என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கூட்டாளி"
பாகூர்:
புதுவை அரியாங்குப்பம் சண்முகா நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 36). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 24-ந்தேதி நாகராஜன் நோனாங்குப்பத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று விட்டு பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது ஒரு கும்பல் நாகராஜை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது.
இந்த கொலை தொடர்பாக அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நாகராஜிக்கும், அரியாங்குப்பம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த லோகு என்ற லோகநாதனும் (30) முன்விரோதம் இருந்து வந்ததும் இதனால் நாகராஜை கூட்டாளிகளுடன் சேர்ந்து லோகநாதன் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து லோகநாதன் மற்றும் அவரது கூட்டாளிகளான உதயகுமார் (28), முத்து (38) மணி (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இதற்கிடையே நாகராஜ் கொலைக்கு உடந்தையாகவும் நாகராஜ் செல்லும் இடங்களை லோகநாதன் தரப்பினருக்கு தகவல் தெரிவித்த அரியாங்குப்பத்தை சேர்ந்த ஷிலா என்ற சத்தியசீலன் (22) என்பரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் நாகராஜ் கொலை தொடர்புடைய லோகநாதனின் தம்பி யுவராஜ் (27), மற்றும் கல்லூரி மாணவரான நவீன் என்ற நவீன்குமார் (20) ஆகிய 2 பேரையும் போலீசார் இன்று காலை கைது செய்தனர்.
மரப்பாலம் சந்திப்பில் பதுங்கி இருந்த அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் குற்றப்பிரிவு போலீஸ்காரர்கள் வசந்தராஜா, மாஸ்ஆண்டனி ஆகியோர் கைது செய்தனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் அருகே உள்ள கணவனூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் விஜய் (வயது 23). பாலிடெக்னிக் படித்து விட்டு திருச்சியில் ரெயில் சிக்னல் பழுது பார்க்கும் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை ஜீயபுரம் அருகே பழூர் செல்லும் சாலையில் நரசிம்மன் கோவில் அருகில் உள்ள தோப்பில் விஜய் மார்பு, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் அதிக அளவில் ரத்தம் வெளியேறிய நிலையில் வழியிலேயே விஜய் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசுப்பிரமணியம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராமரா ஜன், போலீசார் விசாரணை நடத்தினர். விஜயை கத்தியால் குத்தி கொலை செய்த நபர்கள் யார்? இதற்கு காரணம் என்ன? என விசாரணை நடத்தினர்.
அப்போது காதல் பிரச்சனையில் விஜய் காதலித்த பிளஸ்-2 மாணவியின் தம்பியே கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. விஜய் திருச்சிக்கு வேலைக்கு வரும் போது பஸ்சில் தன்னுடன் வந்த பழூரைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார்.
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் அந்த மாணவியை தினமும் விஜய் அழைத்து செல்வது என இருந்துள்ளார். இது மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இரு குடும்பத்துக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது விஜய் காதலித்த மாணவியின் தம்பி விஷ்வாவுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. திருச்சியில் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவன் விஷ்வா விஜய் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று விஜய்யின் நண்பர் பிறந்த நாள் விழா பழூரில் நடந்துள்ளது. இதில் கலந்துகொண்டு விட்டு, காதலியையும் பார்த்து வரலாம் என விஜய் புறப்பட்டு சென்றுள்ளார்.
அதன்பிறகு மாலையில் பழூர் சாலை வழியாக மீண்டும் தனது ஊரான கணவனூருக்கு திரும்பியுள்ளார். அப்போது பழூர் நரசிம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு தோப்பில் விஜய் காதலிக்கும் மாணவியின் தம்பி விஷ்வா நண்பர்களுடன் இருந்துள்ளார்.
விஜய்யை பார்த்த விஷ்வாவிற்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. அப்போது மது போதையில் இருந்த அவர்கள் தோட்டத்திற்குள் அழைத்து விஜயுடன் தகராறு செய்துள்ளனர். திடீரென விஜய்யை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விஷ்வா உள்ளிட்ட அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட தாவூத் இப்ராகிம் சகல வசதிகளுடன் துபாய் நகரில் வாழ்ந்து வருகிறார். தாவூத் இப்ராகிமின் அடியாட்கள் இந்தியாவில் பிரபல சினிமா நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் ஆகியோரை மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்.
இதுமட்டுமின்றி, சர்வதேச அளவில் கிரிக்கெட் சூதாட்ட வளையத்தையும் நிர்வகித்து வரும் தாவூத் இப்ராகிமுக்கு இந்தியாவில் உள்ள அவரது அடியாட்கள், வசூலித்து வரும் மாமூலில் இருந்து பெரும்தொகை தாவூத் இப்ராகிமின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், மும்பையில் உள்ள பிரபல ஓட்டல் அதிபரிடம் தாவூத் இப்ராகிமின் அடியாட்கள் தொலைப்பேசி மூலமாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தனர். தங்களது குழுவைச் சேர்ந்த ராம்தாஸ் ரகானே என்பவனிடம் 50 லட்சம் ரூபாய் மாமூலாக தர வேண்டும் இல்லாவிட்டால் உன்னை கொன்றுவிடுவோம் என்று எதிர்முனையில் பேசியவர்கள் மிரட்டியுள்ளனர்.
மேலும், உடனடியாக ராம்தாஸ் ரகானேவிடம் 5 லட்சம் ரூபாய் கொடுத்தனுப்புமாறும் வற்புறுத்தினர். இந்த மிரட்டல் தொடர்பாக அந்த ஓட்டல் அதிபர் மும்பை நகர போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கண்காணித்து வந்த மும்பை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் திலீப் சாவந்த், ராம்தாஸ் ரகானேவை இன்று கைது செய்தார்.
பாகிஸ்தானில் இருக்கும் தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகள் அறுவுறுத்தியபடி இந்த மிரட்டலை இங்குள்ள தாதாக்கள் அந்த ஓட்டல் அதிபருக்கு அனுப்பி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பணம் கொடுக்காத ஓட்டல் முதலாளி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட போது ராம்தாஸ் ரகானேவை கைது செய்த போலீசார் அகமதுநகர் மாவட்டம், சங்கம்நெர் பகுதியில் உள்ள அவனது வீட்டில் நடத்திய சோதனையில் கைத்துப்பாக்கியும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் குறிப்பிட்டனர்.
கைதான ரகானே மீது மும்பை குஜராத் பகுதியில் ஏரளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், கடந்த 2011-ம் ஆண்டு மும்பை பகுதியில் பிரபல கட்டுமான நிறுவன அதிபர் மனிஷ் தோலாக்கியா மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்திலும் இவன் தொடர்புடையவன் என்பதும் தெரியவந்துள்ளது.
இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ரகானேவை வரும் 30-ம் தேதி வரை போலீசார் காவலில் எடுத்துவிசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #DawoodIbrahim
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்