search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடியூரப்பா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜன சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் எடியூரப்பா, பசவராஜ்பொம்மை ஆகியோர் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்கள், மக்களை சந்திக்க உள்ளனர்.
    • முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் ராய்ச்சூரில் இருந்து தங்களது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்க அக்கட்சி மேலிடம் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய ஒற்றுமைக்கான பாதயாத்திரையை ராகுல்காந்தி கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கினார்.

    அவர் மைசூரு, துமகூரு வழியாக நேற்று சித்ரதுர்காவில் தனது நடைபயணத்தை மேற்கொண்டார். அவரது பாதயாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    இதற்கு பதிலடியாகவும், சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டும் பா.ஜனதா மேலிடம் காங்கிரஸ் பாதயாத்திரைக்கு போட்டியாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, தற்போதைய முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை ஆகியோரை களத்தில் இறக்கியுள்ளது. இரு தலைவர்களும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள்.

    அதன்படி ஜன சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் எடியூரப்பா, பசவராஜ்பொம்மை ஆகியோர் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்கள், மக்களை சந்திக்க உள்ளனர். அவர்களின் சுற்றுப்பயணம் வடகர்நாடகத்தில் உள்ள ராய்ச்சூரில் இன்று தொடங்குகிறது.

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் ராய்ச்சூரில் இருந்து தங்களது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளனர். 50 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்த 2 தலைவர்களும் முடிவு செய்து உள்ளனர்.

    ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி, கொப்பல் மாவட்டம் குஷ்டகி, விஜயநகர் மாவட்டம் ஊவினஅடஹள்ளி, பல்லாரி மாவட்டம் சிருகுப்பாவில் அடுத்த 3 நாட்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள்.

    அதன்பின்னர் 2 நாட்கள் ஓய்வு எடுக்கும் பசவராஜ் பொம்மை மைசூருவில் 16-ந் தேதி நடக்கும் எஸ்.சி. சமூக மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதன்பின்னர் பீதர், யாதகிரி, கலபுரகி மாவட்டங்களில் பசவராஜ் பொம்மை சுற்றுப்பயணம் செய்கிறார்.

    • கர்நாடகாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்துவருகிறது.
    • அங்கு முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு 2008 - 10ல் எடியூரப்பா முதல் மந்திரியாக இருந்தபோது, அவர்மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு ஒப்பந்தங்களை வழங்குவதிலும், பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் சார்பில் வீட்டுமனைகள் வழங்கியதிலும் முறைகேடுகள் நடந்தன. இதில் எடியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும் ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம், ரூ.12 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைப் பற்றி விசாரணை நடத்தும்படி பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆப்ரஹாம், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.

    எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்கு குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரணை நடத்த வேண்டும். நவம்பர் 2-க்குள் அறிக்கை அளிக்கவேண்டும் என லோக் ஆயுக்தா போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மக்கள் பிரதிநிதிதிகள் சிறப்பு நீதிமன்றம் 14-ம் தேதி உத்தரவிட்டது.

    இந்நிலையில், கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் பி.டி.ஏ. குடியிருப்பு கட்டிட திட்டத்தில் நடந்த ஊழல் குறித்து முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், சசிதர் மரடி, சஞ்சய், சந்திரகாந்த், கட்டுமான நிறுவன அதிபர் ராமலிங்கம், பிரகாஷ், ரவி உள்ளிட்டோர் மீது பெங்களூரு லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதற்காக எடியூரப்பா, விஜயேந்திரா, மந்திரி சோமசேகர் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராக கூறி லோக் அயுக்தா போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். லோக் ஆயுக்தா போலீசார் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்திருப்பதால் அவருக்கு சிக்கல் ஏற்படும் நிலை உண்டாகியுள்ளது.

    • எடியூரப்பா வயது மூப்பால் முதல்வர் பதவியில் இருந்து கடந்த ஓராண்டுக்கு முன் விலகினார்.
    • தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியுடன் எடியூரப்பா சந்தித்து பேசினார்.

