search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 109458"

    கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.
    கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி 10-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அபிஷேகமும், காலை 9.15 மணிக்கு அம்மன் கொலு மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து 10 மணிக்கு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக்கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருதல் ஆகியன நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில், அம்மன் வாகனத்தில் பவனி வருதல், அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள், அன்னதானம், ஆன்மிக உரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    19-ந் தேதி காலை 8 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மதியம் 12.15 மணிக்கு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நிகழ்ச்சியில் அம்மனுக்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறும். பின்னர் மேள, தாளம் முழங்க அம்மன் மகாதானபுரம் சந்திப்பு நோக்கி ஊர்வலமாக புறப்படுவார். மாலை 6.30 மணிக்கு மகாதானபுரம் சந்திப்பில் அமைந்துள்ள காரியக்காரமடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து நரிக்குளம் அருகே பணாசூரன் என்ற அரக்கனை வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்வு நடைபெறுகிறது.

    தொடர்ந்து அம்மன் பல்லக்கு வாகனத்தில் பஞ்சலிங்கபுரம், மகாதானபுரம் வழியாக கோவிலை சென்றடைந்ததும் முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அம்மன் கிழக்குவாசல் வழியாக கோவிலுக்குள் செல்வார்.

    விழா ஏற்பாடுகளை திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோவில் மேலாளர் சிவ ராமச்சந்திரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    நவரத்திரி விழாவுக்காக கன்னியாகுமரி கோவில் சிலைகள், கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் நிகழ்ச்சி பத்மநாபபுரம் அரண்மனையில் இன்று நடந்தது. #Navratri
    நாகர்கோவில்:

    திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி விழாவில் குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சிலைகள் பங்கேற்பது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி நேற்று இரவில் பத்மநாபபுரம் வந்தடைந்தது. இதேபோல குமார கோவில் முருகன் சிலையும் பத்மநாபபுரம் வந்து சேர்ந்தது.

    இன்று காலை சாமி சிலைகள் திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி பத்மநாபபுரம் அரண்மனையில் நடந்தது.

    முன்னுதித்த நங்கை அம்மன், குமார கோவில் முருகன் பூப்பல்லக்கிலும், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் யானை மீதும் எழுந்தருளினர். தொடர்ந்து சாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் வாணவேடிக்கைகள், செண்டை மேளம் முழங்க 3 சிலைகளும் ஊர்வலமாக திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டன.

    சாமி சிலைகளுக்கு தமிழக மற்றும் கேரள போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை அளித்தனர். முன்னதாக பத்மநாபபுரம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வரும் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி நடந்தது.

    அரண்மனை கண்காணிப்பாளர் அஜிதகுமார், தொல்பொருள் இயக்குனர் ரெஜிகுமார் ஆகியோர் உடைவாளை எடுத்து கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், தொல்லியல் துறை மந்திரி கடனப்பள்ளி ராமச்சந்திரன், ஆகியோரிடம் கொடுத்தனர்.

    அவர்கள் உடை வாளை குமரி மாவட்ட தேவசம்போர்டு ஆணையர் அன்புமணியிடம் ஒப்படைத்தனர். அதனை அவர் பணியாளர் மோகனகுமாரிடம் கொடுத்தார்.

    மோகனகுமார் உடைவாளை சாமி சிலைகள் ஊர்வலத்தின் முன்பு ஏந்தியபடி புறப்பட்டுச் சென்றார். சாமி சிலைகள் ஊர்வலத்துக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். பெண்கள் திருக்கண் சாத்தி வழிபட்டனர்.

    தக்கலையில் புறப்பட்ட ஊர்வலம் கேரளபுரம், அழகியமண்டபம் வழியாக செல்லும் சாமி சிலைகள் இன்று இரவு குழித்துறை மகாதேவர் கோவிலில் தங்குகின்றன. நாளை காலை அங்கிருந்து புறப்பட்டு களியக்காவிளை வழியாக கேரளாவுக்கு செல்கின்றன.

    பத்மநாபபுரம் அரண்மனையில் இன்று நடந்த விழாவில் குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, கேரள மாநிலம் பாறசாலை எம்.எல்.ஏ. ஹரீந்திரன், கோவளம் எம்.எல்.ஏ. சுரேந்திரன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான விழா வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது.
    திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது.

