search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷவாயு"

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தானேவில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கியதில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள தோகாலி பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை கழிவுநீர்தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென விஷவாயு தாக்கியதால் சம்பவ இடத்திலேயே 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மயக்கம் அடைந்த 5 தொழிலாளர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில்சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
     
    அதிகாலையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தலைநகர் டெல்லியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளிகள் பரிதாபமாக பலியாகினர்.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் ரோகிணி பகுதியில் உள்ள பிரேம் நகரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக அதில் இறங்கினர். அப்போது, திடீரென விஷவாயு தாக்கியது. இதில் 5 பேரும் மயக்கம் அடைந்தனர்.

    அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் கழிவுநீர் தொட்டியில் விழுந்து கிடந்த தொழிலாளர்களை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். அவர்களில் 2 பேர் விஷவாயு தாக்கி பலியானதாகவும் மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மீட்பு படையினர் தெரிவித்தனர்.
    திருப்பூர் மாவட்டம் கருப்ப கவுண்டம்பாளையம் பகுதியில் விஷவாயு தாக்கியதில் வடமாநில இளைஞர்கள் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். #Tirupur #ToxicGas
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் கருப்ப கவுண்டம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் சாய ஆலை ஒன்றில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது. 

    கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சில வட மாநில இளைஞர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.



    அப்போது, திடீரென விஷவாயு தாக்கியதில் பணியில் இருந்த வடமாநில இளைஞர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விசாரணையில், விஷவாயு தாக்கி இறந்தவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த தில்வார் உசேன், பரூக் அகமது, அன்வர் உசேன், அபு ஆகியோர் என தெரிய வந்தது. இதுதொடர்பாக வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tirupur #ToxicGas
    கோவை சிங்காநல்லூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
    கோவை:

    கோவையில் தனியார் குடியிருப்பு ஒன்றில் தொழிலாளர்கள் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியை செய்துள்ளனர்.

    அப்போது விஷவாயு தாக்கியதில் இரு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் கோவை சிங்காநல்லூரை சேர்ந்த முருகவேல், பாண்டித்துரை என தெரியவந்துள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். #tamilnews
    ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் இயங்கி வரும் இரும்பு ஆலை ஒன்றில் விஷவாயு கசிவு ஏற்பட்டு 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் இரும்பு ஆலையில் விஷ வாயு தாக்கியதாக தகவல் வெளியானது. இதையடுத்து மீட்புக்குழு அப்பகுதிக்கு விரைந்து விஷவாயுவால் பாதிக்கப்பட்டிருந்த ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இரும்பு ஆலையில் விஷவாயு தாக்கியதில் இதுவரை 6 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், மேலும், 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    ×