search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 108818"

    • சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடம் 15 ஆண்டுகள் பழமையானது.
    • பாளை வ.உசி. மைதானத்தில் மழைக்கு கேலரி மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. துணை மேயர் கே.ஆர். ராஜூ தலைமை தாங்கி மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் கார்த்திக் அளித்த மனுவில், தச்சநல்லூர் மண்டலம் 3-வது வார்டுக்கு உட்பட்ட சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடம் 15 ஆண்டுகள் பழமையானது. தற்போது அந்த கட்டிடம் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    இதனால் இந்த பகுதியில் வாழும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே அந்த சமுதாய நலக்கூடத்தை செப்பனிட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உதவிட வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    இந்து முன்னணி சார்பில் மாநில செயலாளர் வக்கீல் குற்றாலநாதன், மாவட்ட செயலாளர்கள் சங்கர், சுடலை ஆகியோர் தலைமையில் கொடுத்த மனுவில், பாளை வ.உசி. மைதானத்தில் மழைக்கு கேலரி மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. முறையாக கட்டப்படாததால் இது ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு காரணமான அதிகாரிகள், ஒப்பந்த தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    • மொத்தம் 225 மனுக்கள் பெறப்பட்டன.
    • வேலைவாய்ப்பற்ற 26 இளைஞர்களுக்கு ரூ.36 ஆயிரத்து 600 உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது.

    மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகைபுரிந்து மாவட்ட கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர்.

    கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், வேலைவாய்ப்பு், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகை, புகார் தொடர்பான மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள், அடிப்படை வசதிகோரியும் என மொத்தம் 225 மனுக்கள் பெறப்பட்டன.

    இம்மனுக்களை கலெக்டர் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தவிபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்றார்.

    முன்னதாக, மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பற்ற 26 இளைஞர்களுக்கு ரூ.36 ஆயிரத்து 600 உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், தனித்துணை கலெகடர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கண்மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் சாதி சான்றிதழ் வழங்க கோரி கிராம மக்கள் பள்ளி குழந்தைகளுடன் மனு அளித்தனர்
    • ஜாதி சான்றிதழ் வழங்கி, குழந்தைகள் உயர்கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம், கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. அப்போது, அரியலூர் ரயில்வே நிலையம் அருகேயுள்ள எருத்துக்காரன் பட்டியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், தங்களின் பள்ளி குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, கலெக்டரிடம் மனு அளித்தனர். அரியலூர் அடுத்த எருத்துக்காரன் பட்டி கிராமத்தில் சுமார் 60 ஆண்டுகளாக 40 குடும்பங்களை சேர்ந்த இந்து கணிக்கர் ஜாதியை சேர்ந்தவர்கள் வசித்து வருவதாகவும், தங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை.

    எனவே, மதுரை, காஞ்சிபுரம், ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் தங்கள ஜாதி மக்களுக்கு வழங்கி உள்ளது போல, இந்து கணிக்கர் (எஸ்டி) என ஜாதி சான்றிதழ் வழங்கி, குழந்தைகள் உயர்கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தனர். பள்ளிக்குழந்தைகளுடன் மனு அளிக்க அவர்கள் வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • கூட்ட நெரிசலில் சிக்கி பலியான வாலிபர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
    • முதல்-அமைச்சர் நிவாரண நிதி கிடைக்க உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடகரைபுதூரை சேர்ந்த சந்திரன் (வயது 55) என்பவர் மதுரை கலெக்டர் அலுவல கத்தில் உறவினர்களுடன் வந்து இன்று மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு கணேஷ்பிரபு, சுதாகர் என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் கணேஷ்பிரபு சூப்பர் மார்க்கெட்டில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். சுதாகர் கார் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

    அவர் கடந்த 5-ந்தேதி அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை காண்பதற்காக நண்பர்களுடன் சென்றார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய அவர் வைகை ஆற்றில் விழுந்து இறந்து விட்டார்.

