search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 109458"

    ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான நேற்று சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பசாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, சூரிய நாராயணமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, பாதுகாப்பு அதிகாரி (பொறுப்பு) சிவக்குமார்ரெட்டி, கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத், பறக்கும் படை அதிகாரிகள் ரவீந்திராரெட்டி, சதாலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை 7 மணியளவில் தங்கத்தேரோட்டம், இரவு தங்கக் குதிரை வாகன வீதிஉலா ஆகியவை நடக்கின்றன. 
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான நேற்று காலை அனுமந்த வாகனம், இரவு யானை வாகன வீதிஉலா நடந்தது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை அனுமந்த வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி, ராமச்சந்திரமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள் ஊர்வலமாக சென்றன. ராமர், நரசிம்மர், ஆஞ்சநேயர் போன்ற வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். பல மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆண்கள், பெண்கள் கோலாட்டம், நாட்டுப்புற நடனம் ஆடினர்.



    வாகன வீதிஉலாவுக்கு முன்னால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி என்.வி.ரமணா, தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார்ரெட்டி (பொறுப்பு), கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத், பேஷ்கார் ரமேஷ், பறக்கும்படை அதிகாரிகள் ரவீந்திராரெட்டி, சதாலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை தங்க யானை வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா ஆகியவை நடக்கிறது. 
    ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீ ரெங்கநாச்சியாருக்கு ஆண்டுக்கு ஒரு முறை திருவடி சேவை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) திருவடி சேவை நடைபெற உள்ளது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. ஸ்ரீ ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து தினமும் மாலையில் புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

    உறையூர் கமலவல்லி நாச்சியாருக்கு திருவடி சேவையை போல ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீ ரெங்கநாச்சியாருக்கும் ஆண்டுக்கு ஒரு முறை திருவடி சேவை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) திருவடி சேவை நடைபெற உள்ளது.

    நாளை மாலை 4 மணிக்கு திருவடி சேவையுடன் தாயார் புறப்பட்டு கொலு மண்டபத்தை மாலை 4.45 மணிக்கு வந்தடைகிறார். இரவு 10.30 மணி வரை தாயார் திருவடி சேவையில் மண்டபத்தில் எழுந்தருளுவார். இரவு 10.30 மணிக்கு மேல் தாயார் மூலஸ்தானத்திற்கு புறப்பட்டு சென்றடைவார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான நேற்று இரவு தங்கக்கருட வாகன வீதிஉலா நடந்தது. கொட்டும் மழையில் நடந்த வாகன வீதிஉலாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை மோகினி அவதார வீதிஉலா நடந்தது. அசுரர்களிடம் இருந்து தேவர்களை காக்க மகா விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்தார். எனவே அதனை விளக்கும் வகையில் உற்சவர் மலையப்பசாமி மோகினி அவதாரத்தில் பல வண்ணமலர்கள், பிரத்யேக தங்க, வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மோகினி அவதாரத்தை ரசிக்கும் வகையில், கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் உடன் வந்தார். வாகன வீதி உலாவின்போது நான்கு மாடவீதிகளில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    வாகன வீதிஉலாவின் முன்னால் நடன கலைஞர்கள் கோலாட்டம் ஆடினர். அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து 5 மணிவரை ஊஞ்சல் சேவை நடந்தது.

    பின்னர் சிகர நிகழ்ச்சியாக இரவு 7 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரை, தங்கக்கருட வாகன வீதிஉலா (கருட சேவை உற்சவம்) நடந்தது. பட்டு வஸ்திரம், கிளி ஆகியவற்றாலும், லட்சுமி ஆரம், மகர கண்டி, சகஸ்ர நாமாவளி ஆரம், கடிக அஸ்தம் ஆகியவற்றாலும் அலங்கரிக்கப்பட்டு உற்சவர் மலையப்பசாமி தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

    மகா விஷ்ணுவின் வாகனம் கருடன். உற்சவர் மலையப்பசாமி மற்ற நாட்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்தாலும் தனது சொந்த வாகனமான கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. அப்போது பலத்த மழை பெய்தது.

    கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நான்கு மாடவீதிகளில் திரண்டு இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுகுண்டல வாடா, வெங்கடரமணா கோவிந்தா... கோவிந்தா... அனாத ரட்சகா, ஆபத் பாந்தவா கோவிந்தா... கோவிந்தா... என விண்ணை முட்டும் அளவுக்கு பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    வாகன வீதிஉலாவுக்கு முன்னால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள், பக்தர்களின் கண்களை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

    முன்னதாக கருட சேவையை பார்ப்பதற்காக நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் காலை 10 மணியளவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு குடிநீர், மோர், உணவு ஆகியவை வழங்கப்பட்டது. அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கருட வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா வந்ததை சுமார் 2½ லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    வீதிஉலாவில் மத்திய மந்திரி ஆர்.கே.சிங், திருமலை - திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகர்யாதவ், தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், திருமலை துணை அதிகாரி சீனிவாசராஜூ, கோவில் அதிகாரி ஹரேந்திரநாத் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
    நவராத்திரியின் நான்காவது நாளான இன்று, பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி ராஞ்சியில் உள்ள திவ்ரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து காணிக்கை செலுத்தினார். #MSDhoni #DivriTemple
    டேராடூன்:

    நவராத்திரி பண்டிகை கடந்த 10ம் தேதி தொடங்கி நடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக,  வட மாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம் .

    நவராத்திரி பண்டிகை தினங்களில் முக்கிய தலைவர்கள், பிரபல கிரிக்கெட் வீரர்கள் மற்றும்  பாலிவுட் நட்சத்திரங்கள்
    தங்கள் வசிக்கும் பகுதியின் அருகிலுள்ள அம்மன் கோவில்களுக்கு சென்று காணிக்கை செலுத்தி மகிழ்வார்கள்.

    இந்நிலையில், நவராத்திரியின் நான்காவது நாளான இன்று, பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி ராஞ்சியில் உள்ள திவ்ரி துர்கா அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து காணிக்கை செலுத்தினார்.

    ராஞ்சியில் உள்ள திவ்ரி துர்கா அம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. எம்.எஸ்.டோனி அந்த கோவிலுக்கு சென்று அங்குள்ள அம்மனை வணங்கிய பின்னர் தனது காணிக்கையை செலுத்தினார். டோனி வருகையை முன்னிட்டு கோவிலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #MSDhoni #DivriTemple
    அறியாமை எனும் இருளை போக்கி ஞான ஒளியை உள்ளமெங்கும் பரவ செய்யும் பூஜையாகவே நவராத்திரி பூஜை கொண்டாடப்படுகிறது.
    இந்தியா முழுவதுமே நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 9 நாளும் மாலை நேரத்தில் பூஜை ஆரம்பித்து இரவில் நடைபெறும் பண்டிகை என்பதுடன் முடிந்து 10-ம் நாள் விஜயதசமி என்றவாறு நவராத்திரி விழா முழுமை பெறுகிறது. நவராத்திரி என்து 9 இரவை குறிப்பிடுகிறது. இரவு என்பது இருள் மயமானது. அறியாமை எனும் இருளை போக்கி ஞான ஒளியை உள்ளமெங்கும் பரவ செய்யும் பூஜையாகவே நவராத்திரி பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவில் முதல் 3 நாட்கள் துர்க்கை வழிபாடும், அடுத்த 3 நாள் லட்சுமி வழிபாடும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி வழிபாடும் நடைபெறுகின்றன.

    முதல் 3 நாட்களின் வழிபாடாக சிங்க வாகினி துர்க்கை வழிபாடு நிகழ்கிறது. துர்க்கை என்பவள் சக்தி ரூபம். உக்கிரத்தின் வடிவம். நமது உள்ளத்தில் உள்ள எதிரிகளை அழிக்க மனம் உறுதி பெறவேண்டும். மன உறுதியை பெற சக்தி வேண்டும். துர்க்கையை வழிபடுவதன் மூலமே உள் மனதில் சக்தியை பெற்று மன பலவீனங்களை எதிர்த்து போரிட முடியும் என்பதே அதன் தத்துவம்.

