search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107604"

    நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்து தப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை திருநகர் நேதாஜிநகரை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி பாப்பா (வயது 70). இவர் நேற்று கருவேலம்பட்டி ரெயில்வே கேட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் பாப்பா அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு ஓடிவிட்டார். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து பாப்பா ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

    சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னையன். இவரது மனைவி கருப்பாயி. இவர்களது 13 வயது மகள் அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமியை உப்படாபட்டியைச் சேர்ந்த அஜித் (17), திரவியம் (16) ஆகிய 2 பேர் வீடு புகுந்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    சிறுமி கூச்சல் போட்டவுடன் சிறுமியின் தாயார் கருப்பாயி வீட்டுக்கு ஓடி வந்தார். அப்போது 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து கருப்பாயி மேலவளவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித், திரவியம் ஆகிய 2 பேரையும் போஸ்கோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காதல் திருமணத்திற்கு தாமதமானதால், இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்தார்.

    மதுரை:

    மதுரை பைக்காரா முத்துராமலிங்காபுரம் பாலநாகம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மகள் நிவேதா (வயது 18).

    இவரது உறவினரான சிவமுருகன் என்பவரை காதலித்தாராம். இருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். நிவேதாவுக்கு 18 வயதே ஆவதால் 6 மாதம் கழித்து திருமணம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இது நிவேதாவுக்கு மன வேதனையை ஏற்படுத்தியது. இதனால் விரக்தியில் இருந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் தீ வைத்துக் கொண்டார்.

    தீயில் கருகிய நிலையில் கிடந்த நிவேதாவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் நேற்று நிவேதா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

    பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பெரிய முனியாண்டி. இவரது மகள் விஷாலி (வயது 21)மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விஷால், வரலட்சுமி இடையே காதல் இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வரும் நிலையில், சண்டக்கோழி-2 படத்தில் வரலட்சுமியின் வில்லத்தனத்தை நடிகர் விஷால் பாராட்டியிருக்கிறாராம். #Vishal #Varalakshmi
    விஷாலுடன் மதகஜராஜா படத்தில் தான் அறிமுகமானார் வரலட்சுமி. ஆனால் அந்த படம் சில சிக்கல்களால் வெளியாக வில்லை. போடா போடி முதல் படமாக அமைந்தது.

    அதன் பின் தாரை தப்பட்டை மூலம் தன்னை நிரூபித்தவர் தொடர்ந்து கனமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய்யை வைத்து முருகதாஸ் இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பவர், விஷால் நடிக்கும் சண்டக்கோழி-2 படத்தில் விஷாலுக்கே வில்லியாக நடிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.



    இந்த நிலையில், இதுவரை எடுத்த காட்சிகளை பார்த்த விஷால், வரலட்சுமியின் நடிப்பை பார்த்து அசந்து போனாராம். சண்டக்கோழி முதல் பாகத்தில் வில்லன் லாலின் மிரட்டலான நடிப்பு தான் படத்துக்கு பலமாக அமைந்தது. அதற்கு சமமான வில்லத்தனத்தை காட்டிவிட்டார் வரலட்சுமி என்று நண்பர்களிடம் பாராட்டி வருகிறார். விஷால் அடுத்து டெம்பர் படத்தின் தழுவலாக உருவாகும் அயோக்கியாவில் நடிக்கிறார்.

    அதற்கு அடுத்து விஷாலை வைத்து படம் இயக்க 5-க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் சண்டக்கோழி-2 படத்தின் படப்பிடிப்பில் கதை கேட்பதாக கூறி இருக்கிறது விஷால் தரப்பு. விரைவில் தேனியில் சண்டக்கோழி-2 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. #Vishal #Varalakshmi #Sandakozhi2

    மதுரை அருகே போதை மாத்திரைகளை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மதுரை:

    மதுரை அருகே உள்ள புதுநத்தம் ரோடு, ஆத்திக்குளம் சந்திப்பில் 2 பேர் போதை மாத்திரைகள் விற்பதாக தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்களிடம் 2 ஆயிரத்து 889 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போதை மாத்திரைகள் விற்றதாக ஊமச்சிக்குளம் முத்துராமலிங்கம் தெருவைச் சேர்ந்த ராஜா (வயது 43), அய்யர்பங்களா விசாலாட்சி நகர் பாண்டி யன் (48) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். #Tamilnews
    மதுரை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்-மனைவியை தாக்கி 6 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    மதுரை:

    மதுரை ஒத்தக்கடையை அடுத்துள்ள இடையபட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் சங்கிலி. இவர் நேற்றிரவு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது 25 வயது முதல் 30 வயது மதிக்கத்தக்க 3 மர்ம நபர்கள் திடீரென்று மோட்டார் சைக்கிளை மறித்தனர்.

    பின்னர் அந்த கும்பல் கணவன், மனைவியை சரமாரியாக தாக்கி சங்கிலி மனைவியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியது.

    இது குறித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ஒத்தக்கடை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சமூக விரோத சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே போலீசார் உரிய கவனம் செலுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. #Tamilnews
    மதுரை அருகே தொழில் நஷ்டத்தில் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை கோ.புதூர் சிங்காரவேலன் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சபரிகண்ணன் (வயது29). இவர் தனது உறவினர் ராஜூ என்பவருடன் போடிநாயக்கன்பட்டியில் வசித்து வந்தார்.

