search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 108818"

    • திருச்சி மாநகரில் எரியாத விளக்குகளுக்கு பதிலாக புதிய விளக்குகள் பொருத்த கோரி மனு
    • மின்வாரிய ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது

    திருச்சி,

    திருச்சி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோ.அபிஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வையாளர் அலுவலகத்தில் மின்வாரிய ஆணையரிடம் ஒரு மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 62-வது வார்டு பஞ்சப்பூர் பகுதி, புதுத்தெரு, ஆர். எம்.எஸ்.காலனி, அண்ணாநகர், எடமலைப்பட்டி புதூர், ராமச்சந்திரா நகர், செட்டியபட்டி, அன்பிலார் நகர், சொக்கலிங்கபுரம், படுகை, 57-வது வார்டுக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகர், அரசு காலனி, பிள்ளையார் கோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு, முத்து மாரியம்மன் கோவில் தெரு, 58-வது வார்டுக்குட்பட்ட அண்ணாநகர், சுந்தரம் பிள்ளை தோட்டம்,கிராப்பட்டி, பாரதி நகர், 63-வது வார்டுக்குட்பட்ட ஐயப்ப நகர், கே கே.நகர், எல்.ஐ.சி. காலனி, 64-வது வார்டுக்குட்பட்ட கே.கே.நகர், உடையாம்பட்டி, இ.பி.காலனி, 59-வது வார்டுக்குட்பட்ட காஜாமலை காலனி ஆகிய பகுதிகளில் சிதிலமடைந்து எலும்புக்கூடு போல் காணப்படும் மின் கம்பங்களால் விபத்து மற்றும் உயிர்ப்பலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.ஆகவே பழுதான மின்கம்பங்களை உடனடியாக மாற்றி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் எரியாத மின் விளக்குகளுக்கு பதிலாக புதிய மின் விளக்குகளை அமைக்க வேண்டும். டிரான்ஸ்பார்மர் இல்லாத பகுதிகளுக்கு புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்துக் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை மின்வாரிய ஆணையரிடம் கொடுத்த போது சி.பி.எம். கட்சி உறுப்பினர்கள் நிர்மலா, வேம்பு, கார்த்தி, சதாசிவம், யுவசக்தி ஆகியோர் உடனிருந்தனர்.

    • ரூ.9 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • வங்கி கணக்கில் மட்டுமே கட்டணங்களை மாணவர்கள் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் திடம், அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பினர் பொது ச்செயலாளர் சரவணன் கொடுத்த மனுவில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட மிக அதிகமாக பல மடங்கு கட்ட ணம் வசூலித்து வருகின்றனர்.

    தற்போது நடப்பு ஆண்டுக்கான கல்வி கட்டண வசூல் தொடங்கி விட்டது. ரூ.9 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக

    பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை வங்கி கணக்கில் மட்டுமே கட்டணங்களை மாணவர்கள் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமாரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்தனர்,

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காக செயல்படுத்தும் அனைத்து நலத்திட்டங்களையும் உடனுக்குடன் செயல்படுத்தும் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட திட்ட இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமாரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து மற்றும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.  அதனைத் தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்கும் வகையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் தேவையான குடிநீர் வசதியை செய்து தர வேண்டும், ஊராட்சிகளின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு தேவைக்கு அதிகமாக வங்கி இருப்பு உள்ள ஊராட்சிகளின் மின் கட்டணத்தை வங்கி கணக்கிலிருந்து ஊராட்சி பொது நிதிக்கு மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,  அனைத்து ஊராட்சிகளுக்கும் புதிய குப்பை சேகரிக்கும் வண்டி மற்றும் டிராக்டர்கள் வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளுக்கான பொருள் கூறு தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் ஊராட்சிகளுக்கு புதியதாக வழங்கப்பட்ட டிராக்டர்களுக்கான டிரைவரை ஊராட்சி அளவில் நியமித்திட தலைவருக்கு அனுமதி வழங்க வேண்டும், அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கேட்ப தூய்மை காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்திட அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் இருந்தது. மனுவினைப் பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் ஆர்.சிரஞ்சீவி, செயலாளர் ஏ.திருமலை, பொருளாளர் பி.கலியன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • 4 ரத வீதிகளை அழகுப்படுத்தும் விதமாக ரூ. 14.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியதாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் சரவணன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