    சுதாகர் எங்களை நல்லமுறையில் பாதுகாத்து பராமரித்து வந்தார். அவர் இறந்து விட்டது எங்களுக்கு அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே எங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு எனது மகன் இறந்ததற்கு தமிழக முதல்-அமைச்சர் நிவாரண நிதி கிடைக்க உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.
    • நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் காலையிலிருந்து கோரிக்கை மனு அளிக்க நேரில் வந்தனர்.

    இந்நிலையில் முதியவர் ஒருவர் மனுக்களை தலையில் கட்டி வைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். அப்போது அந்த முதியவர் நெற்றியில் பட்டை நாமம் போட்டு கொண்டு வந்தார். அவரது தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.

    இவர் திட்டக்குடி வட்டம் வடகிராம பூண்டி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி ஆவார். அவர் கூறும்போது, எனது நிலத்திற்கு பட்டா மாற்ற செய்வதற்காக உரிய மனு அளித்தேன். இதற்கான உத்தரவு நகல் வந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் விருத்தாச்சலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்யும் அலுவலர் ஒருவர் இந்த நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

    வருவாய் துறையினரும் இதற்கு ஆதரவு அளித்து வருவதோடு அரசு புறம்போக்கு இடங்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என 33 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.

    33 முறை மனு அளித்த அனைத்து கோரிக்கை மனுவையும் மூட்டையாக தலையில் வைத்து கொண்டு வந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

    • மாவட்ட கலெக்டர் பொதுமக்கள் மனுவாக கொடுத்ததை நாங்கள் ஆணையாக வழங்குவோம் என்று கூறினார்.
    • துணைத் தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி மற்றும் பீளமேடு ஆகிய ஊராட்சிகளில் மக்களை தேடி மனுக்கள் பெறுதல் முகாம் நடைபெற்றது. பல்லகச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

    பொதுமக்கள் வழங்கும் அடிப்படை கோரிக்கைகள், நீண்டகால கோரிக்கைகளில் நிவர்த்தி செய்ய முடியும் கோரிக்கைகளை விரைவில் நிவர்த்தி செய்யப்படும். மேலும் நிவர்த்தி செய்ய முடியாத மனுக்கள் குறித்த காரணங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும் பொதுமக்கள் மனுவாக கொடுத்ததை நாங்கள் ஆணையாக வழங்குவோம் என்று கூறினார். இதில் வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய குழு தலைவர் தாமோதரன், துணைத் தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுரை வரவேற்றார்.

    மேலும் இதனைத் தொடர்ந்து பீளமேடு ஊராட்சியில் நடைபெற்ற மக்களைத் தேடி மனுக்கள் பெரும் முகாமில் பொதுமக்களிடமிருந்து 353 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, தமிழ்நாடு மின்சார வாரிய உதவி இயக்குனர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்முருகன், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை ஒன்றிய பொறியாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • போக்குவரத்து வசதி உள்ளிட்ட 481 மனுக்கள் பெறப்பட்டது.
    • 211 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு ஆணை வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432 ஆம் பசலி வருவாய் தீர்வாய நிறைவு விழா மற்றும் குடிகள் மாநாடு பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகர் தலைமையிலும், வட்டாட்சியர் சுகுமார் முன்னிலையிலும் நடைபெற்றது.

    பெருமகளூர், குருவிக்க ரம்பை, ஆவணம், பேராவூரணி சரகத்தில் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு, முதியோர் உதவித்தொகை, போக்கு வரத்து வசதி உள்ளிட்ட 481 மனுக்கள் பெறப்பட்டது.

    இதில் 211 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பயனாளி களுக்கு ஆணை வழங்கப்ப ட்டது.

    நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அருள்ராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலர் அருள்மணி, வட்டத் துணை ஆய்வாளர் செந்தில்குமார், தலைமை இடத்து துணை வட்டாட்சியர் பாலசுப்ர மணியன், மண்டல துணை வட்டாட்சியர் சுப்பிரமணியன், தேர்தல் துணை வட்டாட்சியர் கண்ணகி, நில அளவையர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வருகிற 23-ந்தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    • மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரூஸ்ரீ வெளியி ட்டுள்ள செய்தி கூறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட த்திலு ள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    அன்றைய தினம், மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீதான உள்ள கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்கள் வழங்கப்படும்.

