search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேலி"

    ஆலங்குடி அருகே சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்ததால் ஐ.டி.ஐ. மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கட்ராம்பட்டி  காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் அசோக்ராஜ் (வயது 20). இவர் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஐ.டி.ஐ. படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1 வாரமாக அசோக்ராஜ் கல்லூரிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த தகவல் அறிந்த அவரது பெற்றோர் அசோக்ராஜை கண்டித்தனர். 

    ஏன் செல்லவில்லை என்று கேட்டபோது, அசோக்ராஜ் தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் கிண்டல் செய்வதாக கூறினார். இந்நிலையில் நேற்றும் அவர் படிக்க செல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் அவரை மீண்டும் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த அசோக்ராஜ் வீட்டில் இருந்த மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். ஆனால் பெற்றோர் தடுத்து விட்டனர். பின்னர் நேற்றிரவு வீட்டில் அனைவரும் தூங்கி விட்டனர். 

    அதிகாலையில் எழுந்த அசோக்ராஜ் மண்எண்ணெய் கேனுடன் வீட்டின் அருகே உள்ள நாடியம்மன் கோவில் காட்டுப்பகுதிக்கு சென்றார். பின்னர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசோக்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சக மாணவர்கள் கிண்டல் செய்ததால் ஐ.டி.ஐ. மாணவர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    அறந்தாங்கி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவில் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் சக்திவேல் (வயது 32). மது பழக்கத்திற்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார்.

    திருமணமாகாத இவர் அப்பகுதியை சேர்ந்த பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொள்வது, கேலி, கிண்டல் செய்வது என்று இருந்தார். பொதுமக்கள் கடுமையாக எச்சரித்தும் திருந்த வில்லை. இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை ஏமாற்றி மறைவான இடத்திற்கு அழைத்து சென்ற சக்திவேல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதைப்பார்த்த பொதுமக்கள் சக்திவேலை அடித்து, உதைத்து ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் அவரது உறவினர்கள் வந்து ஒரு சில மணி நேரத்தில் மீண்டும் அழைத்து சென்று விட்டனர். சக்திவேல் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதேபோல் காளிதாஸ் என்பவரது உறவுக்கார சிறுமிக்கும், கடந்த 2008-ம் ஆண்டு காசிவிஸ்வநாதன் என்பவரது உறவுக்கார சிறுமிக்கும் சக்திவேல் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சக்திவேலை கடுமையாக தண்டிக்க தருணம் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு ஆவுடையார்கோவில் அருகே உள்ள அடியார்குளம் பகுதியில் சக்திவேல் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காளிதாஸ், காசிவிஸ்வநாதன் ஆகியோர் மறித்தனர். அவர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது.

    இதையடுத்து ஆத்திரம் அடைந்த இருவரும் சேர்ந்து சக்திவேலை சரமாரியாக அடித்து, காலால் குரல் வளையை மிதித்தனர். இதில் மூச்சுத்திணறிய சக்திவேல் மயங்கினார். அவர் இறந்து விட்டதாக நினைத்து இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

    அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து சக்திவேலை மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட சக்திவேல் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

    இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிவிஸ்வநாதனை கைது செய்தனர். தலை மறைவான காளிதாசை தேடி வருகிறார்கள். உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக்திவேலை பழி வாங்க 10 ஆண்டுகளாக காத்திருந்ததாகவும், நேற்று இரவு சிக்கிக்கொண்டதால் தாக்கியதாகவும் காசிவிஸ்வ நாதன் போலீசில் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவம் ஆவுடையார் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போடி அருகே கல்லூரி மாணவியை கேலி செய்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
    தேனி:

    போடி அருகே சிலமலை தெற்கு தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி மீனாட்சி. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மீனாட்சி தனது மகள் நந்தினியுடன் தனியாக வசித்து வருகிறார்.

    நந்தினி தேனியில் உள்ள கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு சென்று வரும்போது மேற்கு தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவர் கேலி, கிண்டல் செய்துள்ளார்.

    சம்பவத்தன்று நந்தினியை உரசுவது போல் சென்றுள்ளார். இதனை நந்தினியின் தாய் தட்டிகேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இது குறித்து புகாரின் பேரில் போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.

    ரெயில்களில் பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்துவது மற்றும் கேலி செய்யும் குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #EveTeasing #Women #Train
    புதுடெல்லி:

    ரெயில்களில் பயணம் செய்யக்கூடிய பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்துவது மற்றும் கேலி செய்யும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் ரெயில்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தண்டனை காலத்தை 3 ஆண்டுகளாக உயர்த்தும் வகையில் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமென ரெயில் பாதுகாப்புபடை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ரெயில்வே பாதுகாப்புபடையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ரெயில்களில் பெண்களுக்கான பெட்டியில் பயணம் செய்கிறவர்கள் மற்றும் பெண்களிடம் கேலி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரெயில்வே போலீசாரின் உதவியை நாட வேண்டி உள்ளது. இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது.