    அன்று அம்மன் குமாரிகா அம்சத்திலும், 11-ந் தேதி திருமூர்த்தி, 12-ந் தேதி கல்யாணி (துர்க்கை), 13, 14, 15-ந் தேதிகளில் முறையே ரோகிணி, காளகா, சண்டிகா அம்சத்திலும் (மகாலெட்சுமி) 16,17,18-ந் தேதிகளில் சாம்பவி, துர்க்கா, ஸுபத்ரா (சரஸ்வதி) ஆகிய அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    10-ந் தேதியிலிருந்து காலையிலும், மாலையிலும் பரதநாட்டியம், ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 19-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அம்மன் புறப்பாடாகி வன்னிமரம் அடைந்து அங்கு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இவ்விழாவின் ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. கோவிலின் மேற்கு பிரகார நவராத்திரி மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் குமரதுரை தலைமையில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) விழா தொடங்கி 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.
    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் இக்கோவிலில் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதுமட்டுமின்றி பல்வேறு பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) விழா தொடங்கி 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் மாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட உள்ளது.

    10-ந் தேதி பராசக்தி அம்மன் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வாண வேடிக்கைகளுடன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ந் தேதி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 12-ந் தேதி கெஜலட்சுமி அலங்காரமும், 13-ந் தேதி மனோன்மணி அலங்காரமும், 14-ந் தேதி ரிஷப வாகனத்தில் அலங்காரமும், பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும் நடக்கிறது.

    15-ந் தேதி ஆண்டாள் அலங்காரமும், 16-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 17-ந் தேதி லிங்க பூஜை அலங்காரமும், 18-ந் தேதி மகிஷோசூரமர்த்தினி அலங்காரமும் செய்யப்பட உள்ளது. மேலும் அன்று சரஸ்வதி பூஜையும், உண்ணாமலை அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும் நடக்கிறது.

    19-ந் தேதி விஜயதசமியன்று காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும், பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா வருகிற 10-ந்தேதி முதல் தொடங்கி 9 நாட்கள் நடைபெறுகிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி பிரம்மோற்சவ விழா வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) முதல் 18-ந்தேதி (வியாழக்கிழமை) வரை நடக்கிறது.

    9 நாட்கள் நடைபெறும் இந்த நவராத்திரி விழாவில் உற்சவரான மலையப்பசாமி காலை, இரவு என இருவேளைகளில் திருமலையில் உள்ள 4 மாடவீதிகளில் உலா வருகிறார். விழா நடைபெறும் நாட்களில் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணி முதல் 8 மணிவரை அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 10-ந்தேதி மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவையும். இரவு 8 மணி முதல் 10 மணிவரை பெரிய சேஷ வாகனத்தில் உற்சவரான மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    11-ந்தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 10 மணிவரை ஹம்ச வாகனத்திலும், 12-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை சிம்ம வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 10 மணிவரை முத்துப்பந்தல் வாகனத்திலும் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீதி உலா வருகிறார்.

    தொடர்ந்து 13-ந்தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை கல்பவிருட்ச வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை சர்வபூபால வாகனத்திலும், 14-ந்தேதி காலை 9 மணி முதல் 11 மணிவரை பல்லக்கு வாகனத்திலும் மோகினி அலங்காரத்தில் வீதி உலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கருட சேவை இரவு 7 மணி முதல் 12 மணிவரை நடக்கிறது. இதில் கருட வாகனத்திலும் மலையப்ப சாமி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    15-ந்தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை உற்சவரான மலையப்பசாமி அனுமந்த வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 10 மணிவரை கஜவாகனத்திலும், 16-ந்தேதி காலை 9 மணி முதல் 11 மணிவரை சூரியபிரபை வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 10 மணிவரை சந்திரபிரபை வாகனத்திலும் மலையப்பசாமி மாடவீதியில் வீதிஉலா நடக்கிறது.

    7-ந்தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை தங்க தேரோட்டம் நடக்கிறது. இரவு 8 மணி முதல் 10 மணிவரை குதிரை வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா வருகிறார்.