    இவ்வாறு பெறும் ஆத்ம சக்தியினால் மனதில் உள்ள தீய எண்ணங்கள் அகன்று மனதில் நற்குணங்கள் நிறைவதற்கு வழி பிறக்கும். அதற்காகவே அடுத்த 3 தினங்கள் மகாலட்சுமியை வழிபடுகிறோம். மகாலட்சுமியின் பூஜையின் மூலம் நற்குணங்களை பெறமுடியும். அன்பு, இரக்கம், கருணை, தானம், பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற நற்குண செல்வங்களை பெறவே இம்மூன்று தின வழிபாடு செய்யப்படுகிறது. இதில் பெறும் நற்குணங்களை கொண்டு மனம் புதிய உத்வேகத்துடன் ஞானம் பெறும்.

    கடைசி 3 நாட்களும் ஞானம், கல்வியின் தெய்வமான சரஸ்வதி தேவியை வழிபடுகிறோம். ஞானத்தின் பிறப்பிடமான சரஸ்வதி தேவியை வணங்கி அஞ்ஞானம் விலகி மெய்ஞானம் பெற்று உலகம் சிறக்க, மனிதர்கள் சிறக்க வழி வகை செய்ய பூஜை மேற்கொள்ளப்படுகின்றன. இந்நாளில் செய்யப்படும் ஜப, தியான, ஹோமங்கள் வெற்றி பெறும் நோக்கில் விஜயதசமி என்பது பத்தாம் நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.

    நான்கு நவராத்திரிகள் :

    பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் 4 நவராத்திரிகள் உண்டு. சித்திரை மாதத்தில் வரும் நவராத்திரி வசந்த நவராத்திரி எனப்படும். ஆடி மாதத்தில் வரும் நவராத்திரி ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி பாக்ரபத (அ) சாரதா நவராத்திரி என கூறப்படும். இந்த புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியைதான் அனைவரும் கொண்டாடுகின்றனர். புரட்டாசி மாதத்தை சரத்காலம் என்று கூறுவர். சரத் காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி என்று கூறுகின்றனர்.

    இந்த நவராத்திரி விழாவில் ஒருநாள் இணைந்து 10 நாள் தசரா விழாவாக மைசூர் சாமுண்டிஸ்வரி அம்மனுக்கு கொண்டாடப்படுகிறது. இதுவே மேற்கு வங்காளத்தில் துர்க்கா பூஜை என்றவாறு கொண்டாடப் படுகிறது.

    நவராத்திரி விழாவில் நவசக்தி வழிபாடு :


    9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில் முப்பெரும் சக்திகளுக்கு உரிய தனித்தனி 3 சக்தி அம்சங்கள் உள்ளன. துர்க்கா தேவிக்கு மகேஸ்வரி, கவுமாரி, வராகி எனவும், லட்சுமிக்கு மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திரராணி எனவும், சரஸ்வதிக்கு சரஸ்வதி, நாரசிம்மி, சாமுண்டி என்றவாறு அவரவர்க்கு உரிய சக்திகள் வழிபடப்படுகிறது. நவராத்திரியின் 9 நாட்களிலும் வரிசைப்படி நவசக்தி வழிபாடும் செய்யவேண்டும். இந்த 9 தேவியர்களில் ஒரு தேவி முதன்மையானவராகவும், மற்றவர்களை பரிவார தெய்வமாக கொண்டு நவசக்தி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

    கன்னியர்கள் வழிபாடு :


    நவராத்திரி வழிபாட்டில் கன்னி வழிபாடு பிரதானமாக விளங்குகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியரையும் ஒவ்வொரு தேவியாக பாவித்து வழிபாடு நிகழ்த்தப்படும். கன்னிகளும், பெண் குழந்தைகளும் தேவியாக பாவித்து குடும்பத்தினர் அனைவரும் அவர்களை மகாசக்தியின் உருவமாக மனதார நினைத்து வழிபாடு செய்கின்றனர். நவராத்திரி என்பது குடும்பத்தினர் மன அழுக்குகளை நீக்கி மனபூர்வமாக சந்தோஷத்துடன் கொண்டாடும் விழாவாகும். 
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கருடசேவை நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று இரவு 7 மணிவரை கோவில் அருகே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது.

    இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை முத்துபந்தல் வாகனத்தில் உற்சவரான ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்தார்.

    இன்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதி உலா நடந்தது. அதில், மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமி ஊர்வலத்தின் முன்பு கோலாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    விழாவில் திருமலை- திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, திருப்பதி துணை அதிகாரி போலா பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இன்று இரவு சர்வ பூபால வாகனத்தில் உற்சவர் ஏழுமலையான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கருடசேவை நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது. தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வருகிறார்.