    எனவே இனிவரும் காலங்களில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது ரெயில்வே போலீசாரின் உதவி இன்றி விரைவாக நடவடிக்கை எடுக்கவும், அவர்களுக்கான தண்டனை காலத்தை உயர்த்தவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் பெண்களுக்கான பெட்டியில் பயணம் செய்கிறவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை ரூ.500-ல் இருந்து ரூ.1,000-மாக உயர்த்தவும் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #EveTeasing #Women #Train
    சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்ததால் மன முடைந்த மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் கிரேன் ஆப்ரேட்டாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வெங்கடேஸ்வரி. இவரது மகன் கோகுலகிருஷ்ணன் (வயது15). 

    இவர் ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கோவிந்தசாமி பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். கடந்த 20-ந்தேதி அன்று பள்ளியில் கோகுலகிருஷ்ணனை சகமாணவர்கள் கேலி கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த  கோகுலகிருஷ்ணன் விஜயமங்கலத்தில் அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். 

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தருமபுரி அரசு மருத்துவமனையில் கோகுலகிருஷ்ணனை சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெண்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது யாராவது பின் தொடர்ந்தாலோ, கேலி கிண்டல் செய்தாலோ மூக்கை உடையுங்கள் என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார். #GovernorKiranBedi

    புதுச்சேரி:

    புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, மகளிர் வன மையம் மற்றும் இளைஞர், குழந்தைகள் தலைமைத்துவ மையம் ஆகியவற்றின் சார்பில் கூட்டுறவு கல்வியியல் கல்லூரி வளாகத்தில் பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    பயிற்சி பட்டறை தொடக்க விழாவிற்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். சமூக நலத்துறை செயலாளர் சுந்தர வடிவேலு முன்னிலை வகித்தார். தற்காப்பு பயிற்சி பட்டறையை கவர்னர் கிரண்பேடி தொடங்கி வைத்து அது தொடர்பான பிரசுரத்தை வெளியிட்டு பேசினார்.

    திருமணத்துக்கு வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். யாராவது வரதட்சணை கேட்டால் கொடுக்க முடியாது என்று கூறுங்கள் பிறகு அவர்களாவே வரதட்சணையின்றி திருமணம் செய்து கொள்ள இறங்கி வருவார்கள்.

    திருமணத்தின் போது உங்களது வங்கிக்கணக்கில் குறிப்பிட்ட தொகையை பெற்றோர் டெபாசிட் செலுத்தினால் அதனை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். அதனை யாராவது கேட்டால் எடுத்து கொடுக்கக் கூடாது.

    எப்போதும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அது உங்களை சுறு சுறுப்பாகவும் உடல் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும், எதை பேச வேண்டும் என நினைக்கிறீர்களோ அதனை துணிச்சலுடன் பேசுங்கள். அச்சத்துடன் இருக்காதீர்கள்.

    பெண்களுக்கு புத்தக அறிவு மட்டுமே தன்னம்பிக்கையை தராது. என்னால் தலைமையேற்க முடியும் என்று கூறி முன்வர வேண்டும். அப்போது தான் தன்னம்பிக்கை ஏற்படும். முதலில் பெண்கள் தயக்கமின்றி தனியாக பயணம் செய்ய வேண்டும். பெண்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது யாராவது பின் தொடர்ந்தாலோ, கேலி கிண்டல் செய்தாலோ எட்டி உதையுங்கள், மூக்கை உடையுங்கள், பிறகு அவர்கள் உங்கள் பக்கம் வரவே மாட்டார்கள்.

    பெண்கள் என்னை அடிக்கிறார்கள் என்று ஆண்கள் புகார் அளிக்க வேண்டும். அது போல் தைரியமாக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் பெண்கள் தலைமையில் ஆண்கள் என்ற நிலை உருவாக வேண்டும்.

    இவ்வாறு கிரண்பேடி பேசினார்.

    பயிற்சி பெற 50 மாணவிகள் வந்திருந்தனர். அவர்களிடம் கவர்னர் கிரண்பேடி உங்களில் எத்தனை பேரை இளைஞர்கள் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்தார்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பெரும்பாலான மாணவிகள் கையை உயர்த்தினர்.

    இதனை தொடர்ந்து கவர்னர் கிரண்பேடி இளைஞர்கள் தொல்லை தருகிறார்கள் என்று நீங்கள் வழியை மாற்றினால், அவர்கள் வேறொரு பெண்ணுக்கு தொல்லை கொடுப்பார்கள். நீங்கள் மன தையரியத்துடன் செயல்பட்டால் இளைஞர்கள் கேலி, கிண்டல் செய்யும் பழக்கத்தை விட்டு விடுவார்கள் என்று குறிப்பிட்டார்.

    அதன் பின்னர் கேலி செய்யும் இளைஞர்களை எப்படி தாக்குவது என்று கவர்னர் கிரண்பேடி செயல் விளக்கம் அளித்தார். #GovernorKiranBedi

    ×