    18-ந்தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை சக்கரஸ்நானம் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    பிரம்மோற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருமலை- திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    மங்களூரு நகர் குத்ரோலி பகுதியில் பிரசித்தி பெற்ற கோகர்ணா கோவிலில் வருகிற 10-ந்தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது.
    மங்களூரு நகர் குத்ரோலி பகுதியில் பிரசித்தி பெற்ற கோகர்ணா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா மற்றும் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டும் நவராத்திரி விழா வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. மேலும் தசரா விழா 14-ந்தேதி தொடங்குகிறது.

    14-ந்தேதி தசரா விழாவை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைக்கிறார். நவராத்திரி மற்றும் தசரா விழாவையொட்டி மங்களூரு நகரில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் கோவில் மின்விளக்குகளால் ஜொலிக்கிறது. இதனால் மங்களூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    இதுதொடர்பாக முன்னாள் மத்திய மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஜனார்த்தன பூஜாரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மங்களூரு குத்ரோலி கோகர்ணா கோவிலில் வருகிற 10-ந்தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு மகாநவமி உற்சவம் நடக்கிறது. காலை 11.50 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள நவதுர்கைகளுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

    அதன்பின்னர் 14-ந்தேதி தசரா விழா தொடங்குகிறது. இதனை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைக்கிறார். இதில், மந்திரி யு.டி.காதர் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள். 19-ந்தேதி விஜயதசமி அன்று தசரா ஊர்வலம் நடக்கிறது என்றார்.

    பழனி முருகன் கோவிலின் உப கோவிலான பெரிய நாயகி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா, வருகிற 9-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
    பழனி முருகன் கோவிலின் உப கோவிலான பெரிய நாயகி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா, வருகிற 9-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு மேல் விநாயகர் பூஜைக்கு பிறகு காலசந்தி பூஜையில் சிவன், நடராஜர், சிவகாமி அம்மன், சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு காப்பு கட்டப்படுகிறது. அதைத்தொடர்ந்து கோவில் யானை கஸ்தூரிக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதையடுத்து மலைக்கோவிலில் உச்சிக்கால பூஜையில் விநாயகர், மூலவர், சின்னக்குமாரர், வள்ளி- தெய்வானை, துவாரபாலகர்கள் ஆகியோருக்கு காப்பு கட்டப்படுகிறது. நவராத்திரி விழாவையொட்டி 9-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும். 11 நாட்கள் நடக்கும் இந்த விழாவின் நிறைவு நாளான வருகிற 19-ந்தேதி விஜயதசமி ஆகும். அன்றைய தினம் மலைக்கோவிலில் பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை, 3.05 மணிக்கு பராசக்திவேல் புறப்பாடு நடைபெறும்.

    பின்னர் பராசக்தி வேலுடன் முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோதை ஈஸ்வரர் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்னர் பராசக்தி வேல் மலைக்கோவில் வந்தடைந்து, இரவு 10 மணிக்கு மேல் சம்ரோட்சண பூஜைக்கு பின்பு ராக்கால பூஜை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர். 
    நவராத்திரி கொலு வைத்திருக்கும் பொழுது, அதனைப் பார்க்க வருபவர்களுக்கு குறிப்பிட்ட பிரசாதங்களை வழங்கினால் அன்னையின் அருளைப் பெறலாம்.
    நவராத்திரி கொலு வைத்திருக்கும் பொழுது, அதனைப் பார்க்க வருபவர்களுக்கு குறிப்பிட்ட பிரசாதங்களை வழங்கினால் அன்னையின் அருளைப் பெறலாம். அதன்படி...