    விடுமுறை தினத்தில் கருட சேவை வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்க்கப்படுகிறது. இதற்காக திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். திருமலையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஓசூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 150 சிறப்பு பஸ்கள் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகிறது.

    இதேபோல் பெங்களூரு பகுதியில் இருந்து 50 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கருட சேவை அன்று பெங்களூரிலிருந்து வரும் பஸ்கள் அன்னமய்யா சர்க்கிள் பஸ் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்படும்.

    மேலும் சிறப்பு வாகன பராமரிப்பு குழுக்களும் மலைப்பாதையில் தயார் நிலையில் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலையங்களில் மருத்துவம், சுகாதாரம் சார்பில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி வெள்ளி கலைமான் வானத்தில் பகவதி அம்மன் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 10-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழாவில் 2-ம் நாளான நேற்று முன்தினம் வணிகத்துறை சார்பில் மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வாகன பவனி நடைபெற்றது.

    3-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு சென்னை பி.கே.ஆர் குரூப்ஸ் நிறுவனத்தலைவர் டி.ஆர். பாலகிருஷ்ணன்ராஜா ஏற்பாட்டில் பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், கலபம், குங்குமம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. மதியம் அன்னதானம், மாலை சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசையும், 9 மணிக்கு கலைமான் வாகனத்தில் அம்மன் வாகன பவனி ஆகியவை நடைபெற்றது.
    நவராத்திரி ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் ஆகும். ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.
    நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு தோற்றம் உள்ளது. சொல்லப்போனால், இது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் ஆகும். ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.

    பிராஹ்மணி (அபிராமி) - பிரம்மா

    மகேஸ்வரி - சிவன்

    கவுமாரி - குமரன் (முருகன்)

    வைஷ்ணவி - விஷ்ணு

    வராஹி - ஹரி (வராக அவதாரம்)

    நரசிம்மி - நரசிம்மர்

    இந்திராணி - இந்திரன்

    இதிலிருந்து நவராத்திரி ஆண்களுக்குரிய பண்டிகையாகவும் விளங்குவதைக் கவனிக்கலாம்.
    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி தமிழக பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 10 டன் மலர்கள் காணிக்கையாக வழங்கினார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி நாடு முழுவதிலிருந்தும் பக்தர்கள் பலர் ஏழுமலையான் கோவிலுக்கு காய்கறிகள், மலர்கள், வாழை இலைகள் ஆகியவற்றை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.

    தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இருந்து ரோஜா, சம்பங்கி, மல்லிகை உள்பட பல்வேறு வகையான மலர்களை பக்தர்கள் காணிக்கையாக வழங்கி உள்ளனர். அந்த மலர்கள் திருமலைக்கு கொண்டுவரப்பட்டன. அத்துடன் திருச்செங்கோடு பக்தர்கள் இளநீர், மா இலைகள், 10 ஆயிரம் ரோஜா செடிகளை மலர்களுடன் காணிக்கையாக அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மாரியம்மன் கோவில் புஷ்ப கைங்கர்ய சபை சார்பில் மருதுசாமி என்பவர் பல்வேறு வகையான மலர்களை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார். தமிழகத்தில் இருந்து 10 டன் மலர்கள் திரு மலைக்கு காணிக்கையாக வந்துள்ளது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்கா பூஜை, தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிட ரீதியான காரணமும் உண்டு.
    வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்கா பூஜை, தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிட ரீதியான காரணமும் உண்டு. நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை ‘கோள்சாரம்’ என்றும் குறிப்பிடுவர். இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு.

    இவர் புரட்டாசி மாதத்தில் புதன் கன்னி ராசியில் சஞ்சரிப்பார். புதன் கல்வி, கலைகளுக்கு உரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்பு நலன்களைத் தருபவராகவும் இருப்பவர். அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலை மகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.

    இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், ‘அட்சர அப்யாசம்’ என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜய தசமி நாளிலேயே தொடங்குகிறார்கள். புரட்டாசியில் வரும் இந்த நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து ‘சாரதா நவராத்திரி’ என்று அக்காலத்தில் அழைத்தனர். (சரஸ்வதிக்கு, சாரதா என்ற பெயரும் உண்டு).

