என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆண்டிப்பட்டி"
தேனி:
ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு சத்தியதாய் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி சுகந்தி (வயது 22). இவரது உறவினர் முரளி (31). கருப்பசாமி கேரளாவில் வேலை செய்து வருகிறார். சுகந்திக்கும் முரளிக்கும் இடையே மரம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.
இதனால் அடிக்கடி முரளி சுகந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சுகந்தியிடம் முரளி ஆபாசமாக பேசி அவரது ஆடையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த சுகந்தி சத்தம் போட்டவாறே வெளியில் ஓடி வந்து விட்டார். மேலும் இது குறித்து சுகந்தி கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் மானபங்கம் செய்த முரளி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே குமணன்தொழுவை சேர்ந்தவர் மணி மனைவி மகாலட்சுமி (வயது36). இவரை அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் அடிக்கடி கேலி- கிண்டல் செய்து வந்துள்ளார்
இதனால் ஆத்திரம் அடைந்த மகாலட்சுமி, அருண்குமாரை தட்டி கேட்டுள்ளார். மேலும் இது குறித்து அருண்குமாரின் தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனால் தந்தை அவரை கண்டித்துள்ளார்.
மகாலட்சுமி தனது கணவருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அருண்குமார் எதற்கு எனது தந்தையிடம் புகார் கூறினாய் என கேட்டு அவரை கடுமையாக தாக்கி உள்ளார். இதனை தடுக்க வந்த மணிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே கோவிந்தநகரம் வைகை நகரை சேர்ந்தவர் பிரபு. இவர் ராஜேஸ்வரி என்பவரை கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில காலம் நன்றாக சென்றுகொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியது. கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்படடது. மேலும் ராஜேஸ்வரியின் நகையை வாங்கி பிரபு அடகு வைத்துள்ளார். இதனை திருப்பி தருமாறு கேட்டபோது காலம் தாழ்த்தியே வந்துள்ளார்.
தற்போது மேலும் 10 பவுன் தங்க நகை வாங்கி வந்தால் மட்டுமே தனது மகனுடன் குடும்பம் நடத்த முடியும் என பிரபுவின் தாயார் மயிலம்மாள் கூறி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி இது குறித்து தேனி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின்பேரில் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (வயது 22). இவருக்கும் ஆர்த்தி (21) என்பவருக்கும் கடந்த 3.7.2017-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 12 பவுன் நகை, ரூ.2 லட்சம ரொக்கம் மற்றும் சீர் வரிசைகள் வரதட்சணையாக வழங்கப்பட்டன.
திருமணம் முடிந்த பிறகு ஜெயப்பிரகாஷ் எந்த வேலைக்கும் செல்லாமல் தனது மனைவியின் நகை மற்றும் பணத்தை வாங்கி செலவு செய்து விட்டார். மேலும் கூடுதலாக 10 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் வாங்கி வரச் சொல்லி கொடுமைபடுத்தி வந்துள்ளார்.
வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் அவரை வீட்டை விட்டு விரட்டி அடித்தனர். இது குறித்து ஆர்த்தி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவர் ஜெயப்பிரகாஷ், அவரது தந்தை மணி, தம்பி அலெக்ஸ் பாண்டி, உறவினர் சிங்காரம் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.#tamilnews
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி சமத்துவப்புரத்தை சேர்ந்தவர் பாலையா (வயது58). இவரது மனைவி நீலாவதி (48). இவர்களுக்கு மகேந்திரன் என்ற மகன் உள்ளார். இவர் முல்லையம்பட்டியில் சைக்கிள் கடை வைத்து நடத்தி வருவதாக பெற்றோரிடம் கூறினார்.
ஆனால் வேலைக்கு சரிவர செல்லாமலும் வீட்டில் இருந்து பணத்தை வாங்கி அதனை வீண் செலவு செய்து வந்துள்ளார். தாய் பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை.
இதனால் மனமுடைந்த நீலாவதி தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த காயங்களுடன் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இது குறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகில் உள்ள மயிலாடும்பாறை கோரையூத்து பகுதியை சேர்ந்தவர் சேனாதிபதி (வயது30). இவருக்கும் முத்துப்பிரியா (20) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
மனைவியின் நடத்தையில் சேனாதிபதிக்கு சந்தேகம் இருந்தது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று இரவு இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் மனைவியை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சேனாதிபதியை கைது செய்தனர்.
இதேபோல் கடமலைக்குண்டு அருகில் உள்ள கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் வனராஜ் (34). இவருக்கும் ஜெயலட்சுமி (28) என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 மகள்கள் உள்ளனர். குடிபழகத்திற்கு அடிமையான வனராஜ் தினமும் போதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று இரவு கம்பால் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வனராஜை கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வருசநாடு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொம்மையசாமி (வயது35). இவர் அதே பகுதியில் பெட்டிகடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தான் வாங்கிய நபரிடம் பணத்தை திருப்பி தருவதற்காக ரூ.1 லட்சம் பணத்தை கடையில் வைத்திருந்தார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
இன்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் உள்ளே இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து பொம்மையசாமி வருசநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. மோப்பநாய் வைத்தும் போலீசார் விசாரணை நடத்தினர். ஆண்டிப்பட்டி பகுதியில் அதிகரித்து வரும் தொடர் கொள்ளையால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர். சிலை அருகே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் செய்தனர். ஒன்றிய செயலாளர் ராமர் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.
