search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரூர்"

    பேரூர் அருகே சமையல் செய்த போது உடல் கருகி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சக்தி. இரவது மனைவி ஜோதி (வயது 22). இவர் மிட்டாய் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் மண்எண்ணை அடுப்பில் உணவு சமைத்துக்கொண்டு இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஜோதியின் உடையில் தீ பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ஜோதியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜோதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேரூர் அருகே கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை பேரூர் அருகே உள்ள அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 68). சம்பவத்தன்று இவர் பேரூர்-கோவை ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மாரியம்மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேரூர் அருகே கஞ்சா விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை பேரூர் அய்யப்பன் கோவில் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பேரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த செட்டி வீதியை சேர்ந்த ரவி என்கிற யமகா ரவி (வயது 55) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, ரூ. 23 ஆயிரம் பணம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 
    பேரூர் அருகே நள்ளிரவு தடுப்பு சுவரில் சுற்றுலா பஸ் மோதிய விபத்தில் 4 பயணிகள் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் ஒரு பஸ்சில் கோவைக்கு சுற்றுலா வந்தனர். பஸ்சை ஆந்திர மாநிலம் குண்டுரை சேர்ந்த கல்யான் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். பஸ் நள்ளிரவு 1.30 மணியளவில் கோவை- சிறுவானி ரோடு பேரூர் அருகே சென்று கொண்டு இருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியது.

    இதில் பஸ் இருந்த சுற்றுலா பயணிகள் நெல்லூரை சேர்ந்த பிரசாத் என்பவரது மனைவி ரத்தினம் (59), எட்டி பிரசாத் (65), மைக்கேல் (53), பென்னை (22) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×