search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107604"

    தைப்பூசத் திருவிழாவையொட்டி வருகிற 20, 21 ஆகிய 2 நாட்கள் மட்டும் சிறப்பு ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.

    பாதயாத்திரைக்கு பிரசித்திப்பெற்ற இவ்விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள முருகப்பக்தர்கள் விரதம் இருந்து பழனி முருகனை தரிசிக்க பாதயாத்திரையாக பல நூறு மைல்கள் கடந்து பழனிக்கு வருகிறார்கள்.

    இந்த விழாவில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இவ்விழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    ஏராளாமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும், குறைந்த கட்டணத்தில் நீண்ட தூரப்பயணத்திறக்கு ரெயில் பயணம் செய்வதே வசதியாக உள்ளது.

    தற்போது பழனி வழியாக பாலக்காடு- சென்னை அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில், பாலக்காடு-திருச்செந்தூர் பயணிகள் ரெயில், மதுரை - கோவை பயணிகள் ரெயில் என 3 ரெயில்கள் மட்டுமே பழனி வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. ஆனால் இந்த ரெயில்கள் பயணிகளுக்கு போதுமானதாக இல்லை. ரெயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு தேவையான ரெயில்களை இயக்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

    கடந்த மாதத்திலிருந்தே பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகிறார்கள். ஆனால் அவர்கள் ஊர் திரும்புவதற்கு வசதியாக போதுமான ரெயில்கள் இயக்கப்படவில்லை, இதன் காரணமாக ரெயில்களில் பயணிகள் இருக்க இடமின்றி பார்சல் வேன்களிலும் நின்று சென்றனர். கூடுதல் பெட்டிகளை சேர்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    தற்போது தைப்பூசத் திருவிழாவையொட்டி வருகிற 20, 21 ஆகிய 2 நாட்கள் மட்டும் சிறப்பு ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது.

    நாளை (20- ந்தேதி) அன்று காலை 8.15 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் பயணிகள் ரெயில் காலை 11.15 மணிக்கு பழனிக்கு வந்து சேருகிறது. அதே ரெயில் இரவு 8.00 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு மதுரையை சென்றடைகிறது. 21- ந்தேதியும் இதே போல் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே மதுரை கோட்டத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மதுரையில் ரூ.354 கோடி மதிப்பிலான ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டப்பணிகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார். #SmartCity #MaduraiSmartCity
    மதுரை:

    ரூ.345 கோடி மதிப்பிலான திட்டத்தின் மூலம் மதுரை நகரம் சீர்மிகு நகரமாக மாற்றப்படுகிறது.

    மத்திய அரசின் ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டத்தின் கீழ் மதுரையில் ரூ.1000 கோடி மதிப்பில் நகர் நவீன மயமாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக ரூ.345 கோடி செலவில் மதுரையை சீர்மிகு நகரமாக மாற்ற மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    இந்த நிதியில் இருந்து ரூ.160 கோடி செலவில் மிக பழமையான பெரியார் மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் நிலையங்கள் இணைக்கப்பட்டு நவீனமயமாக்கப்படுகிறது. மேலும் ரூ.81 கோடி செலவில் ராஜா மில் சாலை முதல் குருவிக்காரன்சாலை வரையுள்ள வைகை ஆற்றங்கரை புனரமைப்பு செய்யப்படுகிறது.

    ரூ.40 கோடி செலவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் நவீன வாகனங்கள் நிறுத்தும் இடம், புராதன அங்காடி மையம் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான தகவல் மையம் அமைக்கப்படுகிறது.


    ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் பெரியார் பஸ் நிலையத்தின் மாதிரி தோற்றம்

    ரூ.2½ கோடியில் பெரியார் பஸ் நிலையம் அருகில் சுற்றுலா பயணிகளுக்கு தகவல் மையம், ரூ.22 கோடி செலவில் புராதன சின்னங்களை இணைக்கும் புராதன வழித்தடம், ரூ.4 கோடி மதிப்பில் ஜான்சிராணி பூங்கா அருகே சுற்றுலா பயணிகளுக்கான வருகை மையம் மற்றும் அங்காடி மையம்.

    ரூ.8 கோடி செலவில் குன்னத்தூர் சத்திரத்தில் வணிக வளாகம் அமைத்தல், ரூ.15 கோடி செலவில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள பகுதிகள் சீரமைப்பு, ரூ.12 கோடி செலவில் திருமலைநாயக்கர் மகாலை சுற்றி உள்ள பகுதிகள் மேம்படுத்தல் ஆகிய பணிகள் முதல் கட்டமாக செய்யப்பட உள்ளன.

    இந்த திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா பெரியார் பஸ் நிலைய பகுதியில் இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு நகராட்சி நிர்வாக ஆணையாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் நடராஜன் வரவேற்று பேசினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ‘ஸ்மார்ட்சிட்டி’ பணிக்கான அடிக்கல்லை நாட்டி சிறப்புரையாற்றினார்.

    அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோரும் ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து பேசினர். மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ்சேகர் நன்றி கூறினார்.

    இந்த ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டப்பணிகள் தொடங்குவதையொட்டி பெரியார் பஸ் நிலைய பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் காலி செய்யப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தை இன்னும் ஓரிரு நாளில் மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்காலிகமாக பஸ் நிலையங்கள் அமைப்பது குறித்து வருகிற 21-ந்தேதி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், போக்குவரத்துத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பது, போக்குவரத்தை மாற்றி அமைப்பது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இதைத்தொடர்ந்து மதுரையின் மைய பகுதியான பெரியார் பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படுகிறது.

    ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டத்தை 1½ ஆண்டுகளில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவுகாலம் ஏற்பட்டுவிடும் என்பது பொதுமக்களின் கருத்தாகும்.  #SmartCity #MaduraiSmartCity
    எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. #HIVBlood #PregnantWoman
    மதுரை:

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட சாத்தூர் கர்ப்பிணி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு 9 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்து, சிகிச்சை பெறும் கர்ப்பிணிக்கு ஆறுதல் கூறி தனது சொந்த பணத்தில் ரூ.2 லட்சம் வழங்கினார். அப்போது அவர், சிகிச்சை முடிந்து அந்த பெண் வீடு திரும்பியதும் அவரது கணவருக்கு டிரைவர் வேலையும், பெண்ணுக்கு தகுந்த வேலையும் வழங்கப்படும் என்றார்.

    இந்நிலையில், சாத்தூரில் எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு சுக பிரசவம் ஆனதால் மகிழ்ச்சி அடைந்தோம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். #HIVBlood #PregnantWoman
    உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த போட்டியில் 40 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். #Jallikattu #AlanganallurJallikattu
    மதுரை:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டதும், ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றன.

    வாடிவாசல், தடுப்பு, கேலரி, மைதானம், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 150 செ.மீ. உயரம் இருக்க வேண்டும், 55 கிலோ எடை அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நடைமுறைகள் முடிந்தபின்னர் பலத்த பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. பொங்கல் தினத்தன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கல் நாளான நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு பிரமாண்டமாக நடைபெற்றது.

    இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து அமைச்சர் உதயகுமார் மற்றும் ஆட்சியர் நடராஜன் ஆகியோர் பச்சைக் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர்.

    வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன்பின்னர் மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க காளையர்கள் களத்தில் ஆக்ரோஷமாக களமிறங்கினர். இந்த போட்டியில் 730 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் உள்பட 40 பேர் காயமடைந்தனர்.  படுகாயமடைந்த 15பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


    15 காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான ரஞ்சித் குமாருக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. சிறந்த காளையாக தேர்வான பரம்பப்பட்டி செல்லியம்மன் கோவில் காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. மாலையில் நடைபெற்ற இறுதிக்கட்ட விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

    ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரருக்கும், காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இருசக்கர வாகனங்கள், தங்கம், வெள்ளிக் காசுகள், கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டன.  #Jallikattu #AlanganallurJallikattu
    மதுரை அருகே விளாச்சேரியில் வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பேரையூர்:

    மதுரை அருகே உள்ள விளாச்சேரி ஆதிசிவன் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி காந்திமதி. இவர்களது மகன் கவுதமன் (வயது 30). இவருக்கும், மொட்டமலை கலைஞர் நகரைச் சேர்ந்த சேதுபிரசாத் (25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கவுதமன் நேற்று மொட்டைமலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றார். அங்கு மது அருந்திவிட்டு வெளியே வந்தபோது சேதுபிரசாத், அவரது நண்பர் கரண்ராஜா (19) ஆகியோர் கவுதமனிடம் மீண்டும் தகராறு செய்தனர்.

    இதில் வாக்குவாதம் முற்றவே போதையில் இருந்த கவுதமனை இருவரும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த கவுதமன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசக்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கவுதமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சேது பிரசாத்தையும், கரண் ராஜாையும் கைது செய்தனர்.

    சேதுபிரசாத்தின் அண்ணன் 2 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு கவுதமன் தான் காரணம் எனக்கருதி பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில் சேதுபிரசாத், தனது நண்பருடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    மதுரையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு ரூ.2 லட்சம் இன்சூரன்சு வசதி செய்யப்படுகிறது. #Jallikattu

    மதுரை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு திருவிழா மதுரை மாவட்டத்தில் நாளை முதல் தொடங்குகிறது.

