search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானங்கள்"

    அமெரிக்க போர்க்கப்பல்கள், விமானங்கள், தளவாடங்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு விரைந்துள்ளன. இதனால் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
    வாஷிங்டன்:

    ஈரான், வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என கருதப்பட்ட அந்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுத செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரவும், அதற்கு ஏற்ப அந்த நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை திரும்பப் பெறவும் வழிவகுக்கிறது.

    ஒபாமா காலத்தில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டிரம்புக்கு பிடிக்கவில்லை. இதில் அமெரிக்க நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது அவரது கருத்து.

    இதன் காரணமாக கடந்த ஆண்டு திடீரென இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

    இது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தியது. ஈரான் படையை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது.

    அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகள் ஈரானின் பொருளாதாரத்தை பின்னுக்கு செல்ல வைத்தது. இதுவரை இல்லாத வகையில் ஈரான் நாணய மதிப்பு சரிவை சந்தித்தது. இதனால் வெளிநாட்டு முதலீடுகள் பாதித்தன.

    ஈரானை புதிய ஒப்பந்தம் போட வைக்க வேண்டும், அந்த ஒப்பந்தம் அணு ஆயுதங்கள் மட்டுமின்றி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் கட்டுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று அமெரிக்கா கணக்கு போடுகிறது.

    ஈரானும் மிரட்டல் விடுத்து வருகிறது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியில் தடையை ஏற்படுத்தி விடுவோம் என்கிறது. இது உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு பெரும் தடைச்சுவராக அமைந்து விடும்.

    இந்த நிலையில் ஈரான் மீது கண் வைத்து அமெரிக்கா போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும், தளவாடங்களையும் நகர்த்துகிறது.

    பேட்ரியாட் ஏவுகணை அமைப்பை மத்திய கிழக்கு பகுதிக்கு அமெரிக்கா அனுப்புகிறது. ஏற்கனவே இந்தப் பகுதியில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் தொகுதி உள்ளது. அதில் சேரும் வகையில் யு.எஸ்.எஸ். ஆர்லிங்டன் விமானம் தாங்கி போர்கப்பலையும் அனுப்புகிறது.

    கத்தார் தளத்துக்கு அமெரிக்காவின் பி-52 ரக போர் விமானங்கள் போய்ச் சேர்ந்து விட்டன.

    ஈரான் மூலம் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க வீரர்களுக்கு ஆபத்து நேரலாம் என்ற எதிர்பார்ப்பில்தான் போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், தளவாடங்களை அனுப்பி வைப்பதாக அமெரிக்கா கூறுகிறது.

    ஆனால் இதை ஈரான் நிராகரித்து உள்ளது. இது முட்டாள்தனமான செயல் என ஈரான் விமர்சித்துள்ளது.

    ஈராக்கில் மட்டும் அமெரிக்காவின் 5 ஆயிரத்து 200 படை வீரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மத்திய கிழக்கு பகுதிக்கு அமெரிக்கா போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும், தளவாடங்களையும் அனுப்பி வைப்பது, அந்த நாடு ஈரானுடன் போர் தொடுப்பதற்கான முன் ஏற்பாடா என்ற கேள்வி சர்வதேச அரசில் எழுந்துள்ளது.
    ஜப்பான் நாட்டை நெருங்கும் ஜாங்டரி புயலால் டோக்கியோவிலும், பிற விமான நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய 107 விமான சேவைகளை ரத்து செய்து உள்ளதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. #Japan #JongdariCyclone
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டை ‘ஜாங்டரி’ (வானம்பாடி) என்று பெயரிடப்பட்டு உள்ள புயல் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நேரத்தில் இது தாக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. இந்த புயல் காரணமாக டோக்கியோவிலும், ஹோன்சு தீவு பகுதியிலும் மிகப் பலத்த மழை பெய்யும். 15 அங்குல அளவுக்கு இந்த மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    டோக்கியோவிலும், பிற விமான நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய 107 விமான சேவைகளை ரத்து செய்து உள்ளதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் கூறுகிறது.

    நேற்று இரவு டோக்கியோவில் நடைபெறவிருந்த வாணவேடிக்கை திருவிழா புயல், மழையினால் ஒத்தி போடப்பட்டு உள்ளது.

    ஜப்பானுக்கு ஜூலை மாதம், இயற்கை பேரிடர் மாதமாக மாறி விட்டது. ஏற்கனவே கடந்த சில தினங்களாக கடுமையான அனல் காற்று வீசி அங்கு 80-க்கும் மேற்பட்டோர் பலியானதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.