    பெங்களூரு:

    கர்நாடக முதல் மந்திரியாக இருந்த எடியூரப்பா வயது மூப்பு காரணமாக அப்பதவியில் இருந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு விலகினார். அவர் அரசியலலில் இருந்து ஓய்வு பெற்று விட்டதாகவே கருதப்பட்டார். அவருக்கு 80 வயது, ஆனாலும் கட்சி மேலிடம் அவருக்கு புதிய பதவி வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அவருக்கு கட்சியின் உயர்நிலை குழு மற்றும் தேர்தல் குழுவில் இடம் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், எடியூரப்பா நேற்று டெல்லி சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் எடியூரப்பா நேரில் சந்தித்து பேசினார். அப்போது தனக்கு கட்சியில் புதிய பதவி வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    கர்நாடகத்தில் வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்க பாடுபடுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

    • கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை.
    • 2023 நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

    பெங்களூரு :

    ஆந்திர மாநிலம் மந்திராலயத்திற்கு முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். நேற்று காலையில் அவர் ராகவேந்திரா சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார். முன்னதாக மந்திராலயத்தில் வைத்து எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை. பசவராஜ் பொம்மையே இன்னும் 8 மாதங்கள் முதல்-மந்திரியாக இருப்பார். அடுத்த சட்டசபை தேர்தலையும் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா சந்திக்கும். அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் கனவு காண்கிறார்கள். அவர்களது கனவு பலிக்காது.

    பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்க மாநிலம் முழுவதும் வருகிற 21-ந் தேதியில் இருந்து நான் உள்பட அனைத்து தலைவர்களும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். பெங்களூருவுக்கு வந்த அமித்ஷா, சட்டசபை தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பா.ஜனதாவில் நான் புறக்கணிக்கப்படுவதாக கூறுவதில் உண்மை இல்லை. பா.ஜனதா கட்சி எனக்கு அனைத்து பதவிகளையும் கொடுத்துள்ளது.

    சிகாரிபுரா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிட வாய்ப்பளிக்கும்படி பா.ஜனதா மேலிடத்திடம் அனுமதி கேட்டுள்ளேன். சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விஜயேந்திரா வெற்றி பெறுவார். பா.ஜனதா பற்றியும், தலைவர்களை பற்றியும் காங்கிரஸ் கட்சியினர் தேவையில்லாத பொய் குற்றச்சாட்டுகளை கூறி மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். வருகிற 21-ந்தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து ஓரிரு நாட்களில் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    • கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை.
    • 2023 நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

    பெங்களூரு :

    ஆந்திர மாநிலம் மந்திராலயத்திற்கு முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். நேற்று காலையில் அவர் ராகவேந்திரா சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார். முன்னதாக மந்திராலயத்தில் வைத்து எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை. பசவராஜ் பொம்மையே இன்னும் 8 மாதங்கள் முதல்-மந்திரியாக இருப்பார். அடுத்த சட்டசபை தேர்தலையும் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா சந்திக்கும். அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் கனவு காண்கிறார்கள். அவர்களது கனவு பலிக்காது.

    பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்க மாநிலம் முழுவதும் வருகிற 21-ந் தேதியில் இருந்து நான் உள்பட அனைத்து தலைவர்களும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். பெங்களூருவுக்கு வந்த அமித்ஷா, சட்டசபை தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பா.ஜனதாவில் நான் புறக்கணிக்கப்படுவதாக கூறுவதில் உண்மை இல்லை. பா.ஜனதா கட்சி எனக்கு அனைத்து பதவிகளையும் கொடுத்துள்ளது.

