என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குற்றப்பத்திரிகை"
ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்படும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல், துபாயில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் நாடு கடத்தப்பட்டு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பின்னர் அவர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் அமலாக்கத்துறை சார்பிலும் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், குற்றப்பத்திரிகை நகல் கசிந்தது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றப்பத்திரிகை நகல் முன்கூட்டியே கிடைத்தது எப்படி? என்பது குறித்து விளக்கம் கேட்டு செய்தி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இந்த வழக்கை இன்று விசாரித்த சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார், கிறிஸ்டியன் மைக்கேல் தாக்கல் செய்த மனுவிற்கு அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மைக்கேலின் தொழில் பங்குதாரரும் மற்றொரு இடைத்தரகருமான டேவிட் நைஜல் ஜான் சிம் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. அவரை வரும் மே 9-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது.
இதற்கிடையே ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லியைச் சேர்ந்த இடைத்தரகர் சூசன மோகன் குப்தாவின் விசாரணைக் காவலை, மே 9-ம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. #VVIPChoppersCase #AgustaWestland #ChristianMichel
பாராளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட தினத்தை துக்கத்தினமாக டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சில மாணவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு கடைப்பிடித்தனர்.
அப்போது அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டதாக, பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இச்சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட உண்மையான வீடியோ ஆதாரங்களை சி.பி.ஐ. தடயவியல் ஆய்வுக்கூடத்திற்கு டெல்லி போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கிடைக்கப்பெற்றதால் அவர்கள் சிறையில் இருந்து வெளியேறினர்.
இந்திய குற்றவியல் சட்டம் 124A 323, 465, 471,143, 149, 147, 120B ஆகிய பிரிவுகளின்கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிகையில் கண்ணையா குமார், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா, அகிப் ஹுசேன், முனீப் ஹுசேன், உமர் குல், ரயீயா ரசூல், பஷீர் பட், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜாவின் மகள் அபரஜிதா ராஜா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகை தொடர்பாக கோர்ட் நாளை பரிசீலிக்கும் என எதிர்பார்க்கும் நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் தனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதற்கு கண்ணையா குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மூன்றாண்டுகளுக்கு பின்னர் தற்போது எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததற்காக போலீசாருக்கும் மோடிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் இருந்தே இதில் அரசியல் நோக்கம் இருப்பது தெளிவாக புரிகிறது. என் நாட்டின் நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என கண்ணையா குமார் குறிப்பிட்டுள்ளார். #JNUSUpresident #KanhaiyaKumar
மதுரை மாவட்டம், மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் எடுத்த நடவடிக்கையில் கிரானைட் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது.
இது தொடர்பாக பி.ஆர்.பி. நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு மேலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
மேலூர் அருகே கீழையூர் பகுதியில் உள்ள செக்கியேந்தல் கண்மாய் மற்றும் அரசு இடத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ், அதன் உரிமையாளர் பி.ஆர். பழனிச்சாமி மற்றும் 36 பேர் மீதான வழக்கு மேலூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
மேலூர் நீதிமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட கிரானைட் முறைகேடு வழக்குகள் நடந்து வருகிறது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Granitescam
தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடனை வாங்கிக்கொண்டு திருப்பி செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்றுவிட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
விஜய் மல்லையாவுக்கு சொந்தமான உல்லாச படகு ஒன்று மால்டா தீவில் கைப்பற்றப்பட்டது. விஜய் மல்லையா தரவேண்டிய கடன், வழங்கப்படாத சம்பளம் போன்ற பலவற்றுக்காக அந்த உல்லாச படகை விற்க முடிவு செய்யப்பட்டு, அதன்படி மால்டா கோர்ட்டில் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டது.
எனவே அந்த தொகையில் இருந்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்பட அனைத்து இந்திய வங்கிகளும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய கடன் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று லண்டன் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. #VijayMallya
லண்டன்:
கர்நாடக தொழில் அதிபர் விஜயமல்லையா ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு இங்கிலாந்துக்கு தப்பி சென்றுவிட்டார். தற்போது அவர் லண்டனில் வசித்து வருகிறார்.
அங்கு ரீஜன்பார்க் என்ற இடத்தில் விஜயமல்லையாவுக்கு பிரமாண்ட பங்களா வீடு உள்ளது. இந்த பங்காள விஜயமல்லையா மற்றும் அவரது தாயார், மகன் பெயரில் நடத்தப்படும் நிறுவனம் மூலம் வாங்கப்பட்டுள்ளது. இதை 2005-ம் ஆண்டு அவர்கள் வாங்கினார்கள்.
2012-ம் ஆண்டு இந்த வீட்டை சுவிஸ் வங்கியான யு.பி.எஸ். வங்கியில் அடமானம் வைத்து ரூ.160 கோடி கடன் பெற்றனர். 5 ஆண்டுகளில் அதை இதை திருப்பி செலுத்துவதாக நிபந்தனையுடன் கடன் வாங்கினார்கள். ஆனால் பணத்தையும் திருப்பி செலுத்தவில்லை. வட்டியும் கட்டவில்லை.
எனவே வீட்டை கைப்பற்றும் வகையில் சுவிஸ் வங்கி இங்கிலாந்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு ராயல் கோர்ட்டில் நீதிபதி மாஸ்டர்மாஸ் முன்னிலையில் நடந்து வருகிறது.
நேற்று இதன் விசாரணை நடந்தது. அப்போது விஜய மல்லையாவின் வக்கீல்கள் வங்கி எடுத்த நடவடிக்கை சட்ட விரோதமானது. வீட்டை கைப்பற்றுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்று வாதாடினார்கள்.
ஏற்கனவே கோர்ட்டு வருகிற ஜனவரி மாதம் 4-ந்தேதிக்குள் முழு தொகையையும் கட்ட வேண்டும். இல்லை என்றால் வீட்டை வங்கியிடம் ஒப்படைப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறியிருந்தது. இந்த நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று வக்கீல்கள் வாதாடினார்கள். அதையும் நீதிபதி ஏற்கவில்லை.
குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தை செலுத்துவதற்கான உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, இந்த கடன் நடைமுறையில் விஜய மல்லையா நிறுவனம் பல விதிமுறைகளை மீறி இருக்கிறது. அவர்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று நீதிபதி கூறினார்.
வழக்கு செலவுக்காக குறிப்பிட்ட பணம் தர வேண்டும் என்று வங்கி கேட்டிருந்தது. அதன்படி 88 ஆயிரம் பவுண்டு பணத்தை (இந்திய பணம் மதிப்பு ரூ.80 லட்சம்) வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும் இந்த விவகாரத்தை கோர்ட்டு சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது. கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.
வழக்கு விசாரணையின் போக்கு விஜயமல்லையாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் விஜய மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பும்படி மத்திய அரசு கேட்டுள்ள வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்