search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேட்பாளர்"

    ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு எலிகளால் ஆபத்து என்றும் அறையை சுற்றிலும் கம்பி வலை வேலி அமைக்க வேண்டும் என்றும் நரேந்திர சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
    மதுரா:

    உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் நடிகை ஹேமமாலினிக்கு எதிராக சமாஜ்வாடி கூட்டணி சார்பில் ராஷ்டிரீய லோக்தளம் வேட்பாளர் நரேந்திர சிங் போட்டியிடுகிறார். கடந்த மாதம் 18-ந் தேதியே அங்கு ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது.
    ஓட்டுப்பதிவு எந்திரங்கள், மதுராவில் மண்டி சமிதி பகுதியில் உள்ள பாதுகாப்பு பெட்டக அறையில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு எலிகளால் ஆபத்து என்று நரேந்திர சிங் பீதியை கிளப்பி உள்ளார். எனவே, அறையை சுற்றிலும் கம்பி வலை வேலி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து, அந்த அறையை நேற்று 3-வது நாளாக மாவட்ட கலெக்டர் சர்வக்ய ராம் மிஸ்ரா பார்வையிட்டார். பிறகு அவர் கூறுகையில், “எலிகளால் ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு எந்த ஆபத்தும் கிடையாது. வெளியாட்களை அனுமதிக்கக்கூடாது என்று மத்திய பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார். 
    மதுரையில் அனுமதியின்றி தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #LSPolls #Venkatesan
    மதுரை:

    மதுரையில் தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் போட்டியிடுகிறார். இவர் தனது வேட்பு மனுவை நேற்று தேர்தல் அதிகாரி நடராஜனிடம் தாக்கல் செய்தார்.

    வேட்பு மனுத்தாக்கலில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் அதிகமாக கலந்து கொண்டனர்.

    முன்னதாக வெங்கடேசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் தங்கமீனா தல்லாகுளம் போலீசில் இதுகுறித்து புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் வேட்பாளர் வெங்கடேசன் உள்ளிட்ட சிலர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #LSPolls #Venkatesan

    பாராளுநாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்ய லாலு பிரசாத்துக்கு அதிகாரம் அளித்து ராஷ்டிரீய ஜனதாதள கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #LaluPrasad #LokSabhaPolls
    பாட்னா:

    ராஷ்டிரீய ஜனதாதள கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று நடந்தது. கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

    இறுதியில் தேர்தல் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வை இறுதி செய்ய கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு அதிகாரம் அளித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வுக்கும் அவருக்கே அதிகாரம் வழங்கப்பட்டது.

    கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள லாலு பிரசாத் யாதவ், தற்போது உடல்நல கோளாறுக்காக ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    பாராளுமன்ற தேர்தலில் தொகுதிக்கு நன்மை செய்யும் வேட்பாளரை தேர்வு செய்வோம் என முன்னாள் எம்எல்ஏ வைத்தியநாதன் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    கமலா அறக்கட்டளையின் சார்பில் லாஸ்பேட்டை தொகுதியின் நெசவாளர் நகர், ஆனந்தா நகர், நந்தா நகர், பெத்துசெட்டிப்பேட்டை, வள்ளலார் நகர், மகாவீர் நகர் ஆகிய பகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம், பெத்துசெட்டிப்பேட்டை திருமுருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கமலா அறக்கட்டளையின் முதன்மை செயலர் ரமா வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். மனோகர் வரவேற்றார். கமலா அறக்கட்டளையின் நிறுவனரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வைத்தியநாதன் தலைமை தாங்கினார்.

    லாஸ்பேட்டை தொகுதியில் சாலைகள் அனைத்தும் பழுதடைந்து கரடுமுரடாக உள்ளதால் மக்கள் பெரிதும் அவதி படுகிறார்கள். தொகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது, மேலும் சாலையில் உள்ள மின் விளக்குகள் பெரும்பாலானவை எரியாத மின் விளக்குகளாக உள்ளன.

    தண்ணீர் வரவில்லை என்றால் பெண்கள் உடனடியாக என் வீடு தேடி வந்து சொல்வர். உடனடியாக அதனை சரிசெய்து இருக்கின்றேன். ஆனால் தற்போது அந்த நிலையில்லை. தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ. எங்கு இருக்கிறார்? என தெரியவில்லை, மக்கள் படும் துன்பங்களை அவர் உணரவில்லை.

    இதுவே நமது ஆட்சிக் காலமாக இருந்தால் சாலைவசதியாக இருந்தாலும் சரி, மின்சார வசதியாக இருந்தாலும் சரி நாம் அதனை உடனுக்குடன் சரி செய்தோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் நமது தொகுதிக்கு நன்மை செய்யக்கூடிய வேட்பாளரையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜனார்த்தனன், ஆசிரியர் தயாநிதி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். நிகழ்ச்சிகளை கோ. செழியன் தொகுத்து வழங்கினார். ராமநாத சுவாமி நன்றி கூறினார். #tamilnews
    மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவின்போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதில் வேட்பாளர் உள்பட பலர் காயம் அடைந்தனர்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தில்  கடும் வன்முறை, பல மாதங்களாக நடந்த சட்டப்போராட்டத்திற்குப் பின்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது. ஆளுங்கட்சியினர் மற்ற கட்சி வேட்பாளர்களை மனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால், தேர்தலின்போது வன்முறை வெடிக்கும் சூழ்நிலை இருந்தது. எனவே, அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



    அசாம், ஒடிசா, சிக்கிம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மேலும், 46 ஆயிரம் மாநில போலீசார், 12 ஆயிரம் கொல்கத்தா போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இத்தனை பாதுகாப்பையும் மீறி வடக்கு 24 பர்கானாஸ், பர்த்வான், கூக் பெஹர், தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவின்போது வன்முறை ஏற்பட்டுள்ளது.  பாங்கர் பகுதியில் தொலைக்காட்சி நிறுவன வாகனம் ஒன்றை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர். கேமராவும் உடைக்கப்பட்டது. அப்பகுதிக்குள் பத்திரிகையாளர்களை செல்ல அனுமதிக்கவில்லை.

    பிர்பராவில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்குள் வாக்களிக்க செல்பவர்களை ஒரு கும்பல் ஆயுதங்களுடன் வழிமறித்து தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கும்பல் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என குற்றம்சாட்டப்படுகிறது. கூச் பெஹரில் இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது குண்டு வெடித்தது. இந்த மோதல் மற்றும் குண்டு வெடிப்பில் வேட்பாளர் உள்பட 20 பேர் காயமடைந்தனர். ஓட்டு போட சென்றபோது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

    வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்திற்குள் பல்வேறு பகுதிகளில் இருந்து புகார்கள் வந்திருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    58 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ள அம்மாநிலத்தின் 38,605 இடங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. 621 ஜில்லா பரிஷத், 6,157 பஞ்சாயத்து சமிட்டி மற்றும் 31,827 கிராம பஞ்சாயத்துகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 34.2 சதவீத இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியிடாததால் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் 17-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். #WestBengalPolls #PanchayatElections #WestBengalViolence
    ×