    வயது வரம்பு ஏதும் இல்லை. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் விண்ணப்பம் அளிக்கலாம். மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளு க்குட்பட்டு பரிசீலிக்க ப்படுவதோடு, குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்கிட தக்க நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும்.

    வருகையின் போது இருப்பிட முகவரிக்கான ஆதாரம் குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் இரண்டு நகல்கள் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றைத் தவறாது கொண்டு வர வேண்டும்.

    இதற்கு முன்னர் விண்ணப்பம் அளித்திருந்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின், அதனையும் தவறாது கொண்டு வர வேண்டும்.

    இந்த சிறப்பு குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனா ளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் வழங்கிய 213 மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது.
    • 2 பேருக்கு பட்டா மாறுதல் ஆணையும், ஒருவருக்கு பட்டா உட்பிரிவு மாறுதல் ஆணையும் கலெக்டர் வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் 2-வது நாள் கபிஸ்தலம் சரகத்திற்கு ஜமாபந்தி நடந்தது. நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    இந்த ஜமாபந்தியில் 25 கிராமங்களுக்கு நடந்தது. ஜமாபந்தியில் பொதுமக்கள் வழங்கிய 213 மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கி அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    மேலும் 2 நபர்களுக்கு பட்டா மாறுதல் ஆணையும், ஒருவருக்கு பட்டா உட்பிரிவு மாறுதல் ஆணையும் வழங்கினார்.

    இதில் பயிற்சி துணை கலெக்டர் விஷ்ணு பிரியா, பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் முருககுமார், திருவையாறு ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் நெடுஞ்செழியன், தஞ்சை கலெக்டர் அலுவலக மேலாளர் ரத்தினவேல் மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • துணை மேயர் தாமரைச்செல்வனிடம் கடலூர் நகர செயலாளர் செந்தில் மற்றும் நகர அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் மனு கொடுத்தனர்.
    • ஒன்றிய துணை செயலாளர் வீரபாபு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாப்புலியூர் குப்பன்குளத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வனிடம் கடலூர் நகர செயலாளர் செந்தில் மற்றும் நகர அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் மனு கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் குரு, மாவட்ட அமைப்பாளர்கள் ஜெயக்குமார், சித்திரவேல், ஒன்றிய துணை செயலாளர் வீரபாபு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • வண்டிப்பாளையம் ரோட்டில் கடந்த பல ஆண்டுகளாக கடை நடத்தி வருகின்றேன்.
    • கவுன்சிலர் மற்றும் ஆதரவாளர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முன்னாள் கவுன்சிலர் நக்கீரன் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான வண்டிப்பாளையம் ரோட்டில் கடந்த பல ஆண்டுகளாக கடை நடத்தி வருகின்றேன். இந்நிலையில் கவுன்சிலர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்னிடம் பணம் கேட்டு கடையை உடைத்து விடுவதாக மிரட்டல் விடுத்து கடையை பூட்டி சென்றனர். இது சம்பந்தமாக இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த போது, அவர்கள் சம்பந்தப்பட்ட கவுன்சிலர் மற்றும் ஆதரவாளர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர். எனவே கடையை தடையின்றி நடத்தவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும், பணம் கேட்டு மிரட்டும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    • 50 ஆண்டுகளாக வசிக்கும் நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சி
    • கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்த பொதுமக்கள்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது அகரம்சீகூர் கிராம மக்களில் சிலர் வந்து கலெக்டரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.அதில், நாங்கள் 50 ஆண்டுகளாக அரசு நிலத்தில் வசித்து வரும் வீட்டிற்கு முறையாக வீட்டு வரி உள்ளிட்டவை கட்டி வருகிறோம். தற்போது அந்த நிலத்தை அரசு கையகப்படுத்துவதாக தெரிகிறது. இதனால் எங்களை வீட்டை காலி செய்யுமாறு அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். வீட்டை காலி செய்தால் நாங்கள் எங்கு செல்வது என்று தெரியவில்லை. எனவே நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

    ×