search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 108818"

    • ராமநாதபுரத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் ெபறப்பட்டன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு தலைமையேற்று பொதுமக்களிடம் இருந்து 257 மனுக்கள் பெற்றார். அந்த மனுக்கள் மீது மனுதாரர்கள் முன்னிலையில் துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். வீட்டுமனைபட்டா, முதியோர்உதவித்தொகை, பட்டாபெயர்மாற்றம் உள்ளிட்டகோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் ெபறப்பட்டன. இதில் கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (பொது) சேக் மன்சூர், தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புதிட்டம்) மாரிச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கேள்விகள் கேட்கும்போது, வினோதமான பதில்களை அதிகாரிகள் தருகின்றனர்.
    • தகவல் அறியும் உரிமை சட்டம் ஏற்படுத்தியதன் நோக்கம் கேள்விக்குறியாகி வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டரிடம் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையாக இருப்பதும், ஊழலைக் கட்டுப்படுத்துவதும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள், மக்களுக்குத் தேவையான தகவல்களை தருவது தான் தகவல் அறியும் உரிமை சட்டம். ஆனால் மின்வாரிய அலுவலகங்களில் தகவல் உரிமை சட்டத்தை முறையாக கையாளாமல் சட்டத்தை அடியோடு முடக்க சில அலுவலர்கள் காரணமாக உள்ளனர். அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மற்றும் அவினாசி கோட்ட மின்சார வாரிய பொது தகவல் அலுவலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை.

    திருப்பூர் மாவட்டத்தில் மின்வாரிய துறை சார்ந்த கேள்விகள் கேட்கும்போது, வினோதமான பதில்களை அதிகாரிகள் தருகின்றனர். பல கேள்விகளுக்கு பதிலே அளிப்பதில்லை. இதனால் தகவல் அறியும் உரிமை சட்டம் ஏற்படுத்தியதன் நோக்கம் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
    • பலமுறை இதுகுறித்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைதீர்க்கும் முகாம் நடந்தது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்க வந்திருந்தனர்.

    மதுரை முத்துப்பட்டி பகுதியில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் இருப்ப தாகவும், அவற்றை அகற்ற கோரியும் வீரமுடையான், கீழமுத்துப்பட்டி பொதுமக்கள் நலசங்கம் சார்பில் கண்ணன், கர்ணன், கணேசன் உள்ளிட்டோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மதுரை மாநக ராட்சி பகுதியில் இருந்து அதிகமான குப்பை லாரிகள் முத்துப்பட்டி வழியாக செல்கிறது. பலமுறை இதுகுறித்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே கலெக்டர் இந்த கோரிக்கையை ஏற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

    இதேபோல் பெருங்குடி பகுதியில் தங்களுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து விட்டதாகவும், அந்த இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு கொடுத்தனர்.

    முதியோர், விதவை உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திரளானோர் மனு கொடுத்தனர். வழக்கமாக காலை 10 மணி அளவில் கலெக்டர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் வருகை தந்து பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு அளிப்பார்கள்.

    இன்று காலை 11 மணி வரையும் கலெக்டர் உள்ளிட்ட முக்கிய அதிகாரி கள் வராததால் பொது மக்கள் மனு கொடுப்பதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    • பயன்படுத்துவோர் கடைவீதிகள், தெருக்கள், தோட்டங்கள், வயல்வெ ளிகளில் வீசி செல்கின்றனர்.
    • கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் பகுதியில் நெகிழிப்பைகள் அதிக அளவில் பயன்படுத்த ப்பட்டு வருகிறது. அதனை பயன்படுத்துவோர் கடைவீதிகள், தெருக்கள், தோட்டங்கள், வயல்வெ ளிகளில் வீசி செல்கின்றனர். இதனால் சுற்றுபுற சூழல் கெடுவதோடு மண் வளமும் பாதிக்கப்படுகிறது. கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

    நீர் நிலைகள் மாசுபடும் அடைகிறது. ஆகவே அதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தன்னார்வ அமைப்பினர் வெள்ளகோவில் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

    • மேலும் இம்முகாமில் இரண்டு பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணையும், ஒருவருக்கு முதியோர் உதவி தொகையும் வழங்கினார்.
    • அது சமயம் அய்யம்பேட்டை சரகத்திற்கு உட்பட்ட 25 கிராமங்களுக்கு வருவாய் தீர்வாய கணக்கு நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

    அது சமயம் அய்யம்பேட்டை சரகத்திற்கு உட்பட்ட 25 கிராமங்களுக்கு வருவாய் தீர்வாய கணக்கு நடைபெற்றது.