    சிகாரிபுரா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிட வாய்ப்பளிக்கும்படி பா.ஜனதா மேலிடத்திடம் அனுமதி கேட்டுள்ளேன். சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விஜயேந்திரா வெற்றி பெறுவார். பா.ஜனதா பற்றியும், தலைவர்களை பற்றியும் காங்கிரஸ் கட்சியினர் தேவையில்லாத பொய் குற்றச்சாட்டுகளை கூறி மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். வருகிற 21-ந்தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து ஓரிரு நாட்களில் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    • காங்கிரசால் கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.
    • மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க எடியூரப்பாவே காரணம்.

    பெங்களூரு :

    தாவணகெரே மாவட்டம் ஒன்னாளியில் உள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.வான ரேணுகாச்சார்யாவின் வீட்டுக்கு முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா சென்றார். அங்கு எடியூரப்பா அருகில் கண் கலங்கியபடி ரேணுகாச்சார்யா இருந்தார். தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்ற முடிவை திரும்ப பெற வேண்டும் என்று எடியூரப்பாவிடம் ரேணுகாச்சார்யா கேட்டுக் கொண்டார். பின்னர் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    கர்நாடகத்தில் மிகப்பெரிய தலைவர் எடியூரப்பா. அவர், தேர்தலில் போட்டியிடுவது இல்லை, கட்சியை வளர்க்கும் பணியில் மட்டும் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார். எடியூரப்பா தனது முடிவை திரும்ப பெற வேண்டும். அரசியலில் இருந்து எடியூரப்பா ஓய்வு பெறக்கூடாது.

    மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க எடியூரப்பாவே காரணம். அவர் கட்சி வளர்க்கும் பணியில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு டி.கே.சிவக்குமார், சித்தராமையா இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரசால் கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக எடியூரப்பா பற்றி பேசும் போது ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. கண்ணீர் விட்டு அழுதார்.

    • கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்க உள்ளது.
    • அடுத்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்க உள்ளது. இத்தேர்தலை சந்திக்க பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

    வரும் தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வைத் தோற்கடித்து, பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற காங்கிரஸ் திட்டமிட்டு அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கிடையே, அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவரும், முன்னாள் முதல்மந்திரியுமான எடியூரப்பா தெரிவித்துள்ளார். தன்னுடைய சட்டசபைத் தொகுதியை எனது மகன் பி.ஒய்.விஜயேந்திரனுக்காக விட்டுக்கொடுக்கிறேன். ஷிகாரிபுரா வாக்காளர்கள் அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இந்நிலையில், எடியூரப்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    எனது மகன் ஷிகாரிபுராவில் போட்டியிடுவார். இறுதி முடிவை பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் எடுப்பார்கள் என கூறினேன். அவர்களின் முடிவே இறுதியானது. என்னால் அழுத்தம் கொடுக்க முடியாது. பரிந்துரையை மட்டுமே என்னால் கூறமுடியும். மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என தெரிவித்தார்.

    • எடியூரப்பா இதுவரை 6 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளார்.
    • 4 முறை முதல்-மந்திரியாக பணியாற்றினார்.

    பெங்களூரு:

    கர்நாடக அரசியலில் பலம் வாய்ந்த தலைவர்களில் ஒருவர் எடியூரப்பா. பா.ஜனதா வட இந்திய மாநிலங்களில் மட்டுமே கோலோச்சி வந்த காலக்கட்டத்தில் தென்இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு எடியூரப்பா பா.ஜனதாவை ஆட்சி கட்டிலில் அமர்த்தினார். இது அப்போது அக்கட்சியின் பலம் வாய்ந்த தலைவர்களாக திகழ்ந்த வாஜ்பாய், அத்வானி போன்றோருக்கு பெரும் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளித்தது.

    சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் எடியூரப்பா 3½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் நீடித்தார். மந்திரி பதவி கேட்டு கட்சி எம்.எல்.ஏ.க்கள் அடிக்கடி போர்க்கொடி தூக்கியதால் அவர் ஆட்சியை நடத்த பெரும் சவால்களை சந்தித்தார். நில முறைகேடு, கனிம வளங்கள் முறைகேடு என ஊழல் புகார்களின் சுழலில் சிக்கிய அவர் பதவியை இழந்து சிறைக்கும் சென்றார்.

    அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது, எடியூரப்பாவின் முடிவே கட்சி மேலிடத்தின் முடிவாக இருந்தது. கர்நாடக பா.ஜனதாவிலோ அல்லது ஆட்சியிலோ யாருக்கு பதவி வழங்க வேண்டும் என்பதை எடியூரப்பாவின் தீர்மானமே இறுதியாக இருந்தது. எடியூரப்பா தான் பா.ஜனதா மேலிடம் என்ற நிலை இருந்தது.

    அவர் முதல்-மந்திரி பதவியை இழந்த பிறகும் அவர் கை காட்டியவருக்கே முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது. அதாவது சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டரை அவர் தான் முதல்-மந்திரி ஆக்கினார். ஆனால் ஊழல் புகார்களில் பா.ஜனதா மேலிடம் அதிருப்தியில் இருந்ததை அடுத்து எடியூரப்பா ஓரங்கட்டப்பட்டார்.

    இதையடுத்து அவர் அக்கட்சியை விட்டு விலகி 2012-ம் ஆண்டு கர்நாடக ஜனதா என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி தனித்து போட்டியிட்டது. ஆனால் அவர் எதிா்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

    10 சதவீத வாக்குகள் கிடைத்தாலும் 6 இடங்களில் மட்டுமே அவரது கட்சி வெற்றி பெற்றது. அதே நேரத்தில் பா.ஜனதா படுதோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு எடியூரப்பா தனிக்கட்சி தொடங்கி தனித்து போட்டியிட்டதே காரணம் ஆகும்.

    எடியூரப்பா விலகிய பிறகு கட்சியை வழிநடத்த அவருக்கு இணையான ஒரு தலைவர் இல்லாமல் பா.ஜனதா தடுமாறியது. அதே நேரத்தில் எடியூரப்பாவும் பா.ஜனதாவுக்கு திரும்புவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலையை உணர்ந்தார். இதையடுத்து எடியூரப்பா கர்நாடக ஜனதாவை கலைத்துவிட்டு மீண்டும் தாய் கட்சிக்கு திரும்பினார். இதன் மூலம் பா.ஜனதா மீண்டும் பலம் பெற்றது. சித்தராமையா ஆட்சிக்கு எதிராக தீவிரமான போராட்டங்களை நடத்தினார்.

    2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. அப்போது எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றாலும், தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் அவர் மூன்றே நாட்களில் அந்த பதவியை இழந்தார்.

    காலப்போக்கில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களால் அவர் மீண்டும் கடந்த 2019-ம் ஆண்டு முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 2 ஆண்டுகள் அவர் பதவியில் இருந்த நிலையில் வயது மூப்பு காரணமாக முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா துறந்தார்.

    இந்த நிலையில் எடியூரப்பாவுக்கு 80 வயது ஆகிறது. பா.ஜனதாவில் தீவிர அரசியலில் நீடிக்க வயது வரம்பு 75 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்கள் செல்வாக்கு காரணமாகவும், பெரும்பான்மை சமூகமான லிங்காயத் சமூகத்தை சேர்ந்த முன்னணி தலைவராகவும் இருந்ததால் அந்த வயது வரம்பையும் மீறி 2 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் நீடிக்க அவருக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கா்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் எடியூரப்பா போட்டியிட மாட்டார் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார். தனது சிகாரிப்புரா தொகுதியில் மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என்றும், அவருக்கு மக்கள் தன்னை போலவே ஆதரவு அளித்து அரவணைக்க வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம் எடியூரப்பாவின் 50 ஆண்டு கால கர்நாடக அரசியல் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