    முதல் நாள் - கற்கண்டு பாயசம்

    இரண்டாம் நாள் - புளியோதரை சாதம்

    மூன்றாம் நாள் - சர்க்கரைப் பொங்கல்

    நான்காம் நாள் - கதம்ப சாதம்

    ஐந்தாம் நாள் - தயிர்சாதம்

    ஆறாம் நாள் - தேங்காய் சாதம்

    ஏழாம் நாள் - எலுமிச்சம்பழச் சாதம்

    எட்டாம் நாள் - பாசிப்பருப்பு, பால், வெல்லம்,

    ஏலக்காய் கலந்த பாயசம்

    ஒன்பதாம் நாள் - அக்காரவடிசல்
    ஆஷாட நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சந்திரமான கால கணிதமுறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை அடுத்த பிரதமை முதல் நவமி வரையிலான காலம் ஆகும்.
    உழைப்பையும் உழவுத்தொழிலையும் குறிக்கும் கிரகம் சனைஸ்வரபகவானாவார். வராக (பன்றி) ரூபமான வராஹி பூமியை ஆழ உழுவதற்கு ஏற்ற சக்தியை அளித்து விவசாயத்தை பெருக்குவதால் ஆஷாட நவராத்திரி வராஹி தேவிக்கு உரியதாக சாக்த சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்து மதத்தின் சிறப்பு மிக்க சாக்த வழிபாட்டில் அன்னை தெய்வங்களை போற்றும் விதமாக நவராத்திரி வழிபாடுகள் சிறப்புமிக்கதாகும். பருவ காலங்களுக்கு ஏற்ப ஒன்பது நாட்களை நவராத்திரிகளாக கொண்டு சக்தி தெய்வங்களை வணங்குவது மரபு.

    நான்கு விதமான நவராத்திரிகள் :

    வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி.(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

    ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. (ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

    புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. (புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

    தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)


    ஆஷாட நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சந்திரமான கால கணிதமுறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை அடுத்த பிரதமை முதல் நவமி வரையிலான காலம் ஆகும். ஆனி - ஆடி மாதங்களில் புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கின்ற காலம். வளமையையும், செழுமையையும், மகிழ்ச்சியையும் தரவல்ல காலம் என்பது விவசாயத்தின் ஆரம்பக் காலமும், நிறைவுக் காலமும் தான். பூமித் தாயே சூல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருக் கொள்கின்ற காலம்.

    விவசாயத்தின் காரக கிரகங்கள் சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகும், விவசாயம் செழிக்க வளம் பெருக அம்பிகையை வழிபடக்கூடிய காலம் ஆனி - ஆடி மாதம். இந்த காலத்தில் அம்பிகையை, விவசாயம் பெருகி உலகம் சுபிக்ஷமாக விளங்க மனமுருக பிரார்த்தனை செய்வதாகவே ஆஷாட நவராத்திரி அமைந்திருக்கின்றது. ஆஷாட நவராத்திரியில் அன்னையரை வணங்குவது சுக்கிரன் மற்றும் சந்திரனை மகிழ்வித்து விவசாயம் பெருகும் என்பது நிதர்சனம்.

    பொதுவாக ஆஷாட நவராத்திரி தானிய அபிவிருத்திக்காக செய்யப்படுவது. வடமாநிலங்களில் சில இடங்களில் பிரபலமாகக் கொண்டாடப்படுகின்றது. தமிழகத்தில், தானியக் களஞ்சியமாக விளங்குகின்ற தஞ்சை மாநகரத்தில் அமைந்திருக்கக் கூடிய பிரகதீஸ்வர் கோயிலிலும் ஆஷாட நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

    உழைப்பையும் உழவுத்தொழிலையும் குறிக்கும் கிரகம் சனைஸ்வரபகவானாவார். வராக (பன்றி) ரூபமான வராஹி பூமியை ஆழ உழுவதற்க்கு ஏற்ற சக்தியை அளித்து விவசாயத்தை பெருக்குவதால் ஆஷாட நவராத்திரி வராஹி தேவிக்கு உரியதாக சாக்த சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

    வராஹி தேவியின் ரூப த்யான ஸ்லோகம், அம்பிகையின் கரங்களில் விவசாயத்திற்கு ஏற்ற ஏர்க் கருவியும், உலக்கையும் கொண்டு அருள்வதாகக் கூறுகின்றது. தஞ்சாவூர் பெரிய கோயிலில் வராஹி தேவிக்கு ஆஷாட நவராத்திரி விவசாய வளமைக்காக கொண்டாடப்படுகின்றது.

    வார்த்தாலி என்று அழைக்கப்படக்கூடிய வராஹி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவிகளில் ஒருவராக விளங்கக் கூடியவள். அளப்பரிய சக்தி கொண்டவள். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனடியாக அருளுபவள்.

    வாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை நீக்குபவள். விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகளை அருளுபவள். இல்லம் எனும் வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கச் செய்பவள். மிக விரைவில் பலன் அளிக்கக் கூடியவள்.

    ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், ஸப்த மாதா தெய்வங்களையும், அஷ்ட மாத்ருகா தெய்வங்களையும், வழிபாடு செய்வதும், எட்டாம் நாளில் வராஹி தேவியைப் போற்றுவதும் வளமான வாழ்க்கையை நல்கும்.
    தஞ்சை பெரியகோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பெருவிழா தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.
    தஞ்சை பெரியகோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு இந்தியா மட்டும் அல்லாது வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், முருகன், விநாயகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் உள்ளன. இதில் வராகி அம்மனுக்கு ஆண்டு தோறும் ஆஷாட நவராத்திரி பெருவிழா 11 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா நேற்று தொடங்கியது.

    கணபதிஹோமத்துடன் விழா தொடங்கியது. பின்னர் சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது. யாகம் முடிந்ததும் வராகி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மாலையில் வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் தினமும் காலையில் யாகமும், மாலையில் அம்மனுக்கு அலங்காரமும் நடைபெறுகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) 2-ம் நாள் அம்மனுக்கு மஞ்சள் அலங்காரமும், நாளை (சனிக்கிழமை) 3-வது நாள் குங்கும அலங்காரமும், 4-வது நாள் சந்தன அலங்காரமும், 5-வது நாள் தேங்காய்ப்பூ அலங்காரமும், 6-வது நாள் மாதுளை அலங்காரமும், 7-வது நாள் நவதானிய அலங்காரமும், 8-வது நாள் வெண்ணெய் அலங்காரமும், 9-வது நாள் கனிவகை அலங்காரமும், 10-வது நாள் காய்கறி அலங்காரமும், 11-வது நாள் புஷ்ப அலங்காரமும் நடைபெறுகிறது.

    கடைசி நாள் அன்று மாலை அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, உதவி ஆணையர் பரணிதரன், கண்காணிப்பாளர்கள் தமிழ்ச்செல்வி, சுரேஷ், செயல் அலுவலர் மாதவன் மற்றும் ஆஷாட நவராத்திரி விழாக்குழுவினர் செய்திருந்தனர். 
    ஸ்ரீ விளம்பி ஆண்டில் ( 2018 - 2019) வரும் நவராத்திரிகளும், விரதம் இருக்க வேண்டிய நாட்களும் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஸ்ரீ விளம்பி ஆண்டில் ( 2018 - 2019) வரும் நவராத்திரிகளும், விரதம் இருக்க வேண்டிய நாட்களும் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    இதர நவராத்திரிகள்

    வராகி நவராத்திரி - ஆனி மாதம் 29-ந் தேதி (13.7.2018) வெள்ளிக்கிழமை முதல் ஆடி மாதம் 5-ந்தேதி (21.7.2018) சனிக்கிழமை வரை.

    சியாமளா நவராத்திரி - தை மாதம் 22-ந்தேதி (5.2.2019) செவ்வாய்க்கிழமை முதல் மாசி மாதம் 2-ந்தேதி (14.2.2019) வியாழக்கிழமை வரை.

    வசந்த நவராத்திரி - பங்குனி மாதம் 23-ந்தேதி (6.4.2019) சனிக்கிழமை முதல் பங்குனி மாதம் 30-ந்தேதி (13.4.2019) சனிக்கிழமை வரை.

    நவராத்திரி

    நவராத்திரி ஆரம்பம் - புரட்டாசி 24 (10.10.2018) புதன்கிழமை
    பத்ரகாளியஷ்டமி - பத்ரகாளி அவதார நாள் புரட்டாசி 30 (16.10.2018) செவ்வாய்க்கிழமை
    சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை - ஐப்பசி 1 (18.10.28) வியாழக் கிழமை
    ஆயுத பூஜை செய்ய - காலை 9.30 முதல் 10.30 வரை, பகல் 12.30 முதல் 1.30 வரை
    விஜயதசமி - ஐப்பசி 2 (19.10.2018) வெள்ளிக்கிழமை
    மறு பூஜை செய்ய - அதிகாலை 5.00-6.00, காலை 8.00 - 9.00
    ×