    கல்வி மட்டுமல்லாமல் செல்வமும், தைரியமும் மனிதனுக்கு அவசியம். அவற்றை பெற்று வாழ்வு வளம் பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.

    அம்மனை வழிபடும் விழாக்கள் ஏராளமாக இருந்தாலும், தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் அம்பாளை பூஜிக்கும் நவராத்திரியானது அதில் முக்கியத்துவம் பெறுகிறது.
    சிவனுக்கு நிகரான சக்தியை வழிபடும் ஒன்பது நாட்களை உள்ளடக்கிய விழாவே நவராத்திரி. அம்மனை வழிபடும் விழாக்கள் ஏராளமாக இருந்தாலும், தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் அம்பாளை பூஜிக்கும் நவராத்திரியானது அதில் முக்கியத்துவம் பெறுகிறது. புரட்டாசி வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும். 10-வது நாளான தசமி அன்று விஜயதசமி விழா நடைபெறும்.

    மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமி அன்று வெற்றி பெற்றார். பெரும்பாலும் கோவில் களில் 10 நாட்கள் திருவிழா நடத்தப்படும். அவற்றை பிரம்மோற்சவ விழா என்று அழைப்பார்கள். அதுபோல் வீட்டில் 10 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஒரே விழாவான நவராத் திரி விழா, வீடுகளில் கொண்டாடப் படும் பிரம்மோற் சவம் என்று கூறினால் அது மிகையாகாது.

    சித்திரை, புரட்டாசி ஆகிய இரு மாதங் களையும் எமனின் கோரப் பற்கள் என்று கூறுவார்கள். இந்த இரு மாதங்களிலும் பிணிகள் உடலை துன்புறுத்தி, நலிவடையும்படி செய்யும். அதனைப் போக்கும் விதமாகவே சக்தி வழிபாடு உள்ளது. சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத் திரியும் கொண்டாடப் படுகிறது. இதில் சாரதா நவராத்திரி அனைவரும் கொண் டாடும் தனிச் சிறப்பு பெற்றது.

    நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப் பெரும் தேவியரின் வழிபாடாக இருக்கிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வேண்டியும், இடை மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்ய வேண்டும்.

    லட்சுமிதேவி, அலமேலுமங்கை என்ற நாமத்துடன் பிறந்து, திருப்பதி வெங்கடேசப் பெருமாளை அடையும் பொருட்டு ஒன்பது நாட்கள் விரதம் இருந்து பெருமாளை அடைந்ததாக ஒரு கதையுண்டு. அதன் காரண மாகவே இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுவதா கவும் கூற்று உள்ளது. நவரா த்திரி விழாவை வைணவர் கள் சிறப்பாக கொண்டாடு கிறார்கள். இதேபோன்று நவராத்திரி பற்றி பல கதைகள் உலவுகின்றன.

    இந்தியா மட்டுமின்றி இல ங்கை மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள இந்து மக்கள் மற்றும் உல கில் உள்ள இந்து மக்கள் ஆகியோ ரால் எங்கும் நவராத்திரி விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.

    நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களில் வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங் கேறும். கலை உணர்வு, பக்தி ஆகியவற்றை வெளிப் படுத்தும் விதமாக இது அமைந்துள்ளது.

    இந்த விரதத்தை அனுஷ்டித்ததன் பயனாக இந்திரன், விருத்திராசுரனை அழித்தான் என்று புராணம் கூறுகிறது. நவராத்திரி விரதத்தை மேற்கொண்டால் தாங்கள் விரும்பிய பலனை அடையலாம் என்றும் சொல்லப்படுகிறது. இவ்விரதம் இருப்பவர்கள் வீரம், செல்வம், கல்வி ஆகிய மூன்று பலன்களையும் அடைவார்கள்.

    இவ்விரதத்தை மேற்கொள் ளும் கன்னிப் பெண்கள் திரு மணப் பயனையும், திருமணமா னப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள். மூத்த சுமங்கலி பெண்கள் மன மகிழ் ச்சியையும், மன நிறைவையும் பெறுவார்கள். இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் மற்றவர்களுக்கு பரிபூரண திருப்தி கிடைக்கும்.
    ×