    மின் விளக்குகள்

    டவுன் பாட்டப்பத்து ஜும்மா பள்ளிவாசல் தலைவர் நெல்லை அபுபக்கர் அளித்த மனுவில், டவுன் பாட்டபத்து ஜும்மா பள்ளிவாசலுக்கு சொந்தமான மைய வாடி பகுதியில் புதிய சாலை மற்றும் சுற்றுச்சுவர் அழைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் மின்விளக்குகள் பொருத்தப்படாததால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அங்கு புதிய மின்கம்பங்கள் அமைத்து மின் விளக்குகள் எரிய விட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    வி.எம்.சத்திரம் சீனி வாசன் நகர் ஏ காலனியை சேர்ந்த கந்தசாமி என்பவர் அளித்த மனுவில், சீனிவாசகம் நகர் ஏ காலனி 4-வது தெருவில் குறிப்பிட்ட சில வீடுகளில் மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவதால் எங்களை போன்றவருக்கு குடிநீர் கிடைக்கவில்லை.

    எனவே அந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சுவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி யிருந்தனர்.

    மாவீரன் சுந்தரலிங் கனார் மக்கள் இயக்கம் நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், இந்து மக்கள் கட்சி உடையார், சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ள 4 ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை அழகுப்படுத்தும் விதமாக கடந்த 2019-ம் ஆண்டு ரூ. 14.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிக்கை யில் 4 ரத வீதிகளிலும் ரூ.65 லட்சம் வரையிலும் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், அந்த தொகை ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    பணிகள் நடைபெறாத பட்சத்தில் இவ்வளவு தொகை எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இந்த கூட்டத்தில் செயற்பொறியாளர் வாசுதேவன், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி கமிஷனர்கள் லெனின், வெங்கட்ராமன் ஜஹாங்கீர் பாஷா, காளிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு

    தொடர்ந்து மேயர் சரவணன் செய்தியா ளர்களிடம் கூறுகையில், நெல்லை மாநகரில் கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மாநகராட்சிக்கு தண்ணீர் தரும் உறை கிணறுகளை மணல் மூடைகள் அடுக்கி தண்ணீர் சேமித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

    • லூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.
    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர்.


    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். இன்று நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் பட்டா தொடர்பான 78 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 54 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 23 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 33 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 16 மனுக்களும், இதர மனுக்கள் 101 ஆக மொத்தம் 305 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், தனித்துணை ஆட்சியர் கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.
    • பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை பொதுமக்கள் நலன் கருதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் தஞ்சை பழைய நீதிமன்ற சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.

    எனவே தஞ்சை தெற்குவீதி, வடக்குவீதி, மேலவீதி, கரந்தை, பள்ளியக்கிரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ்கார்னர், அருளானந்த நகர், பர்மாகாலனி, நிர்மலாநகர், யாகப்பாநகர், அருளானந்தம்மாள் நகர், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, காந்திஜி சாலை, மருத்துவக்கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜி ப்பட்டி, ரகுமான்நகர், ரெட்டிப்பாளையம் சாலை, சிங்கபெருமாள் கோவில், ஜெபமாலைபுரம், வித்யாநகர், மேலவெளி ஊராட்சி, தமிழ்ப் பல்கலைக்கழக வளாக குடியிருப்பு, மாதாக்கோட்டை சாலை, புதிய பஸ் நிலையம், திருவேங்கடநகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்காசி மாவட்டத்தில் அதிகமான பனை தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.
    • பனை பொருட்களை விற்பனை செய்வதற்கு தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

    தென்காசி:

    தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்ட மைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் பொருளாளர் சுப்பிரமணியன், துணை பொதுச்செயலாளர் ஜான் டேவிட், தெற்கு மாவட்ட துணை செயலாளர் மோகன், தென்காசி ஒன்றிய தலைவர் ராஜ் நயினார் ஆகியோர் தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரனை சந்தித்து தென்காசி புதிய பஸ் நிலையத்திற்கு உள்ளே பனை பொருள் அங்காடி தொடங்குவதற்கு அனுமதி யும், இடமும் தர வேண்டும் என்று மனு அளித்தனர்.