    எடியூரப்பா முதல் முறையாக 1972-ம் ஆண்டு சிகாரிப்புரா பட்டண பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்ந்து எடுக்கப்பட்டார். 1975-ம் ஆண்டு அந்த அதே பட்டண பஞ்சாயத்து தலைவராக நியமிக்கப்பட்டார். 1983-ம் ஆண்டு முதல் முறையாக கர்நாடக சட்டசபை உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    அந்த தொகுதியில் அவர் இதுவரை 6 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளார். 1999-ம் ஆண்டு அவர் சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து மேல்-சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். கடந்த 2006-ம் ஆண்டு பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சியில் எடியூரப்பா துணை முதல்-மந்திரியாக பணியாற்றினார்.

    2007-ம் ஆண்டு அவர் முதல்-மந்திரியாக பதவி ஏற்றாலும் ஜனதா தளம் (எஸ்) ஒத்துழைக்காததால் ஒரே வாரத்தில் அவர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் 4 முறை முதல்-மந்திரியாக பணியாற்றினார். சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் செயல்பட்டார். அவரது இந்த 50 ஆண்டுகால நீண்ட நெடிய அரசியல் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

    • எடியூரப்பா 2021-ம் ஆண்டு முதல்-மந்திரி பதவியை விட்டு விலகினார்.
    • இடைத்தேர்தலில் எடியூரப்பா பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்பவர் எடியூரப்பா. குறிப்பாக பா.ஜனதாவின் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர். அது மட்டுமல்ல லிங்காயத் சமூகத்தின் முகமாக பார்க்கப்படும் வலுவான தலைவர். இப்படி பலம் பொருந்திய தலைவராக எடியூரப்பா இருக்கிறார். பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டதை அடுத்து வயது மூப்பு காரணமாக எடியூரப்பா கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல்-மந்திரி பதவியை விட்டு விலகினார்.

    கண்ணீர் மல்க பதவியை ராஜினாமா செய்தார். அந்த பதவியில் எடியூரப்பாவின் ஆதரவாளர் பசவராஜ் பொம்மை அமர்த்தப்பட்டார். முதல்-மந்திரி பதவியை விட்டு விலகிய பிறகு எடியூரப்பா தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியே உள்ளார். கட்சியின் செயற்குழு மற்றும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அவர் கலந்துகொண்டார். அதை விடுத்து கட்சியின் பிற கூட்டங்களில் அவர் அவ்வளவாக தென்படவில்லை. சிந்தகி, ஹனகல் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் எடியூரப்பா பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். ஆனால் அவரது பிரசாரத்தில் தீவிரத்தன்மை இருந்ததாக தெரியவில்லை.

    முதல்-மந்திரி பதவியில் இருந்து கீழே இறங்கிய பிறகு அவர் தனது குடும்பத்தினருடன் துபாய்க்கு சுற்றுலா சென்றார். சில நாட்கள் அங்கு பொழுதை கழித்த அவர் பிறகு பெங்களூரு திரும்பினார். ஓரிரு மாதங்களுக்கு பிறகு அவர் மீண்டும் துபாய்க்கு சென்றார். அங்கு நடைபெற்ற பசவ ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டார். அந்த பயணத்தை முடித்து கொண்டு அவர் பெங்களூரு திரும்பினார்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எடியூரப்பா தனது குடும்பத்தினருடன் இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். அந்த பயணத்தை முடித்துவிட்டு அவர் இன்று (வியாழக்கிழமை) பெங்களூரு திரும்புவார் என்று கூறப்படுகிறது. பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு வந்திருந்தார். இங்கு நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

    அந்த கூட்டத்தில் எடியூரப்பா கலந்து கொள்ளவில்லை. அவர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்ததால் அவர் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. கட்சியை மேலும் பலப்படுத்த சுற்றுப்பயணம் செய்வேன் என்று எடியூரப்பா கூறி வருகிறார். ஆனால் இதுவரை அவர் அந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவில்லை.