    முதல் ஜல்லிக்கட்டு போட்டி நாளை மதுரை அவனியாபுரத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க 700-க்கும் மேற்பட்ட காளைகள் தயாராக உள்ளன. 600 மாடுபிடி வீரர்களும் இதற்காக முன்பதிவு செய்து டோக்கன் பெற்றுள்ளனர்.

    நாளை மறுநாள் (புதன் கிழமை) மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

    இந்த ஜல்லிக்கெட்டில் பங்கேற்க 880 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 850 பேர் உடல் தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு டோக்கன்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஜல்லிக்கட்டில் சுமார் 900 காளைகள் பங்கேற்கிறது.

    அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக மதுரை மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    மதுரை அவனியாபுரத்தில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ராகவன் தலைமையிலான ஒருங்கிணைப்புக்குழு முன்னிலையில் நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் நடராஜன், போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    பார்வையாளர்களுக்கென தனி கேலரி அமைக்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் தங்க காசுகள், வெள்ளி பொருட்கள், கார், மோட்டார் சைக்கிள், பாத்திரங்கள், பீரோ, கட்டில், டி.வி., சைக்கிள்கள் உள்ளிட்ட விலைஉயர்ந்த பரிசு பொருட்களும் காத்திருக்கின்றன.

    இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு முதன் முறையாக இந்த ஆண்டு முதல் இன்சூரன்சு வசதியை மதுரை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

    பிரதான்மந்திரி சுரக்ஷா பீமாயோஜனா திட்டத்தின் கீழ் ரூ.12 செலுத்தி ரூ.2 லட்சம் இன்சூரன்சு பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் இந்த இன்சூரன்சு வசதி செய்யப்படுகிறது.இதை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

    மேலும் வங்கி கணக்குகள் இல்லாத மாடுபிடி வீரர்களுக்கு இன்று வங்கி கணக்குகளையும் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன் கூறியதாவது:-

    ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் இன்சூரன்சு செய்யப்படுகிறது. பார்வையாளர்கள் அவரவர் பாதுகாப்புக்கு ரூ.330 இன்சூரன்சு செய்யலாம். படுகாயம் மற்றும் மரணம் ஏற்பட்டால் அவர்களது குடும்பத்திற்கு இந்த இன்சூரன்சு வசதி பெரும் உதவியாக இருக்கும்.

    இந்த மாடுபிடி வீரர்கள் தமிழகம் முழுவதும் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றாலும் இந்த இன்சூரன்சு மூலம் உதவி பெறலாம். மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆயிரக்கணக்கானோர் திரளுவதால் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். #Jallikattu

    வரும் 22-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் என ஐகோர்ட் மதுரைக் கிளையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இன்று தெரிவித்தனர். #JactoGeo #Protest
    மதுரை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். 7-வது ஊதிய குழுவின் 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. 

    இதற்கிடையே, மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகளின் யோசனையை ஏற்று வேலை நிறுத்த போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், மதுரை ஐகோர்ட் கிளையில் வேலைநிறுத்தம் செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழியை நீதிமன்றத்திலிருந்து ஜாக்டோ ஜியோ இன்று திரும்பப் பெற்றது.

    இதுதொடர்பாக அந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கூறுகையில், திட்டமிட்டபடி ஜனவரி 22ம் தேதி எங்களது வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசுத்தரப்பு அவகாசம் மட்டுமே கோருகிறது என தெரிவித்துள்ளது.

    ஜாக்டோ-ஜியோ, அரசுத்தரப்பு வாதத்தை தொடர்ந்து, மதுரை ஐகோர்ட் கிளை இந்த வழக்கை ஜனவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. #JactoGeo #Protest
    மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

    மதுரை:

    மதுரை அரசரடி, உள்ள துணை மின்நிலையத்தில் நாளை (26-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    அதன்படி சம்பட்டிபுரம் மெயின்ரோடு, ஜெர்மானூஸ் சில பகுதிகள், முத்து ராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம்நகர், எச்.எம்.எஸ். காலனி, டோக்நகர் 4 முதல் 16 தெரு வரை, தேனி மெயின்ரோடு, விராட்டிப் பத்து சில பகுதிகள், மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ.உ.சி. மெயின்ரோடு, இ.பி.காலனி, நடராஜ் நகர், அசோக் நகர், டோக் நகர் 1 முதல் 3 தெரு, கோச்சடை கிராமம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள், ஜெயில் ரோடு, மேலப் பொன்னகரம் 2,3,10 -வது தெரு, கனரா பாங்க் முதல் டாக்சி ஸ்டாண்டு வரை, ஆர்.வி.நகர், ஞான ஒளிவுபுரம், விசுவாசபுரி 1-5 தெரு, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கைலாசபுரம், எஸ்.எஸ். காலனி ஏரியா, வடக்கு வாசல், அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவகர் 1 முதல் 5-வது தெரு, சொக்க லிங்கநகர் 1 முதல் 8-வது தெருவரை, பொன்மேனி, சம்பட்டி புரம், பொன்மேனி மெயின்ரோடு, மத்திய சிறைச்சாலை, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம், பாத்திமா நகர், இன்கம் டாக்ஸ் காலனி, இந்திராநகர், குட்செட் ரோடு, மீனாட்சி பஜார், தெற்கு மண்டல அலுவலக பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மின் பகிர்மான செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.

    பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 16 பவுன் நகை மற்றும் ரூ.52 ஆயிரத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    மதுரை:

    மதுரை கோசாகுளம் எம்.பி.நகரைச் சேர்ந்தவர் ஜோதிநாதன் (வயது 55). இவர் எல்லீஸ் நகர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் அதிகாரியாக உள்ளார்.

    சம்பவத்தன்று ஜோதிநாதன் மற்றும் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு கேரளாவுக்குச் சென்றனர்.

    இந்த நிலையில் அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்தனர்.

    இதுபற்றி அவர்கள் ஜோதிநாதனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக விரைந்து வந்து பார்த்தார். வீட்டினுள் இருந்த பீரோ திறந்து பொருட்கள் சிதறிக் கிடந்ததை கண்ட ஜோதிநாதன், கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து யாரோ, கதவை உடைத்து உள்ளே புகுந்திருப்பது தெரிய வந்தது.

    பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகள், ரூ.52 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் ஜோதிநாதன் தெரிவித்தார்.

    வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைள் சேகரிக்கப்பட்டன.

    மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது. பூட்டிய வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மற்றொரு சம்பவம்...

    மதுரை ஜீவா நகரைச் சேர்ந்த மவுலானா (58) வீட்டின் பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் திடீரென மாயமானது.

    இதுகுறித்து போலீசில் புகார் செய்த மவுலானா, வீட்டு வேலைக்காரி மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

    ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வேலைக்காரி ராஜேஸ்வரியை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர் தான் பணத்தை எடுத்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ராஜேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை தாசில்தார் நகரைச் சேர்ந்த காந்திமதி (75) வீட்டில் படுத்திருந்தபோது, யாரோ மர்ம மனிதன் நைசாக உள்ளே புகுந்துள்ளான். அவன், காந்திமதி கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றான்.

    இதுகுறித்து அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    மதுரையில் 5 கிலோ கஞ்சாவுடன் தந்தை-மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை திருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப் பாண்டி மற்றும் போலீசார் ஹார்விபட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது அதில் 3 கிலோ 350 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    அதனையும், அவர்களி டம் இருந்த ரூ.13 ஆயிரத்து 80-ஐயும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் அய்யனார் காலனியை சேர்ந்த மதுரைவீரன் (வயது55), அவனியாபுரம் மேலதெருவைச் சேர்ந்த தங்கபெருமாள் (65), இவரது மகன் முத்தையா (25) என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை அண்ணாநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீபன், யாகப்பா நகர் மீனாட்சி தெருவில் ரோந்து சென்றார். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த நரிக்குட்டி என்ற சரவணனை (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1¾ கிலோ கஞ்சாவும், ரூ1980-ம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரையில் கிறிஸ்தவ ஆலய காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மதுரை:

    மதுரை காதக்கிணறு சர்ச் தெருவைச் சேர்ந்தவர் சவரிஜான் போஸ்கோ (வயது 38). இவரது மனைவி மெர்சி (31).

    காதக்கிணறு தேவாலயத்தில் காவலாளியாக வேலை பார்த்த சவரிஜான் போஸ்கோ, அங்குள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் சவரிஜான் போஸ்கோ கடந்த 3 நாட்களாக வேலைக்கு வராமல், குடிபோதையில் திரிந்து வந்துள்ளார். இதனால் அவரை கண்டித்த தேவாலய பாதிரியார், ‘நீங்கள் சரியாக வேலைக்கு வருவதில்லை. இதனால் உங்களை பணி நீக்கம் செய்வது என்று முடிவு செய்துள்ளோம். எனவே நீங்கள் உடனடியாக வீட்டை காலி செய்யுங்கள்’ என்று கூறியதாக தெரிகிறது.

    இதனால் சவரிஜான் போஸ்கோ நேற்று மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக மெர்சி அப்பன் திருப்பதி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரையில் 2 பெண்களிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம், எம்.கே.புரம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார். இவரது மனைவி அனுசியா (வயது 21).

    இவர் நேற்று இரவு 7 மணிக்கு அந்தப்பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அனுசியா கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்று விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்துப்பட்டி ஆர்.எம். எஸ்.காலனி அழகுமலையான் நகரைச் சேர்ந்தவர் நெல்சன் (49). இவர், தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், நெல்சனின் மனைவி கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர். இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×