search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107458"

    சுதந்திர தினவிழாவில் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #IndependenceDay

    புதுடெல்லி:

    இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

    டெல்லியில் பிரதமர் மோடியும், மாநிலங்களில் முதல்-அமைச்சர்களும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளனர்.

    சுதந்திர தினக் கொண்டாட்டத்தை சீர் குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக கடந்த மாதம் உளவுத்துறை எச்சரித்தது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தீவிரவாத எதிர்ப்புப்படையினர் அதிரடி வேட்டை நடத்தி வருகிறார்கள்.

    பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் எந்தெந்த நகரங்களில் அதிகமாக உள்ளது என்பதை பட்டியலிட்டு இந்த வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று ஐதராபாத்தில் தாக்குதல் நடத்த ஐ.ஸ். பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் ஐதராபாத்தில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு வீட்டுக்குள் இருந்த அப்துல்பாசித், முகம்மது அப்துல் குவாதீர் என்ற 2 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். தீவிர விசாரணையில் அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது.

    உடனடியாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களது உடமைகளை போலீசார் ஆய்வு செய்த போது, குண்டு வெடிப்புக்கு அவர்கள் சதிதிட்டம் தீட்டி இருந்தது தெரிந்தது.

    இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட அவர்கள் இருவரும் ஓசையின்றி செயல்பட்டு வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. அதற்கு அவர்கள் பயன்படுத்திய கணிணி கைப்பற்றப்பட்டது. அந்த கம்ப்யூட்டரில் உள்ள தகவல்கள் மூலம் இந்தியாவில் யார்- யாரெல்லாம் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் தொடர்பு வைத்திருந்தனர் என்பது தெரிய வரும்.

    இதற்கிடையே மும்பை நகரிலும் 2 பேர் பிடிபட்டனர். புனே நகரிலும் ஒரு பயங்கரவாதி பிடிபட்டான். இவர்களும் சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

    இதனால் சுதந்திர தினத் தன்று குண்டு வெடிப்புக்கு திட்டமிட்டு கைதானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    காஷ்மீரில் கடந்த வாரம் அல்கொய்தா பயங்கரவாதி ஒருவன் பிடிபட்டான். அவனிடம் இருந்து 8 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த 8 குண்டுகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ அதிகாரி மற்றும் 3 வீரர்கள் பலியானார்கள். #Jammukashmir #militantgunneddown

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் பாண்டி போரா மாவட்டத்தில் குரேஷ் செக்டார் உள்ளது.

    இங்குள்ள கோவிந்த் நல்லா என்ற பகுதியின் எல்லையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.

    பயங்கரவாதிகளின் முயற்சியை முறியடிக்கும் விதமாக அங்கிருந்த ராணுவ ரோந்து வீரர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகளும் துப்பாக்கியால் சுட்டவாறு முன்னேறினர். இருதரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

    பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ மேஜர் மற்றும் 3 வீரர்கள் குண்டு பாய்ந்து பலியானார்கள். பலியான ராணுவ மேஜரின் பெயர் கே.பி.ரானே என்பது தெரியவந்தது. ஜாமிசிங், விக்ரம்ஜித், மன்தீப் ஆகிய வீரர்கள் வீர மரணம் அடைந்தது தெரிய வந்தது.

    பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    ராணுவ வீரர்களின் அதிரடியான தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஓடியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    டெல்லியில் வரும் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. #IndependenceDay2019
    புதுடெல்லி:

    நாட்டின் சுதந்திர தினம் வருகிற 15–ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது டெல்லியில் மிகப்பெரும் தாக்குதலை அரங்கேற்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பாகிஸ்தான் உளவுத்துறையின் ஆதரவுடன் இந்த தாக்குதலை அரங்கேற்றுவதற்காக பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை அடுத்து, தலைநகர் டெல்லியில் முக்கியமான இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



