search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107604"

    மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமையாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அமைச்சர் உதயகுமார் அறிவித்துள்ளார். #AIIMS #TNMinister #Udhayakumar
    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நடைபெற்ற கோவில் விழாவில் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமையவில்லை என்றால் ராஜினாமா செய்வேன் என்று ஏற்கனவே கூறினேன். என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    18 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவது தான் சிறப்பாக இருக்கும்.

    திருமங்கலம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான வெளியூர் பஸ் நிலையம் ரூ.22 கோடி செலவில் அமைய உள்ளது. விரைவில் திருமங்கலம் நகர்பகுதிக்கு பாதாளசாக்கடை திட்டத்தையும் கொண்டு வருவேன்.

    மத்திய அரசு பஸ்போர்ட் அமைய 3 இடங்களை தேர்வு செய்துள்ளது. அவை சேலம், கோவை, மதுரை ஆகிய பகுதிகளில் அமைய இருக்கிறது.

    மதுரையில் பஸ்போர்ட் அமைய 65 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அதற்கான இடத்தை தேர்வு செய்ய இருக்கிறோம். அனைத்து வசதிகள் நிறைந்த பஸ்போர்ட்டை திருமங்கலம் பகுதிக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வேன்.

    ரூ. 3 கோடி மதிப்பீட்டில் நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு வழங்க மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் பரிந்துரை செய்துள்ளார்.

    மேலும் பல்வேறு நலத்திட்டங்களை திருமங்கலத்திற்கு கொண்டு வந்து 234 தொகுதிகளில் திருமங்கலம் தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றுவேன்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #AIIMS #TNMinister #Udhayakumar
    மதுரை அருகே டிராக்டர் மோதி விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை சர்வேயர் காலனி, சக்தி நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி உமா சங்கரி (வயது 35). இவர் கணவருடன் மோட்டார் சைக்கிளில் இன்று காலை புறப்பட்டார்.

    மூன்றுமாவடி அருகே சென்றபோது பின்னால் தண்ணீர் ஏற்றி வந்த டிராக்டர் வேகமாக வந்தது. எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியது.

    இதில் உமா சங்கரி தூக்கி வீசப்பட்டார். மோதிய வேகத்தில் நிலை தடுமாறிய டிராக்டர் கீழே விழுந்த உமா சங்கரியின் தலையில் ஏறியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அருகே மின்சாரம் தாக்கியதில் ஆடு மேய்த்த பெண் இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் எம்.சத்திரப்பட்டி அருகில் உள்ள கருவனூரை சேர்ந்த மலைச்சாமி மனைவி கச்சம்மாள் (வயது 50). ஆடு மேய்க்கும் பெண்.

    இவர் நேற்று மாலை அங்குள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார். அப்போது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட கச்சம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக மலைச்சாமி எம்.சத்திரப்பட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

    விவசாயிகளின் நலன் பேணும் அரசாக அ.தி.மு.க. அரசு தொடர்ந்து விளங்கும் என்று திருமங்கலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNCM #Edappadipalanisamy
    மதுரை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவில்பட்டியில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்தார்.

    மதுரை விமான நிலையத்தில் அவரை, அமைச்சர் செல்லூர் ராஜூ, கலெக்டர் வீரராகவராவ் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    இதைத் தொடர்ந்து கார் மூலம் எடப்பாடி பழனிசாமி கோவில்பட்டிக்கு புறப்பட்டார்.

    கோவில்பட்டி செல்லும் வழியில் திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    வரவேற்பை பெற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்குள்ள தேவர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    திருமங்கலத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, சரவணன் எம்.எல்.ஏ. உள்ளனர்.

    ஜெயலலிதா பேரவை சார்பில் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான விவசாயிகள்-பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

    மறைந்த முதல்- அமைச்சர் அம்மா வழியில் இந்த அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக உருவாகி வருகிறது.

    கல்வித்துறையில் அம்மா எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையின் காரணமாக தமிழகம் சிறந்து விளங்குகிறது. எதையும் கேட்டு வாங்கி விடலாம். ஆனால் கல்வியை கேட்டு வாங்கி விட முடியாது. அந்தந்த பருவங்களில் அதை பெறுவதுதான் கல்வி. பருவங்கள் தவறி விட்டால் உரிய கல்வியை பெற முடியாது.

    ஏழை மாணவ, மாணவிகளின் நலனை பேணும் வகையில் அம்மா இலவச மடிக்கணினி மற்றும் சீரூடைகள் வழங்கினார்.

    இந்த திட்டத்தில் தமிழகத்தில் 36 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடிசையில் இருக்கும் மாணவர்கள் கூட உலக அறிவியலை பெற முடிகிறது.

    விவசாயிகளின் நலன் காக்கும் அரசாகவும் அம்மாவின் அரசு திகழ்ந்து விளங்குகிறது. கிராமப்புற விவசாயிகள் தான் கடுமையாக உழைக்கக்கூடியவர்கள்.

    நானும் ஒரு விவசாயி என்ற முறையில் விவசாயிகளின் உழைப்பை நன்றாக அறிவேன். எனவே இந்த அரசு விவசாயிகளின் நலன் பேணும் அரசாக தொடர்ந்து விளங்கும்.

    அம்மா அறிவித்த அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNCM #Edappadipalanisamy
    மதுரை அருகே பாலமேட்டில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பாலமேடு ராம் நகரைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 50). இவரது மனைவி சுசிலா (45). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.

    சம்பவத்தன்று கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு மதுரைக்கு சென்றுவிட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பீரோவை உடைத்த அவர்கள், அதில் இருந்த 12 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.

    வீடு திரும்பிய மகேஸ்வரன் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் பாலமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பி.தொட்டியப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (42). இவரின் பெற்றோர் சம்பவத்தன்று இரவு வீட்டை பூட்டிவிட்டு திருப்பதிக்கு சென்றிருந்தனர்.

    அப்போது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து 8 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர்.

    இது தொடர்பாக பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஒரு போதும் முதலமைச்சராக முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #SellurRaju #Rajinikanth #KamalHaasan
    மதுரை:

    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆரப்பாளையம் கண்மாய் கரை, சொக்கலிங்புரம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய தார்சாலை அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இதற்கான பூமிபூஜையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தார்சாலை, பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் திறம்பட செயல்படுத்தி வருகிறது.

    ஆனால் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக கருதி நடிகர்கள் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார்கள். எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழக மக்கள் யாரையும் அரசியல் ரீதியாக ஆதரித்தது இல்லை. இனியும் ஆதரிக்க மாட்டார்கள்.


    ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் முதல்வர் பதவிக்காக கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் பலிக்காது. தமிழகத்தில் ரஜினிகாந்த் ஒருபோதும் ஆட்சியை பிடிக்க முடியாது.

    ரஜினிகாந்த் நதிகளை இணைப்பது குறித்து இப்போது பேசி உள்ளார். அது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே நதிகள் இணைப்புக்காக தான் அறிவித்த நன்கொடை பணத்தை ரஜினிகாந்த் இன்னும் கொடுக்கவில்லை.

    இவ்வாறு இருக்கும்போது மக்கள் எப்படி அவரது வாக்குறுதியை நம்புவார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் ஆட்சிக்கு வரமுடியாது.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TNMinister #SellurRaju #Rajinikanth #KamalHaasan
    ×