    பொது மக்களிடம் இருந்து 144 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கி உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    மேலும் இம்முகாமில் இரண்டு பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணையும், ஒருவருக்கு முதியோர் உதவி தொகையும் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் பயிற்சித் துணை ஆட்சியர் விஷ்ணுபிரியா , பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி, வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் , சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் முருககுமார் , திருவையாறு ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியர் நெடுஞ்செழியன் , தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் ரத்தினவேல், துணை வட்டாட்சியர்கள் பிரியா, விவேகானந்தன், தமயந்தி, விமல் , வருவாய் ஆய்வாளர் ரெஜிலாதேவி, அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் , பிறதுறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    • ராயகிரியில் டாஸ்மாக் கடை திறக்க அரசாங்கம் ஏற்பாடு செய்து வருவதாக தெரிகிறது.
    • டாஸ்மாக் கடை திறந்தால் மக்களின் அமைதியான வாழ்வாதாரம் பாதிக்கும்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே ராயகிரியில் டாஸ்மாக் கடை திறக்கும் திட்டத்தை கைவிடு மாறு வாசுதேவ நல்லூர் வடக்கு ஒன்றியம் ராயகிரி பா.ஜனதா கட்சி சார்பாக வாசுதேவ நல்லூர் வடக்கு ஒன்றிய தலைவர் சோழராஜன் தலைமையில், சிவகிரி தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய பொருளாளர் மாடசாமி, ஓ.பி.சி. அணி மாவட்ட துணை தலைவர் தங்கம், வர்த்தக அணி ஒன்றிய தலைவர் முருகேசன், இளைஞர் அணி ஒன்றிய தலைவர் மெக்கன்பெருமாள், விவசாய அணி மாவட்ட பொறுப்பாளர் ராகவன், பிரசார பிரிவு ஒன்றிய தலைவர் வன்னியராஜா, ராயகிரி நகர தலைவர் கணேசன், அமைப்புசாரா நலவாரிய ஒன்றிய தலைவர் சபரிமலை, மாரியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.சிவகிரி தாசில்தாரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்ப தாவது:-

    சிவகிரி அருகே ராயகிரியில் டாஸ்மாக் கடை திறக்க அரசாங்கம் ஏற்பாடு செய்து வருவதாக தெரிகிறது. இந்த பகுதிகளில் சிறந்த கல்விக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தால் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் மிகவும் இடையூறாக இருப்பதோடு மக்களின் அமைதியான வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் ராயகிரியில் டாஸ்மாக் கடை திறக்கும் திட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசையும், டாஸ்மாக் நிர்வாகத்தையும் வாசுதேவநல்லூர் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகாரிகளிடம் பல முறை மனுக்கள் வழங்கியும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
    • உதவி கலெக்டர் இதில் தலையிட்டு, எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க ஆவன செய்ய வேண்டும்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே யுள்ள கூமன்தொட்டி மற்றும் புடுமன்ன தொட்டி ஆகிய 2 கிராமங்களில் வசிக்கும் இருளர் மற்றும் போயர் இனத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன், ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று நேரில் திரண்டு வந்து, உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சண்முகத்திடம், ஒரு கோரிக்கை மனு அளித்தனர்,

    அதில், கூடுமன்தொட்டி மற்றும் புடுமன்ன தொட்டி ஆகிய 2 கிராமங்களிலும், மூதாதையர்களை தொடர்ந்து பல ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் சுமார் 50 குடும்பங்களுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை.

    சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பல முறை மனுக்கள் வழங்கியும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, உதவி கலெக்டர் இதில் தலையிட்டு, எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க ஆவன செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கேட்டுக ்கொள்ளப்பட்டுள்ளது.

    • தடுப்பணை கட்டும் பணியை நிறுத்த வேண்டும்.
    • போதை பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை,

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி எம்எல்.ஏ தலைமையில் 9 எம்.எல்.ஏக்கள் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கனிம வளங்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை போதைப் பொருள் விற்பனை எப்போதும் இல்லாத வகையில் தற்போது அதிகரித்து வருகிறது இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சட்ட ஒழுங்கு பாதுகாத்தல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கேரளா அரசு கட்டி வரும் தடுப்பணையால் கோவை ஈரோடு திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுப்பணை கட்டும் பணியை நிறுத்த வேண்டும்.

    கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய உயர் மட்ட மேம்பால பணிகள், குடிநீர் திட்ட பணிகள், சாலை பணிகள், சீர்மிகு நகர திட்ட பணிகள், மக்களின் முக்கிய அடிப்படை வசதிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், வாழை விவசாயிகளுக்கு இழப்பீடு உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    அவருடன் அ.தி.மு.க.தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., அம்மன் கே. அர்ச்சுணன் எம்.எல்.ஏ., அமைப்புச் செயலாளர்கள் செ.தாமோதரன் எம்.எல்.ஏ., ஏ.கே. செல்வராஜ் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் விபி.கந்தசாமி எம்.எல்.ஏ., இளைஞரணி துணைச் செயலாளர் டி.கே.அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் கே.ஆர். ஜெயராம் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன் ஆகியோர் வந்திருந்தனர்.

    • கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிடம் கடலூர் மாவட்ட வணிகர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் இராம. முத்துக் குமரனார் மனு அளித்தார்.
    • மணிக்கூண்டுக்கு அருகிலுள்ள பஸ் நிறுத்தத்தில் மேற் கூரை இல்லாமல் உள்ளது. இதனால் மழை காலங்களிலும், அக்னி நட்சத்திரம் வெயிலிலும் மக்கள் பஸ் நிறுத்தத்தில் அவதிப்படுகினறனர் என தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிடம் கடலூர் மாவட்ட வணிகர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் இராம. முத்துக் குமரனார் மனு அளித்தார்.கடலூர் துறைமுகம் மணிக்கூண்டுக்கு அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. பக்கத்தில் உள்ள கிராமங்களின் மக்கள் இந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது பஸ் நிறுத்தத்தில் மேற் கூரை இல்லாமல் உள்ளது. இதனால் மழை காலங்களிலும், அக்னி நட்சத்திரம்வெயிலிலும் மக்கள் பஸ் நிறுத்தத்தில் அவதிப்படுகினறனர். எனவே அவசர தேவையாக பஸ் நிறுத்தத்தில் மேற் கூரை அமைத்து தர வேண்டும். அப்போது கடலூர் துறைமுகம் நகர தலைவர் ரவிக்குமார்,இளைஞரணி தலைவர் ராஜேஷ் உடன் இருந்தனர்.

    • தொண்டி பேரூராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சி வளர்ந்து வரும் நகரமாகவும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இங்கு அனைத்து மதத்தினரும் வாழ்ந்து வருகின்றனர். இதனால் பொது மக்களின் தேவைகளும், கோரிக்கை களும் அதிகம் உள்ளது.

    இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற மக்கள் குறை தீர்க்கும் வகையில் மாதத் தின் முதல் வாரம் செவ்வாய் கிழமையும், மாதத்தின் இறுதிவாரம் செவ்வாய் கிழமையும் காலை 11 மணி முதல் மாலை 2 மணி வரை மக்கள் குறைதீர்க்கும் நாளாக அறிவிக்கப்படுகிறது. அப்போது மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வக்பு விதிகளுக்கு எதிராக செயல்படும் ஜமாத் தலைவரை மாற்ற கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
    • 3 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்திற்கு உட்பட்ட வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இந்த ஜமாத்திற்கு தேர்தல் நடத்தி 9 வருடங்கள் ஆகியும், தற்போது வரை எந்தவித வரவு-செலவு அறிக்கையும் பள்ளிவாசலில் ஒப்படைக்கவில்லை. இதுவரை பல லட்ச ரூபாய் வசூல் செய்து ஜமாத் தலைவர் தன்னிச்சையாக வைத்துள்ளார். அது பற்றி வக்பு வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. உடனடியாக வக்பு வாரிய தலைவர் தேர்தல் நடத்தி முறையான வரவு-செலவு கணக்கை செயல்படுத்த வேண்டும். வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத்தை நேரடி கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர தேர்தல் நடத்த வேண்டும் என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீசிடம் மனு கொடுத்தனர்.

    • கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தார்.
    • சட்டவிரோதமாக மணல் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஏரியில் மீன் வளர்த்து விற்பனை செய்யும் கும்பல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் செல்வகுமார் ஜோதி பாசு, வைரமுத்து, சரவணன், ராஜீ மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது

    கம்மாபுரம் அருகே வி. குமாரமங்கலம் கிராமத்தில் இன்பராஜ், தினேஷ்குமார் ஆகிய 2 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி இறந்து விட்டனர். அந்த கிராம ஏரியில் சட்டவிரோதமாக மணல் எடுத்ததால் பள்ளத்தில் மூழ்கி சிறுவ ர்கள் இறந்துவிட்டார்கள்.. சட்டவிரோதமாக மணல் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஏரியில் சட்டவிரோதமாக மீன் வளர்த்து விற்பனை செய்யும் கும்பல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    ×