கடமலைக்குண்டு பகுதி யில் ஒன்றிய செயலாளர் மணவாளன் தலைமையில் மறியல் செய்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கைதானார்கள்.
போடியில் தேவர் சிலை முன்பு துப்பாக்கி சூட்டை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் செய்தனர். இவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
பழனி ரவுண்டானா பகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது தமிழக முதல்வர் பதவி விலக கோரி கோஷமிட்டனர்.
கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கன்னிவாடி பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆண்டிப்பட்டி, ஜி.உசிலம்பட்டி, கண்டமனூர், ஆத்தங்கரைப்பட்டி, கோவிந்தநகரம், சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக, கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி உச்சக்கட்டத்தில் இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் மே மாத இறுதியில் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசத்தொடங்கி விடும். அந்த நேரத்தில் தேனி மாவட்டத்தில் செயல்படும் காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரிக்கும்.
இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசத்தொடங்கி உள்ளது. இதனையடுத்து காற்றாலைகளில் மின்சார உற்பத்தியும் தொடங்கியது. தென்மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் ஒரு வினாடிக்கு 8 மீட்டர் முதல் 9 மீட்டர் என்ற அளவில் உள்ளதாக காற்றாலை பணியாளர்கள் தெரிவித்தனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் போது, தேனி மாவட்டத்தில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறினர்.நேற்று முன்தினம் இரவு முதல் தென்மேற்கு காற்று வீசத் தொடங்கியதால், காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரையில் ஒரு காற்றாலையின் மின்சார உற்பத்தி 16 ஆயிரம் யூனிட் என்ற அளவில் காணப்பட்டது. இனிவரும் நாட்களில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகமும், காற்றாலை மின்சார உற்பத்தியும் கணிசமாக அதிகரிக்கும் என்பதால், காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில் மின்வாரியத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் தேனி அரசு மருத்துவ கல்லூரியுடன் இணைந்த அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு நிரந்தர பணியாளர்களைத் தவிர ஒப்பந்த அடிப்படையில் காவலர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த கருப்பையா மனைவி செண்பக வள்ளி (வயது 31). துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கோவில்பட்டியைச் சேரந்த ராமன் (45) என்பவரும் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தொடர்ந்து செண்பக வள்ளிக்கு பாலியல் தொல்லை கொடத்து வந்துள்ளார்.
நேற்று க.விலக்கு பஸ் ஸ்டாப்பில் நின்ற போது இரட்டை அர்த்தத்தில் அவரிடம் தகராறு செய்து ராமன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து க.விலக்கு போலீசில் செண்பகவள்ளி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமனை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கு பகுதியைச் சேர்ந்தவர் அம்மாவாசி (வயது 47). பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இவர் தனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றார். முன்னதாக ஊருக்கு செல்லும் விபரத்தை தனது உறவினரிடம் கூறியிருந்தார்.
எனவே உறவினர்கள் காலை, மாலை நேரத்தில் அம்மாவாசி வீட்டை பாதுகாத்து வந்தனர். அதன்படி இன்று காலை உறவினர்கள் அம்மாவாசி வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்து நகை-பணத்தை காணவில்லை.
கொள்ளை போன நகை- பணம் விபரம் அம்மாவாசி திருப்பதியில் இருந்து வந்தால்தான் தெரியும். இது குறித்து க.விலக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் மோப்ப நாய் பென்னி தேனியில் இருந்து வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டில் இருந்து சாலை ஓரம் வரை சென்று நின்றது. எனவே கொள்ளையர்கள் அந்த வழியாக தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கொள்ளையர்கள் குறித்த துப்பு துலக்க கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கருப்பையாபுரத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் கார்த்திகா(வயது17). இவர் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இப்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற கார்த்திகா திடீரென மாயமானார்.
வெகுநேரமாகியும் கார்த்திகா வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த தாய் கவிதா அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தார். மேலும் கார்த்திகாவின் நண்பர்களிடம் விசாரித்தார். எங்கு தேடியும் கிடைக்காததால் கடமலைக்குண்டு போலீசில் கவிதா புகார் செய்தார்.
அந்த புகார் மனுவில் தனது மகளை ஆனைமலையான் பட்டியை சேர்ந்த கனிஷ்குமார், சிங்கராஜபுரத்தை வசந்த், ஒத்தப்பட்டியை சேர்ந்த நந்தீஸ்குமார் ஆகியோர் கடத்தியிருக்கலாம் என கூறியிருந்தார்.
இதையடுத்து அவர்களை தேடிச்சென்ற போலீசார் மேற்கண்ட 3 பேரும் தலைமறைவானதால் அவர்கள்தான் கார்த்திகாவை கடத்தியிருக்ககூடும் என்று வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்