    தனியார் நிறுவன பொருட்கள் விற்பனை செய்து வந்த சபரிகண்ணனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து விட்டார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சபரிகண்ணன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ரூ.11 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 59). இவர் கே.கே.நகரில் ரியல் எஸ்டேட் நிறுவனம், கியாஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் வழக்கம் போல் நிறுவனத்தை பூட்டிவிட்டுச் சென்று விட்டார்.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் அந்தப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இதை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த லாக்கரை உடைத்து மர்ம நபர்கள் அதில் இருந்த ரூ.11 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.

    இன்று காலை கடையை திறக்க வந்த மாணிக்கம் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்தவர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை அருகே பணிக்கு சென்ற கணவர் திடீர் மாயமானது குறித்து போலீசில் மனைவி புகார் அளித்தார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கல்லாணை பகுதியைச் சேர்ந்தவர் பட்டாபிராமன் (வயது32). இவர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.

    நேற்று முன்தினம் பணிக்கு சென்ற பட்டாபிராமன் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி சூரியகலா சம்பந்தப்பட்ட தனியார் தொழிற்சாலைக்கு சென்று விசாரித்தார்.

    அப்போது அங்கு பணிபுரிந்துவரும் பெண் ஊழியர் செல்வி என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தில் பட்டாபிராமன் மாயமானதாக தெரியவந்தது.

    இதுதொடர்பாக அலங்காநல்லூர் போலீசில் சூரியகலா புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரையில் ஓடும் பஸ்சில் இறங்கிய முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது75). இவர் நேற்று ராமநாதபுரத்தில் இருந்து மதுரை வந்தார். மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து தனது உறவினர் வீட்டுக்கு டவுன் பஸ்சில் சிக்கந்தர்சாவடிக்கு சென்றார்.

    சிக்கந்தர்சாவடி பஸ் நிறுத்தம் அருகே பஸ் மெதுவாக சென்று கொண்டிருந்தபோது அவர் பஸ்சில் இருந்து திடீரென இறங்கினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தலாக் முறையை ஒழித்ததற்கு பிரதமர் மோடிக்கு முஸ்லிம்கள் நன்றி தெரிவித்துள்ளதாக மதுரையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #BJP #PonRadhakrishnan #Modi
    மதுரை:

    மதுரையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றது. இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

    பிரதமராக மோடி பதவியேற்ற போது இந்தியாவின் கடைக்கோடி சாமானிய மக்களின் வளர்ச்சி, பெண் கல்வியை மேம்படுத்துவேன் என உறுதி கூறினார்.

    4 ஆண்டுகளில் நாட்டில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலக அரங்கில் இந்தியாவுக்கு மரியாதை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

    மோடி அரசின் சாதனை குறித்து பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மக்களை சந்தித்து விளக்கி வருகிறார்கள். அதன்படி இன்று உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    நாட்டில் ஏழைகள் அனைவருக்கும் இலவச கியாஸ் இணைப்பு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று நாட்டில் ஒரு கோடியே 25 லட்சம் பேர் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். நானும் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளேன்.

    தூய்மை திட்டத்தின் கீழ் இந்தியாவில் 6 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்கள் பள்ளிக்கு முக்கியத்துவம் கொடுத்து கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.


    பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக செல்வமகள் சேமிப்பு திட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு பெண் ஊழியர்களுக்கு 12 வாரமாக இருந்த பிரசவ விடுப்பு 22 வாரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தலாக் முறையை ஒழித்ததற்கு மோடிக்கு முஸ்லிம்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    தினமும் 30 கி.மீ. தூரம் என்ற நோக்கத்தில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள 56 விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவில், மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் இரட்டை ரெயில் பாதை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் இதுவரை 93 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் ரூ. 28 ஆயிரம் கோடி மதிப்பில் இணையம் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #Modi
    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களின் சந்தேகங்களை மத்திய- மாநில அரசுகள் போக்க வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். #Sterliteprotest
    மதுரை:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நியூட்ரினோ, நெடுவாசல் ஓ.என்.ஜி.சி. குழாய் பதிப்பு போன்ற தொழில் சார்ந்த நிறுவனங்கள் தொடங்க கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக இயற்கை வளத்தை பயன்படுத்தி மத்திய-மாநில அரசுகள் தொழிற்சாலைகளை உருவாக்கி உள்ளன. ஆனாலும் இதில் நல்லது எது? கெட்டது எது? என ஆய்வு நடத்தப்படவில்லை.

    தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் சுற்றுச்சூழல் அனுமதியுடன் தொடங்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் கடும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது.


    ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில்தான் அமைக்கப்பட வேண்டும். ஆனால் இந்த நிறுவனம் 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

    இதற்காக மத்திய அரசு ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது. அதுபற்றி எந்த விவரங்களும் வெளியாகவில்லை.

    1994-ம் ஆண்டு முதல் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்தில் என்ன நடந்தது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். எல்லா நோய்களுக்கும் ஸ்டெர்லைட் ஆலை தான் காரணம் என தூத்துக்குடி மக்கள் நினைக்கிறார்கள். அதை போக்க வேண்டியது மத்திய-மாநில அரசின் கடமை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மதுரை மாவட்ட செயலாளர் தெய்வம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். #Sterliteprotest
    ×