செப்டம்பர் மாதம் பலத்த மழை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தடுப்பு அணை கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டன.

    தற்போது கோடை வெயில் காரணமாக கொசஸ்தலை ஆறு வறண்டு காணப்படுகிறது. இதைத் தொடர்ந்து தடுப்பு அணை கட்டும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. ஆகஸ்டு மாத இறுதிக்குள் தடுப்பு அணை பணிகளை முடிக்க திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews

    ஊத்துக்கோட்டை அருகே சேதமடைந்துள்ள சிற்றம்பாக்கம் தடுப்பணை கரைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள சிற்றபாக்கம் பகுதியில் 1983-ம் ஆண்டு ஆரணி ஆற்றின் குறுக்கே 480 மீட்டர் தூரத்துக்கு தடுப்பு அணை கட்டப்பட்டது. 10 அடி உயரம் கொண்ட இந்த அணையில் சேமித்து வைக்கும் தண்ணீரை தேவைப்படும்போது கிருஷ்ணா நதி கால்வாய் மூலம் பூண்டி ஏரிக்கு திறந்து விடுவது வழக்கம்.

    வெள்ளம் ஏற்பட்டால் உபரிநீர் ஆரணி ஆற்றில் பாய்ந்து செல்லும். உபரி நீர் தானாக ஆற்றில் பாய்வதால் தடுப்பு அணைக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க 480 மீட்டர் தூரத்துக்கு கரைகள் அமைக்கப்பட்டது.

    கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பேய் மழைக்கு ஆரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இதில் தடுப்பு அணைக்கு ஒட்டி அமைக்கப்பட்ட கரைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    இதையடுத்து 2016-ம் ஆண்டு ரூ.1 கோடி செலவில் பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டு கரைகள் சீரமைக்கப்பட்டது.

    இந்நிலையில் கடந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழைக்கு ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பு அணை முழுவதுமாக நிரம்பியது. இதனால் உபரி நீர் ஆரணி ஆற்றில் பாய்ந்தது.

    தண்ணீர் கரை புரண்டு ஓடியதால் தடுப்பு அணைக்கு ஒட்டி உள்ள கரைகள் மீண்டும் சேதமடைந்து உள்ளன. இது இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது.

    கோடை வெயில் காரணமாக தடுப்பு அணை தற்போது முழுவதும் வறண்டு காணப்படுகிறது. எனவே இப்போது கரைகளை சீர்செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


    ×