    அந்த மனுவில், தென்காசி மாவட்டத்தில் அதிகமான பனை தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இங்கு இவர்கள் உற்பத்தி செய்யும் பதனீர், கருப்பட்டி, கற்கண்டு, நுங்கு, பனைநார் மற்றும் பனையில் இருந்து தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

    பனைத் தொழிலாளர்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தாலும் இவர்களால் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் மிகவும் சிரமத்துக்கு உட்பட்டு இந்த தொழிலை கைவிட்டுப் போகும் நிலையில் இருந்து வருகிறார்கள்.

    இயற்கை நிறைந்த பனைத்தொழிலை ஊக்கு விப்பதற்கும், பனை பொருள் தயாரிப்பவர்க ளுக்கு வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கும் ஏதுவாக தென்காசி புதிய பஸ் நிலையத்திற்கு உள்ளே தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் பனை பொருள் விற்பனை அங்காடி தொடங்குவதற்கு அனுமதி யும், அதற்கான இட வசதியும் செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியிருந்தனர்.

    • நகர சபை ஆணையர் மற்றும் திருக்கோவிலூர் போலீஸ் நிலையம் ஆகியவற்றிற்கு நேரில் சென்று ஒரு கோரிக்கை மனு கொடுத்த னர்.
    • பொதுமக்கள் போலீசாரின் இந்த கெடுபிடியால் கடை தெருவுக்குள் வருவதையே தவிர்த்து விடுகின்றனர்

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அனைத்து வணிகர்கள் நல சங்கம் சார்பில் அதன் தலைவர் டிடி சீனிவாசன் மற்றும் நிர்வாகிகளும் வியா பாரிகளும் திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர், நகர சபை ஆணையர் மற்றும் திருக்கோவிலூர் போலீஸ் நிலையம் ஆகிய வற்றிற்கு நேரில் சென்று ஒரு கோரிக்கை மனு கொடுத்த னர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது,

    திருக்கோவிலூர் நகர போலீஸ் நிலையம் சார்பில் கட்ட கோபுரம் அருகே பேரிகார்டு வைக்கப்பட்டு அனைவருமே கட்ட கோபுரத்தின் வாயில் வழியாக கடைத்தெருவிற்கு செல்லும் வகையில் வைத்துள்ளனர். அதேபோல் போக்குவரத்து காவல்துறை சார்பில் கட்ட கோபுரத்திற்கு முன்னதாக எம்ஜிஆர் சிலை அருகில் போக்குவரத்திற்கு இடையூறாக சாமியான பந்தல் போட்டு கடை தெருவுக்கு செல்லும் ரோட்டையே ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் பஸ் நிலையத்தில் இருந்து கடை தெருவுக்கு வரும் பொதுமக்கள் போலீசாரின் இந்த கெடுபிடியால் கடை தெருவுக்குள் வருவதையே தவிர்த்து விடுகின்றனர். திருக்கோவிலூர் நகர பொதுமக்கள் மற்றும் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்களை நம்பி கட்டை கோபுர தெரு கடைவீதி பள்ளிவாசல் வீதி மற்றும் சின்ன கடை தெருவில் உள்ள சுமார் 600க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் உள்ளன. அது தவிர சுமார் 200க்கும் மேற்பட்ட தெருவோர பாதசாரி வியாபாரிகளும் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் எங்களைப் போன்ற வணிக நிறுவனங்களும் பாதசாரி வியாபாரிகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே கட்ட கோபுரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேரீகார்டரை அகற்றிவிட்டு கடைத்தெருவுக்குள் வருவ தற்கு ஒரு வழியா கவும் கோபுரத்தின் வழியே வெளியே செல்லும் வழியா கவும் மாற்றி யமைத்தல் வியாபாரிகளின் வியாபாரம் கெடாது. எனவே வியா பாரிகள் மற்றும் பாதசாரி வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மணிகண்டன். இவரது மகள் விக்னேஷ்வரி (வயது 6) இவர் மூளைமுடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி .
    • இவரது தாய் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு அளித்தார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலை அடுத்துள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் விக்னேஷ்வரி (வயது 6) இவர் மூளைமுடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி .

    இவருக்கு சிறப்பு சக்கர நாற்காலி வழங்க வேண்டும் என இவரது தாய் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு அளித்தார். மனுவை பெற்று மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலமாக ரூ.11 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலியினை மாவட்ட கலெக்டர் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு வழங்கினார்.     அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • அழகுபெருமாள் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் பண்ருட்டி தாசில்தார் ஆனந்தியை சந்தித்து மனு கொடுத்தார்.
    • இந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி காணாமல்போனகுளம் வாய்க்கால்ஆகியவற்றை மீட்டுதருமாறுகேட்டுக்கொள்கிறோம்.


    கடலூர்:

    அண்ணா கிராமம் ஒன்றியம் அழகுபெருமாள் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் பண்ருட்டி தாசில்தார் ஆனந்தியை சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம்அண்ணாகிராமம் ஊராட்சிஒன்றியம் அழகுபெருமாள்குப்பம்ஊராட்சியில் ஊத்து குளம் உள்ளது இந்த குளம் மற்றும்குளத்திற்கு நீர் வரும் நீர்வரத்துவாய்க்கால் ஆகியவைஆக்கிரமிப்புசெய்யப்பட்டு உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி காணாமல்போனகுளம் வாய்க்கால்ஆகியவற்றை மீட்டுதருமாறுகேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    • மீன் மார்க்கெட்டிற்கு வந்து செல்ல அம்மா உணவகம் வழியாக வந்து செல்லும் பாதை மட்டும் உள்ளது.
    • வாடிக்கையாளர்கள் மற்றும் எங்களது வாகனங்களை நிறுத்தி கொள்ளவும் அனுமதி தர வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் மாநகராட்சி ஆணையாளரிடம் அளித்துள்ள மனுவில் கூறி யிருப்பதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்ட த்தின் கீழ் கட்ட ப்பட்டுள்ள தென்னம்பா ளையம் மீன் மார்க்கெட்டிற்கு வந்து செல்ல அம்மா உண வகம் வழியாக வந்து செல்லும் பாதை மட்டும் உள்ளது. அதிலும் நிறைய ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆகையால் அந்த ஆக்கிரமி ப்புகளை அகற்றி தருவதோடு குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டும் இடத்தில் உள்ள மண்களை அப்புறப்படுத்தி மற்றொரு வழித்தடத்தை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் தற்போது உள்ள தற்காலிக மீன் மார்க்கெ ட்டில் வாடிக்கை யாளர்கள் மற்றும்எங்களது வாகனங்களை நிறுத்தி கொள்ளவும் அனுமதி தர வேண்டும். அதே போல் எங்களை நம்பி 200க்கும் மேற்பட்டமீன் வெட்டும் தொழிலாளர்கள் அங்கு மீன் வெட்டும் தொழில் செய்து வருகின்றனர் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.   

    • வலையங்குளம் கண்மாயில் மீன்பிடி குத்தகையை ரத்து செய்ய வேண்டும்.
    • கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வலையங் குளத்தைச் சேர்ந்த தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு பேரவை பொது செயலாளர் சிங்கராசு, தமிழ் மாநில சிவசேனா கட்சி செயல் தலைவர் தூதை செல்வம் ஆகியோர் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய கண்மாயை, அதே பகுதி யைச் சேர்ந்த 4 பேர் 2 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் இதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ4.10லட்சத்தை லஞ்சம் வாங்கிக் கொண்டு, மீன் குத்தகை ஏலம் விட்டுள்ள னர். கண்மாயில் தண்ணீர் நிறைந்துள்ளதால், மீன் களை பிடிக்க முடியவில்லை.

    அவர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றி வருகின்றனர். ஆடு, மாடுகளை கூட தண்ணீர் குடிக்க அனுமதிப்பதில்லை. மேற்கண்ட 4 பேரும் அங்குள்ள கடைகளில் கட்டாய வசூல் செய்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு பெரிய கண்மாய் குத்தகை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×