    தனது மகன் விஜயேந்திராவுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும், அதற்கு வசதியாக அவரை எம்.எல்.சி. ஆக்க வேண்டும் என்றும் பா.ஜனதா மேலிட தலைவர்களை எடியூரப்பா கேட்டு கொண்டார். குடும்ப அரசியலுக்கு எதிராக வலுவான கருத்தை பிரதமர் மோடி முன்வைத்து வருகிறார்.

    இந்த நிலையில் விஜயேந்திராவுக்கு மந்திரி பதவி வழங்கினால் பா.ஜனதாவை விமர்சிக்க அது எதிர்க்கட்சிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துவிடும் என்பதால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன்காரணமான அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி மனதை புத்துணர்வாக வைக்க வெளிநாட்டு பயணிகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

    • ஊழல் இல்லாத கட்சி என்றால் அது பா.ஜனதாதான்.
    • காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்க மோடி அயராது உழைத்து வருகிறார்.

    ஹாசன்:

    எடியூரப்பா ஹாசனில் தெற்கு பட்டதாரி தொகுதி வேட்பாளர் ரவிசங்கருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பா.ஜனதா மாநில துணை தலைவர் விஜயேந்திரா, கட்சி சார்பில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

    ஊழல் இல்லாத கட்சி என்றால் அது பா.ஜனதாதான். மாநிலத்தில் சிறந்த தலைவர், ஆட்சியாளர், முதல்-மந்திரி என்றால் அது எடியூரப்பா தான். முதல்-மந்திரியாக அவர் பொறுப்பு வகித்திருந்தபோது ஏற்ற, தாழ்வு இல்லாமல் அனைத்து சமுதாய மக்களின் உயர்வுக்கும் பாடுபட்டார். மேலும் பா.ஜனதா கட்சியை கர்நாடகத்தில் உயர் இடத்திற்கு எடுத்து சென்ற பெருமை எடியூரப்பாவிற்கு உள்ளது. அவரது வழிகாட்டுதலில் பா.ஜனதா இன்றுவரை செயல்பட்டு கொண்டிருப்பது பெருமை அளிக்கிறது.

    பா.ஜனதா சார்பில் நடைபெறும் சைக்கிள் பேரணி, பாதயாத்திரை யால் கட்சி மேலும் வலுபெற்று வருகிறது. இதே உத்வேகத்துடன் சட்டசபை தேர்தலை சந்தித்தால் எதிர்கட்சியே இல்லாத நிலை உருவாகி விடும். அந்த இலக்கை நோக்கி அனைவரும் பயணிக்கவேண்டும்.

    காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்க மோடி அயராது உழைத்து வருகிறார். பிரதமர் மோடியில் 8 ஆண்டு ஆட்சி பல்வேறு நலதிட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை செய்துள்ளோம். இதுவரை பா.ஜனதா மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை பா.ஜனதாவின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது.

    கர்நாடகத்தை பொறுத்தவரையில் பா.ஜனதா அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளது. மேல்சபை தேர்தலில் தெற்கு பட்டதாரி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து அடிமட்ட தொண்டர் வரை பிரசாரத்தில் ஈடபடவேண்டும். இதற்காக கட்சி பிரமுகர்கள் ஒற்றுமையுடன் உழைக்கவேண்டும். அரசியலில் அதிகளவு எனக்கு ஈடுபாடு இருந்தாலும், நான் இன்னும் சிறு குழந்தைதான். மந்திரி பதவிக்கோ, முதல்-மந்திரி பதவிக்கோ ஆசைப்படவில்லை. மேலிடம் எடுக்கும் முடிவை ஏற்பேன். கட்சிக்காக இறுதி வரை உழைப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநிலங்களவையில் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் 32 வாக்குகள் உள்ளன.
    • ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் வெற்றி அடையும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

    மைசூரு:

    முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவருவமான குமாரசாமி மைசூருவுக்கு வந்தார். இதையடுத்து அவர், சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு தெற்கு பட்டதாரி தொகுதி தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் போட்டியிடும் ராமுவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெங்களூருவில் எடியூரப்பா-சித்தராமையா சந்தித்து பேசியுள்ளனர். அவர்கள் 2 பேரும் எந்த நோக்கத்துடன் சந்தித்து பேசினார் என்பது தெரியவில்லை. தனி அறைக்குள் 2 பேரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நோக்கம் என்ன?.