    இப்போது இந்த புயல், மழையினால் என்ன சேதம் ஏற்படப்போகிறதோ என ஜப்பான் மக்கள் கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.  #JongdariCyclone  #Japan #Tamilnews 
    நேபாளம் நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கைலாஷ் புனித யாத்திரை சென்ற இந்தியர்களை மீட்கும் பணி துவங்கியது. #MansarovarYatra
    காத்மாண்டு:

    நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 625 பக்தர்கள் நேபாளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். மழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அங்கு சிக்கித்தவிக்கும் பயணிகளை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், வெளியுறவுத்துறை அதிகாரிகள் சிமிகோட் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு யாத்ரீகர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை  செய்து கொடுத்து வருவதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுராஜ் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று, நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 7 சிறிய ரக விமானங்களை அந்நாட்டு அரசு அனுப்பிவைத்துள்ளது.

    இதுவரை 2 விமானங்கள் மூலம் 104 யாத்ரீகர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சிக்கித்தவிக்கும் யாத்ரீகர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MansarovarYatra 
    கோவை விமான நிலையத்தில் இரவு நேரத்தில் தங்கும் விமானங்களுக்கு எரி பொருள் வரிச்சலுகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #CoimbatoreAirport #TNCM #Edappadipalanisamy
    கோவை:

    கோவையில் போலீஸ் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது-

    வரலாற்று சிறப்பு மிக்க போலீஸ் அருங்காட்சியகம் இன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஆதிகாலம் முதல் தற்போதைய நவீன காலம் வரை உள்ள பல்வேறு ஆயுதங்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    140 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இங்கு காவல் துறை சார்பில் பல்வேறு ஆயுதங்கள் இடம் பெற்றுள்ளது.

    இந்த அருங்காட்சியகத்தை பொதுமக்கள், மாணவர்கள் பார்த்து தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.

    கோவை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பல்வேறு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு இரவு நேரத்தில் தங்கும் விமானங்களுக்கு எரி பொருள் நிரப்ப வரிச்சலுகை தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் கோவையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்க வசதியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #CoimbatoreAirport #TNCM #Edappadipalanisamy
    அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துக்கு உட்பட்ட வான் எல்லைக்குள் நுழைந்த ரஷிய போர் விமானங்களை அமெரிக்க போர் விமானங்கள் வழிமறித்து விரட்டியடித்தன. #Russianbombersintercepted
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துக்கு உட்பட்ட வான் எல்லைக்குள் நுழைந்த ரஷிய போர் விமானங்களை அமெரிக்க போர் விமானங்கள் வழிமறித்து விரட்டியடித்தன.

    வடக்கு அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாநிலத்துக்கு உட்பட்ட சர்வதேச வான் எல்லைக்குள் ரஷிய விமானப்படைக்கு சொந்தமான இரு Tu-95 "Bear" ரக விமானங்கள் நேற்று காலை அத்துமீறி நுழைந்ததாகவும், அமெரிக்க போர் விமானங்கள் வழிமறித்து விரட்டியடித்ததாகவும் வட அமெரிக்கா பகுதிக்கான விமானப்படை தளபதி மேஜர் ஆன்டுரு ஹென்னஸி இன்று குறிப்பிட்டுள்ளார். #TamilNews  #Russianbombersintercepted 

    அலாஸ்கா அருகே சர்வதேச வான்வெளியில் பறந்த ரஷ்ய போர் விமானங்களை அமெரிக்க போர் விமானங்கள் இடைமறித்து திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #USfighterjets #Russianbombers
    அலாஸ்கா:

    அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவின் மேற்கு கடற்கரையில் இருந்து சுமார் 200 மைல் தொலைவில் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலம் அமைந்துள்ளது. சர்வதேச வான்வெளியில் அமைந்துள்ள இப்பகுதியில் ரஷ்யாவுக்கு சொந்தமான இரண்டு டியூ-19 வகை போர் விமானங்கள் நேற்று பறந்து சென்றுள்ளன.

    அவற்றை அமெரிக்காவின் நோராட் எப்-22 ரக போர் விமானங்கள் நடுவழியிலேயே இடைமறித்துள்ளது. அதைத்தொடர்ந்து வான் பாதுகாப்பு பகுதியை விட்டு  ரஷ்ய போர் விமானங்கள் திரும்பிச் சென்றுவிட்டதாக வட அமெரிக்க விமான பாதுகாப்பு செய்திதொடர்பாளர் மேஜர் ஆன்ரூவ் ஹென்னெசி தெரிவித்துள்ளார்.

    இதேபோல் கடந்த ஆண்டு மே 3-ம்தேதி ரஷ்ய விமானத்தை அமெரிக்க போர் விமானம் வழிமறித்து திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது. #USfighterjets #Russianbombers
    ×