    சுதந்திர தின விழாவில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல், அமைதியான முறையில் நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ரெயில்வே நிலையம், பேருந்து நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்கள் போன்றவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #IndependenceDay2019
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்ட ராணுவ வீரரின் மரணத்துக்கு பழிவாங்குவதற்காக அவரது நண்பர்கள் 50 பேர் ராணுவம் மற்றும் போலீசில் இணைய ஆயத்தமாகி வருகின்றனர். #JammuKashmir #RevengeforFriend
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் மெந்தார் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் அவுரங்கசீப். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூன் மாதத்தில் ரமலான் விடுமுறையின் போது, தனது சொந்த கிராமத்துக்கு வந்த அவுரங்கசீப் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மட்டுமின்றி நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. தனது நண்பரின் மரணத்தில் தீரா துயரடைந்த அவுரங்கசீப்பின் நண்பர்கள் அந்த பயங்கரவாதிகளை பழிவாங்குவது என முடிவு செய்தனர். மேலும், இந்தியாவில் உலவும் பயங்கரவாதத்தையும் அடியோடு அழிக்க அவர்கள் உறுதிகொண்டனர்.



    இதனால், சவூதியில் தாங்கள் பார்த்த வேலையை கைவிட்டு 50 பேர் இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர். நண்பரை கொன்ற பயங்கரவாதிகளை அடியோடு அழிப்பதையே உயர்ந்த லட்சியமாக கொண்ட அவர்கள் தற்போது ராணுவம் மற்றும் காவல்துறையில் இணைய ஆயத்தமாகி கொண்டிருக்கின்றனர்.

    நண்பரின் உயிர் இழப்புக்கு காரணமான கொடியவர்களை பழிவாங்க முறையான பாதையை கையில் எடுத்து போராட இருக்கும் இந்த 50 பேருக்கும் பல்வேறு பகுதிகளில் இருந்து பாராட்டும், ஆதரவும் குவிந்தவண்ணம் உள்ளது. #JammuKashmir #RevengeforFriend
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். #JammuKashmir #Encounter
    ஸ்ரீநகர்:

    ஐம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் துருசு கிராமத்தில் பாதுகாப்பு படையினரை இருப்பிடத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் சிலர் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

    அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த ரியாஸ் அகமது மற்றும் குர்ஷித் அகமது மாலிக் என தெரிய வந்துள்ளது. இதில் ரியாஸ் அகமது பி.டெக் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். மேலும், ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #JammuKashmir #Encounter
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JammuKashmir #Encounter
    சோப்போர்:

    ஐம்மு காஷ்மீர் மாநிலம் சோப்போர் மாவட்டத்தில் துருசு கிராமத்தில் பாதுகாப்பு படையினரை இருப்பிடத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நள்ளிரவு துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

    அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். சுமார் 4 மணிநேரமாக நடந்து வந்த இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #JammuKashmir #Encounter
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து பயங்கரவாதிகளுடன் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #JammuKashmir #MilitantGunnedDown
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை அடியோடு களைவதற்கு பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளின் முகாம்களை கண்டறிந்து அழித்தல், அவர்களின் ஊடுருவலை தடுத்தல் போன்ற பல்வேறு முயற்சிகளில் பாதுகாப்பு படையினர் மற்றும் அம்மாநில போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. மிகவும் தீவிரமாக நடைபெற்ற இந்த மோதலில், பயங்கரவாதிகளில் 2 பேர் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் மாநில டி.ஜி.பி தெரிவித்துள்ளார். #JammuKashmir #MilitantGunnedDown
    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சிறப்பு போலீஸ் அதிகாரி இன்று பத்திரமாக வீடு திரும்பினார். #Kashmir
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ட்ரால் பகுதியில் செய்னாத்தர் கிராமத்தை சேர்ந்தவர் முடாசீர் அகமது. இவர் சிறப்பு போலீஸ் அதிகாரி ஆக பணியாற்றுகிறார்.

    இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். அவரை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இந்நிலையில், காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சிறப்பு போலீஸ் அதிகாரி நேற்று இரவு பத்திரமாக வீடு திரும்பினார் என காஷ்மீர் எஸ் பி பானி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், போலீஸ் அதிகாரியை கடத்திய பயங்கரவாதிகளே அவரை விடுவித்து விட்டனர். அவரிடம் விசாரித்து வருகிறோம் என தெரிவித்தார். #kashmir
    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிறப்பு போலீஸ் அதிகாரியை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று விட்டனர். #Policeofficerkidnapping

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ட்ரால் பகுதியில் செய்னாத்தர் கிராமத்தை சேர்ந்தவர் முடாசீர் அகமது. இவர் சிறப்பு போலீஸ் அதிகாரி ஆக பணியாற்றுகிறார். நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று விட்டனர்.

    அவரை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக உள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலை துப்பாக்கி சண்டை நடைபெற்றது. #KashmirEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    அவர்களின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். பயங்கரவாதிகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தொடர்ந்து பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். #KashmirEncounter
    காஷ்மீரில் போலீஸ்காரரை கடத்தி கொலை செய்த 3 பயங்கரவாதிகளை அதிரடிப்படை போலீசாரும், ராணுவ வீரர்களும் சுட்டுக்கொன்றனர். #policeconstableMohdSalim #Murder
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் போலீஸ்காரரை கடத்தி கொலை செய்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் முத்தலாமா கிராமத்தை சேர்ந்த போலீஸ்காரரான முகமது சலீம் ஷா, சமீபத்தில் விடுமுறையில் வீட்டுக்கு சென்றார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு முகமது சலீம் ஷா வீட்டுக்குள் புகுந்த பயங்கரவாதிகள், அவரை கடத்தி சென்றனர்.

    அதன் பின்னர் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில் ரெட்வாணி என்கிற இடத்தில் முகமது சலீம் ஷா பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து, இந்த நாசவேலையில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் மாநில போலீசாரும், ராணுவ வீரர்களும் ஈடுபட்டனர்.  இந்த நிலையில் ரெட்வாணி பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீசாரும், ராணுவ வீரர்களும் அந்த இடத்துக்கு விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றிவளைத்தனர். அப்போது வீட்டினுள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

    அதனை தொடர்ந்து போலீசாரும், ராணுவ வீரர்களும் தங்களுடைய துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

    இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இறுதியில் வீட்டினுள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    அவர்களுடைய உடலை போலீசார் கைப்பற்றினர். ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் அந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன. சுட்டுக்கொல்லப்பட்ட மூவரில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டுக்காரர் என்பதும், இவர்கள் 3 பேரும் தான் போலீஸ்காரர் முகமது சலீம் ஷாவை கடத்தி கொலை செய்தனர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும் இவர்கள் 3 பேரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா உடன் தொடர்பில் இருந்ததாகவும், காஷ்மீரில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு அப்பாவி மக்களை கொன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கதுவா மாவட்டம் கிரான் நகரில் போபியா என்கிற இடத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து மர்ம நபர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்தார். இதனை பார்த்த எல்லை பாதுகாப்புபடை வீரர்கள், அந்த நபரை தங்களிடம் சரணடைந்து விடும்படி எச்சரித்தனர்.

    ஆனால் அதனை பொருட்படுத்தாத அந்த மர்ம நபர் தொடர்ந்து முன்னேறினார். இதையடுத்து வேறுவழியின்றி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அவரை சுட்டுவீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.   #policeconstableMohdSalim #Murder #tamilnews
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்தில் போலீஸ்காரரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Policeconstableabducted #abductedbymilitants
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநில காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றுபவர், சலீம் ஷா. குல்காம் மாவட்டத்துக்குட்பட்ட முட்டல்ஹாமா பகுதியில் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.

    நேற்றிரவு, சலீம் ஷாவின் வீட்டுக்கு வந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் அவரை கடத்திச் சென்றனர்.

    இம்மாநிலத்தில் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்படும் காவல் துறையினர் சில நாட்களுக்கு பின்னர் பிணங்களாக கண்டெடுக்கப்படுவதால் கான்ஸ்டபிள் சலீம் ஷா கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து சலீம் ஷாவை விடுவிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். #Policeconstableabducted #abductedbymilitants 
    ×