    மாநிலங்களவை தேர்தல் போட்டியில் இருந்து ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் விலக வேண்டும் என்று சித்தராமையா கூறியுள்ளார். சித்தராமையாவுக்கு பா.ஜனதா தோல்வி அடைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நான் அல்லது எனது தந்தை தேவகவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பார்.

    மாநிலங்களவையில் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் 32 வாக்குகள் உள்ளன. ஆனால் காங்கிரசுக்கு குறைவான வாக்குகளே உள்ளது. இதனால் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் வெற்றி அடையும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தேவைப்பட்டால் எங்களது 2-வது வாக்குகள் உரிமையை காங்கிரஸ் வேட்பாளருக்கு கொடுக்கிறோம்.

    அதற்கு காங்கிரஸ் கட்சி அவர்களது இரண்டாவது வாக்குகள் உரிமையை ஜனதாதளம்(எஸ்) வேட்பாளருக்கு தரவேண்டும். இதுசம்பந்தமாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சுர்ஜேவாலாவுடன் தெரிவித்துள்ளேன். இதற்கு தற்போது வரை அவர் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின்போது எம்.எல்.ஏ.சா.ரா. மகேஷ், ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் ராமு உள்ளிட்டோர் இருந்தனர்.

    • வாக்காளர்கள் பிரதமர் மோடியையும், பா.ஜனதாவையும் ஆதரிக்கிறார்கள்.
    • கர்நாடகத்தில் பா.ஜனதாவின் வெற்றிக்கான பாதையில் எந்த இடையூறும் இருக்காது.
    • காங்கிரஸ் தோல்வி அடையும் என்பதில் சித்தராமையா உறுதியாக உள்ளார்.

    பெலகாவி:

    முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலை எனது தலைமையில் சந்திக்கும் பேச்சுக்கே இடமில்லை. அனைத்து தலைவர்களையும் உள்ளடக்கிய கூட்டு தலைமையின் கீழ் தேர்தலை எதிர்கொள்வோம். நாங்கள் அனைவரும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்த முயற்சி செய்வோம். அதன் மூலம் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம்.

    வாக்காளர்கள் பிரதமர் மோடியையும், பா.ஜனதாவையும் ஆதரிக்கிறார்கள். அதனால் கர்நாடகத்தில் பா.ஜனதாவின் வெற்றிக்கான பாதையில் எந்த இடையூறும் இருக்காது. இதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அடுத்த 10 ஆண்டுகளுக்கு கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்துவேன். எந்த நேரத்திலும் எப்போதும் கட்சிக்காக உழைக்க தயாராக உள்ளேன்.

    அனைவரையும் அரவணைத்து கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட உறுதி பூண்டுள்ளேன். எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா குறித்து குறைத்து மதிப்பிட்டு பேசுகிறார். வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோற்றுவிடும் என்பதால் அவர் விரக்தியில் அவ்வாறு பேசுகிறார்.

    அவர் ஒழுங்கீனமாக பேசுவது சரியல்ல. காங்கிரஸ் தோல்வி அடையும் என்பதில் சித்தராமையா உறுதியாக உள்ளார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா குறித்து குறைத்து பேசுவதை சித்தராமையா தனது வழக்கமாக கொண்டுள்ளார். அதனால் அவருக்கு எந்த பயனும் ஏற்படாது. அவ்வாறு பேசுவதின் மூலம் அவர் தான் வகிக்கும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை சிறுமைப்படுத்துகிறார்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜனதாவை ஆட்சியில் அமர்த்திய நிலையில் வயது மூப்பு காரணமாக எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×